OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU YUSAA THANAM

ganesheit October 14, 2019

033 திருஉசாத்தானம்
THIRU YUSAA THANAM


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OMTHIRU CHITRAMBALAM
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மந்திரபுரீசுவரர், தேவியார் – பெரியநாயகியம்மை.


தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 -இல், இது 107- வது திருத்தலம். விசுவா மித்திரருக்கு இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும் தொழுது வணங்கக், கருநிற நஞ்சை உண்டு காத்தருள் செய்த எம்பெருமானுக்குரிய, எங்களை ஏவல் கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

01

கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
Kolai eearu yudaiyavan koovna aadaiyan

The hilly place bull is used as his vehicle to travel and who has adorned loin cloth as his lower dress


பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்
Pallaiyaar paduthalai pali kollum paramanaar

The teeth possessed bharma skull on it accepting begging food and that prime lord Siva


முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
Mullaiyaar puravani muthu pathi narai kamal

The mullai flowers are filled creeper plants in hilly place and then the honey dews are shedding form of plantations are covered place is thillai chithambaram temple place


தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.
Thillaiyaan yurai vidam thiru yusaathaanameea

And that dancing form of lord Siva dwelling place is thiru yusaa thaanam
முல்லை நிலம் சார்ந்த எருதை இறைவன் வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன். முன்பல் விழுந்த பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சையேற்கும் பரமன். முல்லைக் கொடிகளை உடைய முல்லை நிலத்தில், தேன் துளிர்க்கும் சோலைகளை உடைய அழகிய பழம் பதியான தில்லையில் விளங்குபவன். அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.


02
352. தாமலார் போலவே தக்கனார் வேள்வியை
Thaam alar polavea takkanaar velviyai

Alien person liken thakken is punished by lord Siva by destroying the thakken yagaaa fire which is just like a dump person’s dream like one


ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்
YOOMANAAAR THAM KANAA AAKINAAN ORU NODI

காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல்
KAAMANAAR YUDAL KEDA KAAIYINTHA EANG KANNUTHAL

Within a minute lord Siva opened the fore head eye and then destroyed the lust creating god caaman


சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே.
SEEMAMAA YURAI VVEDAM THIRU YUSAATHAANAMEEA

And to his disciples giving benefits and in that form lord Siva descended in thiru yusaatham temple place
தான் அயலார் போலத் தன் மாமனான தக்கன் செய்த வேள்வியை ஊமன் கண்ட கனவு போலப் பயனற்றதாக்கினான். ஒரு நொடியில் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு செய்த நெற்றிக் கண்ணை உடையவன். அச்சிவபெருமான் அடியவர்கட்கு நன்மை தரும் பொருட்டு வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.


03
353. மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்
MARI THARU KARATHI NAAN MAAL VEDAI EAATRINAAN

The young stage is lord Siva carried on his hand place and then glory filled bull on it ascended form and then the true disciples who have adorned ruthraacha and sacred ashes and saffron tainted dress with Lord Siva’s good qualities are filled form prayed under lord Siva’s feet

குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ

KURI THARU KOLA NALL GUNATHINAAR ADI THOLLA
நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்
NERI THARU VEETHIYAR NITHALLUMNIYAMAM SEI

In the Siva agama form of rules are following in the daily perayer


செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.
SERI THARU POLIL ANI THIRU YUSAA THAANAMEEA

The thick plantations are covered place is thiru yusaathanam where lord Siva seated and then blessed all
இளமான் கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி, பெருமையுடைய இடப வாகனத்தில் ஏறி, சிவவேடப் பொலிவுடைய நற்பண்புடைய அடியவர்கள் தன் திருவடியைத் தொழுது போற்றவும், சிவாகம நெறியில் ஒழுகும் அந்தணர்கள் நாள்தோறும் நியமத்துடன் பூசை செய்யவும் விளங்கும்; சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், அடர்ந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருவுசாத்தானம் ஆகும்.
04

இப்பதிகத்தில் 5-ம், 6-ம் செய்யுட்கள் மறைந்து போயின.
05-06


354. பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்
PANDIRATHU AYANUM MAALUM PALA PATHERGAL

From good old days with emotional filled happiness form bharma and thirumal and other disciples are with slavery form surrender under lord Siva’s feet and then singing the prayer songs and then prayed under his feet


தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்
THONDIRATHUM MALAR THOOVI THITHIRAM SOLA

கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந்
KONDIRAI KODIYODUM KURIGININ NAL EANAM

Where lord Siva seated form blessed all and the fish and other prey are cornered and crow and other good birds are saying


தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.
THENTHERAI KALANI SOOL THIRU YUSAA THANAMEEA

The water bodies are filled place is thiru yusaa thanam
பண்டைக்காலம் முதல் மகிழ்ச்சியால் ஆரவாரித்தும், பிரமனும். திருமாலும் மற்றுமுள்ள பல பக்தர்களும், அடிமைத் திறத்தினால் மலர்களைத் தூவித் தோத்திரம் சொல்லி வழிபட, இறைவன் வீற்றிருந்தருளுவது, மீன் முதலிய இரைகளைக் கவரும் காக்கையோடு, நல்ல பறவை இனங்கள் தங்குகின்ற, நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த திருவுசாத்தானம் ஆகும்.


07
355. மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
MADAVARAL PANGINAN MALAI THANAI MATHIYAATHU

Lords yumaaddevi is taken left part of the body and then twin form appearing lord Siva in this place


சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர
SADA SADA EADUTHAVAN THALAI PATHU NERITHARA

And ravana who did not give regard to kaiyilai hills and then try to lift the kaiyilai hills and whose ten heads are smashed form


அடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான்
ADAR THARA YOONRI ANG GEE AVARKU ARUL SEITHAAN

Lord Siva put his thumb leg finger on the kiyilai hills and then steamed him and afterwards relished his sin and then prayed under his feet and then samaaveetha to appease lord Siva and afterwards blessed him with boons and that form of place is thiru yusaathanam


திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே.
THIDA MENA YURAI VIDAM THIRU YUSAA THAANA MEEA

உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் இறைவன் கயிலை மலையை மதியாது பெயர்த்தெடுத்த இராவணயின் பத்துத் தலைகளம் நெரியும்;படி, தன் காற் பெருவிரலை ஊன்றி அம்மலையின் கீழ் அவனை அடர்த்து, பின்னர் இராவணன் தன் தவறுணர்ந்து வழிபட அருள் செய்த ;இறைவன் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.


08
356. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங்
AANN ALAR PENN ALAR AYANODU MAALUKKUM

Lord Siva is not male or female and bharma and thirumal are not seen form existing in this world

காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
KAAN VONNAA VANNAT THAAN KARUTHUVAR MANATHU YULLAN

Those disciples who are thinking all the time and in their filled form existing


பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ்
PEENU VAAR PENIYODUM PERAPPU ARUPPAAN EADAM

Those disciples whose body deceases are removed and then repeated birth and death is also removed


சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.
SEEAN YULLAA MALIGAI THIRU YUSAATHAANAMEEA

The storied buildings are filled place is thiru yusaathamam where lord Siva dwelling
இறைவன் ஆணுமல்லர், பெண்ணுமல்லர், பிரமனும், திருமாலும் காணொணாத வண்ணம் விளங்குபவர். தம்மை நினைத்து வழிபடும் அன்பர்களின் மனத்தில் நிறைந்துள்ள்வர். வழிபடும் அடியவர்களின் உடல்நோயை நீக்குவதோடு பிறவி நோயையும் தீர்ப்பவர். அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் மாட மாளிகைள் உடைய திருவுசாத்தானம் ஆகும்.


09
357. கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்
KAAN AMAR VAALKAIYAAN KAAR AMAN THEERAR SOL

Buthaas and samanaas are not fully known lord Siva’s true nature whose preaching’s are worthless one


ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யவெனில்
YOONA MAA KONDU NEER YURAI MIN YUIYA EANIL

If you want to get upliftment in life lord Siva who is dancing in the burial ground place


வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
VAANAMMAAR MATHIL ANI MAALIGAI VALAR POLIL

Up to sky level raised protection walls and then mansions and then rich form of grown plantations covered place


தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே.
THEENA MAA MATHI THOOI THIRU YUSAA THAANAMEEA

The good moon crawling place is thiruyusaathanam
சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்கள் பயனற்றவை. நீங்கள் உய்ய வேண்டும் என்றால் சுடுகாட்டில் திருநடனம் செய்யும் இறைவன் வீற்றிருந்தருளுகின்ற, வானளாவிய உயர்ந்த மதில்களும் மாளிகைகளும் செறிந்த சோலைகளும் சூழ்ந்த இனிய நிலவு தோயும் திருவுசாத்தானம் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.


10
358. வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன்
VARAI THIRINTHU EALIYUM NEER VALA VAYAL PYGALI MAN

From the hilly place river Cauvery descended and that water wealth filled place is seergaali


திரைதிரிந் தெறிகடல் திருவுசாத் தானரை
THERAI THIRUNTHU EARI KADAL THIRU YUSAA THAANARAI

Where descended thiru gaana sambanther and then in the nearby place sea waves are emanating place is thiru yusaathanam


உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார்
YURAI THERINTHU YUNARUM SAMANTHAN VONN TAMIL VALLAAR

Where lord Siva seated and then before him the above ten poems are singing disciples will


நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.
NARAI THERAI INRIYEEA NAN NERI SEER VAREEA

Not be affected by old age and gray hair and will not be untried form and then youthful energy filled form living and then follow Siva way of life forever
மலையிலிருந்து தன் தன்மை மாறுபட்டுப் பாயும் காவிரியின் நீர்வளமும், வயல் வளமும் மிகுந்த புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன், அலை வீசுகின்ற கடலையுடைய திருவுசாத்தானத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை உணர்ந்து போற்றிய, இந்த ஒண் தமிழ் பதிகத்தை ஓதவல்லவர்கள் நரை திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை மிடுக்குடன் வாழந்து சிவஞான நெறியில் நிற்பர்.
11
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAM BALAM

October 14, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: