OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MALA PAADI

ganesheit October 11, 2019

028 திருமழபாடி
THIRU MALA PAADI


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OMTHIRU CHITRAM BALAM

தலவரலாறு – காவிரி வடகரைத் தலங்கள் 63 – இல், இது 54- வது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. இந்திரன் முதலானோர் வழிபட்டது. மார்க்கண்டேயருக்காக இறைவன் மழு ஏந்தி நடனக் காட்சி நல்கிய தலம். நந்திதேவர் திருமணம் கொண்ட தலம்.

296 காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ்
KAALAIYAAR VANDINAM KINDIYA KAAR YURUM

At the early morning time honey bees are penetrated in to the flowers and then sucking honey and then


சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
SOLAI YAAR PAING KILI SOL PORUL PAYILAVEEA

In those temple place bharmins are dialing chanting veetha manthraas and then which is repeated by parrots in that plantation place


வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
VEELAI YAAR VEDAMANI VEETHIYAN VERUM BIDAM

From the sea place emanated poison is consumed and then conserved as ruby diamond form in the throat place and that veethaa meaning filled form of lord Siva who is willingly dwelling place is


மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.
MAALAIYAAR MATHI THAVAL MAA MALA PAADIYEEA

In the high raised building place moon is crawling place is where thirumalabadi temple situated
காலையில் வண்டினங்கள்; மலர்களைக் கிண்டி விளங்கும் சோலையில் மேவும் பைங்கிளிகள் , அத்தலத்தில் உள்ளோர் பயிலும் சைவநூல்களில், சொல்லையும் பொருளையும் பயில்வன. கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப் பொருளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
01

கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
KARAI ANI MEDARUDAI KANNNUTHAAL NANNIYA

The dark color throat possessed form and fore head eye possessed form


பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
PERAI ANI SENG SADAI PINGAGAN PEENUM VOOR

And then those moon surrender under his feet who is kept in the hair place in decorated form those veethaa chanting lord Siva


துறையணி குருகினந் தூமலர் துதையவே
THURAI ANI KURUGINAM THUUMALAR THUTAIYAVEEA

Whose dwelling place is where in the water bodies the white birds are seated without any separated form white flowers bloomed place


மறையணி நாவினான் மாமழ பாடியே.
MARAIANI NAAVINAAN MAA MALA PAADIYEEA

Is thiru malabadi where all the time lord Siva seated in veethaa chanting form
நீலகண்டராயும், நெற்றிக் கண்ணை உடையவரும், தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய பிஞ்ஞருமான சிவபெருமான், வேதங்களை ஓதுபவர். அவர் வீற்றிருந்தருளும் ஊர், நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற மலர்கட்கும் , தமக்கும் வேறுபாடு தேன்றாதபடி விளங்கும் திருமழபாடி என்னும் திருத்தலமாகம்.


02
298. அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியுஞ்
ANTHANAR VEELVIYUM ARU MARAAI THULANIYUM

Bharmins who are daily chanting veetha manthiraas


செந்தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தரப்
SEN TAMIL GEETAMUM SEERINAAL VAALAR THRA

And then disciples are all the time singing the prayer songs and then specialty filled form


பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
PANTHANAI MEL VERAL LAAL VODUM PAYIL VIDAM

The balls form soft finger tips are possessed lord’s yumaadei with her lord Siva seated place is


மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.
MANTHAM VANTHU YULAYUU SEER MAA MALA BAADIYYEEA

Where soft breezes all the time blowing place is thiru mala badi temple place
அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிற வேதங்கள் ஒலிக்கவும், செந்தமிழ்ப் பக்திப் பாடல்கள் இசைக்கவும், சிறப்புடன் இறைவன், பந்து வந்தடைகின்ற மென்மையான விரல்களை உடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் இடம், தென்றற் காற்று வீசும் புகழ் மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.


03
299. அத்தியின் உரிதனை யழகுறப் போர்த்தவன்
AATHIYIN YURI THANAI ALAGURA POORTHAVAN

Elephant skin is pealed and then lovely form adorned as upper dress


முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
MUTHIYAAI MOOVARIN MUTHAL VANAAI NINRAVAN

And then only mukthi giving god in this world is lord Siva who is principal to thee sub deities named bharma thirumal and then ruthiran


பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும்
PAATHIYAAL PAADIDA PARINTHAVARKKU ARUL SEIYUM

Those disciples who are devotion filled form singing before lord Siva to who lord Siva pours his blessings on them


அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.
ATHANAAR YURAI VEDAM ANI MALA PAADIYEEA

That leader seated place is lovely thiru malabadi temple place
யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான் போர்த்திக் கொண்டவர். வீடு பேறாயும், மும்மூர்த்திகட்கு முதல்வனாயும் விளங்குபவர். பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும் தலைவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.


04
300. கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
GANGAIYAAR SADAI EADAI KATHIR MATHI ANINTHAVAN

In the Ganges flowering hair place moon also adorned


வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலாச்
VVENG KAN VAAL ARA YUDAIVEETIYAN THEETHILLAA

The red color ferocious eyes are possessed snakes
Are adorned all over the body as ornaments form and and then veethaa are blessed form given to this world and its embedded meaning form existing in this world


செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
SENG KAYAL KANNUMAI YAALLODUM SEER VIDAM

Those disciples who are prayed under lord’s yumaadevi feet whose bad deeds are removed form of red color eyes are possessed lord’s yumaadevi with her lord Siva seated place is


மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.
MANGAI MAAR NADAM PAYIL MAA MALA PAADIYEEA
Where ladies are all the dancing place is thirumala baadi temple place
கங்கையைத் தாங்கிய சடை முடியின் இடையில் ஒளிரும் சந்திரனை அணிந்தவன். கொடிய கண்ணையுடைய ஒளியுடைய பாமபை ஆபரணமாக அணிந்தவன். வேதத்தை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன். தன்னை வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் திருமழபாடி ஆகும்.


05
301. பாலனா ராருயிர் பாங்கினால் உணவருங்
BALLAAAR AAAR YUIR PAANGINAAL YUNNA VARUM

The young chap margandaaya life time is come to an end so the death god ema tried to corner the mar gandaya soul


காலனார் உயிர்செகக் காலினாற் சாடினான்
KAALANAAR YUIR SEGA KALINAAL SAADINAAN

Those death god ema is kicked and then killed by lord Siva by leg


சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
SEELINAAR KANNINAAL THNODUM SEEAR VIDAM

The seal fish like eyes are possessed lord’s yumaaddevi with her lord Siva seated and then blessed all


மாலினார் வழிபடு மாமழ பாடியே.
MAALIINAAR VALI PAADU MAA MALA PAADIYEEA

Where thurumal conducted poojaas that temple place is thiru mala badi
பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும், அவன் ஆருயிரைக் கவர வந்த காலனின் உயிர் அழியும்படிக் காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்பு மிக்க திருமழபாடி ஆகும்.


06
302. விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே
VINNILAAR EAMAIYAVAR MEI MAGILTHU EEATHAVEEA

While upper world deevaas are all the time prayed and praised and then got all types of boons from lord Siva


எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
EANNILAAR MUP PURAM EARI YUMMA NAGAI SEITHAAR

But asuraas who are not try to get upliftment in life who are doing harm to all those assurass three castles destroyed by laughter form fire emanated from mouth and then burnt it down


கண்ணினாற் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
KANNINAAL KAAMANAI KALAL EALA KAAINTHA EAMM

And then lust creating god named common is fired with his fore head eye fire

அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.
ANNAL LAAR YURAI VIDAM ANI MALA PAADIYEEA

My leader lord Siva dwelling place is the lovely thiru malabaadi temple place
சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத், தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர். நெற்றிக் கண்ணைத் திறந்து நெருப்புப் பொறி பறக்க , மன்மதனை எரித்த எம் தலைவரான் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி ஆகும்.


07
303. கரத்தினாற் கயிலையை எடுத்தகார் அரக்கன்
KARATHINAAL KAYILAIYAI EADUTHA KAAR ARAKKAN

With hands ravana tried to lift the kailai hills and then whose


சிரத்தினை யூன்றலுஞ் சிவனடி சரண்எனா
SEATHINAI YOONRALUM SIVAN ADI SARAN EANAA

Whose hands are smashed and then heads are stamped form lord Siva put his leg thumb finger on the kaiyilai hills and then ravana surrender under his feet and the prayed under his feet


இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
EARATHINAAL KAI NARAMBU EADUTHU EASAI PAADALUM

And his blood tainted veins with it and then constructed yaal musical instrument and then sang samaa veethhaa to appease lord Siva


வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.
VARATHINAAN MARU VIDAM MAA MALA PAADIYEEA

And that boon giver lord Siva dwelling place is thiru malabaadi temple place
தனது கரத்தால் கயிலை மலையினை எடுத்த இராவணனுடைய சிரமானது நலிவுற்றுத் துன்புறுமாறு ஊன்றியவர சிவபெருமான். அவர் திருவடியைச் சரணம்; எனக் கொண்டு அருள் புரியும்படி, தனது இரத்தம் தோய்ந்த கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டி, இசை எழுப்பிப் பாட, வரம் நல்கிய மருவி விளங்குகின்ற இடமாவது சிறப்புடைய மழபாடியே ஆகும்.


08
304. ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
EEADULAA MALAR MISAI AYAN EALIL MAALU MAAI

Lotus lower peals place seated bharma and then then thirumal tried to search lord Siva’s head and feet


நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்
NAADINAARKU ARIYA SEER NATHANAAR YURAI VIDAM

But rare form to them and that form of lord Siva seated place is


பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
PAADU EALLAM PENNAIYIN PALAM VILA PAIMPOLIL

Where on one side palm tree fruits are shedding form and then in other side plantations are covered form existing place is


மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.
MAADU EALLAAM MALGU SEER MAA MALA PAADIYEEA

And that specialty filled place is thiru malabaadi
இதழ்களை உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அடிமுடி தேட, காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒரு பக்கம் பனைமரங்களின் பழுத்த பழங்கள் உதிர, மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்


09
305. உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
YURI PIDITHU YOOTHAI VAAI SAMANODU SAAKIYAR

The water pot is carried on the one side of cane and then lifted is and those samanas are not daily brushing their teeth and then buthaas are


நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
NERI PIDUTHU ARIVILLAA NEESAR SOL KOLALN MIN

They are not known the truth of lord Siva’s true form so their preaching’s are not to be taken as true one


பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
PORI PEDITHU ARAVINAM POON EANA KONDU MAAAN

The dancing snakes are adorned as ornaments form all over the body and then carried young stage in the hand place


மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.
MARI PEDITHAAN EADAM MAA MALA PAADIYEEA

And that form lord Siva seated place is thiru mala baadi temple place
நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும், வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும், புத்தர்களும் இறைவனை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டாம். படமெடுத்தாடும், புள்ளிகளை உடைய பாம்பை ஆபரணமாக அணிந்து, இளமான் கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.


10
306. ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ்
GAALATHAAR AATHIRAI NAAALINAAN NAAL THORUM

In this land place auspicious day is thiruvaathirai is considered as lord Siva’s day and then daily


சீலத்தான் மேவிய திருமழ பாடியை
SEELATHAAR MEEVIYA THIRU MALA PAADIYAI

As per agama rule form daily boojaas are conducted place is thiru mala baadi


ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
GAALATHAAN MIKKA SEER GAANA SAMBANTHAN SOL

This world people are praising thiru gaana sambather who has sand the above poems


கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே
KOLATHAAL PAADUVAAR KUTRAM ATRAAR GALLEEA.

With Siva decoration form those disciples who are singing it that disciples are left out from all form of bad defects in this world
இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு, நாள்தோறும் சிவாகம விதிப்படி பூசைகள் நடைபெறும்; திருமழபாடி என்னும் திருத்தலத்தினை, உலகத்தோரால் போற்றப் படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞான சம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீpங்கப் பெற்றவர்கள் ஆவர்.
11
திருச்சிற்றம்பலம்—– OM THIRU CHITRAM BALAM

October 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: