OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THITU THEN KUDI THITAI

ganesheit October 15, 2019

035 திருத்தென்குடித்திட்டை
THITU THEN KUDI THITAI


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பசுபதீசுவரர், தேவியார் – உலகநாயகியம்மை.

செழுமையான சோலைகளை உடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம், வாக்கு, காலம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு, சீர்காழியி; அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையொடு பாட வல்லவர்களின் பாவம் தீரும்.


370 முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
MUNNAI NAAN MARAIYAVAI MURAI MURAI KURAI YODEUM

The four veethaas rule form daily praying lord Siva and then disciples are praying under lord Siva’s feet to remove their deficiencies

தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
THANNA THAAL THOLUHU EALA NINRAVAN THAN NIDAM
And then prayed under lord Siva’s feet


மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
MANNU MAA KAAVERI VANTHADI VARUDA NAL

That Cauvery river canals are flowing fertile paddy fields are filled place is then kudi thittai where lord Siva permanently dwelling


செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.
SEN NELLAAR VALA VAYAL THEN KUDI THITTAIYEEA

Where rich red color paddy is growing place is then kudi thittai
நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையால் தொழுது போற்ற, உயிர்கள் எல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச்;, சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, காவிரி நீர் வாய்க்கால்கள் வழிவந்து, செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித் திட்டை ஆகும்.


01
371. மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை
MAGARAM AADUM KODI MAN MATHAN VEEL THANNAI

The fish emblem studded flag carried by lust creating god manmatha


நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
NEGARLAAGAA NERUPPU EALA VELITHAAN EADAM

Lord Siva opened his fore head eye and then burnt down by ashes form


பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்
PAGARA VAAL NITHILLAM PANN MAGARA THOODUM

The sphere like glittering pearls and then veracity of stones are stubbed building are filled place


சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.
SERAGA MAALIGAI THOGUM THEN KUDI THITTAIYEEA

Is thenkudi thittai
மீன்கொடியை உடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப் பொறி பறக்க, நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வாள் போல் மின்னும் முத்துக்களும், பல அணி வகைகளும் பதிக்கப் பெற்று உயர்ந்து விளங்கும் மாளிகைகளை உடைய திருத் தென்குடித் திட்டை என்பதாகும்.


02
372. கருவினா லன்றியே கருவெலா மாயவன்
Karu vinaal anriyeea karu vellaa maayavan

Lord Siva who is who is not get birth by womb of mother but who is nucleus form all other things in this world


உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்
Yuruyuvinaal anriyea yuruyu seithaan eadam

Lord Siva does have any form in this world but who gives all the things in this world a particular form and then allow it to function


பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்
Paruva naal velavodum paadal lodu aadalum

To whom seasonal festivals are and daily festivals are conducted place where singing and dancing are going on all the time


திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.
Thiru vinaaaan migu pugal then kudi thittaiyeea

And that glory filled form lord Siva seated place is then kudi thittai

இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே, எல்லாப் பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன். தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவமில்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உறவு கொள்ளும்படித் தோற்றுவித்து அருள்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பருவ காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும் பாடலும் ஆடலும் செய்வதால் மிகச் சிறப்புற நடக்கும் புகழை உடைய திருதென்குடித் திட்டை என்பதாகும்.


03
373. உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை
Yunn nillaa aaviyaai voongu than thanmaiyai

Lord Siva with in soul and into that sole place glittering form is not even known by deevaass

விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
Vinnillaaar arigillaa vetha veethaanthanoor

Who is also existing in the internal matter form veethaas and yubanidathaas


எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்
Eannilaar ealil mani kanaga maligai pelanthu

Innumerable lovely ruby diamonds are embedded mansions are filled place


தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.
Thenn nillaa very tharum then kudi thittaiyeea

Where on the top of the place moon light is spread over that place is then kudi thittai

இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், அழகிய மணிகள் பதிக்கப் பெற்ற பொன் மாளிகையின் மேல் தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித் திட்டை என்பதாகும்.


04
374. வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
Varunthi vaanoorgal vanthu adaiya maa nangu thaan

While grinding the milk sea where emanated wiled heated poison which is unbearable by deevaas so that they requested lord Siva to save their life so lord Siva consumed poison and then


அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்
Arunthi aar amuuthu avarku arul seithaan amarum voor

Nectar is given to them to live long life and that lord Siva’s dwelling place is


செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்
Serunthi maathavi panther vaann senbagam

Where serunthi mathavi senbagam flowers a
Abundantly rowing place is


திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.
Thirunthu neel valar polil then kudi thittaiyeea

Where water bodies and plantations are covered place is then kudi thittai

திருப்பாற் கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய, அவர்ளுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு அருளிய, சிவபெருமான்வீற்றிருந்தருளும் நகர், செருந்தி, மாதவி, செண்பகம் இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித் திட்டையாகும்.


05
375. ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
YOORINAAR VOOSAIYUL VONRINAAR VVONRI MAAL

Lord Siva filled all the things in this world and then seven form of musical notes with in embedded form And then sub lord thirumal is given right part of his body


கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
KOORINAAR ANAR THARUM KUMARAVEL THAATHAIYOOR

That form of lord Siva is father to lord muruga


ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
AARINAAR POI AGATHAI YUNAR V VEITHI MEI

The six types of bad vices named kaamam kurothem matham maachaiiryam lobam mogam all are kept away from day to day life and then mind is not moved in five sense organs way


தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.
THEERINAAR VALI PADUM THEMNN KUDI THITTAIIYEEA

The true ethical way of life following people are living place is then kudi thittai
இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர். எல்லா ஒசைகளிலும் ஒன்றியவர். திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர், குமரக் கடவுளின் தந்தை. அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது, ஆறு பகைகளாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற இவற்றைக் களைந்து, மனமானது ஐம்புலன் வழிச் செல்லாது, மெய்ம்மையை உணர்ந்தோர் வழிபடும் தென்குடித் திட்டையாகும்.

06
376. கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
KAAN ALAIKKUMAVAN KANN NEDATHU APPA NEEL

In the forest place animals are killing hunter sect descended kanneppar who has plucked his eye and then embedded the bleeding eye place of lord Siva and then


வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்
VAAN ALAIKKUM THAVA THEEYU VAI THAAN EADAM

The deevaas are with ego filled form lord Siva made kanneper as one of the sub lords


தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
THAAN ALAITHU THELLA MOOR THAMARAI THANDU YURAI

Where the clear water bodies are filled place and then in that water growing the lotus flowers are shedding the
Honey


தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.
THEEN ALAIKKUMVAYAL THEN KUDI THITTAIYEEA

Those fields are filled place is then kudi thittai temple place where lord Siva dwelling
காட்டில் உள்ள உயிர்களை வருத்தும் வேடர் குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பிய போது, தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி, தவத்தையுடைய கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தெளிந்த நீர் நிலைகளில் மலர்ந்துள்ள தாமரைகளின் தண்டிலிருந்து தேன் பெருகிப் பாயும், வயல் வளமுடைய திருத்தென்குடித் திட்டை என்பதாகும்.

07
377. மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்
MAALODUM PORU THIIRAL VAAL ARKKAN NERNTHU

Thirumal’s yet another deity form sri rama with whom ravana has power to wag war


தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்
VOO VIDUM PADI VVERAL ONRU VAITHAANEADAM

And that ravana is stamped under kaiyilai hills so as to cry with pain


காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
KAALAODUM KANAGA MOOKUDAN VARA KAYAL VEERLAAL

Where with canal place flowing water carried with it the golden color mouth possessed kayak viral seal fishes are


சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.
SEELODUM PAAI VAYAL THEN KUDI THITTAIYEEA

Filled place is then kudi thittai
திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும் வல்லமை பெற்ற அரக்கனான இராவணன் , கயிலை மலையின் கீழ்ச் சிக்குண்டு அலறும்படி , தன் காற் பெருவிரலை ஊன்றிய சிவபெருமான் விற்றிருந்தருளும் இடமாவது, கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற மூக்குடைய கயல், வரால் , சேல் போன்ற மீன்கள் வந்து பாயும் வயல்களை உடைய திருத்தென்குடித் திட்டை என்பதாகும்.

08
378. நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
NAARANAN THANODU NAAN MUGAN THAANUMAAI

Bharma with thirumal tried to search feet and head of lord Siva but failed in their mission


காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்
KAARANAN ADI MUDI KAANA VONAAN EADAM

And that highly regarded matter form seated lord Siva


ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
AARANAM KONDU POOSURARGAL VANTHU ADI THOLA

In this land deevaas are anthanaas who are chanting veethaas and then prayed under his feet


சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.
SEER ANANGUM PUGAL THENN KUDI THITTAIYEEA

That holly godly place is then kudi thittai
திருமாலும், பிரமனும் தேடியும் அடிமுடி காணவொண்ணாதவாறு விளங்கிய , உலகிற்கு நிமித்த காரணமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூவுலகத் தேவர்கள் என்று சொல்லப் படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை வணங்குமாறு , தெய்வத் தன்மையுடைய புகழுடன் சிவபெருமான் விளங்கும் திருத்தென்குடித் திட்டை என்பதாகும்.

09
379. குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
KUNDI GAI KAIYUDAI KUNDARUM PUTHARUM

The begging bowel on hands carried buthas and samanaas


பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
PANDU YYUURAITHEEA EADUM PATRU VITTTEER THOLUM

Who in appropriate doctrine are not to be considered as true one


வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்
VANDU EARAIKKUM POLIL THANDALAI KONDU ALARAR

The honey bees are raising humming sound those flower plantations are covered place where at the top clouds are crawling form


தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.
THEN THERAI THANN PUNAL THEN KUDDI THITTAIYEEA

The clear waves are emanating cool river flowing place is then kudi thittai
கமண்டலம் ஏந்திய கையை உடைய சமணர்களும், புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர், வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ, தெளிந்த அலைகளை உடைய குளிர்ச்சியான ஆறு பாயும் திருத்தென்குடித் திட்டையைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள்.

10
380. தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
THEEN ALAR SOLAI SOOL THEN KUDI THITTAIYAI

The honey spill over plantations are covered place is then kudi thittai


கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
KAANALLAAR KADI POLIL SOOL THARUM KAALIYUL

In the sea side place situated the fragrance filled plantations are covered place


ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
GAANA MAAR GANA SAMBATHANA SEN TAMIL

Where descended gana sambanther whose pure Tamil poem


பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.
PAAN ALLAR MOLIL VALAARKKU EALLAIYAAM PAAVAMEEA

Those disciples who are singing it before lord Siva and that disciples will not affect any type of sins
தேன் துளிர்க்கும் மலர்களை உடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித் திட்டையைப் போற்றி, கடற் கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த, சிர்காழியில் அவதரித்த, சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHHITRAM BALAM

October 15, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: