THIRU KANDIYOOR VEERATAM
038 திருக்கண்டியூர்வீரட்டம் – வினாவுரை
THIRU KANDIYOOR VEERATAM— QUESTION AND ANSWER
பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
PLACE HISTORY — THIS IS river Cauvery southern side temple. Out of 127 temples it is 12th temple. The sun god conducted pujas here. In the Tamil month maasi three days at the evening time sunrays will appear on lord Sivaas face. This is one of the asta veerata temples. In this place bharma’s one head is snipped and then called him in the name of naan mugan
தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 -இல், இது12 ஆவது திருத்தலம். சூரியன் பூசித்த பதி. மாசி மாதத்தில் 13 தினங்கள் மாலை நேரத்தில் சூரிய ஒளி சுவாமியின் மீது படும் சிறப்புடையது. அட்ட வீரத்தலங்களுள் இது பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்து, நான்முகனாக ஆக்கி வீரம் விளைவித்த தலம்.
400 வினவினேன்அறி யாமையில்லுரை
VEENA VINEEAAN AARIYAAMAIYIL YURAAI
So as to get lord Siva’s grace my dear disciples you are menial service under lord Siva’s feet I enquire from you because of my ignorance
செய்ம்மினீரருள் வேண்டுவீர்
SEI MINEER ARUL VEENDU VEER
And in this way you are requesting grace from lord Siva
கனைவிலார்புனற் காவிரிக்கரை
KANAI VILLAAR PUNAL KAUVERI KARAI
With roaring sound raised form of water flowing in the river Cauvery river bank place
மேயகண்டியூர் வீரட்டன்
MEEAYA KANDIYOOR VEERATAN
Seat lord Siva in kandiyoor veeratam temple place and then blesses all
தனமுனேதனக் கின்மையோதம
THANA MUNNEA THANAKKU EANMAI YOOTHA THAMER
Because of your ansetrares are not accumulated any wealth
ராயினாரண்ட மாளத்தான்
AYINAAAR ANDAM AALATHAAN
But your intimate disciples bharma and thirumal are ruling the universe
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
VANANIL VAALKAI KONDU AADIP PAADI EVV
But lord Siva you are living in the burial ground place by dancing and then singing form
வையமாப்பலி தேர்ந்ததே.
VAIYA MAA PALI THEERNTHA THEEA
You are wandering everywhere for begging food please tell me the reason for it
இறையருளை வேண்டிப் பணி செய்யும்அன்பர்களின் அறியாமை காரணமாக விழைகின்றேன். ஆரவாரத்தோடு மிகுந்த நீர் செல்லும் காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீர்ட்டநாதன், தனக்கு நெருக்கமான திருமாலும், பிரமனும் அண்டங்களை ஆளத், தான் சுடுகாட்டில் வாழ்ந்து ஆடியும், பாடியும், பிச்சையேற்றுத் திரிவதும் ஏன்? தனக்கு முன்னோர் தேடிவத்த பொருள் இல்லாத காரணத்தினாலா?
01
401. உள்ளவாறெனக் குரைசெய்ம்மின்னுயர்
YULLAVAA EANUKKU YURAI SSEIMIN YUAR
As per natural way you may please tell me
வாயமாதவம் பேணுவீர்
AAYA MAAATHAVAM PEEENU VEER
My dear disciples you are following highly regarded penance way of life
கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர்
KAL AVIL POLIL SOOLUM KANDIYOOR
The honey fragrance spread over plantations are covered place is kandiyoor
வீரட்டத்துறை காதலான்
VEERATATHURAI KATHALAAN
Veeratam place lord Siva you have loved this place
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
PILLAI VAAN PERAI SENSADAAIM MISAI
The young moon adorned on the red color hair place
வைத்ததும்பெரு நீரொலி
VAITHATHUM PERU NEER VOLI
And then sound raising Ganges also adorned on the hair place
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு
VELLAM THAANGIYATHU EANN KOLO MIGU
Why you have carried on the hair place
மங்கையாளுட னாகவே.
MANGAI YAAL YUDAN AAGAVEEA
And then lords yumaadevi is also carried on the left part of the body and how will you mange with two ladies
உயர்ந்த பெரிய தவநெறியில் நிற்பவர்களே, எனக்கு உள்ளவாறு உரை செய்வீர்களாக. தேன் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூரில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமான், இளம் பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின் மீது வைத்ததும், பெருநீர்ப் பெருக்;காகிய கங்கையைச் சடையில் தாங்கியதும் என் கொல்?
02
402. அடியராயினீர் சொல்லுமின்னறி
ADIYAAR AAYINEER SOLLUMIN
My dear disciples please tell me
கின்றிலேன்அரன் செய்கையைப்
ARI GINRILLEEAN ARAN SEIGAIYAI
I do not know the lord Siva’s activities
படியெலாந்தொழு தேத்துகண்டியூர்
PADI EALLAAM THOLUTHU EAATHU KANDIYOOR
The whole world is praising lord Siva
வீரட்டத்துறை பான்மையான்
VEERATATHURAI PANMAIYAAN
Who has seated in thiru kandiyoor temple place
முடிவுமாய்முத லாயிவ்வைய
MUDIYU MAAI MUTHALAAI EAVV VAIYAM
Lord Siva end and beginning form of this whole universe
முழுதுமாயழ காயதோர்
MULUTHU MAAAYA ALAGAAYA THOOR
And then lord Siva spread over the whole world
பொடியதார்திரு மார்பினிற்புரி
PODIYA THAAAR THIRU MAR BINIL PURI
And that form of lord Siva who has adorned sacred ashes all over the body
நூலும்பூண்டெழு பொற்பதே.
NOOLUM POONDU EALUM POR PATHEEA
And then three knotted thread adorned on the bosom place what is the reason for it
எப்பொழுதும் சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் அடியவர்களே, நீங்கள் எனக்குச் சொல்வீர்களாக. உலகமெல்லாம் தொழுது போற்றுகின்ற திருக்கண்டியூரில் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும், இவ்வுலகிற்கு அந்தமாயும், ஆதியாயும் இருப்பவன். இவ்வுலகம் முழுவதும் நிறைந்து விளங்குபவன். அப்பெருமான் தன் அழகிய மார்பில் திருநீற்றுப் பூச்சும், முப்புரிநூலும் பூண்டு தோன்றுவது ஏன்?
03
403. பழையதொண்டர்கள் பகருமின்பல
PALAIYA THONDAR GAL PAGARUMIN PALA
Lord Siva’s cluster coming from good old time please explain me
வாயவேதியன் பான்மையைக்
VAAYA VEETHIYAN PAAAN MAIYAI
The variety of mannerism filled lord Siva’s activities please explain to me
கழையுலாம்புனல் மல்குகாவிரி
KALAI YULLAAM PUNAL MALGU KAAVERI
From the hilly place descending river Cauvery
மன்னுகண்டியூர் வீரட்டன்
MANNU KANDIYOOR VEERAATAN
Which is flowing in thiru kadiyoor veeratan temple place
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
KULAIYOOR KAATHINIL PEITHU YUAN THORU
The ear ornament kulai adorned on the one ear
குன்றின்மங்கை வெருவுறப்
KUNRIN MANGAI VERU YURA
And then lords parvathi got afraid of
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
PULAI NEDUM KAI NAN MAA YURITHATHU
The hole possessed long nose those elephant skin is pealed
போர்த்துகந்த பொலிவதே.
PORTHU YUGANTHA POLI VATHEEA
And then adorned it as upper dress tell me the reason for it
சிவனடியார் திருக்கூட்ட மரபில் வழிவழியாய் வருகின்ற பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குப் பலவாகிய தன்மைகளை உடைய இறைவனின் தன்மையைக் கூறுங்கள். மலையிலிருந்து பெருகும் காவிரியால் வளம் மிகுந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், தன்காதில் ஒரு குழையணிந்து மகிழ்ந்து மலைமகளான உமாதேவி அஞ்சுமாறு துளையுடைய நீண்ட தும்பிக்கையை உடைய யானையில் தோலை உரித்துப் போர்த்தது ஏன்?
04
404. விரவிலாதுமைக் கேட்கின்றேனடி
VERAVILLATHU YUMAI KETKINREEAN ADI
I do not know the reason so please explain to me
விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
VERUMBI AAT SEIVEER VVELAMBUMIN
My dear disciples you are willingly doing menial service under lord Siva’s feet
கரவெலாந்திரை மண்டுகாவிரிக்
KARAI EALLAAM THERAI MANDU KAAVIRI
The waves are lashing on the bank of river Cauvery
கண்டியூருறை வீரட்டன்
KANDIYOOR YURAI VVEERATTAN
Where situated kandiyoor veeratam temple
முரவமொந்தை முழாவொலிக்க
MURAVA MONTHAI MULLAA VOLIKKA
The musical instruments are named murasu monthai mulayu all are rising sound
முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
MULANGU PEEIYODUM KOODIP POOI
And then demon forces and ghost forces are covered form standing
பரவுவானவர்க் காகவார்கடல்
PARAYU VAANAVERK U AAGA VAAR KADAAL
Those deevaas who are prayed under his feet and then from the sea place emanated
நஞ்சமுண்ட பரிசதே
NANJAM YUNDA PARISATHEEA
Poison is consumed by lord Siva what is the reason for it please tell me
இறைவனின் திருவடிக்கு விரும்பிப் பணி செய்யும் அடியவர்களே, விளம்புவீராக. அலைகள் மோதுகின்ற காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டி யூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், முரசு, மொந்தை, முழவு முதலான வாத்தியங்கள் முழங்கப் பேய்க் கணங்களும், பூதகணங்களும் சூழ்ந்து நிற்க, தன்னை வழிபட்ட தேவர்கள் பொருட்டுப் பெரிய பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட தன்மைதான் என் கொல்?
05
405. இயலுமாறெனக் கியம்புமின்னிறை
EAYALUMAARUEANAKU EAYAM BUMIN ERAI
As per your knowledge please explain to me
வன்னுமாய்நிறை செய்கையைக்
VANUM AAI NERAI SEIGAIYAI
Lord Siva is leader to this world and then all life forms and then spread over all things in this world
கயல்நெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி
KAYAL NEDUM KANNINAARGAL THAAM POLI
Where kayal fish like eyes are possessed ladies who dwelling in
கண்டியூருறை வீரட்டன்
KANDIYOOR YURAI VEERATTAN
Kandiyoor veeratam temple place
புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
PUYAL POLITHU EALI VAAN YULOOR GALLUKU
In this world rain is giving by deevaas and then doing goodness to this world
காகவன்றயன் பொய்ச்சிரம்
AAGA ANTU AYAN POISERAM
To whom request lord Siva snipped with nail the one head of bharma
அயனகவ்வ தரிந்துமற்றதில்
AYAL NAGAV VATHU ARINTHU MATRATHIL
And then carried it on hands and then wandering everywhere
ஊனுகந்த அருத்தியே.
YOON YUGANTHA ARUTHIYEEA
And then collected begging food and then consumed it what is the reason for it
இறைவன் உலகினுக்கும் ஊருக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப் பொருள்களிலும், அனைத்து உயிர் களிடத்தும், வியாபித்து நிற்கும் தன்மையை இயம்புவீர்களாக. கயல் போன்ற கடைக் கண்களை உடைய மகளிர் வாழ்கின்ற திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், உலகத்தில் மழை பொழியச் செய்து நலம் புரியம் தேவர்கட்காகப் பிரமனுடைய ஐந்தாவது சிரத்தை , அயலார் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அதில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் என்கொல்?
06
406. திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
THIRUNTH THONDAR GAL SEPPUMIN MIGA
The clear form of Siva gaana got disciples please tell me
செல்வன்றன்னது திறமெலாங்
SELVAN THANNATHU THIRAM EALLAAM
The true wealth filled form of seated lord Siva and whose mannerism please explain to me
கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழு
KARUM THADAM KANNINAAR GAL THAAM THOLU
The dark color eyes are possessed ladies are praying in the
கண்டியூருறை வீரட்டன்
KANDIYOOR YURAI VEERATTAN
Temple place named kandiyoor veeratan
இருந்துநால்வரோ டால்நிழல்லறம்
ERUNTHA NAALVAR RODU AAL NELAM ARAM
Lord Siva who has seated under all tree shadow and then preached four saints the inner meaning of veethaas
உரைத்ததும்மிகு வெம்மையார்
YURAITHATHUM MIGU VEMMAIYAAR
And then cleared their doubt and then giving trouble to devas
வருந்தவன்சிலை யால்அம்மாமதில்
VARUN THAVAN SELAIYAAL AMM MAA MATHIL
Those three castle asuraas are destroyed by converting meru hills as bow
மூன்றுமாட்டிய வண்ணமே
MOONRU MAATIIYA VANNAMEEA
And then shot an fire arrow please tell me the reason for it
தெளிந்த சிவஞானம் பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அன்பர்களே, மெய்ச் செல்வனாக விளங்கும்; சிவபெருமானின் தன்மைகளை எனக்கு உரைப்பீர்களாக. அழகிய கண்களையுடைய மகளிர் வழிபடும் திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், ஆலமர நிழலில் நால்வர்க்கு அறம் உரைத்தும், தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு மேருமலையை வில்லாக வளைத்ததும் என்கொல்?
07
407. நாவிரித்தரன் தொல்புகழ்பல
NAAVIRITHU ARAN THOL PUGAL PALA
With tongue lord Siva’s glory is propagating by good old disciples
பேணுவீரிறை நல்குமின்
PEENU VEER EARAI NALGUMIN
Please explain to me
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
KAU VERI THADAM PUNAL SEI KANDIYOOR
The river Cauvery bank situated kandiyoor veeratam temple place
வீரட்டத்துறை கண்ணுதல்
VEERATATHU YURAI KANNUTHAL
Where lord Siva seated in fore head eye opened form
கோவிரிப்பயன் ஆன்அஞ்சாடிய
KOOVIRIP PAYAN AAN ANJU AADIYA
From the cow place emanated five types of products with it daily lord Siva taking bath
கொள்கையுங்கொடி வரைபெற
KOLGAIYUM KODI VARAIPERA
With that concept form and then tender creeper plant form of body possessed lords yumaadevi is to be got calm form
மாவரைத்தலத் தாலரக்கனை
MAAARAI THALATHAAL ARAKKANANAI
The big kailai hills under it ravana is stamped
வலியைவாட்டிய மாண்பதே.
VALI YAI VAATIYA MAAN BATHEEA
And then destroyed his mighty powers please tell me the reason for it
நாவால் சிவபெருமானது பழம் புகழைப் போற்றும் அடியவர்களே, எனக்கு விடை கூறுவீர்களாக. காவிரியால் நீர் வளம் மிக்க திருக்கண்டியூர் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான், பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோமயம் ஆகிய பஞ்சதிவ்வியங்;களால் திருமுழுக்
காட்டப் படும் தன்மையும், கொடி போன்ற பார்வதி அமைதிபெற, பெரிய கயிலாய மலையில் தன் காற் பெருவிரலை ஊன்றி, மலையின் கீழ் இராவணன் நெரியுமாறு செய்து அவன் வலிமையை அழித்த மாண்பும் என்கொல்?
08
408. பெருமையேசர ணாகவாழ்வுறு
PERUMAIYEEA SARANAAAGA VAALYURU
Lord Siva’s glory only propagating those disciples who are surrendered under his feet
மாந்தர்காளிறை பேசுமின்
MAANTHAR GAAL EARAI PEASUMIN
From it earing money with it living disciples please explain to me
கருமையார்பொழில் சூழுந்தண்வயல்
KARUMAIYAAR POLIL SOOLTHA THANN VAYAL
The dark color plantations are covered cool place is thiru kandiyoor
கண்டியூருறை வீரட்டன்
KANDIYOOR YURAI VEERATTAN
Veeratam temple place
ஒருமையாலுயர் மாலும்மற்றை
ORUMAIYAAL YUAR MAALUM MATRAI
Lord Siva is the only prime god in this world which is realized by bharmaa and thiru maal
மலரவன்னுணர்ந் தேத்தவே
MALARAVAN YUUNANTHUEETHAVEEA
And then who are oneness of mind prayed under his feet
அருமையாலவ ருக்குயர்ந்தெரி
ARUMAIYAAL AVARKU YUARNTHU EARI
Who are unable to see in real form but lord Siva appeared in fire pole form
யாகிநின்றஅத் தன்மையே.
AAGI NIRA ATH THANMAIYEEA
Please explain the reason for it
சிவபெருமானுடைய பெருமையைப் புகழ்ந்து கூறி அவனருளால் வாழும் மாந்தர்காள்! விடை கூறுவீர்களாக! மரங்;களின் அடர்த்தியால் வெயில் நுழையாது இருண்டு விளங்கும் சோலைகள் சூழ்ந்த, குளிர்ச்சியான வயல்களையுடைய திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளுகின்ற வீரட்டநாதன், திருமாலும், பிரமனும் சிவபெருமானின் முழுமுதல் தன்மையை உணர்ந்து போற்றும்படி, அவர்கள் காண்பதற்கு அரியவனாய் உயர்ந்து நெருப்பு மலையாய் நின்ற தன்மை என்கொல்?
09
409. நமரெழுபிறப் பறுக்குமாந்தர்கள்
NAMER EALLU PERAPPU ARUKKUM MANTHER GAAL
Disciple you have power to remove seven types of birth including your relatives
நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
NAVILLUMIN YUMAI KEAT KINREEAN
Please me the true reason
கமரழிவயல் சூழுந்தண்புனற்
MAMER ALI VAYAL SOOLNTHA THANN PUNAL
The land is parched and broken it and then poverty state not set in form of water all the time flowing in the fields
கண்டியூருறை வீரட்டன்
KANNDIYOOR YURAI VEERATTAN
That fertile place is kandiyoor veeratan
தமரழிந்தெழு சாக்கியச்சமண்
THAMER ALINTHU EALU SAAKIYA SAMANN
Those butha and samana people not getting mukthi
ஆதரோது மதுகொளா
AATHER VOOTHUM ATHUKOLLAA
And in that form not propagating
தமரரானவர் ஏத்தஅந்தகன்
THAMERAA NAVER EAATHU ANTHAGAN
But Siva religious people and then devas are praising lord Siva
றன்னைச்சூலத்தி லாய்ந்ததே.
THANAI SOOLATHIL AAINTHATHEEA
Who has killed anthagaswarn soolam battle force what is the reason for it
தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தவர்களின் ஏழு பிறப்புக்களையும், அறுக்கும் மெய்யடியார்களே,! பூமியில் வெடிப்பு ஏற்பட்டு வறட்சி உண்டாகாதவாறு குளிர்ந்த நீர் பாயும் வயல்கள் சூழ்ந்த திருக்கண்யூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், தமது சமயத்தவர் பயனெய்தாது அழியும்படி இறைவனைச் சாறும் வழிகளை எடுத்துரைக்காத, புத்தர், சமணர்கள் உரைக்கும் அறங்களான கொல்லாமை, பரதுக்க துக்கம், இவற்றை மறுத்து, தேவர்கள் ஏத்த அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கொன்றது ஏன்?
10
410. கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
KARUTHANAI POLIL SOOLUM KANDIYOOR
Lord Siva who is existing concept form in the mind of disciples where plantations are covered place is
வீரட்டத்துறை கள்வனை
VEERATTAHU YURAI KALVANAI
Kandiyoor veeratam temple place lord Siva appearing in concealed form
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
ARUTHANAI THERAM ADIYAAR PAAL MIGA
Who is word meaning form existing in this world and that form of lord Siva is enquired by question and answer form
கேட்டுகந்த வினாவுரை
KEEATU YUGANTHA VENAA YURAI
From the disciples enquired form
திருத்தமாந்திகழ் காழிஞானசம்
THIRU TAMMAAM THIGAL KAALI GANA SAMBANTHEN
To get happiness in that form descend in the sergaali place
பந்தன்செப்பிய செந்தமிழ்
SEPPIYA SEN TAMIL
Gina sambanther who has sung the above pure Tamil poems
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
ORUTHAR AAGILLUM PALAR GAL AAGILLUM
Those disciples who are in single form or in group form
உரைசெய்வா ருயர்ந்தார்களே.
YUAR SEVAAR YUARN THAAR GALLEA
Chanting it before lord Siva those disciples are considered as highly regarded persons
அன்பர்தம் கருத்தாக விளங்குபவனாய், சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால் காணப் பெறாது மறைந்திருந்து, மனத்தைக் கவரும் கள்வனாய், சொல்லின் பொருளாக இருக்கும், அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினா உரையாகக் கேட்டு, மகிழும் முறையில் சீர்காழியில் அவதரித்த, இறைவனின் இயல்புகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இத் திருப்பத்pகத்தை, ஒருவராகத் தனித்தும், பலராகச் சேர்ந்தும் ஓதவல்லவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டேசுவரர், தேவியார் – மங்கைநாயகியம்மை.
இறை உத்தரவு.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM