OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUAALAVAAI

ganesheit October 20, 2019

039 திருஆலவாய் THIRUAALAVAAI

பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம்

தல வரலாறு – பாண்டிய நாட்டுத் தலங்கள் 14 – இல். இது முதலாவது திருத்தலம். மதுரை என வழங்கப் படுவது. பஞ்ச சபைகளுள் இது வெள்ளிசபை. பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல் என்பன இத்தலத்தில் வேறு பெயர்கள்.

411 மானின்நேர்விழி மாதராய்வழு
MAANI NEERVILI MATHARAI VALUTHOKKU

The stage like freighted eyes are possessed queen mangarku arasi you are


திக்குமாபெருந் தேவிகேள்
MAA PERUM THEEVI KEEAL

And then Pandya king named koon padian wife you are so may hear my words


பானல்வாயொரு பாலனீங்கிவன்
PAANAL VAAI ORU BAALAN EENGU EVAN

The young child ganasambanthan is not considered as mouth spill over milk form person in that way you need not think over


என்றுநீபரி வெய்திடேல்
ENRU NEE PARIYUU EAITHDEEAL

In that way you need not melt your heart


ஆனைமாமலை ஆதியாய
AANAI MAAMALAI AATHIYAAYA

Samanaas who are arrived from aanaai malai and other places


இடங்களிற்பல அல்லல்சேர்
EADANGALIL PALA ALLAL SEEAR

Who are giving so may problems to others


ஈனர்கட்கெளி யேனலேன்திரு
EENARGALUKKU EALIYEEAN ALLEEAN THIRU

To those ingenious persons I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
THIRU AALAVAI ARAN NIRKAVEEA

Because lord Siva who is dwelling in thiru aalavai place and guiding me so I am not single person in this way you need not think me
மான் போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். பால்வடியும் நல்ல வாயை உடைய பாலன் என்று நீ இரக்கமடைய வேண்டா. திருஆலவாயரன் துணை நிற்பதால் ஆனை மலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களும் ஆகிய, இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன்.


01
412. ஆகமத்தொடு மந்திரங்க
AAGAMATHODU MANTHIRANGAL

Veetha and agamaas are well learnt and mathiraas chanting form those bharamins are hesitation form


ளமைந்தசங்கத பங்கமாப்
AMAINTHA SANGATHA PANGAMAAP

That perakirutha language is with emotional filled form talking and high angry filled persons are


பாகதத்தொ டிரைத்துரைத்த
KAAGATHODU EARAINTHU YURAITHA

சனங்கள்வெட்குறு பக்கமா
SANAGAL VETKURU PAKKA MAA

மாகதக்கரி போல்திரிந்து
MAA GATHAK KARI POL THIRINTHU

The elephant form wandering


புரிந்துநின்றுணும் மாசுசேர்
PURINTHU NINRU YUNNUM MAASU SEEAR

And then standing form consuming food and the dirty body possessed


ஆகதர்க்கெளி யேனலேன்திரு
AAR GATHARKU EALIYEEAN ALLEEAN THIRU

To those samanaas I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
AALAVAAI ARAN NIRKAVEEA

Because lord Siva protect and guard me
வேத ஆகமங்களையும், மந்தரங்களையும் நன்கு பயின்ற வைதீக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய, யானை போல் திரிந்து நின்றுண்ணும் அழுக்கு மேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன். திருஆலவாய் அரன் துணை நிற்பதால்.
02


413. அத்தகுபொருள் உண்டுமில்லையு
ATHAGU PORULYUNDUM EAALLAIYUM

Lord is available and not available and in that way


மென்றுநின்றவர்க் கச்சமா
EANRU NINRAVARKKU ACHA MAA

Asthi naasthi form talking


ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
VOTHU VOV VAAMAI POLINTHU VAATHIL

In that pro and anti-form of talking samanaas


அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
ALINTHHU EALUNTHA KAVIPP PEYAR

They will perished form defeated and the my sphere form of poem those persons will be driven out


சத்திரத்தின் மடிந்தொடிந்து
SANTHIRATHIN MADINTHU VODINTHU

சனங்கள்வெட்குற நக்கமே
GANANGAL VETKURA NAKKAMEEA

Those persons who are got hesitation form seeing naked samanaas


சித்திரர்க்கெளி யேனலேன்திரு
SITHIRAK EALIYEEAN ALLEEAN THIRU

Who are talking their way of life is highly regarded one
Andin that art form of talking samanaas I am not simple and small person


ஆலவாயரன் நிற்கவே.
AALAVAAI ARAN NIRKAVEEA

Because stands here to guard me
கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அதழிநாத்தி என்று ஒத்தும், ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று, எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர். பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது எனச்; சித்திர வார்த்தை பேசுபவர்க்கு, நான் ஆலவாயரன் துணை நிற்றலால் எனியேன் அல்லேன்.

03
414. சந்துசேனனும் இந்துசேனனுந்
SANTHU SENANUM ENTHU SEANANUM

Samanaas are given names according to their position they are santhu seanan inthu seanan


தருமசேனனுங் கருமைசேர்
DHARMA SENANUM KARUMAI SEEAR

Tharu ma seanan and then dark color possessed


கந்துசேனனுங் கனகசேனனும்
KANTHU SEANANUM KANAGA SEANNUM

Ganthu seanan and kanaga seanam

முதலதாகிய பெயர்கொளா
MUTHALATHU AAGIYA PEYAR KOLAA

All the above names are possessed form

மந்திபோல்திரிந் தாரியத்தொடு
MANTHI POL THIRINTHU AARIYATHODU

The monkey form wandering everywhere and then learnt Sanskrit and southern language

செந்தமிழ்ப்பயன் அறிகிலா
SEN TAMIL PAYAN ARIGILLAA

The effect of learning is lord Siva is prime god and then saiva religion is best in this world and that intuitive knowledge not realized and internal eye is lost sight of


அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ANTHAGARKKUEALIYEEAN ALLEEAN THIRU

Those fake persons I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
AALAVAAI ARAN NIRKAVEEA

Because lord entered in to my mind place and then blessing me
சந்துசேனன், இந்து சேனன், தருமசேனன், மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு, மந்தி போல் திரிந்து, வட மொழி தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற் கடவுள், சைவமே சீரிய சமய நெறி என்னும் உணர்வினைப் பெறாது, அகக் கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார்.


04
415. கூட்டினார்கிளி யின்விருத்தம்
KOOTIN AAR KILIYIN VERUTHAM

In the cage place trapped the parrot and then austrology is telling persons


உரைத்ததோரொலி யின்தொழிற்
YURAITHA THOOR VOLIYIN THOLIL

And then the sound raised by the parrot and that those wards are true one because the parrot is given consent to it and in that way deceiving persons


பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
PAATU MEI SOLI PAKA MEEA SELLUM

எக்கர்தங்களைப் பல்லறங்
Eakkar thangalai pall aram

காட்டியேவரு மாடெலாங்கவர்
Kaatiyeea varu maadu eallaag aver

And then they are doing so many dharma acts and then cornered the wealth of others


கையரைக்கசி வொன்றிலாச்
Kai aria kasi vonru eallaa

Those low graded persons and then not melted heart possessed those kuruma type persons


சேட்டைகட்கெளி யேனலேன்திரு
Seatak kattku ealiyeeaan alleeam thiru

To whom I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
Thiru aalavaai aran nirkaveea

Because lord Siva dwelling thiru aalavaai temple place who is guiding me all occasions
கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்பக், கிளி விருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி, அவற்றால் வரும் செல்வங்களைக் கவரும் கீழோர்கட்கும், இரக்கமில்லாத குறும்பர்கட்கும் , யான் எளியேனல்லேன், திருவாலவாயரன் என்றும் நின்று அருள் புரிவார்.


05
416. கனகநந்தியும் புட்பநந்தியும்
KANAGANANTHIYUM PUSH PA NATHIYUM

The samanaas are called in the names of kanaga nathi puhpa nanthi


பவணநந்தியுங் குமணமா
PAVANA NATHIYUM KUMANA MAA


சுனகநந்தியுங் குனகநந்தியுந்
SUNAGA NATHIYUM GUNAGA NATHIYUM

திவணநந்தியும் மொழிகொளா
THEVANA NATHIYUM MOLI KOLAA

Thivana nanthi whose wards are not acceptable form


அனகநந்தியர் மதுவொழிந்தவ
ANAGA NATHIYAR MATHU VOLINTHA THAVAMEEA

And then devoid of liquor concussions


மேதவம்புரி வோமெனுஞ்
THAVAM PURIYOOR EANUM

And then they are talking that their penance is best one


சினகருக்கெளி யேனலேன்திரு
SENAGARKU EALIYEEAAN ALLEEAN THIRU

To whom I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
AALAVAAI ARAN NIRKAVEEA

Because all the time lord Siva stands behind me and then guard me
கனகநந்தி, புவனநந்தி, பவணநந்தி, குமண மாசுனக நந்தி, கனக நந்தி, திவணநந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய், மது உண்பதை ஒழித்து, அவமாகிய துலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன், திருவாலவாயரன் என்னுள் நிற்பதால்.


06
417. பந்தணம்மவை யொன்றிலம்பரி
BANTHANAM AVAI VONRILAM PARI

Relationship and then attachments are not there, and then secret wards are talked and then flawless character not possessed,


வொன்றிலம்மென வாசக
VORILAM EANA VAASAGA

மந்தணம்பல பேசிமாசறு
MANTHANAM PALA PEESI MAASARU

சீர்மையின்றிய நாயமே
SEERMAI EANRIYEEA NAAYAMEEA

And not even way standing form a one sided approach possessed form


அந்தணம்மரு கந்தணம்மதி
ANTHANAM MARUGANTHANAM MATHI

And those samaana doctrine this is in this way talked


புத்தணம்மது சித்தணச்
PUTHANAM MATHU SITHANNAM

And butha religion way of life is this is and in that way talking and then wandering every where


சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
SINTHANARKKU EALIYEEAAN ALLEEAN THIRU

And then in that religion got sithi to those persons I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
AALAVAAI ARAN NIRKAVEEA

Lord Siva dwelling thiru alawai place who is guiding all the time to me
சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும், இரகசியமான வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும், நியாயமற்ற நெறி நின்று , ஆருகத சமயத்தினர் கொள்கை இத்தகையது என்று கூறித் திரியும் சமணர்கட்கும், புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித் திரியும் புத்தர்கட்கும், அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும், திருஆலவாயரன் துணை நிற்றலால் யான் எளியேன் அல்லேன்.

07
418. மேலெனக்கெதி ரில்லையென்ற
MEEAL EAANAKKU EATHIR EALLAIEANRA

There is no one above me and there is no enemy to me


அரக்கனார்மிகை செற்றதீப்
ARRAKKA NAAR MIGAI SETRA THEE

In that way talking and wandering asura named ravana whose ego is destroyed


போலியைப்பணி யக்கிலாதொரு
POLIAI PANIYAKK KILLAA THORU

By lord Siva who has possessed red color body just like fire glow form whose feet not prayed and praised form


பொய்த்தவங்கொடு குண்டிகை
POI THAVAM KODU KUNDIGAI

The fabricated form of penance performing and then carried on hands the begging bowel named kundigai


பீலிகைக்கொடு பாயிடுக்கி
PEELIYAI KODU PAAYAI EDUKKI

And the peacocks feathers and mat is kept it in the had lap place


நடுக்கியேபிறர் பின்செலுஞ்
NADUKKIYEEA PERAR PINN SELLUM

While walking they should not kill small in sects while walking so then moved row form


சீலிகட்கெளி யேனலேன்திரு
SEELIKATKU EALIYEEAN ALLEAN THIRU

That is good behavior in that way thinking samanaaas I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
AALAVAAI ARAN NIRKAVEEA

Because lord Siva is dwelling with in me
தனக்கு மேலானவரும், எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த, தீயைப் போன்று செந்நிற மேனியுடைய பெருமானைப் பணிந்து ஏத்தாது, பொய்த்தவம் பூண்டு, குண்டிகை, மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு, பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால,; சிற்றுயிர்க்கு ஊறு நேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவர்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக் கொள்ளும் சமணர்கட்கு, யான் திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால் எளியவனல்லேன்.


08
419. பூமகற்கும் அரிக்குமோர்வரு
POO MAGARKUM ARIKKUMOR VARU

Bharma and thirumal are not known that punniya form of lord Siva


புண்ணியன்னடி போற்றிலார்
PUNNIYAN ADI POTRILLAAR

Whose sacred feet are not prayed and then praised


சாமவத்தையி னார்கள்போல்தலை
SAAMA VATHAI YINAAR GAL POL THALAI YAI

To dead man last rituals are doing form head hair is plucked and then bald headed form


யைப்பறித்தொரு பொய்த்தவம்
PARITHU ORU POI THAVAM

Performing untrue penance


வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
VEEMAVAATHAAI SELUTHI MEI PODI

To give trouble to body and then soul that form of fasting performed


யட்டிவாய்சக திக்குநேர்
PATTIVAI GAKATHIRKU NEER

And fake wards are talking samaras to whom


ஆமவர்க்கெளி யேனலேன்திரு
AAM AVERKKU EALIYEEAN ALLEEAN THIRU

I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
THIRU AALAVAAI ARAN NIRKAVEEA

Because lord Siva stands with in me to guide all the time

பிரமனும், திருமாலும் அறிய வொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது:, இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர் போல் தலைமுடியைக் களைந்து, பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற, சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன், திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால்.


09
420. தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
THANGALLUKKUM ACH CHAAKIYARKUM

To buthas and samanaas


தரிப்பொணாதநற் சேவடி
THARIPPU ONNAATHA NAL SEAVADI

The rare form of lord Siva who has red color feet possessed and then under his feet not prayed


எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
EANGAL NAAYAGAN EAATHU OLINTIDU

Who is my hero lord Siva not prayed


கேமடுத்தொரு பொய்த்தவம்
KEA MARUTH THORU POI THAVAM

And then untrue form of penance performing


பொங்குநூல்வழி யன்றியேபுல
PONGU NOOL VALI ANRIYEEA

And then well learnt saints are talked with bad wards


வோர்களைப்பழிக் கும்பொலா
PULAVOOR GALAI PALIKKUM POLAA

And the teased them those bad persons


அங்கதர்க்கெளி யேனலேன்திரு
ANGATHARKKU EALIYEEAN ALLEEAN THIRU

I am not simple person


ஆலவாயரன் நிற்கவே.
THIRU AALAVAAI NIRKAVEEA

Because lord Siva stands with in embedded form and then guiding me all the times

சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரிய வராகிய , நல்ல சிவந்ததிருவடிகளை உடைய எங்கள் தலைவராகிய சிவபெருமானை வழிபடுதலை விட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது, அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன். 10


421. எக்கராம்அமண் கையருக்கெளி
EAKKARAAM AMAN KAIYARUKKU EALIYEEAN

So I am not simple person to them


யேனலேன்திரு ஆலவாய்ச்
ALLEEAN THIRU AALAVAAI

Lord Siva who is dwelling in the thiru aalavvaai temple place


சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
SOKKAN EANRU EARUKKAVEEA THLANGUM

In the name of chokka naathap perumaan who is dwelling with in me


கும்முடித்தென்னன் முன்னிவை
MUDITH THENNAN MUNN EAVAI

And that ego filled samanaass and then before the pandiya king


தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
THAKKA SEER PUGALIKUMAN TAMIL

In the seergaali place descended gana sambanther


நாதன்ஞானசம் பந்தன்வாய்
NAATHANN GAANA SAMBANTHAN VAAI

From his sacred mouth emanated the above ten poems


ஒக்கவேயுரை செய்தபத்தும்
VOKKAVEE YURAI SEITHA PATHUM

And then those disciples who are singing it before lord Siva


உரைப்பவர்க்கிடர் இல்லையே.
YURAIPPAVARKU EADER ILLAIYEEA

And that disciples will not approach any type of sorrows in life
திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில், திருப்புகலியில் அவதரித்த தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஒத வல்லவர்கட்குத் துன்பம் இல்லை.


11
இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்தசுவாமிகள்
எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு சுவாமிகளுடைய
திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது;
சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக்
குறிப்பினைத் திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து
கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.

திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

October 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: