OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU GAANAP PEEAR

ganesheit October 9, 2019

026 திருக்கானப்பேர்
THIRU GAANAP PEEAR


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRU CHIRTRAM BALAM

தலவரலாறு – பாண்டிய நாட்டுத் தலங்கள் 14- இல், இது 10-ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. காளையார்கோயில் என வழங்கப் படுவது. கானப் பெரெயில் என்பது சங்ககாலப் பெயர். ஐராவதம் என்னும் யானை வழிபட்டது. காளை வடிவில் தோன்றி, ‘யாம் இருப்பது கானப்பேர்” எனத் தெரிவித்து மறைந்தருளிய திருத்தலம்.


274 பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
Pedi eallaam pin sellap perum kaimaa malar thlee

THE FEMALE ELEPHANTS ARE FOLLOWED FORM the big long nose possessed male elephant


விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்
Vidiyaleea thada moolgi vethiyinaal vali padum

In the early morning time has taken bath in the pond and then carried flowers on the hand place and then as per rule praying lord Siva


கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
Kadiyullaam poom pollil gaanappear annal nin

The fragrance filled flower plantations are covered place is thiru gaanapeear where lord Siva seated form blessed all


அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.
Adiyallaal aria saran yudaiyaroo adiyareea

And then surrender lord Siva’s feet alone is there any other feet is available to guard us
பெண் யானை பின்தொடர, பெரிய தும்பிக்கை உடைய யானையானது, விடியற் காலையிலேயே குளத்தில் மூழ்கி, மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழி படுகின்ற , நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது?


01
275.நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப்
Nunn eadai pear algul noopuram meladi

The waist possessed and then bog secret part possessed and then anklets are adorned soft feet that good lady named lords yumaa devi


பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
Pennin nal laalyai yoor bagamaa peeninaan

Is taken left part of his body by lord Siva


கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
Kannudai netriyaan karuthiya gaanap peear

The fore head eye possessed lord Siva who has seated in thiru gaanap peear temple place and then blessed all


விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.
Vin nidai veetkaiyaar verumbuthal karuma meea

The upper world place ruling deevaas who are liked to do those work so they are willingly prayed lord Siva it is their duty on their part
நுண்ணிய இடையையும், பெரிய அல்குலையம், சிலம்பணிந்த மெல்லிய பாதங்களையும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட, நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, விண்ணுலகை ஆளும் விருப்பமுடையவர்கள் விரும்பி ஏந்துதல் கடமையாகும்.


02
276.வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினங்
Vaavi vaai thangiya nunn serai vandu eanam

In the ponds place bloomed lotus flower place stayed the small honey bees are in the day time


காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
Kaavi vaai pan seiyum gaanap peear annalai

And then in the night time blooming neeloorpavaam flowers from it honey is sucking form and then raising humming sound and that place is gaanap peer where lord Siva seated and then blessed all


நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
NAAVI VAAI SAANTHULLUM POO YULLUM GAANA NEER

The stage from it got fragrance filled material named kasturi and then a kind of kitten named punugu poonai from it got fragrance essence and then sandal paste and then sacred water


தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.
THOOVI VAAI PEITHU NINRU AATUVAAR THONDAREEA

All are used to give sacred bath to lord Siva and then flowers are sprayed form disciples are conducting prayer
பகலில், பொய்கையில் உள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகி வண்டினம், இரவில் மலரும் நீலோற்பவ மலரை நுகரும் தன்மையில், பண்ணிசைக்க விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்; இறைவனைக் கஸ்தூரி என்னும் மான், புழுகுப் பூனை இவற்றிலிருந்து பெறப்படும் வாசனைப் பொருள் , சந்தனம், புனிதநீர் முதலியன கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி, அர்ச்சித்துப் போற்றி வழிபடுபவர்.


03
277. நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
NERAI YUDAI NENJULUM NEER YULLUM POO YULLUM

The calm form of mind possessed disciples who are carried on the hand place flowers and water


பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங்
PARAI YUDAI MULAYULLUM PALIYULLUM PAATULLUM

And then drums are beaten form raised sound and then sacred food carried and then prayer sings are singing form


கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
KARAI YUDAI MEDATRU ANNAL KARUUTHIYA GAANAP PEEEAR

Where lord Siva seated in poison tainted throat possessed form and that place is thiru gaanap peer


குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.
KURAI YUDAI AVERGALLAAL KALAI GILLAAR KUTRAMEEA

And those problem are filled persons are get relief from their problems
சாந்தம் நிலவும் நிறையுடைய நெஞ்சமும், நீரும், பூவும், ஒலித்து முழங்கும் முழவும், நைவேத்தியமும், திருப்புகழ்ப் பாடல்களும் நன்கு விளங்குகின்ற, திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில், கறைக்கண்டனாக மேவும் எலும்பு மாலையும் அணிந்த, அழிவில்லாத சிவஞானத்தைத் தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு, திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித் தொழுகின்ற அடியவர்கள் தீவினைகள் அற்றவர் ஆவர். தேவர்களின் நகரமாகிய அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர்.


05
279.பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
PALLAMEEA PADEAR SADAI PAAL PADA PAAINTHA NEER

The pot like spread over hair place lord Siva carried the flooded form of Ganges


வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
VELLAMEEA THANGINAAN VVEN MATHI SOODINAAN

And then white moon adorned on the hair place by lord Siva


கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
KALLAMEEA SEIGILAAR KARUTHIYAGAANAP PEEAR

Without any culprit form of mind and clean minded disciples are praying in the thiru gaanappeear temple place


உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே.
YYULLAMEE KOILLAA YULGUMEANN YULLAMEEA

Whose mind will be considered as temple form and then and then I will pray them
பள்ளம் போன்ற படர்ந்த சடையில்;, வெள்ளம் போலப் பாய்கின்ற கங்கையைத் தாங்கி, வெண்ணிறச் சந்திரனையும் சூடினான் சிவபெருமான். கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற , திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள மெய்யடியார்கள் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என்மனம் வழிபடும்.


06
280.மானமா மடப்பிடி வன்கையால் அடக்கிடக்
MAANAMAA MADAP PIDIVAN KAAIYAAL ADAK KIDA

In the forest place dwelling female elephant with his long nose decorated the temple


கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
GAANAMAAR KADAGARI VALI PADUM GAANAP PEEAR

And then male elephant prayed lord Siva’s sacred feet in the thiru gaanappear temple place


ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்
YUUNAMAAM YUDAMBINIL YURU PINI KEDA EANNIL

The sin filled in this body the soul is tied by ego filled form and those form of decease to be removed


ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.
GAANAMAA MALAR KODU NANUGUTHAL NANMAIYEEEA

We will carry gana form of flowers on hands and then prayed with oneness form of mind words and body and then we will receive all the benefits in life
பெரிய பெண்யானை தன் வலிய கையால் அலகிடக், கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறை;வனை, குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய்தீர, ஞானமாகிய மலர் கொண்டு மனம், வாக்கு, காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும்.


07
281.வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
VAALI NAAN VEELI NAAN MALAR VALAI EADUTHA THINN

The best sphere fighter and vel force practice filled ravana who has tried to lift the kaiyilai hills


டோ ளினான் நெடுமுடி தொலையவே யூன்றிய
THOOLINAAN NEDU MUDI THOLAIYAVEEA YOONRI

With his hands but lord Siva stamped him his ten heads and shoulders and then smashed it


தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
THAALINAAN GAANAP PEEAR THALIYINAAL VANANGU VAAR

And that mighty power feet possessed lord Siva whose feet are prayed with bowed head form in thiru gaanappeear temple place


நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.
NAALUM NAAL YUARVATHOOR NANMAIYAIP PERU VAREEA

Those disciples prayed him that disciples will day by day go upward in life and then got all the benefits in life
வாட்போர் வலியாலும், வேற்படைப் பயிற்சியாலும், பெரிய கயிலை மலையை எடுத்த, வலிமை வாய்ந்த தோள்களை உடைய இராவணனின், நீண்ட முடிகள் நலியுமாறு, பெருவிரலை ஊன்றிய, திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை தலையால் வணங்கும் அடியார்கள், நாளுக்கு நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலத்தினையும் பெறுவர்.


08
282.சிலையினால் முப்புரந் தீயெழச் செற்றவன்
SELAI YINAAL MUPP PURAM THEE EALA SETRAVAN

The meru hills are converted as bow form and then shot an arrow to destroy three castles by fire


நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான்
NELAI YILLAA EARU VAERAI NELAI MAI KANDU VOONGINAAN

The shaky form of mind possessed bharma and thirumal with ego filled form of mind searched lord Siva’s feet and head but failed after wards realized their sin lord Siva appeared before them in fire pole form from land to space level

கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்
KALAIYINAR PURAVIL THEEAN KAMAL THARU GAANAP PEEAR

The lovely forest and then hills lads are covered place is thiru gaanappeear


தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.
THALAI YINAAL VANANGU VAAR THAVA MUDAIYAAR GALLEEA

Those disciples who are prayed with bowed heads and that disciples will be penance performers in this world
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்கள் தீப்பறறும்படி செய்து அழித்த சிவபெருமான் , நிலையிலா திருமால், பிரமன் இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான். அழகிய குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த நிலமான, தேன் மணம் கமழத் திகழும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர்.


09
283. உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
YURI THAAI SURAIYOODU KUNDIGAI PIDI THUCHI

In the hand place begging bowel carried form who do not know the real form of lord Siva


பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
PARITHALLUM POOR THALLUM PAYANEALLAI PAAVI GAAL

And then those buthaas and samanaas are body covered with cloths and head hair plucked form of bald headed samanaas those types of activities will not give any benefits in life


மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடி
MARI THALAI MADAPPIDI VALAR EALAM KOLUM KODI

And the female elephant form of lords yumaa devi and tender creeper tree form of lords yumadevi is given left part of lord Siva’s body


கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.
KARITHU EALU GANAP PEER KAI THOLAL KARUMA MEEA

Who has seated in thiru ganappear temple place we have to pray daily that is our duty in life
கையில் கமண்டலம் ஏந்தியும், இறைவனை உணராத பாவிகளான சமணர்கள், புத்தர்கள் முறையே செய்யும் தலையில் உள்ள முடிகளைப் பறித்தலும், காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை. மடமையுடைய பெண்யானையும் வளர்கின்ற இளங்கொழுங் கொடியும் போன்ற உமா தேவியை ஒருபாகமாகக் கொண்டு, சிவசபெருமன் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுவது நம் கடமையாகும்.


10
284. காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர்
KAATAGATHU AADALLAAN KARUTHIYA GAANAP PEEAR

Lord Siva who is dancing in the burial ground and who is willingly seated place is thiru ganaappear temple place


கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான்
KOOTAGATHU EAALAMVARAAL GUTHI KOLLUM KAALIYAAN

Where the young varaal fishes are leap forward place which is water bodies filled seergaali place descended gaana sambanther


நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
NAATAGATHU VOONGU SEER GAANA SAMBANTHANA

And highly glory filled form of gana sambanther


பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே.
PAATAGATHU EAVAIVALLARKU EALLAI YAAM PAAVAMEEA

Who has sang the above poems and then those disciples who are repeatedly singing it before lord Siva and that disciples will not affect any form of sin in this world
சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, இளவரால் மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிலைகளை உடைய வளமையான சீர்காழியில், அவத்ரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை.


11
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காளையீசுவரர், தேவியார் – மகமாயியம்மை.
இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

October 9, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: