OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thirunthu deevan kudi

ganesheit October 9, 2019

025 திருந்துதேவன்குடி
Thirunthu deevan kudi
பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

தலவரலாறு – காவிரி வடகரைத் தலங்கள் 63 – இல் , இது 42 – வது திருத்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. நண்டாங் கோயில் என வழங்கப் படுகிறது. நண்டு பூசித்த தலம்.


263 மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
MARUNTHU VEENDIL EAVAI MANTHIRANGAL EAVAI

THOSE WHO ARE REQUESTING TO WHO MLORD SIVA is meditation form and those who chanting manthira


புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
PURINTHU KEET KAPPADUM PUNNIYANGAL EAVAI

Lord Siva appeared before them in manthira form and then Siva punniyaa form of preaching’s are hearing people to whom lord Siva in that form


திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
THIRUNTHU THEEVAN KUDI THEEVAR THEEYU EAITHIYA

In this thirunthu deevan kudi place seated lord Siva is deevaas leader where deevaas are daily praying him


அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
ARUM THAVATHOOR THOLUM ADIGAL VEEDANGALLEEA

And then rare form of penance performing saints are praying in those form lord Siva appears in that form before them in deity form
மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரம் விரும்புவார்கட்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும், திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத் தோர்களால் தொழப் படுபவனுமான சிவ பெருமானின் திருவேடங்கள்.


01
264. வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
VEETHI POOKAAVANA VENAIYAI VEETU VANA

While going to temple place silk cloths will give us attractive appearance and bad deeds are removed form


ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன
VOOTHIYOOR KU AGAPPADAAP PORULAI VOOR VIPPANA

Not to enquire those gaana books are where embedded micro form of knowledge is revealing to us


தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
THEETHIL DEEVAN KUDI THEEVAR THEEVAITHIYA

Lord Siva who is also deevaas god and then flaw less form of place is deevan gudi where lord Siva seated– who has no begging and then end in this world whose verity of Siva appearance


ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.
AATHI ANTHAMEALLAA ADIGAL VEEDANGALLEEA

கோயிலுக்குச் செல்லும் பொழுது அணியப் பட்டு அழகு தருவன. தீவினைகளைப் போக்குவன. கற்று அராய்ந்தராய முடியாது ஞான நூல்களின் நுண் பொருள்களை உணரும்படி செய்வன. தேவர்கட்கெல்லாம் தேவனாக, தீமையில்லாத திருந்து தேவன் குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாத சிவபெருமானின் திருவேடங்கள்.


02
265. மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
MAANAM AAKKUVANA MAASU NEEKUVANA

The greatness of this world beings are put in higher glory filled place he caused of bade deeds are ignorance which is removed


வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன
VAANAI YULGACH SELLUM VALI KAATUVANA

And then to attain mukthi those way will be showed us


தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
THEENUM VANDUM EASAI PAADUM THEEVANKUDI

The honey fragrance and then honey bees humming sounds are all the time hearing place is thiru deevan kudi


ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.
ANN ANGU AADUM MUDI ADIGAL VEEDANGALLEA

And then from cow place getting five types of milk products with it taking bath by lord Siva whose verity of appearance to be prayed here
மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன. முத்திக்குரிய வழி காட்டுவன. தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன் குடியில் வீற்றிருந்தும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யங்களால் திருமுழுக்காட்டப் படும் சிவபெருமானின் சிவவேடங்கள்.


03
266. செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
SEVIGAL AAR VIPPANA SENTHAIY SEER VANA

To hear happiness is given to ears and then while thinking in the mind place good concepts are appeared


கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
KAVIGAL PAAADUVANA KANN KULIR VIPPANAA

Which will give us the poems are composing knowledge and then verities of Siva appearance will give coolness to eyes


புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
PUVIGAL PONGAP PUNAL PAAYUM DEEVAN KUDI

Tis world is given fertile form by water which is filled place is thiru deevan kudi


அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.
AVIGAL YUIKAPPADUM ADIGAL VEEDANGALLEA

The sacred food in the yagga fire pit is accepted by lords Siva and then give upliftment to living beings and that verity form of appearance to all as per their gaana knowledge
கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன. நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன. கவிபாடும் ஆற்றலைத் தருவன. சிவ வேடக் காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன. இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்து தேவன் குடியில் வீற்றிருந்து, வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று, உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள்.


04
267. விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
VINN YULLAAYUM NERI VEEDU KAATUM NERI

To go upper world those way of rules are showed to us and then showed means and ways to attain mukthi


மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
MANN YULAAYUMNERI MAYAKKAMTHEERKUM NERI

And then in this world living good way is showed to us and then concept form of I and I am and mine those ego filled possessive thinking will be removed


தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
THENN YULLAA VEN MATHI THEENDU DEEVAN KUDI

The glittering moon region is touched form of high raised buildings are filled place is thiru deevan kudi


அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.
ANNALALLAAN EAARUDAI ADIGAL VEEDANGALLEEA

Where lord Siva seated on the back of bull that visual appearance is given here
இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி,தத்துவங்களே தான் என் மயக்கத்தைத் தீர்க்கும். சிவயோகம் செல்லும் நெறி காட்டும். முத்தி நெறி காட்டும். ஒளிரும் சந்திர மண்டலத்தை; தொடும் திருந்து தேவன் குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் திருவேடங்கள்.


05
268. பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
PAKKAM EANN EAP PADER PALIGAL EANNAP PADAA

Those who are now taken Siva disciple form of appearance and those people may be previously did sins and cursed acts which need not bethink now


புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
PUNGAM EANNAP PADAR PUGAL GAL EANNAP PADUM

Those persons upliftment not to be stated by mouth that form of glory will be given


திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
THINGAL THOOYUM POLIL THEENDU DEEVAN KUDI

Up to sky level grown flower plantations are touched form of moving the moon that place is thiru deevan kudi


அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.
ANGAM AARUM SONNA ADIGAL VEEDANG GALLEA

Where vethaas and six angaas are elaborate form explained and those place is thiru deevan kudi where lord Siva appears in verities of forms
சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப் பழி பாவங்கட்கு ஆளாயினோர் என்று எண்ணற்க. அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக. சந்திரனைத் தொடுமளவு ஓங்கி வளர்ந்துள்ள நந்தவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின் ஆறு அங்கங்களை விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில்.


06
269. கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
KARAITHAL VONRUM EALLAI KARUTHA VALLAR TAMAKKU

There is to say anything is sin filled one and then those Siva disciple form of appearance is saying those persons– deficiencies will be removed those persons are in this world will live good life


குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
YURAIYIL YOONAM EALLAI YULAGINIL MANNUVAR

திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
THERAIGAL PONNGAP PUNALPAAYUM DEEVAN KUDI

The waves are emanating river flowing place is thiru deevan kudi


அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.
ARAITIL VENN KKOVANATHU ADIGAL VEEDANGALLEEA

Where lord Siva adorned loin cloths in waist place which is full-fledged one and then there is no deficiency in it
குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவ்வேடங்களை நினைந்து அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும். அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர். அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்துதேவன்குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின் வேடங்கள்.


07
270. உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
YULAGA MUTKUM THIRAL YURAI ARAKKAN VALI

This world is controlled and then ruled it and those ravan’s mighty power is


விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
VELAGU BOOTHA GANAM VERUTTUMVEEDATHINA

Is diminished firm lord Siva’s demon forces are frightened him and then and then those lord Siva’s disciples are not afraid of anything and in this way demon forces are protecting them


திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
THALAGA MAAARUM POLIL SOOLNTHA DEEVAN KUDI
The good plantations are covered place is thiru deevan kudi


அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.
ALAR THAYANGUM MUDIADIGAL VEEDANGALLEA

where lord Siva appearing flowers are adorned form
உலகத்தைத் தனக்குக் கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும், பின் வாங்கத் தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது. அச்சத்துக்குப் பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்ட வல்லது. சிறந்த நந்தவனச் சோலை சூழ்ந்த திருந்துதேவன்குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம்.


08
271. துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
THULLAKAM EALLAATHANA THOOYA THOTRATHANA

Lord Siva’s appearances are in this world living beings are allowed to live without any fear


விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
VELLAKAM AKUVANA VERI VANDAARUM POLIL

Those who are seeing lord Siva’s appearance is got rectified mind and then removed ignorance and then give bliss filled ganna knowledge and that place the honey enjoyed bees are dwelling


திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
THELAIKKUM THEEVAN KUDI THESAI MUGANOODU MAAL

Place is thiru deevan kudi where bharma and thirumal are not seen


அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.
ALLAKA VONNAA VANNATHU ADIGAL VEEDANGALLEA

The feet and head of lord Siva and those appearance form lord Siva dwelling here
சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலை கலங்காமல் காக்க வல்லன. கண்டவர் மனதைத் தூய்மை செய்யும் தோற்றத்தை உடையன. அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன. வண்டுகள் மொய்க்கின்ற மலர்களை உடைய நறுமணம் கமழும் நந்தவனச் சோலை விளங்கும் திருந்து தேவன்குடியில் திருமாலும் பிரமனும் காண வொண்ணாதன.


09
272. செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
SERU MARU THNN THUVAR THEERAMAN AATHAR GAL

The thick form of marutha leaves essence are dipped saffron color tainted cloths are adorned buthas and then samanaas


உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
YURU MARUVAPPADA THOLUMBAR THAM YURAI KOLEEAL

Those persons are not realized the true mannerism of lord Siva so whose preaching’s need not be followed


திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
THIRU MARUYUM POIGAI SOOLNTHA DEEVAN KUDI

The wealth god Lakshmi who is seated in the lotus flower place and those flower ponds are covered place is thiru deevan kudi


அருமருந் தாவன அடிகள்வே டங்களே.
ARU MARUNTH AAVANA ADIGAL VEEDANGALLEA

Where lord Siva seated in medicine form to remove repeated birth and death
நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர் தோய்த்த ஆடையணிந்த புத்தர்களும், சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள். இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமான் திருவேடம் உயிர்;களின் பிறவிப் பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும்.


10
273. சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
SEEADER THEEVAN KUDI THEEVAR THEVAN THANAI

Deevaa’s are praying lord Siva in thiru deevan kudi temple place


மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
MAADA OONGUM POLIL MALGU THANN KAALIYAAN

Ganasambanther who has descended in the plantations are covered place is seergali where mansions are filled one


நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
NAADAVALLA TAMIL GAANA SAMBANTHANA

Who has liked the pure Tamil poems


பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.
PAADA PATHUM VALLAARKU EALLAI YAAM PAAVAMEEA
Those disciples who are sung it before lord Siva and that disciples sins will be perished
தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவபெருமானைப் பற்றி, ஓங்கிய மாட மாளிகைகளும் சோலைகளும் நிறைந்த, குளிர்ச்சி பொருந்திய சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன,; விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும் ஒத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.


11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கர்க்கடகேசுவரர், தேவியார் – அருமருந்துநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

October 9, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: