OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THANITHTHIRUVIRUKKUKKURAL

ganesheit October 22, 2019

040 தனித்திருவிருக்குக்குறள்

THANITHTHIRUVIRUKKUKKURAL


பொது – திருப்பதிகம் general decade
பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam
(முதல் திருமுறையிற் போலப் பாடல் அடிகள் நான்காகக் கொள்ளப்படும்.)


கல்லால் நீழல், அல்லாத் தேவை

KALLAL NILAL ALLATH THEVAI
In the shadow of papal tree where lord Siva preached the inner meaning of veethaas to sanagaathi saints so lord Siva alone is prime god in this world


நல்லார் பேணார், அல்லோம் நாமே.

NALLAAR PENAAR ALLOM NAME
So real truth known saints are accepted lord Siva alone is mukthi giving lord in this world so they prayed lord Siva alone accordingly we are also pray lord Siva alone and we do not pray any other sub lords in this world


கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை, மெய்;யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார். நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம்.
01

கொன்றை சூடி, நின்ற தேவை

KONRAI SOODI NINRA THEVAI
Lord Siva who has adorned konrai flower on his hair place


அன்றி யொன்று, நன்றி லோமே.

ANRIYORU NANRI LOME


Who is prime god to this world so we do not thinking any other god in this world mukthi giver
கொன்றை மலரைச் சூடி விளங்கும் சிவபெருமானை அன்றி, பிறிதொரு தெய்வம் முத்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம்.
02

கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்

KALLA NENJIN NILLAAN EESAN
Those disciples who do not this think over lord Siva in meditation continuously and in their mind lord will not be dwelling


சொல்லா தாரோ, டல்லோம் நாமே.

SOLLAA THARO DALLOM NAME
So those disciples who are not praised lord Siva’s glory with whom we do not talk
இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில் அவன் நில்லான், ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம்.
03

கூற்று தைத்த, நீற்றி னானைப்

KOOTRU THAITHTHA NEETRI NANAIP
The death god ema tried to corner the life of margandaya who is kicked and then killed by lord Siva
And that form of lord Siva who has adorned the sacred ashes all over the body


போற்று வார்கள், தோற்றி னாரே.

POTRUVAARGAL THOTTRI NARE


And those disciples who are praised lord Siva and that disciples alone got the benefit of this birth
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த, தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள, சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர்.
04


காட்டு ளாடும், பாட்டு ளானை

KATTULAADUM PAATTU LAANAI
In the burial fire burning place lord Siva in the mid night time dancing and those disciples who are praising with prayer songs and them accepting him as prime lord


நாட்டு ளாருந், தேட்டு ளாரே.

NATTU LAARUN THETTU LAARE


Those disciples alone got bliss in this world
சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும் பாமாலைகளை உடையவன். சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலை நிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள்.
05

தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த

THAKKAN VELVIP POKKAN THEERTHTHA
The full-fledged lord Siva who has destroyed thakkan yaaaga fire because who does not give due respectable place to lord Siva and then after realized the sin lord Siva forgive them and then blessed them


மிக்க தேவர், பக்கத் தோமே.

MIKKA THEVAR PAKKATH THOME
And that capacity possessed lord Siva is prayed and then menial form serving under his feet
முழுமுதற் பொருளான சிவனை நினையாது, தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும், அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் நாம் உள்ளோம்.

06

பெண்ணா ணாய, விண்ணோர் கோவை

PENNA NAAYA VINNOR KOVAI


Lord Siva is male and female form appearing in this world who is prayed and then praised by all other deevaas
நண்ணா தாரை, எண்ணோம் நாமே.

NANNA THAARAI YENNOM NAME


And those disciples who are not think over by mind wards and body those persons are not think over by us
பெண்ணாகவும், ஆணாகவும் ஆகித் தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை, மனம், வாக்கு, காயம் ஆகி;ய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைவதில்லை.

07
429. தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை

THOORTHTHAN VEERAM THEERTHTHA KOVAI
With bad intention ravana tried to lift the kilai hills so lard Siva stamped under the hills and then destroyed his mighty powers and then after wards realized his sin who sang sama veetha to appease lord Siva and then lord Siva got happy and then blessed him with sphere and long life


ஆத்த மாக, ஏத்தி னோமே.

AATHTHAMAGA EATHTHI NOME
And in that benevolent form of lord Siva is willingly prayed by us
துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து, பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாடி இறைஞ்ச, அவனுக்கு ஒளி பொருந்திய வாளும், நீண்ட வாழ்நாளும் அருளிய ;இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம்.
08


430. பூவி னானுந், தாவி னானும்

POOVINANUNTH THAAVI NAANUM
In the lotus flower place seated bharma and then in this world is leap forward form of scaled thirumaal and then who are tried to search lord Siva’s feet and head but in vain


நாவி னாலும், ஓவி னாரே.

NAAVINALUM OOVINAARE
After wards realized that lord Siva is prime god and then prayed and praised with tongue and then stand there in melted form
தாமரைப்பூவின் மேல் வீற்றிருந்தருளும் பிரமனும், உலகத்தைத் தாவி அளந்த திருமாலும், இறைவனின் திருமுடியையும், திருவடியையும் உடல் வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப், பின்னர் நாவால் அவனைப் போற்றி உருகுகின்றனர்.
09


431. மொட்ட மணர், கட்ட தேரர்

MOTTA MANAR KATTA THERAR


The head hair is plucked and then stood there in bald headed form and those samanaas and then well built body possessed buthaas
பிட்டர் சொல்லை, விட்டு ளோமே.

PITTAR SOLLAI VITTU LOME
Who are talking against the siva religion which need not be kept in mind
தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன் விளங்கும் சமணர்களும், கட்டான உடலமைப்புடைய புத்தர்களும், சைவ சமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது விட்டோம்.
10

அந்தண் காழிப், பந்தன் சொல்லைச்

ANTHAN KALI PANTHAN SOLLAI
In the cool place seergali descended gaana sambanther who has sang the above poems


சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே.

SINTHAI SEIVOR UINTHU LORE
Those who are thinking over in meaning filled form and that disciples will get upliftement in life
அழகிய குளிர்ச்சி பொருந்திய சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைச், சிந்தனை செய்து பாடுபவர்கள் உய்தி பெற்றவர்களாவர்.
11
திருச்சிற்றம்பலம்

October 22, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: