THIRU VIGAYA MANGAI
017 திருவிசயமங்கை
THIRU VIGAYA MANGAI
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் ON THIRU CHIRAM BALAM
தலவரலாறு – பாவிரி வடகரைத் தலம் 63- இல், இது 47 – வது திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. விசயன் பூசத்துப் பேறு பெற்ற தலம், கோ பூசித்த தலம்.
176 மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
MARU AMER KULAL YUMAI PANGER VAR SADAI
The fragrance filled long hair possessed lords yumaadevi is kept left part of lord Siva’s body
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங்
ARAVAMER KOLGAI EMM ADIGAL KOYILAAM
Where lord Siva whose adorned the snakes on the hair place and that temple place is thiru vejaya mangai
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
KURAVAMER SURA PUNNAI KOONGU VEENGAIGAL
Where kuraa surapunnai kongu vengai trees are
விரவிய பொழிலணி விசய மங்கையே.
VEERAVIYA POLIL ANI VIJAYA MANGAIYEEA
Filled plantations are covered place is thiru vejayamangai
நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்ட, நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில், குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசய மங்கை ஆகும்.
01
177. கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
KEETHAMUM EASAI THARA KELARUM VEENAIYAR
The sons at first singing and then accordingly veena sounds are raised form
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
BOOTHA MUN IYALBU YUDAIPUNITHAR PON NAGER
Where demon forces are covered form lord Siva dwelling golden place it is
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
KOTHAM VALI PADA KULAYUU NAAN MARAI
The bull deva praying place it is and then four veethaas are
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.
VEETIYAR THOLUTHELU VESAIYA MANGAIYEEAA
Chanting bharmins are praying and then conducting poojaas and that place is thiru vejayamangai temple place it is
கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினைப், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான சிவபெருமானின் பொன்னகர் என்பது, இடபதேவர் வழிபட விளங்குவதுடன், நான்கு வேதங்கள் ஓதும் ஆந்தணர்கள் தொழுது போற்றும் திருவசயமங்கை திருத்தலம் ஆகும்.
02
178. அக்கர வரையினர் அரிவை பாகமாத்
AKKU ARA VARAIYINAR ARIVAI BAAGAMAA
The ruthraatcha seeds are adorned and then snakes are adorned in the hair place and then lords yumadevi is given left part of his body
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
THOKKANAL VEDAI YUDAI JOOTHITHOL NAGER
The best bull is accepted as his travelling vehicle and then lord Siva appearing fire glow form where lord Siva seated in that good old temple place
தக்கநல் வானவர் தலைவர் நாடொறும்
THAKKA NAL VAANAVER THALAIVER NAAL THORUM
The appropriate upper world deevaass and those theevas leader inthira are daily
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.
MIKKAVAR THOLUTHU EALU VISAIYA MANGAIYEEA
Those persons are praying place is thiru vesaiya mangai
உருத்திராக்கத்தையும் பாம்பையும் அணிந்த இடுப்பை உடையவரும், உமாதேவிய ஒரு பாகமாகக் கொண்ட வரும், சிறந்த நல் இடபத்தை வாகனமாகக் கொண்ட சோதி வடிவான சிவபெருமான், வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர் , தகுதியுடைய நல்ல தேவர்களும், அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும் வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
03
179. தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடு
THODAI MALI EATHILIUM THUNN EARUKKODU
Konrai flower garland and thick form tied the erukku flower garland
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
PUDAI MALI SADAI MUDI ADIGAL PONN NAGER
And then in the side place hanging hair possessed lord Siva whose dwelling temple city place it is
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
PADAI MALI MALUVINAR LAING KANN MOORI VELL
Malu battle forced carried on hand place and then the lust green eyes are possessed the mighty powerful bull emblem carried on the flag place emblem form
விடைமலி கொடியணல் விசய மங்கையே.
VEDAI MALI KODI ANNAL VISAIYA MANGAIYEEA
That bull flag carrier lord Siva who is dwelling in the vijayamangai temple place
கொன்றை மாலையும், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட எருக்கு மாலையையும், பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் அழகிய நகரம், மழுவை ஆயுதமாக உடையவரும், பசிய கண்களையுடைய வலிமையுடைய , வெண்ணிற எருதுவைக் கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசய மங்கை என்னும் திருத்தலமாகும்.
04
180. தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
THODAMAR KAATHINAN THUTHAINTHA NEETRINAN
Lord Siva in the left ear place adorned ear ornament thoodu and then well paste form sacred ashes are adorned all over the body
ஏடமர் கோதையோ டினித மர்விடங்
EEADU AMARKOTHAIYODU EANITHU AMER VIDAM
The petals form hair possessed lords yumaadevi is with whom lord Siva seated
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
KAADAMER MAA KARI KATHARA PORTA THOOR
In the forest place dwelling big male elephant is cried with pain form lord Siva pealed its skin and then adorned it as upper dress
வேடம துடையணல் விசய மங்கையே.
VEEDAM ATHU YUDAIYA ANNALVISAIYA MANGAIYEEA
And then that appearance form lord Siva dwelling in the thiru vijaya mangai temple place
இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன், நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன். மலர் போன்ற கூந்தலையுடைய உமாதேவியோடு இனிது வீற்றிருந்து அருளுபவன். காட்டிலே வசிக்கின்ற பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்
05
181. மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
MAI PURAI KANN YUMAIPANGER VANN THALAL
The dark color neelorpavam flower like eyes are possessed lords yumadevi
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
VOPPU YURAI MEENI EMM MUDAIYA VANN NAGER
Who has been taken left part of body whose body lore fire like red one
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
APPODU MALAR KONDU ANGU EARAINGI VAANAVER
The upper world devas are carried water and flowers on hands and then prayed in melted form before lord Siva
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.
MEI PADA ARUL PURI VISAIYA MANGAIYEEA
Those deevaas are in true form praying before lord Siva who are blessed by lord Siva in thiru vijaya mangai temple place
நீலோற்பவ மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்ட இறைவன் சிறந்த நெருப்புப் போன்ற திருமேனியுடையவன். எம்மை ஆளும அவரின் நகர் நீரும், மலரும் கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட , அவர்களுக்கு அருள்புரிந்த திருவிசய மங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
06
182. இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்
EARUM BONIN MALAI VILLIN EARI SARATHINAAL
The big meru hills are converted as bow and with it shit an fire arrow on the three castles
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
VARU PURANGALAIP PODI SEITHA MAIN THAN OOR
which is converted in to dust form that mighty brave hero lord Siva
சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும்
SURUMBU AMARKONRAIYUM THOOYA MATHAMUM
The honey bees are seated on the konrai flowers yoomathai garland
விரும்பிய சடையணல் விசய மங்கையே.
VIRUMBIYA SADAL ANNAL VISAIYA MANGAIYEEA
Lord Siva willingly adorned it on the hair place and that lord dwelling place is thiru vijayamangai temple place
பெரிய மேரு மலையாகிய வில்லினால் எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் , திரிபுரங்களைப் பொடி செய்த பெரும் வீரமுடைய இறைவன், வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர் மாலையையும், தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த சடைமுடியுடைய சிவ பெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசய மங்கi என்னும் திருத்தலம் ஆகும்.
07
183. உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங்
YULLANGAI YIL EARU PATHOODUORU PATHUM KODU AANGU
In the daily moving place the kailai hills are obstructing his free movement so that in ravana’s mind aversion created form
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
ALAM THARUM VARAI EADUTH THIDUM ARAKKANAI
Who has tried to lift the kaiyilai hills but lord Siva stamped him under the hills
தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன்
THALARNTHU YUDAL NERI THARA ADARTHA THANMAIYAN
And then gave tiredness to ravana and that mannerism filled lord Siva
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.
VELANG GILAI YODUM PUGUM VOSAIYA MANGAIYEEA
Where lords yumadevai adorned attractive ornaments and then seated with lord Siva that place is thiru vijaya mangai temple place
தனது பாதையில் குறுக்கே தடை செய்யவதாக உள்ளத்தில் வெறுப்புத் தோன்ற இருபது தோளும், பத்துத் தலையும் கொண்டு, அளப்பதற்கு அரியதாகிய கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனை, தளர்ந்து உடல் நெரியும்படி அடர்த்த தன்மையுடைய சிவபெருமான், ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
08
184. மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
MANN EADAI YUNDAVAN MALARIN MEEAL YURAI
The soil consumed thirumal and lotus flower place dwelling bharma
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
ANNALGAL THAMAKKU ALAP PARIYA ATHANOOR
Who are unable to scale that place is thiru vijaya mangai
தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
THANN ARUM SAANTHAMUM POOYUM NEER KODU
The coolness filled water and the cool form of sandal paste and flowers are carried form
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.
VINNAVER THOLUTHU EALU VISAIYA MANGAIYEEA
The upper world deevaas are praying place is thiru vijaya mangai temple where lord Siva dwelling
மண்ணினை உண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர், குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனமும், பூவும் நீரும் கொண்டு விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
09
185. கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
KANGIYUM KAVALAM YUNN KAVANAR KATTYRAI
The gruel consuming buthaas and big ball form food engulfed samanaas whose religious theories are
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
NANGINUM KODIYANA NAMERGAL THEER GILLAAR
Which more wilder than poison so our people will not accept it
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
SEN SADAI MUDI YUDAI THEEVAN NANN NAGER
The red color hair possessed lord Siva is deevaas leader whose good city place it is
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.
VINGAIYAR THOLUTHU EALLU VIGAYA MANGAIYEEA
Where withyatharers are praying place is thiruvijaya mangai
கஞ்சி உண்ணும் புத்தர்களும், கவனமாக உணவு உண்ணும் சமணர்;களும் உரைக்கும் கருத்துக்கள் நஞ்சினும கொடியனவாகும். நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்;ளார். சிவந்த சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம்,வித்தியாதரர்கள் தொழுது வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
10
186. விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
VINNAVER THOLUTHU EALU VIJAYA MANGAIYAI
The upper world deevaas are praying thiru vijaya mangai temple place
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
NANIYA PUGALI YULLGAANASAMBANTHAN
Gana sambenter entered who has descended in seergaali place
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
PANNIYA SEN TAMIL PATHUM VALLA VAR
Who gave the above ten poems in blessed form and then those disciples are daily singing before lord Siva
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.
PUNNIYAR SIVA GATHI PUGUTHAL THINNAMEEA
That punniyaa form of disciples will enter mukthi place certainly
விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசயமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில் அவதரரித்த ஞானசம்பந்தன் அருளிய, இச்செந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள், சிவபுண்ணியச் செல்வர்கள் ஆவர். அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – விசயநாதேசுவரர், தேவியார் – மங்கைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
October 5, 2019