Thiru mayenthirapp palli
031 திருமயேந்திரப்பள்ளி
Thiru mayenthirapp palli
பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam
தலவரலாறு – காவிரி வடகரைத் தலங்கள் 63 – இல் இது, 61-வது திருத்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. இந்திரன், சந்திரன் ஆகியோர் வழிபட்டது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒருவார காலம் சூரியனுடைய ஒளி சுவாமி மீது பரவுவது சிறப்பாகும்.
329 திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
Therai tharu pavalamum seer thigal vayiramum
The sea waves are pushing the corals and specialty filled diamonds
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
ARAI THARUM AGILOODU GANA VALAI PUGU TARUM
And then in the sea shore place pushed the agil trees
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
VARAIVILAAL EAYIL EAITHA MAYANTHIRAP PALLI YULL
In the maganthira palli place lord Siva converted meru hills as bow and then shot a fire arrow to destroy three castles
அரவரை அழகனை அடியிணை பணிமினே.
ARAVARAI ALAGANAI ADIYINAI PNNI MINEEA
And that form of lord Siva who has tied snake as belt in the waist place and that lovely form of lord Siva we may pray in in this place
கடல் அலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் விளங்குகின்றன. திருமயேந்திரப் பள்ளி என்னும் திருத்தலத்தில், மேரு மலையாகிய வில்லால், அக்னிக் கணையாகிய அம்பை எய்து, முப்புரங்களை எரியும்படி செய்த, இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனான சிவபெருமானின் திருவடிகைள வணங்குவீர்களாக.
01
330. கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
KANDAL SEEROPURAMKOLAMAAR MAALIGAI
Up to sky level raised temple towers and then lovely mansions
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
KANDALLUM KAITHAI YUM KAMALA MAAR VAAVIYUM
Where water mulli flowers and thaalai flower trees and the lotus flower bloomed ponds
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
VANDULLAAM POLIL ANI MAYENTHIRAPP PALLIYIL
Where honey bees are wandering place is thiru mayenthirappali
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.
SENDU SEER VEDAIYINAAN THIRUNTHUADI PANI MINEEA
In round shaped form walking bull and which is used as travelling medium by lord Siva whose feet we may pray
மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் , வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
02
331. கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்
KOONGU EALAM VEENGAIYUM KOLUMALAR PUNNAIYUM
The trees are komgu vengai and rich flowers are possessed punnai trees
தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு THAANGU THEEN KONRAIYUM THAGUMALAR KURAVAMUM
And then honey spillover konrai flowers and then best flowers are possessed kura trees
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்
MAA KARUMBUM VAYAL MAYANTHIRAPP PALLIYUL
Mango trees and sugar cane fields are filled place is mayanthirapppaali
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.
AANNGU EARUNTHAVAN KALAL ADI EANAI PANI MINEEA
Where lord Siva seated whose brave anklet adorned feet we may pray
கோங்கு. வேங்கை, செழுமையான மலர்களையுடைய, தேன் துளிகளை உடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமேயந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக.
03
332. வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
VANGAMAAR SEEAN YUAR VARU KURIYAAN MIGU
In the sea place travelling long ships which are returning with big merchandise and that time blowing big conch sounds
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
SANGAMAARR OLI AGIL THARU PUGGAI KAMAL THARUM
And then agil tree fumes which emanating fragrance all the places
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
MANGAIYOOR PANGINAN MEYENTHIRAP PALIYUL
In that thiru mahanthira palli temple place lord Siva seated with lords parvathi who has given left part of his body
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.
EANGAL NAAYAGAN RANATHU EANAI ADI PANI MINEEA
Lord Siva who is hero to me whose feet we may pray
வாணிபத்தின் பொருட்டு நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற் கட்டைகளால் நறுமணம் கமழும் புகையுமுடைய திரு மயேந்திரப் பள்ளியுள், உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் , எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
04
333. நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
NITHILA THOGAI PALA NERAI THARU MALAR EANA
In the sea place emanated pearls are just like flowers are carried on the hand place
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
CHITHARP PUNARI SEEAR THIDAM THIGALTHU EARUNTHAVAN
To pray lord Siva in this way the lovely sea placed on the shore place
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்
MAI THIGAL GANDAN NANN MAYENTHIRAP PALLIYUL
Lord Siva who has seated in thiru mayanthirappali temple place whose throat is poison tainted darkened form
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.
KAITHALA MALUVANAI KANNDU ADI PANIMINEEA
And then in the hand place lord Siva seated with malu battle force carried form whose sacred feet we may pray
இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையில் ஏந்தி வருதல் போல, பல முத்துக் குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையில் சேர்க்கத், திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும், மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், கையில் மழுவை ஏந்தியவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
05
334. சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
SANTHIRAN KATHIRAVAN THAGU PUGAL AYANODUM
Lord Siva is prayed by moon sun and then big glory filled bharma
இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்
EAANTHIRAN VALI PADA EARUNTH EAMM EARAIYAVAN
And then inthiran and that form lord Siva seated in this temple place
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
MANTHIRA MARAI VALLAR MAYYENTHIRAP PALLIYUL
With veetha chanting form lord Siva seated in mayanthirappali temple place
அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.
ANTHA MIL ALAGANAI ADI PANITHU YUI MINEEA
Lord Siva ever permanent form seated in thiru mayanthirappalli temple place we may pray under his feet
சந்திரன், சூரியன், மிகுபுகழ்ப் பிரமன், இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய், வேத மந்திரங்கள் சிறப்புடைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
06
335. சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
SADAI MUDI MUNIVARGAL SAMAI VODUM VALI PADA
The long pigtail possessed saints are collected fragrance filled things and then with it prayed form
நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு
NADAM NAVIL PRIVINAN NARAVANI MALARODU
And then lord Siva in dancing form and then honey spillover form hair place adorned flowers and in addition
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
PADER SADAI MATHIYINAN MAYANTHIRAP PALLIYUL
Moon also adorned that temple place is mayanthirappali
அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே.
ADAL VEDAI YUDAIYAVAN ADI PANINTHU YUI MINEEA
The might power possessed bull is kept as his travelling medium whose sacred feet are prayed and then get upliftment in life
சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத் திரவியங்களைச் சேகரித்து வழிபட, திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும் வாசனை மிக்க அழகிய மலர்களோடு, பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும், வலிமை உடைய எருதினை வாகனமாக உடையவனுமான, திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை வணங்குவீர்களாக.
07
336. சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
SSERAM ORU PATHU YUDAI SERU VALI ARAKKANAI
The ten heads are possessed and then mighty powerful ravana
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
KARAM EARU PATHU EARAKANA VARAI ADARTHAVAN
Whose twenty hands are stamped form and that heavy kaiyilai hills place lord Siva trapped him
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
MARAM AMAR POOM POLIL MAYENTHIRAP PALLIYUL
The white kadamba trees are filled place is thiru mayanthirappali
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.
ARAVAMAR SADAIYANAI ADI PANITHU YUI MINEEA
Where lord Siva seated with snakes are adorned all the body place and the form of lord Siva feet are prayed and then et upliftment in life
பத்துத் தலைகளை உடைய, போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு, கனத்த கயிலை மலையின் கீழ் அடர்த்த பெருமானை, வெண் கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் , பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
08
337. நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
NAAGAM ANAI THUIL PAVANAN NALAMIGU MALARAVAN
In the aathi seadan snake bed place sleeping thirumal and then lovely lotus flower bed place dwelling bharma
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
AAGAM ANAI THAVAR KALAL ANAIYAYUM PERU GILLAR
Who are converted themselves as Anna bird and pig form and then tried to search head and feet of lord Siva but failed to see in visual form
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
MAAGAINTHU ALAR POLIL MAYANTHIRA PALLIYUL
Up to sky level grown flower plantations and that place is mayanthirappali
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.
YAAGAM ANAINTHAVAN KALAL YUNARTHU EARUNTU YUIUU MINEEA
In yoga meditation form lord Siva seated whose sacred feet are known form you may pray under his feet
ஆதிசேடனாகிய பாம்புப் படுக்iகில் துயில்பவான திருமாலும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு, பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார். ஆகாயம் அளவிய பூஞ் சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோக மூர்த்தியாய் வீற்றிருந்து அருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து நன்மை அடைவீர்களாக.
09
338. உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்
YUDAI THU VARNTHAVAR GALLUM YUDAI THUVAR YUDAIYARUM
Dress less samanaass and then yellow color dress adorned buthaass
படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்
PADU PALI YUDAIYAVAR PAGER VANA VEDUM MIN NEER
Whose curing form of wards are dissuaded form
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
MADAI VALAR VAYAL ANI MAYEENTHIRAP PALLIYUL
With canal form water flowing in to paddy fields that place is mayanthirappali
இடமுடை ஈசனை இணையடி பணிமினே.
EADAM YUDAI EESANAI EANAI ADI PANIMINEEA
Where lord Siva seated whose sacred feet are to be prayed
ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும், மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கோளாது விடுவீர்களாக. மடையின் மூலம் நீர்பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
10
339. வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
VAM PULLAM POLIL ANI MAYANTHIRAP PALLIYUL
The fragrance filled plantations are covered place is thiru mahanthirappali
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
NAMBANAAR KALAL ADI GAANA SAMBANTHAN SOL
All the living beings are liked the feet of lord Siva where gana sambather who has sang the above Tamil poems
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
NAM PARAM EATHU EANA NAAVINAAL NAVIL PAVER
Those disciples who are considered it as their duty to sing before lord Siva and that disciples are
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.
YUMBARAAR EATHIR KKOLA YUAR PATHI ANAI VAREEA
Those upper world devas are invited them before hand and then and then reached elevated place
நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியுள், எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய, இத் திருப்பதிகத்தை , இது நம்முடைய கடமை என்ற உறுதியுடன், நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர் கொண்டு அழைக்க, உயர்ந்த இடத்தினை அடைவார்கள்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருமேனியழகர், தேவியார் – வடிவாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAM BALAM