OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru kal kudi

ganesheit October 9, 2019

021 திருக்கருக்குடி
Thiru kal kudi


பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 – இல், இது 69- வது திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. மருதாந்த நல்லூர் என வழங்கப் படுகிறது. பிரமன், இராமன், சற்குணன் ஆகியோர் பூசித்த தலம்.


220 நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி
NANAVILLUM KANAVILLUM NAALUM THAN VOLI

While we are awakening time and while we are dreaming time lord Siva stands in internal light form — appearing to me and then naturally lord Siva kept himself away from relationship bonds


நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்
NENAIVILLUM EANAKKU VANTHU EAITHUM NIN MALAN

கனைகடல் வையகந் தொழு கருக்குடி
KANAI KADAL VAIYAGAM THOLUGA KARKUDI

The sea waves sounds are raising sound those sea encircling this world place living people who are praised the kalkudi temple place


அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.
ANAL EARI AADUM EAMM ADIGAL KAAN MINEEA

Where fire is carried in the hand place and then dancing lord Siva and whose feet is prayed and then get all benefits in this world
நான் விழித்திருக்கும் பொழுதும், கனவு காணும் பொழுதும், உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும். இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனாகிய இறைவனாய், ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் , நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற சிவபெருமானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக.


01
221. வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
VEETIYAN VEDAI YUDAI VIMALAN VONN ALAR

Lord Siva who gave veethaas to this world and who is veetha metter form appearing in this world and then naturally bondage feeling are kept away


மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
MOOYHU EAYIL EARI EALA MUNINTHA MUKKNNAN

Three castles are destroyed by fire in that way lord Siva got angry towards three castle asssuraas and that god has three eyes


காதியல் குழையினன் கருக்கு டியமர்
KAATHIYAL KULAIYINAM KARUKKUDI AMAR

In the ear place kulai ornament adorned form lord Siva seated in thiru kal kudi temple place and then blesses all


ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.
AATHIYAI ADI THOLA ALLAL EALLAIYEEA

Lord Siva first person to all other things in this world and that form of lord Siva’s feet are prayed by us and then we will not any type of sorrow in this world

வேதத்தை அருளிச் செய்தவனும், வேதப் பொருளாக விளங்குபவனும், இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவனும், பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான், காதில் குழை அணிந்தவானய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றான். எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை.


02
222. மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி
MANGURU POLIL VALAM MALI KARKUDI

The clouds are covered the plantations are filled place is thiru kal kudi which is wealth filled place where descended lord Siva


நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
NANJU YURU THIRU MEDARU YUDAIYA NAATHANAAR

The poison consumed throat possessed leader lord Siva


அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே
ANJURUM PAAAR KULAL ARIVAI ANJAVEEA

The lovely honey bees are encircling the hair possessed lords parvathi who has got afraid of


வெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.
VENG JURAM THANIL VELAI YAADAL EANN KOLLOO

In that way wild burial ground place you are dancing tell me the reason for it
மேகம் சூழும் சோலைகளை உடைய வளம்மிக்க திருக்கருக்குடி என்னும் திருத் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நஞ்சுண்ட திருக்கழுத்தை உடைய தலைவரான சிவபெருமான், அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சும்படிக் கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல்?


03
223. ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்
YOON YUDAI PERAAVIYAI ARUKKA YUNNUVEER

Because of previous birth bad deeds are to be kept away you have taken this physical birth so you are wanted to get rid of it in this birth


கானிடை யாடலான் பயில் கருக்குடிக்
KAAN EADAI AADALAAN PAYIL KARUK KUDI

Lord Siva who is dancing in the burial ground and then seated in thiru kalkudi temple place


கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
KON YURAI KOOYILAI VANANGI VAIGALLUM

Lord Siva in king form seated in this temple place you may go then and then pray him daily


வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.
VAANAVAR THOLU KALAL VAALTHI VAAL MINEEA

Where upper world deevaas are praying here so you may praise lord Siva and then pray him

வினைப் பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர், சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான், வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள, உயர்ந்த கோயிலை வணங்கியும், நாள் தோறும் வானவர்கள் தொழும் அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தியும் வாழ்வீர்களாக.

04
224. சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
SOODUVAR SADAI YIDAI GANGAI NANGAIYAI

Lord Siva adorned Ganges in the hair place and then


கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி
KOODUVAR YULAGU EADAI EAIYAM KONDOLI

Lords parvathi is kept left part of his body


பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்
PAADUVAR EASI PARAI KOTTA NATTIRUL

While accepting begging food he will sing musical notes filled form and then drums are beaten form in the mid night time he will dance

ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.
AADUVAR KARK KUDI ANNAL VANNAMEEA

This is lord Siva’s grace who has seated in thiru kal kudi temple place

இறைவன் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார். தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார். இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார். பறை கொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார். இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும்.


05
225. இன்புடை யாரிசை வீணை பூணரா
EAN PUDAI YAAR EASAI VEENAI POON ARAA

Lord Sive who is liked to turn veenaa instrument and then sing accordingly


என்புடை யாரெழில் மேனி மேலெரி
EANN PUDAI YAAR EALIL MEENI MEEL EARI

And then in his lovely sacred body place adorned bones garland and snakes and then in the hand place fire pot carried form dancing


முன்புடை யார்முத லேத்தும் அன்பருக்
MUNN PUDAIYAAR MUTHAL EEAATHUM ANBARUKK

To all others he is prime god and raw material form


கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.
ANBUDAITAAR KARUK KUDI EAMM ANNALEEA

And then to his intimate disciples he is guide to them and in this way lord Siva seated in thiru kal kudi temple
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர். தன்னுடைய அழகிய திருமேனியில் பாம்பையும், எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளார். எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர். யாவற்றுக்கும் மூலப் பொருளான முதற் பொருளாக விளங்குபவர். அன்பர்களிடத்து அன்புடையவர்.


06
226. காலமும் ஞாயிறுந் தீயு மாயவர்
KAALAMUM GAAYIRUM THEEYUM AAYAVAR

Lord Siva in time concept form existing in this world and then he stands beyond those time concepts and the he is appearing sun and fire form


கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
KOOLAMUM MUDI ARAYUU ANITHA KOLGAIYAR

And then appearing five types of vast forces form ( land water fire space and wind ) and then in the hair place snakes are adorned form and those concepts form appearing in this world


சீலமும் உடையவர் திருக் கருக்குடிச்
SEELAMUM YUDAIYAVAR THIRU KARUKK KUDI

The best glory filled form appearing in this world and then in this kal kudi place


சாலவும் இனிதவ ருடைய தன்மையே.
SAALAYYUM EANI THAVER YUDAIYA THAN MAIYEEA

Whose mannerisms appreciable one
சிவபெருமான் கால தத்துவமாகவும், அதனைக் கடந்தும் விளங்குபவர். ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர். நெருப்பு முதலிய பஞ்ச பூதங்களானவர். தம் சடைமுடியில் பாம்பணிந்தவர். சிறந்த புகழை உடையவர். திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும்.


07
227. எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
EARI KDAL PUDAI THALU EALANGAI MANNANAI

The waves are encircling sri langa place king ravana


முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
MURI PADA VARAI EADAI ADRTHA MOORTHIYAAR

Whose body parts are broken form lord Siva stamped him under the kaiyilai hills and that deity form appearing in this world

கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி
KARAIPADU POLIL MATHI THAVAL KARUK KUDI

Because of thick trees those dark color plantations where moon is crawling place thiru kal kudi


அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.
ARI VODU THILUMAVAR AALVAR NANMAIYEEA

Those disciples who are gaana form praying to whom better life is given and then ruling them
அலை வீசுகின்ற கடலை உடைய இலங்கை மன்னனான இராவணனின் நிலை கெடும்படி, மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியான இறைவர், மரங்களின் அடத்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுபவராய், தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார்.


08
228. பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்
POO MANNUM THESAO MUGAN THAAANUM PORPAMAR

The lotus place dwelling thirumal and then small bharamin form (vaamana avathaar) has been taken thirumal


வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
VAAMANAN ARIGILLA VANNAM VOONGU EARI

Who are unable to see in real form lord Siva appeared before them in fire pole form


ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி
AAMENA YUARNTHAVAN ANI KAL KUDI

In that high raised form appearing lord Siva whose dwelling place is thiru kal kudi


நாமன னினில்வர நினைதல் நன்மையே.
NAAM MANAM NIL VARA NINATHAL NANMAIYEEA

And then that form of lord Siva is think over in mind place and then pray him and those disciples will get all form benefits in life
தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய வாமன அவதாரம் எடுத்த திருமாலும், அறிய முடியாத வண்ணம் நெருப்பு மலையாய், உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகி;ன்ற திருக்கருக்குடி திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மை பயக்கும்.

09
229. சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
SAAKIYAR SAMAN PADU KAIYAR POIM MOLI

Buthas and then samanaas are talking vengeance filled wards need not be taken as true one


ஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்
AAKIYA YURAI KOLEEAL ARUM THIRUM NAMAK

Those wards are fabricated one lord Siva who has allowed us to take birth in saiva religion


காக்கிய அரனுறை யணிக ருக்குடிப்
AKKIYA ARAN YURAI ANI KAL KUDI

And that form of lord Siva who has seated in thiru kal kudi temple place


பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.
POO KAMAL KOOYILEEA PUDAI PATTU YUIMINEEA

In that flower’s fragrance filled temple place you may approach and then got upliftment in life
புத்தர்களும், சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம் மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா. பெறுதற்கரிய சைவ சமத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த, சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள்.


10
230. கானலில் விரைமலர் விம்மு காழியான்
KAANALIL VERAI MALAR VIMMU KAALIYAAN

In sea shore place fragrance filled plantations are covered place is seergaali where descended gaana sambanther


வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
VAANAVAN KARUK KUDI MAINTHAN THANN OLI

And upper world deevaas are praying in thiru kal kudi temple place light form appearing lord Siva


ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
AANA MEI GANA SAMBANTHAN SOLLIYA

And that true gaana form appearing ganasambanthan who has sung the above ten poems


ஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே.
YOONAMIL MOLI VAALARKKU YUARUM EAN BAMEEA

Those disciples who are flawless form singing the above poems they will ultimately attain bliss in this world
கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீர்காழியில் அவதரித்த, வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் உள்ள சிவனொளியே தானான, மெய்ஞ் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களுக்குப் பேரின்பம் மிகும்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சற்குணலிங்கேசுவரர், தேவியார் – சர்வாலங்கிரதமின்னம்மை.


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

October 9, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: