OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

MELAI THIRU KAATUP PALLI

ganesheit October 11, 2019

29 மேலைத்திருக்காட்டுப்பள்ளி
MELAI THIRU KAATUP PALLI


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAM BALAM

தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலம் 127 -இல், இது 9 –வது திருத்தலம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. திருமால், பிரமன், சூரியன், பகீரதன், அக்கினி ஆகியோர் வழிபட்டது. கோயிலுக்கு அககினிஸ்வரம் என்பது பெயர்.

307 வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
VAARM MANNUM MULAI MANGAIYOOR PANGINAN

The bra adorned form of lords yumaadevi is given left part of lords Siva’s body


ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
YOORUM MAANUM PALI YUN BATHOOR VENTHALAI

And then carried bharma skull on his hands and then going for begging food everywhere


காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
KAARUM MANUM POLIL SOONTHA KAATUP PALLI

Where up to sky level grown dark color clouds are covered place is thiru kaatuppali


நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
NEERU MANNUM SADAI NEMALAR THAM NEERMAIYEEA

And then lord Siva adorned Ganges on the hair place and that pure form of lord Siva whose good mannerism it is
கச்சணிந்த முலையை உடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான், பிரம கபாலம் ஏந்தி ஊர்;தோறும் சென்று பிச்சை ஏற்பவர். சிவபெருமான் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தலத்தில், கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய் விளங்குவது அவர்தம் சிறந்த குணம்.


01
308. நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
NERUTHANAARNEEL SADAI MATHIYODU PAAM BANI

Lord Siva all the time doing sacred dances and then on the long hair place adorned not only snakes but also moon adorned form appearing in this world


கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
KARUTHANAAR KADI POLIL SOOLNTHA KAATUP PALLI

The fragrance filled plantations are covered place is thiru kaaatuppalli who is appearing visual matter form to all


அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
ARUTHANAAR ALAGAMAR MANGAIYOOR BAAGA MAA

The beautiful form of lords yumaadevi is accepted lord Siva on his part of body


பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.
PORUTHANAAR KALAL EANAI POTRUTHAL PORUL ATEEA

And that twin form of lord Siva’s feet are to be prayed which will be beneficial act on our part
சிவபெருமான் திருநடனம் செய்பவர். நீண்ட சடைமுடியில் சந்திரனோடு, பாம்பை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளியில் கண்ணிற் காணும் பொருள் வடிவாக விளங்குபவர். அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதலே பயனுடைய செயலாகும்.


02
309. பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
PAANNINAARARU MARAI PAADINAAR NETRIYOOR

Lord Siva sang the rare veethaas with appropriate musical notes are filled form


கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
KANNI NAAR KADIL POLIL SOLNTHA KAATUP PALLI

Who has possessed fore head eye and then fragrance filled plantations are covered thiru kaatuppali temple place


விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
VINNINAAR VVERI PUNAL MEEVINAAR SADAI MUDI

From the space place descended spread over form of Ganges are carried on the head hair place


அண்ணலார் எம்மையா ளுடையஎம் அடிகளே.
ANNALLAAR EAMAI AALUDAIYA EAMM ADIGALLEEA

And that form of lord Siva who has taken me as his slave me and then ruled me as leader form in all form of problems in life
சிவபெருமான் அரிய வேதங்களை உரிய பண்ணோடு பாடியருளியனார். அவர் நெற்றிக் கண்ணை உடையவர். நறுமணம் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில், ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய சடை முடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை ஆட்கொள்ளும் தலைவர்.


03
310. பணங்கொள்நா கம்மரைக் கார்ப்பது பல்பலி
PANAM KOL NAAGAM ARAIKKU AARPATHU PAL PALI

Lord Siva tied dancing snake in the waist place as belt form and then wandering everywhere for begging food


உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்
YUN KALANODU YUN KALAN YURAIVATHU KAATU EADAI

And then accept it in the bharma skull and then his dwelling place is burial ground


கணங்கள்கூ டித்தொழு தேத்துகா ட்டுப்பள்ளி
GANANGAL KOODI THOLUTHU EEATHU KAATUP PALLI

Where demon forces are dancing and then praying form lord Siva dwelling in thiru kaatuppali temple place


நிணங்கொள்சூ லப்படை நிமலர்தந் நீர்மையே.
NENAM KOL SOOLAP PADAI NIMALAR YHAM NEERMAIYEEA

Lord Siva who has carried on the hand place soolam battle force which is dipped in the fat
சிவபெருமான் இடுப்பிலே படமாடும் நாகத்தைக் கச்சாக அணிந்து, பல இடங்களில் பிச்சையேற்று வந்த உணவை உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும். வசிப்பது சுடுகாடாகும். அப்பெருமானார் தொழுது போற்றும்படி திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து ஆருளுகின்றார். கொழுப்பினைக் கொண்ட சூலப்படையை ஏந்திய நிமலராய் விளங்குபவர்.


04
311. வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரிக்
VARAI YULLAAM SANTHODUVANTHU EALI KAAVIRI

In the mountain place growing the sandal wood which is pushed down by the waterfalls of river Cauvery


கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
KARAI YULLAAM EADUMANAL SOOLNTA KAATUPPALLI

And then placed it on the river sand bed of thirukaatuppali


திரையுலாங் கங்கையுந் திங்களுஞ் சூடியங்
THURAIYULLAM GANGAIYUM THINGALLUM SOODI ANGU

And lord Siva sea emanating Ganges and moon is adorned on the hair place


கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.
KARAIYULLAAM KOVANATHU ADIGAL VEEDANGALLEEA

And then in the waist place loin cloths are appearing in this world
மலையில் செழித்த சந்தன மரங்களை நீரோட்டத்தினால் உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும், காவிரியின் மணல் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர், அலைவீசும் கங்கையையும், சந்திரனையும் சடையிலே சூடி, இடுப்பிலே கோவண ஆடையுடன் காட்சி தரும் கோலமுடையவர்.


05
312. வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
VEETHA NAAR VEN MALU EEANTHINAAR ANGA MUNN

Lord Siva who is leader o vethaas and then carried white malu battle force on the hand place and the six angas are chanting form


ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
VOOTHINAAR YUMAIYORU KOORANAAR VONN KULAI

And then lords yumaaadevi is taken left part of his body

காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
KAATHINAAR KADI POLIL SOOLNTHA KAATUPPALI

And then white kuli ornament adorned on the ear place and in this way fragrance filled plantations are covered thiru kaatuppai temple place seated and then blessed all


நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.
NAATHANAAR THIRU VADI NAALUM NINRU EATHUMEEA

And that form of lord Siva’s sacred feet are daily prayed and then praised and it is duty on our part
வேதங்களின் நாதராகிய மழுப்படையை ஏந்தியவராய். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒளி பொருந்திய குழையணிந்த காதை உடையவர். நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப் பள்ளித் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் திருவடி களைத் தினந்தோறும் போற்றி வழிபடுவீர்களாக.


06
313. மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
MAYINNAAR MIDARINNAAR MAAN MALU EAANTHIYA

He dark color poison tainted throat possessed lord Siva and then carried malu battle force on the hand place


கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
KAIYINAAR KADIPOLIL SOOLNTHA KAATUPP PALLI

And the fragrance filled plantations are covered place is thiru kaatuppali


தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
THAYL VOOR BAGAMAA THANN MATHI SOODIYA
where lord Siva carried lords yumaadevi in his left part of the body and the adorned cool moon on the hair place


ஐயனார் அடிதொழ அல்லலொன் றில்லையே.
AYANAAR ADI THILA ALLAL ONRU EALLAIYEEA

And that leader form of lord
Siva is prayed daily and then we will not affect any form of defect in life
மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவபெருமான் மானையும் , சூலத்தையும் ஏந்திய கையினர். நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில், உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு குளிர்ந்த சந்திரனைத் சடைமுடியில் சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத் துன்பம் சிறிதும் இல்லை.


07
314. சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
SELAI THANNAAL MUPPURAM SETRAVAR SEERINAAR

Lord Siva converted meru hills as bow and then destroyed three castled with fire arrow


மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
MALAI THANNAAL VALL ARAKKAN VALI VAATINAAN

And then specialty filled kailai hills lord Siva trapped ravana and then stamped him so that his mighty power is destroyed form


கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி
KALAAI THANNAAR PURA VANI MALGU KAATUP PALLI

The sages are wandering the hilly area place is thiru kaatuppali


தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.
THALAI THANAAL VANANGIDA THAVAMATHU AAGUMEEA

Where lord Siva descended and those disciples in devotion filled form praying here it is good form of penance to them
சிவபெருமான் மேரு மலையை வில்லாகக் கொண்டு, முப்புரங்களை அழித்த சிறப்புடைய கயிலை மலையினால், இராவணனின் வலிமையை அடக்கியவர். மான்கள் உலவும் முல்லை நிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலை தாழ்த்தி வணங்க நல்ல தவப்பேறு உண்டாகும்.
08
315. செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
SENGANMAAL THEGAL THARU MALAR YUDAI THESAI MUGAN

The red color eye possessed thirumal and lotus flower place seated bharma


தங்கையால் தொழுதெழத் தழலுரு வாயினான்
THAM KAIYAAL THILUTHU EALA THALAL YURU AAYINAAN

Ho are prayed under his feet as prime god and then lord Siva appeared before them on fire pole form


கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
GANGAIYAAR SADAIYINAAN KARUTHU KAATUPP PALLI

Lord Siva who has carried Ganges on the hair place and that form seated in thiru kaauppali temple place and then blessed all


அங்கையால் தொழுமவர்க் கல்லலொன் றில்லையே.
ANGAIYAAL THOLUM AVERKKU ALLAL ONRU EALLAIYEEA

With lovely hands those disciples pray him and that disciples will not affect any form of defects in life
சிவந்த கண்களை உடைய திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற, அழல் உருவாய் விளங்கியவர் சிவபெருமான். கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அப்பெருமானை, அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை.


09
316. போதியார் பிண்டியா ரென்றஅப் பொய்யர்கள்
BOTHIYAAR PINDIYAAR EANRA APP POIYARGAL

In bothi tree under it lord butha got gaana knowledge and in the that way coming his buthaa disciples and then ashoka tree shadow seated and prayed aruga god those samanaas whose today preaching’s are un true one


வாதினால் உரையவை மெய்யல வைகலுங்
VAATHINAAL YURAI AVAI MEI ALLA VAIGALLUM

With their oration skill form of preaching’s are not true one and then daily


காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
KAARINAAR KADI PLIL SOOLNTHA KAATUPP PALLI

The clouds are crawling form of and fragrance filled plantations are covered place is thiru kaatuppali


ஏரினால் தொழுதெழ இன்பம்வந் தெய்துமே.
EEARINAAR THOLUTHU EALA INBAM VANTHU EITHUMEEA

And then daily praying lord Siva with clear mind form
Those disciples Will attain happiness in life
அரச மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த புத்தர்களும், அசோக மர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும் சமணர்களும், தங்கள் வழக்கால் உரைப்பவை மெய்ம்மையானவை அல்ல. மேகம் தவழும் நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும்.


101
317. பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
PORU PUNAL PUDAI ANNI PURAVA NAN NAGER MANNAN

The water bodies are filled place is seergaali alias puravam


அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்
ARAI ANI MARAI AVAI VALLA ANI KOL SAMBANTHAN SOL

Where descended gaana sambanther who is excelled in rare veethaas and then Siva gana is adorned as ornaments form


கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
KARU MANI MEDATRINAN KARUTHU KAATUP PALLI

The black ruby diamond form of throat possessed lord Siva who is dwelling in thiru kaatuppali temple place


பரவிய தமிழ்சொல்லப் பறையும்மெய்ப் பாவமே.
PARAVIYA TAMIL SOLLA PARAYUM MEI PAAVAMMEA

Those disciples who are repeatedly sing it before lord Siva and that disciples sins will be eliminated
நீர்வளம் மிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீர்காழிப் பதியில் அவதரித்த, அருமறைகளில் வல்ல, சிவஞானத்தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன், நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய இப்பதிகத்தை ஒத, பாவம் நீங்கும்.
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தீயாடியப்பர், தேவியார் – வார்கொண்டமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்—— OM THIRU CHITRAM BALAM

October 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: