THIRU CHAKARAPPALLI
027 திருச்சக்கரப்பள்ளி
THIRU CHAKARAPPALLI
பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலம் 127 – இல், இது 17 – வது திருத்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். இந்திரனின் மகனாகிய சயந்தனும், தேவர்களும் வழிபட்ட தலம்
285 படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
PADIYINAAR VENN MALU PAAIPULI THOLARAI
Lord Siva who has carried malu battle force on his hand and then leap forward tiger skin adorned on the waist place
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
YUDAIYINNAAR YUMAIYORU KOORANAAR VOORVATHOOR
and then lords yumaadevi is taken left part of his body
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
VEDAIYINAAR VENPODI POSIYAR VERI PUNAL
And then taken bullas his travelling medium and then adorned sacred ashes all over the body and then spread over form of Ganges river water
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
SADAIYINAAR YURAI VIDAM CHAKKARAPPALLIYEEA
Adorned on the hair place and that form of lord Siva’s dwelling place is chakkarap palli
சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக் கலனாகக் கொண்டவர். பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாகக் கொண்டவர். திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச் சடையில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும்.
01
286. பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
PAADINAAR ARU MARAIPANIMATHI SADAI MISAI
Lord Siva who has chanted rare form of veethaaas and then blessed form which is given to this world and then in the hair place
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்
SOODINAAR PADU THALAI THUNN EARUKKU ATHAN NODUM
Cool moon adorned and then skull garland adorned with erukku flowers
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
NAADINAAR EADUPALI NANIYORKAALANAI
And then in the sacred hand place skull carried and then going for begging food and margandayaa who has fast attachment with lord Siva whose life is tried to corner by death god ema who is kicked and then killed by lord Siva
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
SAADINAAR VALA NAGER CHAKKARAPP PALLIYEEA
And in that benevolent father form of lord Siva’s dwelling place is chakkarappali temple place
சிவபெருமான் அரிய நால் வேதங்களை ஓதி அருளியவர். குளிர்ந்த சந்திரனைச் சடையில் சூடியவர். மண்டையோட்டு மாலையுடன் எருக்கம்பூவும் அணிந்தவர். திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்தவர். அப்பெருமான் வீஙற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப் பள்ளி என்னும் திருக்கோயிலுடைய ஊராகும்.
02
287. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
MINNINAAR SADAI MISAI VERI KATHIR MATHIYA MUM
Lord Siva who has in the lighting like hair place adorned rays are spread over moon
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந்
PONNINAAR KONRAIYUM PORI KILAR ARAVAAMUM
And the golden color konrai flower on the hair place and then the fire spark like poison spitting snake also adorned on the hair place
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை
THUNNINAAR YULAGU EALLAAM THOLUTHU EALANAAN MARAI
And then the whole world prayed form lord Siva sand four veethaas and its inner meaning is explained to four saint’s
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
THANNINAAR VALA NAGER CHAKKARAP PALLIYEEA
And that form of lord Siva seated place is fertile one is chakkarappali
சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின்மீது ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும், நெருப்புப் போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் உடையவர். உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் தி;ருசக்கரப் பள்ளி என்பதாகும்.
03
288. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
NANLA MALI KOLGAI YAAR NAAN MARAI PAADALLAAR
Lord Siva doing good all living beings in this world and that form of big philanthropist in this world and the singing four veethaaas all the times
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
VALA MALI MALU VINAR MAGIUM VOOR VANDARAI
The mighty powerful malu battle force carried on his hands and that form of lord Siva happily seated place is where honey bees are raising sound
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
MALAR MALI SALAMODU VANYHU EALI KAAVIRI
Those flower plantations are covered place where the river Cauvery flowing with sala sala sound
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.
SALA SALA MANIKOLI CHAKKARAP PALLIYEEA
And then ruby diamonds are placed on the river bank place that fertile place is charappali
சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங் கருணையாளர். நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர். வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர். அப்பெருமான் மகிழ்ந்து விளங்கும் ஊர், வண்டுகள் ஒலிக்கின்ற, தேன் துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச, வேகமாகப் பாயும் காவிரியாறு சல சல என ஒலிக்கும் மணிகளைக் கரையில் ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
04
289. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
VENTHA VEN PODI ANI VEETIYAR VERI PUNAL
The burnt down white ashes are adorned all over the body and that bharmin appearance form and then Ganges are carried on the hair place
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
ANTHAMIL ANI MALAI MANGAIYOODUAMARUM YOOR
Ever attractive form seated lords yumaadevi with her lord Siva seated
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
KANTHAMAR MALARODU KAAR AGIL PANN MANI
And the fragrance filled flowers agil wood and then verities of diamonds and sandal wood all are flush out in the river bank place
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.
SANTHINODU ANAAI PUNAL CHARAPP PALLIYEEA
That water resource filled place is thiru chakkarappali
சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர், கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர், அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர் , நறுமணம் கமழும் மலர், அகில், பலவகை மணிகள், சந்தனமரம், இவை வந்தடைகின்ற நீர்வளம் மிக்க திருச் சக்கரப்பள்ளி என்பதாகும்.
05
290. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
PANGINAAL MUPP PURAM PAAL PADA VENSELAI
With appropriate form three castles are destroyed by meru hills are converted as bow and then shot an fire arrow
வாங்கினார் வானவர் தானவ வணங்கிட
VAANGINAAR VAANAVER THAANAVER VANANGIDA
And the devas and asuraas are prayed form
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
VVOONGINAAR YUMAI VORU KOORODUM OLI PUNAL
Lords yumadevi is given left part of his body besides Ganges are adorned on the hair place
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
THANGI NAAR YURAI VEDAM CHAKKARAP PALIYEEA
And that form of lord Siva seated lace is thiru charappali temple place
உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எறிந்து சாம்பலாகும்படி, கோபத்துடன் வளைக்க முடியாத மேரு மலையை வில்லா வளைத்தவர். தேவர்களும் , அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர். உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்து அருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
06
291. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
PAARINAAR THOLUTHUEALU PARAYU PALLAAYIRM
Lord Siva in this world all are prayed form thousands of names possessed form existing in this world
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
PEEARINAAR PENN ORU KOORINAAR PEEAR OLI
And then lords yumaadevi is given left part of his body
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
NEERINAAR SADAI MUDI NERAI MALAR KONRAIYAM
With emotional sound raised form descended from the space place those Ganges are adorned on the hair place and bunch form of konrai flowers are adorned on the hair place
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
THAARINAAR VALA NAGER CHAKKARAP PALLIYEEA
And that long flower garland adorned form lord Siva seated place is chakkarap palli temple place
சிவபெருமான் இப்பூவுலக மக்கள் எல்லாம் தொழுது போற்றும் பல்வகைத் திருநாமங்களை உடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப் பள்ளி என்பதாகும்.
07
292. முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
MOTHIR EALLA VEN PERAI SOODINAAR MUNNA NAAL
The young moon adorned on the hair place and then once upon a time
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
EATHIR EALLA MUPP PURAM EARI SEIYHAAR VARAI THANAAL
And then there is no enemy to them in that form of wandering three castles are destroyed by meru hills bow
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
ATHIR EALLAA VALARAKKAN VALI VAATIYA
The kailai hills are tried to lift by ravana whose mighty power is destroyed by lord Siva
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
SATHIRINAAR VALA NAGER CHAKKARAP PALLIYEEA
seated place is charappali temple place
That brave lord Siva whose dwelling place it is
முதிர்வு அடையாத இளவெண் திங்களைச் சடைமுடியில் சூடியவர். முன்னொரு காலத்தில் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையி;ல் திரிந்த முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். கயி;லை மலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
08
293. துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்
THUNI PADU KOVANAM SUNNAVEN PODIYINAR
The tiered soiled cloth is adorned as loin cloths and the white ashes are adorned all over the body
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
PANI PADU MAARBINAR PNI MATHI SADIYINAR
And then snakes are adorned all over the body as ornaments form and then cool moon adorned on the hair place
மணிவண னவனொடு மலர்மிசை யானையுந்
MANNI VANNAN ANANODU MALAR MISAI YAANAIYUM
The black color body possessed thirumal and then lotus flower place seated bharma who are fight themselves as supreme god
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.
THANIVINAR VALA NAGER CHARAPP PALIYEEA
That ego filled persons mentality is subdued form of lord Siva seated place is thiru chakkarappali
கிழிக்கப் பட்ட துணியைக் கோவணமாகச் சிவபெருமான் அணிந்தவர். மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர். பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர். குளிர்ந்த சந்திரனைச் சடையில் சூடியவர். திருமாலும், பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கை அழியச் செய்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி ஆகும்.
09
294. உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
YUDAMBU POOR SEEVARER YOON THOLIL SAMANARGAL
To cover body those yellow color cloth possessed buthaas and then to eat all the time those mentality possessed samanaas
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
VEDAM PADUM YURAI AVAI MEI ALLA VERIPUNAL
Whose preaching’s are poison for doing bad to all and those wards are not true one
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
VADAM PADU MALAR KODU VANAGUMIN VAIGALLUM
The spread over form flowing cool water with it give sacred bath to lord Siva and then daily pray him
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.
THADAM PUNAL SOOL THARU CHARRAP PALLIYEEA
In that form water bodies are filled place is chakkarappali
உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடையை உடுத்தும் புத்தர்களும், உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை , நஞ்சு போன்று கொடுமையானவை. மெய்ம்மையானவை அல்ல. விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சாத்தியும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்தும் விளங்கும் திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை வணங்குவீர்களாக.
10
295. தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெங்
THANN VAYALPUDAIANI CHAKKARAP PALLI EAM
The cool paddy fields are covered place is chakkarappali where
கண்ணுத லவனடி கழுமல வளநகர்
KANNUTHAL AVAN ADI KALU MALA VALA NAGER
Lord Siva who has forehead eye possessed form descend in fertile sergali temple place
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
THANNIYA SENTH TAMIL GAANA SAMBANTHAN SOL
Where descended ganasambanther whose sacred pure tamil poems
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.
PANNIYA EAVAI SOLA PARAIYUM MEI PAAVAMEEA
Those disciples who are daily chanted before lord Siva and that disciples sins will be removed
குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப் பள்ளியில், எம்முடைய, நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப் பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்கள் பாவம் நீங்கும்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆலந்துறைஈசுவரர், தேவியார் – அல்லியங்கோதையம்மை.
சக்கரப்பள்ளியினிற் சார்ந்த அல்லியங்கோதை,
சொற்கிரங்கு மாலந்துறையானே என்னுஞ்
சிவநாமப் பஃறொடையானு முணர்க.
திருச்சிற்றம்பலம்—OM THIRU CHITRAM BALAM
October 11, 2019