OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VIL KOLAM

ganesheit October 9, 2019

023 திருவிற்கோலம்
THIRU VIL KOLAM


பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OMTHIRUCHITRAMBALAM

தலவரலாறு – தொண்டை நாட்டுத்தலம் 32-இல், இது 14 – வது திருத்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. கூகம் என்பது ஊரின் பெயர். கோயிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருமஞ்சனமேடை எனப்படும் கூவம் ஆற்றின் கரையிலிருந்து நீர் கொண்டு வந்து அபிடேகம் செய்ய வேண்டும்.


242 உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
YURUVINAR YUMAIYODUM VONRI NIRATHOOR

THE BEAUTY FILLED form of lords yumaadevi with her oneness form standing lord Siva


திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
THIRU VINAAN VALAR SADAI THINGA GANGAIYAAN

And that rich form of lord Siva who has on his hair place adorned Ganges and moon


வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
VERUVEE VAANAVAR THOLA VEGUNDU NOKIYA

The upper world deevaas are frightening form praying lord Siva who has angry form appeared in fighter form


செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.
SERUVINAAN YURAAI VIDAM THIRU VIL KKOLAMEEA

And that warier form seated and then blessed and that place is thiru vil kolam
அழகே உருவான உமாதேவியோடு ஒன்றி நின்ற செல்வரான சிவபெருமான் தம் சடை முடியில் திங்களையும் கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு, வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் ஆகும்.


01
243. சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்
CHITIRADAI YUMAI YORU PANGAN ANG KAIYIL

The lean form waist possessed lords yumaaddevi is given left part of his body and in the hand place


உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
YUTRATHOOR EARIYINAN ORU SARATHINAAL

Carried fire pot and then with single arrow


வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
VETRIKOL AYUW NARGAL PURANGAL VENTHU ARA

Shot an arrow and then three castles are destroyed and that winner lord Siva


செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே
SETRAVAN YURAI VIDAM THIRU VIL KOOLAMEEA

And that warier form of lord Siva seated place is thiru vil kolam
சிறிய இடையை உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டு, அழகிய கையில் நெருப்பு ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஒரு அம்பால் அசுரர்களின் மூன்று புரங்களும் வெந்தழியுமாறு போர் செய்து வெற்றி கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்து அருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும் கோயிலாகும்.


02
244. ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
EAIYAN NAL ATHISAYAN AYAN VINNOR THOLUM

Lord Siva is leader to all who will take so many forms that magic doing person he is and bharama and other deevaas are praying form


மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
MAIYANI GANDANAAR VANNA ANNAM VAAN

Who has possessed dark form of throat and then good color possessed


பையர வல்குலாள் பாக மாகவுஞ்
PAI ARAYU ALGULLAL BAAGA MAAGAYUM

The dancing snake like broad waist possessed lords yumaadevi is given left part of his body and that


செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.
SEIYAVAN YURAI VEDAM THIRU VIL KOOLAMEEA

red color body possessed lord Siva whose dwelling place is thiru vil kudi
இறைவர் யவற்றுக்கும் தலைவர். பலபல வேடம் கொள்ளும் அதிசயர். பரமனும் , மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மைபோல் இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.


03
245. விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
VEETATHAIVAN MUNIVARKKU ARM MUNN KAALANAI

Lord Siva who has preached the ethical code embedded in four veethaas to sanagaathi saints elaborately and then death god ema


உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
YUTHAI THAVAN YUIR EALANTHU YURUNDU VEEL THARA

Who has tried to corner the life of margandayaa and then lord Siva kicked and then killed him in rolling form on land


புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்
PUTHAITHAVAN NEDU NAGER PURANAL MOONRAIYUM

The three castles are shot a fire arrow and then converted it in to ashes


சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
SITHAI THAVAN YURAI VIDAM THIRU VIL KOLAMEA

And that destroying warrior form of lord Siva is seated and blessed all those place is thiru vil kudi
இறைவன் சனகாதி முனிவர்கட்கு அறக் கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன். மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும் எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப் பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் ஆகும்.


04
246. முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
Munthinaan moovarul muthalvan aayinaan

Lord Siva is appeared in this world before any other things in this world and then three main deities named bharma thirumal and ruthraa who is principal to them


கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
Konthullaam malar polil koogam meevinaan

The bunch form flowers are bloomed plantations are covered place is koogam where lord Siva seated and then blesses all


அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
Anthi vaan peraiyinaan adiyar meeal venai

In the evening time appearing moon is adorned on the hair place and then his disciples bad deeds are removed by him


சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.
Sinthu vaan yurai vedam thiru vil kolameea

and that form of lord Siva seated place is thiru vil kolam
இறைவன் எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவர். மும்மூர்த்திகளுக்குள் தலைவனாவார். கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருப்பவர். மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடியவர். அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள் நீங்கும்படிச் செய்பவர். அப் பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவிற்கோலம் ஆகும்.


05
247. தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்
Thoguthavan aru marai angam aagamam

Lord Siva composed four veethaas and then six angaas and then aagamaas


வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்
Vaguthavan valar polil koogam meevinaan

And then seated the fertail form of plantations are covered place is koogam and then blesses all


மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
Miguthanan miguthavar purangal venthu ara

Lord Siva is unique form there is no comparable person to him and then in ego filled form doing much harm to others those three castles are destroyed by him by fire


செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
Seguthavan yurai vedam thiruvil koolameea

And that warrior form of lord Siva seated place is thiru vil kolam temple place
இறைவன் நான்கு வேதங்களையும், அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை அருளிச் செய்தவன். வன்மையான சோலைகளை உடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவர், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்து அருளும்; இடம் திருவிற்கோலம் ஆகும்.


06
248. விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந்
Verithavan arumarai vveri sadai vellam

The rare meaning embedded veethaas are elaborately explained by lord Siva and then spread over form of moving Ganges is conserved on hair place


தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
Tharithavan thari alar purangal aasara

And then destroyed three castles with fire arrow


எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்
Earithavar elangaiyar koon eadar paada

And then srilanga king named ravana is trapped under the kaiyilai hills and then laughed for his act and then after realizing his fault lord Siva blessed him


சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
Serithavan yurai vidam thiru vil kolameea

And that form of lord Siva seated place is thiru vil kolam
07

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
அரும் பொருளுரைக்கும் வேதங்களை இறைவன் விரித்து அருளினான். விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவன். பகையசுரர்களின் முப்புரங்கள் அற்றொழியும்படி எரித்தவன். இலங்கை மன்னனான இராவணன் கயிலையின் கீழ்த் துன்புறும்படி செய்து, பின் அருள் புரிந்து விளையாடல் செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.


08
249. திரிதரு புரமெரி செய்த சேவகன்
Thiri tharu puram eari seitha seevagan

In the space place wandering three castles are giving trouble to deevaass so lord Siva destroyed by fire arrow in arrow fighter form


வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
Vari aravodu mathi sadaiyil vaithanan

The striped skin possessed the snakes and then moon are adorned on the hair place


அரியொடு பிரமன தாற்ற லால்உருத்
Ariyodu bharamanathu aatrallaal yuru

Thirumal and bharma with their body power and then ego filled form tried to see lord Siva but who is rare to them


தெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே.
Their alan yurai vidam thiruvil kolameea

And that rare form of lord Siva seated place is thiru vil kolam temple place
இறைவன் வானத்தில் பறந்து திரிந்து தேவர்கட்குத் தீங்கு செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவன். வரிகளையுடைய பாம்பையும், சந்திரனையும் சடையிலே அணிந்தவன். திருமாலும், பிரமனும் தமது ஆற்றலைப் in வாநபெரிதாகக் கொண்டு முனைந்ததால் காண்பதற்கு அரியவனானவன். அப்பெருமான் வீற்றிருந்து அருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.


09
250. சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
Seermai ill samanodu seevar aakaiyar

The god truth is not known buthaas and samanaas whose false hood wards are not to be heard


நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
Neermaiyil yuraigal kolaatha nesarkku

And those disciples who do not followed their wards


பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ்
Paar mali perum selvam parinthu nal gidum

To whom lord Siva will give big wealth to them


சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.
Seermayi yinaan eadam thiru vil kolamea

And that highly regarded form of lord Siva seated place is thiruvil kolam
இறையுண்மையை உணரும் தன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை நம்பிக்கையுடன் பக்தி செலுத்துபவர்கட்கு, உலகில் பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.


10
251. கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
Kodal vvenperai anai koogam meeviya

The curved form third day moon adorned on the hair place and then koogam temple place


சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
SSEEA DANA SELU MATHIL THIRU VIL KOLATHAI

Where lovely protection walls are covered form place thiru vilkolam


நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
NAAADA VALLA TAMIL GAANA SAMBANTHA

Where thiru gaana sambanther who has sang the above songs


பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.
PAADA VALLAAR KALUKKU EALLI PAAVAMEEA

And then those disciples who are repeatedly singing it before lord Siva and that disciples will not attract any form of sins in this world
வளைந்த வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய வளமையான மதில்களையுடைய திருவிற்கோலம் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.


11
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – புராந்தகேசுவரர், தேவியார் – புராந்தரியம்மை.
இந்தத்தலம் கூவமென வழங்கப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம் OMTHIRU CHITRAM BALAM

October 9, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: