OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU EEADAGAM

ganesheit October 14, 2019

032 திருஏடகம்
THIRU EEADAGAM


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

தலவரலாறு – பாண்டிய நாட்டுத் தலங்கள் 14 –இல், இது 4ஆவது திருத்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. பிரமன், திருமால், ஆதிசேடன், கருடன், வியாசர், பராசரர் ஆகியோர் வழிபட்ட தலம்.

340 வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
VANNIYUM MATHAMMUM MATHI POTHI SADAIYI NAN


பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு
PONNIYAL THIRU VADI PUTHU MALAR AVAI KODU


மன்னிய மறையவர் வழிபட அடியவர்
MANNIYA MARAIYAVAR VALI PADA ADIYAVER


இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.
EANN EASAI PAADALAR EADAKATHU ORUVANEEA

வன்னியும், ஊமத்த மலரும், சந்திரனும் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானின் பொன்போன்ற திருவடிகளைப் புதுமலர் கொண்டு, பெருமையுடைய அந்தணர்கள் போற்றி வழிபடவும், அடியவர்கள் இன்னிசையுடன் பாடிப் போற்றவும், ஒப்பற்ற இறைவனான சிவபெருமான் திரு
வேடகத்தில் வீற்றிருந்து அருளுகின்றான்.


01
341. கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
KODI NEDU MAALIGAI GOPURAM KULIR MATHI

The flags are hoisted high raised towers on the top of it the cool moon is crawling and that moon form glittering place is thiru veedagam where lord Siva seated

வடிவுற அமைதர மருவிய ஏடகத்
VADI YURA AMAI THARA MARUVIYA EEADAKATHU

That form of lord Siva’s feet are prayed by falling down on the land place


தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால்
ADIGALAI ADI PANINTHU ARATRUMIN ANBINAAL

And then his glory is saying and then with love filled form prayed him


இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.
EADI PADUM VENAIGAL POI EALLAIYA THAAGUMEEA

So that those problems which are giving trouble to us will be perished
கொடிகளை உடைய நீண்டு உயர்ந்த மாளிகையின் கோபுரம், குளிர்ந்த சந்திரனைத் தழுவுதலால் மதிபோல்ஒளிரும் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும், சிவபெருமான் திருவடிகளைக் கீழே விழுந்து வணங்கி, இறைவனுடைய புகழைக் கூறி அன்பினால் வழிபடுங்கள். நம்மைத் துன்புறுத்தும் தீவினைகள் யாவும் அழிந்து விடும்.


02
342. குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
GUNDALAM THEGAL THARU KAATHU YUDAI KULAGANAI

In the ear place the asura named ganthervers are gundalam form adorned and that lovely form appearing to this world


வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
VANDU ALAMBUM MALARR KONRAIVAAN MATHI ANI

The honey bees are raising sound in the konrai flower garland which is adorned on the hair place and in the space place wandering moon also adorned


செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகங்
SENDU ALAMBUM VEDAI SEEDANOOR EEADAGAM

The bell raising sound on the neck place of bull in that way bull is gaiety walking on the back of it lord Siva seated form blessing all in the thiru veedagam temple place


கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.
KANDU KAI THOLUTHALUM KAVALAI NOI KALALLUMEEA

In that sacred temple is folded hand form praying disciples those disciples mind bogging problems will be removed
காதில் இரு கந்தருவர்களைக் குண்டலமாகக் கொண்டு விளங்கும் அழகராய், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரையும், வானில் விளங்கும் சந்திரனையும் சடைமுடியில் அணிந்து. மணியோசை ஒலிக்க வீரநடை போடும் இடப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் மேன்;மையுடையவரான சிவபெருமானின் ஊர் திருவேடகம். அத்திருத்தலத்தைத் தரிசித்துக் கைகூப்பி வணங்கிப் போற்ற, மனக்கவலையால் வரும் துன்பம் நீங்கும்.


03
343. ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங்
EAALAM MAAR THARU KULAL EEALAI YOODU EALIL PERUUM

The fragrance filled paste adorned on the hair place of lords yumaadevi and then lovely bull place


கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ்
KOOLAMAAR THARU VEDAI KULAGANAAR YURAI VIDAM

Ascended form seated place it is


சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ்
SAALA MATHAVIGALLUM SANTHANAM SANBAGAM

The trees are named all mathavi sandal and sanbagam all plantations are filled place is those specialty thiuveedan temple


சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே.
SSEELAMAAR EADAGAM SEAR THALLAM SSELVAMEEA

Where we may go and then prayed him and then we will get all types of wealth in life
மயிர்ச்சாந்து தடவிய மணமிக்க கூந்தலை உடைய உமாதேவியோடு, அழகிய இடப வாகனத்தி;ல் ஏறும் அழகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமான, ஆல்,மாதவி, சந்தனம், செண்பகம் முதலியன மிகுந்து விளங்கும் திருவேடகம் சென்று அவனை வழிபட்டால் செல்வம் பெருகும்.


04
344. வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்
VARI ANI NAYANI NAN MALAI MAGAL MARUGIDA

The red color veins explicit form appearing on the eyes of lords yumaadevi that hill lady weeping form


கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
KARI EANAI YURI SEITHA KARAI ANI MIDARINAN

Lord Siva pealed the skin of elephant and then adorned it as upper dress and then poison tainted throat possessed lord Siva


பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
PERIYAVAN PENNI NOODU AAN ALI AAGIYA

And that glory filled form of appearing lord Siva who is appearing male female and then ali form and then fire glow form appearing in this world


எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.
EARI AVAN YURAI VIDAM DDADAKAAK KOOYILLEEA

And that form of lord Siva descended in the thiru eeadagam temple place
செவ்வரி படர்ந்த கண்களையுடைய, நல்ல மலைமகளான உமாதேவி கலங்க, யானையின் தோலை உரித்த, விடம் அணிகண்டரான , பெருமை மிகுந்தவரான சிவபெருமான், பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் விளங்கும் சோதி உருவினர். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது திருவேடகக் கோயிலாகும்


05
345. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
POIGAIYIN POLIL YURU PUTHU MALAR THEANRALLAAR

In the natural pond place and flower plantations are bloomed to day flowers where breeze carried away the fragrance


வைகையின் வடகரை மருவிய ஏடகத்
VAIAIYIN VADA KARAI MARUVIYA EADAGAM

And in this form lord Siva seated in vaigai river northern side place named thiru veedagam where lord Siva seated


தையனை அடிபணிந் தரற்றுமின் அடர்தரும்
AYANAI ADI PANINTHU ARATRUMIN ADAR THARUM

And that leader form of lord Siva whose sacred feet
Are submissive form praying and then sing prayer songs


வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.
VEIYAVAN PENI KEDA VEEDU EALI THAAGUMEEA

So that in this life affecting wild decease are to be removed and then in the next birth mukthi boon will be easily attained
குளங்களிலும், சோலைகளிலும் அன்றலர்;ந்த புது மாலைகளின் மணத்தைச் சுமந்து தென்றல் காற்று வீச, வைகை ஆற்றின் வட கரையிலுள்ள திருவேடகத்தில் வீற்றிருக்கும், தலைவனான சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து அவனைப் போற்றி வழிபடுங்கள். அது இம்மையில் துன்பம் தரும் கொடிய நோய்களைத் தீர்த்து, மறுமையில் முத்திப் பேற்றினை எளிதாகக் கிடைக்கச் செய்யும்.
06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
07
346. தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர்
THADAVARAI EADUTHAVAN THARUKKU EARA THOOL ADAR

The ego filled ravana whose mighty power is stamped under the kaiyilai hills


படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
PADA VERAL YOONRIYEEA PARIN THAVARKKU ARULSEITHAAN

In that way lord Siva put his leg finger on the kaiyilai hills and then ravana realized his sin and then sang sama veethaa and on hearing it lord Siva got happy and then blessed him with boons


மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
MADAVARAL EARUKKU VODU VANNIYUM MATHAMUM

The young earukam flowers vanni leaves and then yoomathai flowers are adorned


இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.
EADAM YUDAI SADAIYINAN EADAGATHU EARAIVANEEA

And all are adorned on the hair place and then seated in thiru veedagam temple place and then blessed all
பெரிய கயிலையை எடுத்த இராவணனின் செருக்கைக் கெடுத்துத் தோள்கள் நொறுங்கும்படிக் காற் பெருவிரலை ஊன்றிப், பின்னர் தவறுணர்ந்து இராவணன் இசைத்து வழிபட அவனுக்குப் பரிவுடன் அருள் செய்தார். இளைய எருக்கு, வன்னி, ஊமத்தம் மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் ஆவார்.


08
347. பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
PONNUMAA MANI GALUM PORU THIRAI SANTHU AGIL

The gold and verity of ruby diamonds sandal wood and agil trees which are carried by the waves of vaigai river water and then placed it on the vaigai bed place


தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
THANN YULLAAR VAIGAIYIN KARAI THANIL SAMAIYURA

அன்னமாம் அயனுமா லடிமுடி தேடியும்
ANNAMAAM AYANUM MAAL ADI MUDI THEEDIYUM

And the bharma converted himself as Anna bird form and then searched lord Siva’s head and then thermal converted as pig form and then penetrated in to land place but unable to see lord Siva’s feet


இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.
EANNA VAAR EANA VONNAAN EADAGATHU VORU VANEEA

And in that form lord Siva seated in thiru veedagm temple place and then blessed all
பொன்னும், மணிவகைகளும், சந்தனம், அகில் ஆகிய மரங்களும் வீசுகின்ற அலைகள் வாயிலாகக் கொண்டு வந்து சேர்க்கும் வைகையின் கரையில், அன்னப் பறவையாகப் பிரமன் திருமுடியையும், பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும், இன்னவெனக் காணொணாது விளங்கிய சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் ஆவான்.


09
348. குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
KUNDIGAI KIYINAR GUNAL EALLAA THEERARGAL

In the hand place carried begging bowel named kundigai those samanaas and then true nature of lord Siva is not known that buthaas


பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
PADIYIYAI PERUKKIDUM PALA GARGAL PANI GILAR

All the time consuming gruel and then got bulky belly and those sinners are not praying lord Siva


வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
VANDU EARAIKKUM MALAR KONRAIYUM VANNIYUM

The honey bees are raising humming sound those konrai flowers and then vanni leaves are adorned form of lord Siva


இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.
EANNDAI SEEAR KUM SADAI EEADAGATHU EANTHAIYEEA

In the hair place that form of lord Siva seated in thiru eegambam temple place where you may go and then pray him who is also my father
கையில் குண்டிகை ஏந்திய சமணர்களும், இறை உண்மையை உணராத புத்தர்களும், உண்டு வயிற்றைப் பெருக்கச் செய்யும் பாவிகள். அவர்கள் இறைவனை வணங்காதவர்கள். வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை மலரையும், வன்னியையும் மாலையாக அணிந்த சடை முடியையுடைய , திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானை ஏத்தி வழிபடுங்கள்.


10
349. கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
KOODU ANTHANAM AGIL KONDU EALI VAIGAI NEER

The elephant long teeth sandal wood agil tree all are pushed by the vaigai river water


ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை
EEADU SENRU ANAI THARUM EEEADAGATHU ORU VANAI

And moved against the river water and then prayed in the thiru eagambam temple place


நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
NAADU THEN PUGALIYUL GAANA SAMBANTHANA

In the lovely seergali place descended gaana sambanther who has blessed form gave the above ten poems


பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
PAADAL PATHU EAVAI VALLAVARKU EALLAAI YAAM PAVAMEEA

Those disciples who are sung it before lord Siva and that disciples who will not affect any form of sins and then they will get relief from bad deeds
யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டு வரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்று திருவேடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற இறைவனை, அழகிய புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய, இப் பத்துப் பாடல்களையம் பக்தியுடன் ஓத வல்லவர்கட்கும் பாவம் இல்லை. அவர்கள் தீவினைகளிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.
11
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAM BALAM

October 14, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: