THIRU MUTHU GUNRAM
034 திருமுதுகுன்றம்
THIRU MUTHU GUNRAM
பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
தலவரலாறு – நடுநாட்டுத் தலங்கள் 22-இல்,இது 9 –ஆவது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. விருத்தகாசி என்னும் பெயர் உண்டு. பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பதி. சுந்தரர் பொன் பெற்ற தலம்.
359 வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
VANNA MAA MALAR KODU VAANAVER VAL PADA
The verities of color flowers with it upper world deevaas are praying under lord Siva’s feet
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
ANNALAAR AAYILAI YYAAL LODUM AMAR VIDAM
Where lord Siva adorned the snakes as ornaments and then seated with lords yumaadevi
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
VINNIN MAAMALAI POLINTHU EALIYA VELARUVI SEEAR
Where from the space place clouds are shedding rain water and then white water falls form flooded rain water
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.
THINNILAAR PURAVANI THIRU MUTHU GUNRAMEEA
That fertile hilly are covered place is thiru muthu gunram
வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் இடமாவது, வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த , திண்மையான முல்லை நிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
01
360. வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
VETRIYULLAM KONRAIYAN THARINAAN MEETHAGU
The fragrance filled konrai flower garlands are adorned form highly regarded lord Siva
பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்
PORIYULLAAM ARAYU ASAITHU ADIYOOR PUNNIYAN
Who has tied the dotted skin possessed snake on the waist place as belt form and that punniyaa form of lord Siva
மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ்
MATHI YULLAAM KAIYINAAN MANGAIYOODU AMER VIDAM
The young stage carried on the hand place and then seated with lords yumaadevi
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.
SERIYULLAAR PURAVANI THIRU MUTHU GUNRAMEEA
Where plantations are covered place is thiru muthugundram
வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து, படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான், இளமான் கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய், உமா தேவியோடு வீற்றிருந்தருளுகின்ற இடமானது , சோலைகள் நிறைந்த அழகிய திருமுது குன்றம் ஆகும்.
02
361. ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை
EAARINAAR VEDAI MESAI EAMAIYAVR THOLA YUMAI
Lord Siva ascended on the back of the bull and then deevaas are prayed and praised form and then lords yumaadevi
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
KOORINAAR KOL PULI THOOLINAAR MENIMEEAL
Is given left part of his body and then killing instinct filled tiger skin is adorned as lower dress
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந்
NEERANAAR NERAI PUNAL SADAIYINAAR NEGAL VIDAM
And then in the sacred body place sacred ashes are adorned form and then full-fledged Ganges adorned on the hair placed then seated in
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.
THEER ALAR POLIL ANI THIRU MUTHU GUNRAMEEA
Plantations are covered place is thiru muthu gundram
இறைவன் இடப வாகத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற, உமா தேவியைத்; தன்; திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு, கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து, திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து, நிறைந்த கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது, தேன் துளிகளை உடைய மான்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுது குன்றம் ஆகும்.
03
362. உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும்
YURAIYINAAR YURU PORUL AAYINAAN YUMAIYODUM
Lord Siva is veethaa inner meaning matter form and then seated with lords yumaadeni
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
VERAI YINAAR KONRAI SEEAR SADAIIYINAAR MEEVIDAM
And then fragrance filled konrai flower garland adorned on the hair place
உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த்
YURAIYINAAR VOLI EANA VOONGU MUTHAARU MEI
Lord Siva seated place where disciples are all the time rising the praising sound hara hara which reaches up to space level
திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.
THERAIYINAAR EARI PUNAL THIRU MUTHU GUNRAMEEA
Where the waves are emanating mani muthaaruriver river bank place lord Siva seated in thiru muthu gunram temple and then blesses all
இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன். உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பக்தர்கள் உரைக்கும் அர நாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும், பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுது குன்றம் ஆகும்.
04
363. கடியவா யினகுரல் களிற்றினைப் பிளிறவோர்
KADIYA VAAYINA KURAL KALITRINAI PELIRA VOOR
In hard voice the male elephant raised sound
இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
EADIYA VENG KURALINODU AALI SETRIDU NERI
The thunder sound form lion’s roaring sound and then moving in its way
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ்
VADIYA VAAI MALU VINAN MANGAI YOODU AMER VIDAM
Where lord Siva carried sharpened malu battle force on his hands and then seated with lords Yumaadevi
செடியதார் புறவணி திருமுது குன்றமே.
SEDIYA THAAR PURA VANI THIRU MUTHU GUNRAMMEEA
The plantations and creeper plants are filled hilly place is thiru muthu gundaram
கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற, இடி போன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில் , கூரிய முனையை உடைய மழுப்படை ஏந்தி, உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, செடி கொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
05
364. கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்
KAAN AMAR KARIYIN EER YURIVAIYAAR PERIYA THOOR
On the forest place wandering elephant skin is pealed and then adorned it as upper dress and then broad
வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம்
VAAN AMAER MATHIYINOODU AVAR THAAM MARU VIDAM
Space place wandering moon is adorned on the hair place
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந்
YOONA MAAYINA PENI AVAI KEDUTHU YUMAI YODUM
This soul is cornered by ego filled mind that decease is removed and then seated with lord’s yumaadevi
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.
THEEN AMAAR POLIL ANI THIRU MUTHU GUNRAMEEA
Where honey shedding plantations are covered place is thiru muthu gunram where lord Siva seated and then blesses all
காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் பேர்த்திய இறைவன், அகன்ற வானத்தில் தவழும் சந்திரனையும், பாம்பையும் அணிந்து, உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து அருளும் பொருட்டு, உமா தேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது, தேன் துளிர்க்கும் பூஞ்சோலைகளை உடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
06
365. மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
MANGEAR THAAM MALAR KODU VAANAVER VANANGIDA
With flower carried on the hand place the upper world devas are praying under his feet
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
VENG SOLLAAR VEEDAROODU AADAVER VVERUM BAVEEA
And then wild killing act is daily doing those hunters and males are willingly praying under his feet
அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்
ANG SOLLAAL YUMAIYODUM AMER VIDAM MANI KALAI
The lovely good wards are talking lord’s yumaadevi with her lord Siva seated
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.
SENG SOLLAAR PAYIL THARUM THIRU MUTHU KUNRAMEEA
And then veethaas are well learnt persons and then prayer songs are singing persons are living place is thiru muthu gundram
வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர் தூவிப் போற்றி வணங்க, கொடுந் தொழில் செய்யும் வேடர்களும், பிற ஆடவர்களும் விரும்பித் தொழ, அழகிய இன்சொல் பேசும் உமாதேவி யோடு இறைவர் வீற்றிருந்தருளும் இடம், வேதங்களை நன்கு கற்றவர்களும், பக்திப் பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும்.
07
366. காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை
KAARINAAR AMAR THARUM KAIYILAI NAN MALAI YINAI
With rain giving dark color clouds like lord Siva pouring his grace on the living beings who has seated on kailai hills
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற
EEARINAAR MUDI ERAAVANAN EADUTHAAN EARA
The lovely crown adorned ravana tried to lift it who is stamped under kaiyilai hills and then converted him as shattered form
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ்
VAANINAAR MULAI YODUM MANNINAAR MARU VIDAM
And that form of lord Siva seated together in thiru muthugunram temple place
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
SEERINAAR THEGAL THARUM THIRU MUTHU GUNRAMMEEA
மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்கட்கு அருள்புரியும் சிவபெருமான், வீற்றிருக்கும் நன்மைதரும் கயிலை மலையினை , அழகிய முடியுடைய இராவணனன் எடுத்தபோது, அவனை நலியச் செய்த இறைவன், கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும்.
08
367. ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
AADINAAR KAANAGATHU ARU MARAIYIN PORUL
Lord Siva danced in the burial ground and then the four veethaas inner meaning is preached to sanagaathi saints
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி
PAADINAAR PALA PUGAL PARAMANAAR EANAI ADI
And then lord Siva is leader to all living beings and then whose sacred feet are
ஏடினார் மலர்மிசை அயனுமா லிருவருந்
EEARINAAR MALAR MISAI AYANUM MAAL EARUVARUM
Searched by bharama who has seated petals are filled lotus flower and then thiruma who have searched lord Siva’s feet and then failed in their mission
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.
THEEDI NAAR ARI VONNAAR THIRU MUTHU GUNRAMMEEEA
And that form of lord Siva seated in thiru muthu gunram temple place
இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர். அரிய வேதங்களை அருளி, அவற்றின் உட்பொருளை விரித்து ஓதியவர். எவ்வுயிர் கட்கும் தலைவரான அவர்தம் திருவடிகளை, இதழ்களை உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேடியும் அறியப்பட வொண்ணாதவர். அப்பெருமானார் வீற்றிருக்கும் இடம் திருமுதுகுன்றம் ஆகும்.
09
368. மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
MAASU MEI THOOSU KONDU YULAL SAMAN SAAKIYAR
The dirty body and dirty clothes are possessed buthaas and samanaas
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
PEESU MEI YULA VALLA PEENUVEEER KAANUMIN
Whose preaching’s are not true one
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்
VAASAMER THARU POLLIL VANDINAM EASAI SEIYA
The fragrance filled flower plantations are covered place where honey bees are raising humming sound
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.
THEEESSAMER PUGAL MIGUM THIRU MMUTHU
GUNRAMMEEA
Loveliness filled and then glory filled place is thiru muthu gundram and that temple is prayed and then praised form pray him
அழுக்கு உடம்பையும், அழுக்கு உடையையுமுடைய சமணர்களும், புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல. வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க, அழுகும் புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசி;த்து, அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள்.
10
369. திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
THINA NAAR PURAVANI THIRU KUNRARAI
The fertile plantations are covered place is thiru muthu gunram where lord Siva seated and then blessed all
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
NANNINAAN KAALIYUL GAANA SAMBANTHAN SOL
Gana sambanther who has prayed oneness form of mind words and body submissive form prayed and then sang the above ten poems
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்
EANNINAAN EER EAINTHU MAALAIYUM EAYALUMAAP
Those disciples who are thinking over lord Siva and then sang the above songs
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
PANNINAAL PADUVARKU EALLAI YAAM PAAVAMEEA
And then also sang with musical notes are filled form and that disciples will not affect by sins
செழுமையான சோலைகளை உடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம், வாக்கு, காலம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு, சீர்காழியி; அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையொடு பாட வல்லவர்களின் பாவம் தீரும்.
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALMM