OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU ARANTHAI PERUM PAALI

ganesheit October 11, 2019

030 திருஅரதைப்பெரும்பாழி
THIRU ARANTHAI PERUM PAALI


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 – இல், இது 99- ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. ஹரித்துவார மங்கலம் என வழங்கப் படுகிறது. திருமால் பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய இடம்.

318 பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
PAAI THA PAAM PPODARAI KOVANAM PAAI PULLI

The dancing snake is tied as belt form in the waist place and then loin cloth and tiger skin adorned as lower dress


மொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடை
MOI THA PEEAI GAL MULAKKAM MUTHU KAATTU EADAI

Where demon forces are raising huge sound form lord Siva dancing in the burial ground place


நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
NITHAM AAGAM NADAM AADI VENN NEETRANI

And ever permanent form dancing where lord Siva adorned sacred ashes all over the body that temple place is thiru aranthai perum paali


பித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
PITHAR KOIL ARANTHAI PERUM PAALIYEEA

Where lord Siva appeared in love filled form
இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கட்டி, கோவணமும் புலித்தோலும் அணிந்து, பூத கணங்கள் சூழ்ந்து முழங்கச் சுடுகாட்டில், நிலை பெற்ற நடனம் ஆடி, திருவெண்ணிறு அணிந்த பித்தரான சிவபெருமான், கோயில் கொண்டு அருளுவது திருஅரதைப் பெரும்பாழியாகும்.


01
319. கயலசே லகருங் கண்ணியர் நாடொறும்
KAYAL SEEAL KARUM KANNIYAR NAAL THORUM

Kayal fish and sale fish like dark color eyes are possessed ladies who are daily


பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
PAYALLAI KOLLAP PALI THEERNTHU YULAL PAAN MAIYAR

Got lust disease named pasalai and in that way lord Siva wandering to collect begging food


இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்
EALAI VAANOR NINAI THOORKALLUKU EANN ARUM

And that form of lord Siva’s mannerism are not thinking form of deevaaas and disciples


பெயரர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
PEYARER KOIL ARANTHIPERUM PAALIYEEA

And in that form lord Siva has verities of names that temple place arantai perum paali

கயல் மீன் போன்றும், சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக் கண்களை உடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மையுடையவர். சிவபெருமான். அவருடைய தன்மைகள் வானவர்களும் அடியவர்களும் எண்ணுதற்கு அரிய பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில் கொண்டருளுவது
திருஅரதைப் பெரும்பாழியே.


02
320. கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்
KOODAL SAALAV YUDAIYAAR KOLAI YAANAIYIN

The killer instinct filled elephant skin is pealed and then adorned it as upper dress


மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை
MOODAL SAALAV YUDAIYAAR MULI KAAN EADAI

And then in the dirty place of burial ground he is all the time dancing


ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
AADAL SAALAV YUDAIYAAR ALAGAAGIYA

And that lovely form of lord


பீடர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
PEEDER KKOIL ARANTHAI PERUMPAALIYEEA

And lorry filled form of lord Siva seated place is arantnai perum paali temple
அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள் புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அருவருக்கத் தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர். அழகிய பெருமையுடைய அப் பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப் பெரும்பாழியே ஆகும்.


03
321. மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
MANNAR NEER AARR ALALAAR MALI KAALINAAR

Lord Siva is in the five vast forces form of land water fire wind and space form appearing to all


விண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்
Vinner veetham verithu voothuvar meiporul

And then veethaas true meaning is elaborately explained to saints and nanthi deevan and then lord Siva is true meaning filled matter form appearing to this whole world


பண்ணர்பா டலுடை யாரொரு பாகமும்
Panner paadal yudaiyaar oru bagamum

With musical notes are filled firm of singing place lord Siva appeared there and then lords yumaadevi is given left part of his body


பெண்ணர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
Penner arather koil arathai perum paaliyeea

And that twin form of lord Siva seated temple place is thiru aranthai perum paali
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் விளங்குவபவர் இறைவர். வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுபவர். மெய்ப் பொருளாகியவர். பண்ணோடு கூடிய பாடலில் விளங்குபவர். உமாதேவியைத்; தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப் பெரும் பாழியே ஆகும்.


04
322. மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
Maraiyar vaayin moli maanodu vennmalu

Lord Siva blessed form gave veethaas to this world and then who has carried on his hands stage white malu battle force


கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்
Karai kol soolam yudai kaiyer kaaraar tarum

And then blood tainted soolam battle force on his hands


நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்
Narai kol konrai nayanthaar tharum senni meeal

In the summer time bloomed fragrance filled konrai flower on his hair place and then in addition


பிறையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
Peraiyar koil arathai perum paaliyeea

The curved moon adorned on his hair place and that temple place is thiru aranthai perum paali where lord Siva seated
சிவபெருமான் வேதங்களை அருளிச் செய்தவர். மானும், வெண்மழுவும், சூலமும் ஏந்திய கையர். கார் காலத்தில் மலரும் தேன் துளிர்க்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளவர். சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.


05
323. புற்றர வம்புலித் தோலரைக் கோவணந்
Putru aravam Puli tholarai kovanam

The sand don place dwelling snakes and tiger skin and loin cloth adorned in the waist place and then


தற்றிர வில்நட மாடுவர் தாழ்தரு
Atriravil nadam aaduvar thaal tharu

In the mid night time lord Siva dancing in burning burial ground place


சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
Sutramar paareadam thol kodi yin misai

And then demon forces are covered form standing and then praying lord Siva who has carried bull flag on his hand place and in that form dwelling place is thiru aranthai perum paali temple place


பெற்றர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
Petrar koil arathai perum paaliyeea

புற்றில் வாழும் பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் அணிந்து, இரவில் நடனமாடும் சிவபெருமான், பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க, இடபக் கொடி உடையவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும் பாழியே.


06
324. துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
Thunai earunthu am kari sangu amer venn podi

The lovely squied form conch ornament adorned on the hair place and then sacred ashes are adorned all over the body


இணையிலேற் றையுகந் தேறுவ ரும்மெரி
Eanai yill eeatrai yugamthu earu varum eari

And the unique form of bull is willingly accepted as his vehicle to travel


கணையினால் முப்புரஞ் செற்றவர் கையினில்
Kanaiyinaal mupppurm setravar kaiyinil

With fire arrow shot and destroyed three castles and then in the hand place


பிணையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
Penaiyar koil arathai perum paaliyeea

Stage carried form lord siva dwelling place is thiru aranthai perum paali temple place
அழகய சுரிந்த சங்கினாலாகிய குழைகளைக் காதில் அணிந்தும், திரு வெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர் இறைவர். ஒப்பற்ற இடபத்தை விரும்பி வாகனமாக ஏறுபவர். அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரங்களை அழித்தவரும், கையில் இளமான் கன்றை ஏந்தியவருமான் அச்சிவபெருமான் வீற்றிருந்து அருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும்.


07
325. சரிவிலா வல்லரக் கன்தடந் தோள்தலை
Sarivillaa vall arakkan thadam thol thalai

Not get tired that mighty powerful ravana who has tried to lift kaiyilai hills whose hands and heads are


நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்
Neri villaar avv adarthaar nerimen kulal

Smashed form stamped under the kaiyilai hills by lord Siva and then thick hair possessed lords yumaadevi


அரிவைபா கம்மமர்ந் தாரடி யாரொடும்
Arivai baagam amarnthaar adiyaar rodum

Is kept left part of his body and then without any separation lord Siva seated with his disciples those temple place is thiru aranthai perum paali
பிரிவில்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
Perivil koil arathai perum paaaliyeea

தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரிய தோள்களும், தலைகளும் நெரியுமாறு அடர்த்த சிவபெருமான், அடர்த்தியான மென்மை வாய்ந்த கூந்தலையுடைய, உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந்தருளுவது திரு அரதைப் பெரும்பாழியே.


08
326. வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்
Vari yaraa eanbu ani maar binary neer malgum

The stripped form of snakes are adorned all over the body and bone garland adorned form and then Ganges are carried


எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
Eari araayum vanng sadai meal perai eatraver

On his fire like glittering hair place curved moon adorned


கரியமா லோடயன் காண்பரி தாகிய
Kariya maal lodu ayan kaan barithaagiya

The dark body color possessed thirumal and red color body possessed bharma who are unable to see lord Siva in visual form


பெரியர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
Periyar koil arathai perumpaaliyeea

And that form of lord Siva dwelling place is thiruaranthai perum paali temple place
வரிகளையுடைய பாம்பு, எலும்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர். கங்கையைத் தாங்கிய நெருப்புப் போன்ற சிவந்த சடையில் பிறைச் சந்திரனைச் சூடியவர். கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமையுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.


09
327. நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்
Naan ealaatha saman ssaakiyar naal thorum

Without any hesitation samanaaas and buthass are daily


ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
Eeani laa tham moli avvealiyaa var

Talking worth less wards which are disregarded form


சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
Seen yullaa mum mathil the eala setravar

And then in the space place wandering three castles are destroyed by fire arrow


பேணுகோ யில்லர தைப்பெரும் பாழியே.
Peenu koil arathai perum paaliyeea

And that form of lord Siva willingly seated place is aranthai perum paali temple place
சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது அழகுடையவராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
10
328. நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்
Neerinaar pun sadai nemalanukku eadam eana

The River Ganges is carried on his red color hair and that pure form of lord Siva whose residential place is


பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
Paarinaar parayu arathai perum paaliyai

This world people are considered place is thiru aranthai perum paali temple place


சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
Seerinaar kaaliyul gaana sambanthansei

The glory filled place is seergaali where descended gana sambaanther who has sung the above ten poems


ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.
Eearinaar Tamil vallaarku eallai yaam paava meea

Those disciples who are daily chanting it before lord Siva and that disciples will not attract any form of sins in this world

கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான், வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத்தோரால் வணங்கிப் போற்றப் படும் திருஅரதைப் பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புமிக்க இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பரதேசுவரர், தேவியார் – அலங்காரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம om thiru chtram balam

October 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: