OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KAALATHI

ganesheit October 20, 2019

036 திருக்காளத்தி
THIRU KAALATHI


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

தலவரலாறு – தொண்டை நாட்டுத் தலங்கள் 32 -இல், இது 19 ஆவது திருத்தலம். மூவர் பாடல்; பெற்றது. சீகாளத்தி எனப் பெறும் . கண்ணப்ப நாயனார் ஊனுக்கு ஊன் என்னும் மருத்துவ முறையின் வழித் தமது கண்ணை இடந்து அப்பிய தலம். பஞ்ச பூதத் தலங்களுள் இது வாயுத்தலம்.

381 சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
SANTHAMMAAR AGILODU SAATHI THEKKAM MARAM

The sacred trees are sandal wood agil gaatikkaai and teak wood


உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
YUNTHU MAA MUGALIYIN KARAIYINIL YUMAIYODUM

All are pushed by pon muthali river water where lord Siva you are seated with lords yumaadevi


மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
MANTHA MAAR POLIL VALAR MALGU VANN KAALATHI

Where breezes are softly flowing those plantations are abundantly available in kaalathi temple place lord Siva seated in philanthropist form


எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.
EANTHIYAAR EANAI YADI YENN MANATHHU YULLAVEEA

Who is my father seated with lords yumaadevi and then whose feet are embedded in to my mind and then blessed all
சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளி வரும் சிறப்பான பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில், தென்றல் காற்று வீசும் சோலைகள் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எமது தந்தையாகிய காளத்தி நாதர் உமாதேவியோடு, அவருடைய திருவடிகள் எம் மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார்.


01
382. ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ்
AALAMAA MARAVAMODU AMAINTHA SEER SANTHANAM

All tree mango tree kumkum tree sadal tree and then


சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
SAALAMAA PEELIYUM SANBAGA MUNTHIYEEA

Abundant form of peacock feathers and sanbaaga trees are


காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
KAALAMAAR MUGALI VANTHU ANAI THARU KAALATHI

And then in seasonal tome filled form of the river named ponmuthali place situated the kalathi temple


நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.
NNEELA MAAR GANDANAI NNENAIYUMAA NENAI VATHEEA

Lord Siva who is darkened throat possessed whatever form praying and in that form we should pray and this is our duty in this world
ஆல், மா, குங்கும மரம், சந்தனம் ஆகிய மரங்களும், மிகுதியான மயிற் பீலியும், சண்பகமும் அலைகளால் தள்ளப்பட்டுப் பருவக் காலங்களில் நிறைகின்ற, பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நீலகண்டனான இறைவனை, எவ்வகையில் நினைந்து வழிபடுதல் பொருத்தமோ, அத்தன்மையால் நினைந்து வழிபடுதல் கடமை.


02
383. கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
KONGAMEEA KURAVAMEEA KONRAIYUM PAATHIRI

They are named kongam kuravam konrai paathiri


மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
MOONGIL VANTHU ANAI THARU MUGALIYIN KARAIYINIL

Bamboo all the pushed in the thiru muthali river bank place


ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
AANGU AMAR KAALATHI ADIGALAI ADI THOLA

Where lord Siva seated whose sacred feet are praying and then praising form


வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.
VEENGU VEN THUYAR KEDUM VEEDU EALITHU AAGU MEEA

Our multiplied form of wild sorrows will be removed and then mukthi will be easily attained
கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில், ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், வீற்றிருக்கும் காளத்தி நாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, பெருகி வரும் கொடிய துன்பம் கெடும், முத்திப் பேறு எளிதாகக் கைகூடும்.


03
384. கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
KARUMBU THEEN KATTIYUM KATHALIYIN KANI GALUM

Sugar cane honey cake banana fruits all are growing place is then muthali river bed which is fertile one where lord Siva adorned in the hair place tender moon

அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ARUMBU NEER MUUGALIYIIN KARAIYINL ANNI MATHI


ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
VOOONGU VAAR SADAIYINAN KAALATHI ORU VANAI

That hair possessed lord Siva seated here and those disciples who are willingly praying lord Siva


விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.
VERUMBU VAAR AVARGAL THAAM VINN YULAGU AALVAREEA

That disciples will ultimately rule the upper world
கரும்பு, தேன்கட்டி, வாழைக்கனி ஆகியவற்றை விளைவிக்கும், நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய பிறைச் சந்திரனை, நீண்ட சடையில் சூடி வீற்றிருந்தருளும் ஒப்பற்ற காளத்தி நாதரை விரும்பிப் பணிபவர்கள் விண்ணுலகை ஆள்வார்கள்.


04
385. வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
VARAI THARUM AGILODU MAA MUTHAM YUNTHIYEEA

In the hilly are place growing agil trees and pearls are pushing down by water falls


திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
THERAI THARU MUGALIYIN KARAIYNIL THEE MALAR

And then in the thiru muthali river bed place placed where fragrance filled flowers are


விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
VERAI THARU SADAI MUDI KAALATHI VINNAVEN

Adorned on the hair place by lord Siva who is god to all other deevaas and then adorned brave anklet on the leg place and that form of lord Siva is daily pray by us


நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.
NERAITHARU KALAL EANAI NITHALLUM NENAI MINEEA

And that fragrance filled legs are to be thinking over daily
மலையில் வளரும் அகிலும் முத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், தேன் துளிர்க்கின்ற நறுமண மலர்களைச், சடைமுடியில் அணிந்து விளங்கும், காளத்தியிலுள்ள தேவாதி தேவனாகிய சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தினந்தோறும் நினைந்து போற்றி வழிபடு வீர்களாக.

இப்பதிகத்தில் 6-ம், 7-ம் செய்யுட்கள் மறைந்து போயின.
06-07

386. முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
MUTHU MAA MANI GALLUM MULU MALAR THERAL GALLUM

Pearls ruby diamonds and bunch form of flowers and all are


எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
EATTHU MAA MUGALIYIN KARAIYINIL EALIL PERA

Pushing down by the waterfalls into thiru muthali river


கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
KATHIDA ARAKKANAI KAAL VERAL YOONRIYA

Place dwelling lord Siva who is stamped ravana in cried form under kaiyilai hills


அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.
ATHAN THAN KAALATHI ANAI VATHU KARUMA MEEA

And that form of lord Siva seated in thiru kaalathi temple where we must go and then pray him and it is our duty in this world
இராவணனன் கயிலை மலையின் கீழ் நெரியும்படித் தன் காற் பெருவிரலை ஊன்றிய சிவபெருமான், முத்துக்களும் , மணிகளும், மலர்க் கொத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், அமைந்துள்ள அழகிய திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து அப்பெருமானை வணங்குதல் நம் கடமையாகும்.


08
387. மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
MANNU MAA VEENGAIYUM MARUTHUGAL PEELNTHU YUNTHEE

The veengai trees maruthu trees are uprooted and then slush filled form pushed down and then entered in to


நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
NANNU MAA MUGALIYIN KARAIYINIL NAMAI SEEAR

Thiru muthaali river banks where lord Siva seated in giving benefits to all

வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
VANNA MAA MALAR AVAN MAAL AVAN KAAN GILLAA

And that form of lord Siva’s feet and head is not seen by bharma and thirumal


அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே.
ANNALAAR KAALATHI AANGU ANAITHU YUI MINEEA

Lord Siva seated here and blesses all so we may go there and then get upliftment in life

வேங்கை, மருது ஆகிய மரங்கள் வேருடன் வீழ்;த்தப் பட்டுச், சேற்று மண்ணுடன் கலந்து தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவனும், எவ்வுயிர்கட்கும் நன்மையே செய்கின்றவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


09
388. வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
Veengiya yudalinar veritharu thuvarudai

The bulky body possessed samanaas and buthaas who has adorned the saffron color tainted cloths


பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
Paangillaar solai vedum paran adi paniyumin

They are not known form true mannerism of lord who’s preaching are to be disregarded. You may surrender under lord Siva’s feet and then pray him with oneness of mind


ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
Voongu vann kaalathi yullamodu yunar thara

With gaana wealth rich form of dwelling lord Siva who is prayed with oneness if mind


வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.
Vaangidum venai galai vaanaverku oruva neea

those disciples bad deeds are terminated and then entered in to upper world and then live there for ever
பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கைவிடுங்கள். இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்தி நாதனை உள்ளத்தால் உணர்ந்து மனம் ஒன்றி வழிபட்டால், தேவர்களுக்கெல்லாம் தலைவனான அச்சிவபெருமன் வினைகளைத் தீர்த்து நன்மை செய்வான்.


10
389. அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
ATTA MAASITHIGAL ANAI THARU KAALATHI

Lord Siva who give eight types of special powers and in this form seated in kaalathi temple place


வட்டவார் சடையனை வயலணி காழியான்
VATTA VAAR SADAIYANAI VAYAL ANI KAALIYAAN

And that long hair possessed lord Siva is prayed form where paddy fields are covered form of seergaali place


சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
SITTA NAAN MARAI VALA GAANA SAMBANTHAN SOL

Descended gaanasambanther who has well learnt four veethaas and six angas who has sung the above poems


இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
EATTA MAA PADUVAARKU EALLAIYAAM PAAVAMEEA

Those disciples who are willingly singing it before lord Siva and that disciples Sin will be eliminated
அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில் வீற்றிருந்தருளும் நீண்ட முடியுடைய சிவபெருமானைப் போற்றி, வயல் வளமிக்க அழகிய சீர்காழியில், அவதரித்த நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

October 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: