OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPPIRAMAPURAM

ganesheit October 20, 2019



037 திருப்பிரமபுரம் THIRUPPIRAMAPURAM


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம்

390 கரமுனம்மல ராற்புனல்மலர்
KARAM MUNAM MALARAAL PUNAL MALAR
தூவியேகலந் தேத்துமின்
THOO VIYEE KALANTHU EAATHUMIN
பரமனூர்பல பேரினாற்பொலி
PARAMANOOR PALA PEERINAAL POLI
பத்தர்சித்தர்கள் தாம்பயில்
PATHAR CHITHARGAL THAAMPAYIL
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
VARA MUNNA AVV ARUL SEIYA VALLA EAMM
ஐயன்நாடொறும் மேயசீர்ப்
EIYAN NAAL THORUM MEEYASEER
பிரமனூர்பிர மாபுரத்துறை
BHARAMANUM BHARAMAA BURAT THURAI
பிஞ்ஞகனருள் பேணியே.
PINGAGAN ARUL PEENIYEEA


யாவர்க்கும் மேலான பொருளான சிவ பெருமானது ஊரும் பல திருப்பெயர்களைக் கொண்டது. பக்தர்களும், சித்தர்களும் போற்றி வணங்க, அவர்கள் வேண்டும் வரங்களை நல்கி அருள, செயல் வல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள, பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத் தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து, மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக.


01
391. விண்ணிலார்மதி சூடினான்விரும்
VINNILLAAR MATHI SOODINAAN VERUMBUM

பும்மறையவன் தன்றலை
MARAIYAVAN THAN THALAI
உண்ணநன்பலி பேணினான்உல
YUNNA NANN PALI PEENINAAN YULAGATHU
கத்துளூனுயி ரான்மலைப்
YOON YUIRAAN MALAI
பெண்ணினார்திரு மேனியான்பிர
PENNINAAR THIRU MEEANI YAAN
மாபுரத்துறை கோயிலுள்
BHARAMAA BURATHURAIKOILUL
அண்ணலாரரு ளாளனாயமர்
ANNALAAR ARULLALANAAI AMERGINRA
கின்றஎம்முடை யாதியே.
EAM MUDAI AATHIYEEA


இறைவன் விண்ணிலே விளங்கும் சந்திரனைச் சடையில் சூடியவர். விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர். உலகத்து உயிர்கட்கு உடம்பும், உயிருமானவர். மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், திருப்பிரமபுரத்து உறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே ஆதிப்பிரான் ஆவார்.


02
392. எல்லையில்புக ழாளனும்இமை
EALAIYIL PUGAL LAALAANUMEAMAIYOR
யோர்கணத்துடன் கூடியும்
GANATHUDAN KOODIYUM
பல்லையார்தலை யிற்பலியது
PALLAIYAAR THALAIYIL PALI YTHU
கொண்டுகந்த படிறனுந்
KONDU YUGANTHA PADIRNUM
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
THOOLAI VAIYAGATHU EAARU THONDERGAL
தூமலர்சொரிந் தேத்தவே
THOO MALAR SORINTHU EEATHAVEEA
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
MALAIYAM POLIL THEEN PILGUM
மாபுரத்துறை மைந்தனே.
BHARMA PURATHU YURAI MAINTHANEEA


இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர். தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர். பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர். இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தெளிந்த அறிவுடைய தொண்டர்கள், தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட, வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே ஆவார்.


03
393. அடையலார்புரஞ் சீறியந்தணர்
ADAIYALLAAR PURAM SEERIYA ANTHANAR
ஏத்தமாமட மாதொடும்
EATHA MAAMADA MAATHODUM
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
PEDAI EALLAAM KADAL KAANAL PULGUM
மாபுரத்துறை கோயிலான்
BHARMA PURATHURAI KOOYILAAN
தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
THODAI YALLAAR NARUM KONRAI YAAN THOLILEEA
லேபரவிநின் றேத்தினால்
PARAAVI NINRU EATHINAAL
இடையிலார்சிவ லோகமெய்துதற்
EADAIYILLAAR SIVALOOGAM EAITHUTHARKU
கீதுகாரணங் காண்மினே.
EETHU KARANAM KAAN MINEEA


பகையரசர்களின் மூன்று புரங்களையும் கோபித்து அழித்து, அந்தணர்கள் போற்றி வணங்க, உமாதேவிNhடு பெண் பறவைகள் தங்கள் ஆண்பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய, திருப்பிரம புரத்தில் கோயி;ல் கொண்டருளியவன் சிவபெருமான். இடையீடில்லாத வர்களாய்ச் சிவலோகம் சென்று அடைவதற்கு, நறுங் கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரிவைகளைச் செய்து, அவன் அருட் செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக.


04
394. வாயிடைம்மறை யோதிமங்கையர்
VAAI EADAI MARAI VOOTHI MANGAIYAR
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
VANTHIDA PALI KONDU POOI
போயிடம்எரி கானிடைப்புரி
POOIYIDAM EARI KAAN EDAIP PURI
நாடகம்இனி தாடினான்
NAADAGAM EANITHU AADINAAN
பேயொடுங்குடி வாழ்வினான்பிர
PEIYODUM KUDI VAALVINAAN
மாபுரத்துறை பிஞ்ஞகன்
BHARMA PURATHU PINGAGAN
தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
THAAI EADAI PORUL THANTHAI YAAGU MENRU
றோதுவார்க்கருள் தன்மையே.
VOOTHU VAARKU ARUL THANMAIYEEA


இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச் செய்தவன். தாருகா வனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரம கபாலத்தில் பலி ஏற்று, சுடுகாட்டையே அரங்கமாகக் கொண்டு நடனம் ஆடுபவன். பேய்க் கணய்களுடன் கூடி வாழ்பவன். திருப்பிரமா புரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பிஞ்ஞகனாகச் சிவபெருமானே , பெற்ற தாயும், தந்தையும், மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அருள் செய்பவன்.


05
395. ஊடினாலினி யாவதென்னுயர்
YOODINAAL EANI YAAVATHU EANN YUAR
நெஞ்சமேயுறு வல்வினைக்
NENJAMEEA ARU VALL VENAI
கோடிநீயுழல் கின்றதென்னழ
VOODI NEE YULGINRA THENA ALAL
லன்றுதன்கையி லேந்தினான்
ANRU THAN KAAIYIL EEANTHINAAN
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
PEEDU NEEARNTHATHU KOLGAIYAAN
மாபுரத்துறை வேதியன்
BHARAMAA THURAI VEETHIYAN
ஏடுநேர்மதி யோடராவணி
EEADU NEEAR MATHI YOODU ARAA ANI
எந்தையென்றுநின் றேத்திடே.
EANTHAI ENRU NINRU EATHIDEEA

உயர் நெஞ்சமே, என் சொல்வழி நில்லாது பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப் போவது என்ன? பண்டைக் காலத்தில் தன் திருக் கரத்தில் நெருப்பேந்தியவன் சிவபெருமான். தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரன்பத்தை வழங்கும் தன்மையன், திருப் பிரமா
புரத்து வீற்றிருந்தருளும் , வேதங்களை அருளிச் செய்தவனும், மலரை ஒத்த பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்தவனுமான சிவ பெருமானை, எமது தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக.

06
396. செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
SEEIYAN VELLIYAN VOLLIYAAR SELAR
ரென்றும்ஏத்தி நினைந்திட
EANRUM EAATHI NENAIN THIDA
ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
AYAN AADAGAI ANTHANAN ARU
மாமறைப்பொரு ளாயினான்
MAA MARAI PORUL AAYINAAN
பெய்யும்மாமழை யானவன்பிர
PEIYUM MAAMALAI AANAVAN
மாபுரம்இடம் பேணிய
PERAMAA PURAM EADAM PEENIYA
வெய்யவெண்மழு வேந்தியைநினைந்
VEIYA VEN MALU EANTHIYAI NENAINTHU
தேத்துமின்வினை வீடவே.
EATHUMIN VENAI VEEDAVEEA


இறைவன் சிவந்த திருமேனி உடையவன். வெள்ளி மலை எனப்படும் கயிலைக்கு நிகரான சிவ ஞானம் பெற்ற பெருமகனாரால் எக்காலத்திலும் போற்றப்பட்டு, வணங்கப்படும் தலைவன் ஆவான். அளவிலா ஆற்றலும், பேரிரக்கமும் உடைய அவன்தான் மறைகளின் பொருளாய் விளங்குபவன். பெய்யும் மழை போன்றவன். திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படை ஏந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க வழிபடு வீர்களாக.


07
397. கன்றொருக்கையில் ஏந்திநல்விள
KANN ORU KAIYILEEANTHI NALL
வின்கனிபட நூறியுஞ்
VELAVIN KANI NOORIYUM
சென்றொருக்கிய மாமறைப்பொருள்
SENRU ORUKKKIYA MAAMARAI PORUL
தேர்ந்தசெம்மல ரோனுமாய்
THEERNTHA SEM MAALAROONU MAAI
அன்றரக்கனைச் செற்றவன்அடி
ANRU ARAKKANAI SETRAVAN ADIYUM
யும்முடியவை காண்கிலார்
MUDI AVAI KAAN GILLAAR
பின்றருக்கிய தண்பொழிற்பிர
PIN THARUKKIYA THAN POLIL
மாபுரத்தரன் பெற்றியே.
BHARAMAA PURATHU ARAN PETRIYEEA


ஒரு கையால் பசுவின் கன்றைப் பற்றி விளமரத்தின் கனியை அழித்த திருமாலும், தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும், அன்று தன் காற் பெருவிரலை ஊன்றி, இராவணனைக், கயிலையின் கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும், திருமுடியையும் தேடியும் காணாதவராயினர். அப்பெருமான் அருள் தன்மையும், ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய திருப்பிரம புரத்து வீற்றிருந்து அருளுகின்றான்.


08
398. உண்டுடுக்கைவிட் டார்களும்உயர்
YUNNDU YUDUKKAI VITTAAR GALUM YUAR
கஞ்சிமண்டைகொள் தேரரும்
KANGI MANDAI KOL THEERARUM
பண்டடக்குசொற் பேசுமப்பரி
PANDU ADAKKU SOL PEESUM PARI
வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
VONRILLAARGAL SOL KOLLAL MIN
தண்டொடக்குவன் சூலமுந்தழல்
THANDODU ADAKKUVAN SOOLAMUM THALAL
மாமழுப்படை தன்கையிற்
MAA MALUP PADAI THAN KAIYIL
கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர
KONDU VOUKKIYA MAINTHAN EAMM
மாபுரத்துறை கூத்தனே.
PERAMMAA PURATHU YURAI KOOTHANEEA


உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும், மண்டை என்னும் பாத்திரத்தில் கருவியேற்று உண்ணும் புத்தர்களும், மக்களிடம் பரிவில்லாதவர்கள். உயர்ந்தவையும் தொன்று தொட்டு வருவதுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர்கள். அவர்கள் சொற்களைக் கொhள்ள வேண்டா. வீணை , அக்குமாலை, சூலம், நெருப்பு, பெரிய மழுப்படை இவற்றைத் தன் கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமை யுடையவனும், எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் வேந்தனுமாகிய சிவபெருமானே ஆவான்.


09
399. பித்தனைப்பிர மாபுரத்துறை
PITHANAI BERAMMAA PURATHU YURAI
பிஞ்ஞகன்கழல் பேணியே
PINGAGAN KALAL PEEENIYEEA
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
MEI THAVATHU NINROORGALLUKU YURAI
செய்துநன்பொருள் மேவிட
SEITHU NAN PORUL MEEVIYA
வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
VAITHA SINTHAIYUL GAANA SAMBANTHAN
வாய்நவின்றெழு மாலைகள்
VAAI NAVINRU EALU MAALAIGAL
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
POI THAVAM PORI NEENGA EANN EASAI
போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே.
POTRI SEIYUM MEIM MAANATHREEA


பித்தனும், திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, மெய்த்தவ நெறிகளி;ல் நிற்போர்க்கு உரை செய்து, வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில், ஞானசம்பந்தன் திருவாய் நவின்ற இத்திரு மாலைகளை, மெய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழி செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே, மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர்.
10
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM



October 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: