OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAIGAL MAADAK KOIL

ganesheit October 5, 2019

018 திருவைகள்மாடக்கோயில்
THIRU VAIGAL MAADAK KOIL


பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALM

தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 – இல், இது 33 –வது திருத்தலமாகும். கோச்செங்கச் சோழனால் கட்டப் பெற்றது. அவன் கட்டிய கோயில்கள் இவ்வூரில் மூன்றுள்ளன.


187 துளமதி யுடைமறி தோன்று கையினர்
THULA MATHIYURAI MARI THOONRU KAIYINAR

Lord Siva carried on the hand place the stage which is all the time jump and then leap forward

இளமதி யணிசடை எந்தை யாரிடம்
EALAM MATHI ANI SADAI EANTHAI YAAR EADAM

Who has adorned the young moon on the hair place he is also my lord Siva


உளமதி யுடையவர் வைக லோங்கிய
YULAMATHI YUDAI YAVER VAGAL VOONGIYA

The Siva saints are living place is thiru vaigal temple place


வளமதி தடவிய மாடக் கோயிலே.
VALA MATHI THADAVIYA MAADAK KOILLEEA

Where the lovely moon is embracing form high towers are existing place it is
இறைவன், துள்ளிக் குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன். இளம் பிறையை அணிந்துள்ள சடையன். ஏமது தந்தையாகிய அச் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக் கோயில் ஆகும்.


01
188. மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்
MEIYAGAM MILIRUM VENN NOOLER VEETHIYAR

The Siva is glittering form three knotted thread adorned on the bosom place and then veethas are blessed form given to this world


மையகண் மலைமக ளோடும் வைகிடம்
MAIYA KANN MALAI MAGALOODUM VAIGIDAM

And then dark color eyes are possessed lords yumaadevi with here seated form lord Siva descended in this temple place


வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்
VAIYAGAM MAGIL THARA VAIGAL MEEL THESAI

This world people are got happy form in the thiru vaigal northern side


செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.
SEIYA KANN VALAVAN MUNN SEITHA KOILEEA

The king named kochengan who has contrasted storied form of this temple
இறைவன் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர், வேதத்தை அருளிச் செய்தவர். அவர் மைதீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடன் கொண்டு வீற்றிருந்து அருளும் இடமாவது, இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில், சிவந்த கண்ணுடைய ;கோச்செங்கட் சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக் கோயிலாகும்.

02
189. கணியணி மலர்கொடு காலை மாலையும்
KANNI ANI MALAR KODU KAALAI MAALAIYUM

Vengai tree flowers are collected and then morning and evening daily


பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
PANI ANIBAVERKKU ARUL SEITHA PAAN MAIYAR

Those disciples who are conducting prayer to who lord Siva put his grace


தணியணி உமையொடு தாமுந் தங்கிடம்
THANI ANI YUMAIYOODU THAAMUM THANGIDAM

And that form of lord Siva the cool form of grace is considered itself as his grace and then seated with lord’s yumadevi


மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.
MANI ANI KILAR VAIGAL MAADAK KOILEEA

Where the ruby diamonds are decorated form thiru vaigal temple place it is
வேங்கை மரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும், மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள் செய்யும் தன்மையுடையவர் இறைவர். அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவமாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது, இரத்தினங்களால் அழகு படுத்தப்பட்ட திருவைகல் என்னும் மாடக்கோயில் ஆகும்.


03
190. கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
KOMBIYAL KOOTHAI MUNN ANJAK KUNJARATHU

The tender creeper plant form of lords yumadeevi got afraid of lord Siva


தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
THUMBIYATHU YURI SEITHA THUNGER THANG KIDAM

Who has pealed the elephant skin and then adorned it as upper dress and that highly regarded god seated place it is


வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
VAMBIYAL SOLAI SOOL VAIGAL MEEAL THESAI

The fragrance filled plantations are covered place is thiru vaigal where


செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.
SEMBIYAN KOOCHENGAN NAAN SEI KOYILEEA

The chola king named kochengan constructed storied form of temple it is
பூங்கொடி போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு, யானையின் தோலை உரித்த மேன்மை உடையவனான சிவபெருமான், வீற்றிருந்து அருளும் இடம், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக் கோயிலாகும்.


04
191. விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்
VEDAM ADAI MEDATRINAR VEETHA NAAVINAR

Lord Siva who has conserved the poison in the throat place which is emanated from the milk sea place and then all the time chanting veethaas with his mouth


மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
MADA MOLI MALAI MAGALOODUM VAIGIDAM

Who has seated with lovely wards are talking lords yumaadevi who is hill lady and then together form appeared to the whole world in this thiru vaigal temple place


மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
MADA ANNAM NADAI PAYIL VAIGAL MAANAGER

The young Anna birds are walking geitly form in this thiru vaigal temple place


குடதிசை நிலவிய மாடக் கோயிலே.
KUDA THESAI NELAVIYA MAADAK KOILEEA

Which is situated western side of this place
இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர். வேதங்களை ஓதும் நாவினர். அவர் இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியோடு வீற்றிருக்கும் இடம,; இள அன்னப் பறவைகள் நடைபயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத் திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும்


05
192. நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
NERAI PUNAL PERAI YODU NELAYUU NEELSADAI

The flooded form of Ganges and then moon adorned in the hair place


இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி
EARAIYAVER YURAI VEDAM EALANGU MOO EARI

That form seated place it is and then three types of yagga fire


மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
MARAIYODU VALARYU SEI VAANAVER VAIGALIL

Developing with veethaas are chanting form of thiru vaigal temple place it is


திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.
THERAI YUDAI NERAI SELVEN SEITHA KOYILLEEAA

Where the small kings are year by year giving tax to kochenga cholan who is royal big king who has constructed this big temple
புனிதமான கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியை உடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது, மூவகை அக்கினிகளை தேவங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகள் என்னும் திருத்தலத்தில், சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கச் சோழன் என்ற மாமன்னன் கட்;டிய மாடக் கோயில் ஆகும்.


06
193. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
EARI SARM VARI SELAI VALAIYA EEVI MUNN

The fire arrow is shot with the help of meru hills converted in to bow and then space place wandering three castles are destroyed


திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
THREE PURAM EARI SEITHA SELVER SEEAR VIDAM

That rich lord Siva seated place is thiru vaigal temple place it is


வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
VARI VALAI AVER PAYIL VAIGAL MEEALTHESAI

Where ladies are stripped form of bangles are adorned and then daily going to temple place is thiru vaigal which is situated western side of this


வருமுகி லணவிய மாடக் கோயிலே.
VARU MUGILANAVIYA MAADAK KOILEEAA

Temple constructed up to sky level which is clouds are crawling temple
அக்கினியாகிய அம்பை, மேரு மலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி, முற்காலத்தில் திரிபுரங்களை எரியுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது, வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகளல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள , மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும்.


07
194. மலையன இருபது தோளி னான்வலி
MALAIYAN EARUBATHU THOLINAN VALI

The hillock like twenty shoulders are possessed ravana whose mighty powers are


தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
THILAIYUU SEITHU ARUL JOTHIYAAR EADAM

Destroyed form under kailai hills trapped form and then ravana realized his sin and then sang sama veetha poems to appease lord Siva who has blessed him with long life that fire glow form appearing lord Siva in this temple place


மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
MALAR MALI POLIL ANI VAIGAL VAALVAARGAL

The flowers are filled plantations are covered place is thiru vaigal where living people are


வலம்வரு மலையன மாடக் கோயிலே.
VALAM VARUM MALAIYAANA MAADAK KOYILEEAA

Who are encircling the hill like temple it is
மலை போன்ற இருபது தோள்களை உடைய இராவணனின் வலிமையை அழித்து, பின்னர் அவன் சாமகானம் பாடிப் போற்ற, அவனுக்கு அருள் செய்த சோதியகிய இறைவர் வீற்றிருக்கும் இடமாவது, மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய அழகிய திருவைகலில் வாழுகின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக் கோயில் ஆகும்.

08
195. மாலவன் மலரவன் நேடி மால்கொள
MAAL AVAN MALAR AVAN NEEDI MAAL KOLA

Thiru mal and then bharama searched lord Siva’s feet and head and then failed in their mission and got fainting


மாலெரி யாகிய வரதர் வைகிடம்
MAAL EARI YAAGIYA VARTHAR VAIGIDAM

And then requested lord Siva to forgive their sin afterwards lord Siva appeared fire pole form before them and then blessed them and that philanthropist form of lord Siva


மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
MALAI KODANI MARAI VAANAR VAIGALIL

Whose dwelling place is where the vetha chanting bharmins are flower garlands are adorned form daily conducting poojaas that storied temple place is thiru vaigal


மாலன மணியணி மாடக் கோயிலே.
MAAL ANA MANI ANI MAADAK KOILEEAA

The greatness filled ruby diamonds are adorned form temple place it is
திருமாலும், பிரமனும் தேடியும் காணாது மயக்கம் கொள்ள, பெருமை மிக்க நெருப்பு மலையாகிய வரம் நல்கும் வள்ளலாகிய மாலை கொண்டு அணிந்து வேத விற்பன்னர்கள் வாழும் வைகலில், பெருமை மிக்க மணிகளை அணியாகக் கொண்டு மேவும் மாடக்கோயில் ஆகும்.


09
196. கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
KADU YUDAI VAAYINAR KANG VAAYINAR

The beetle nuts are chewing mouth possessed samanas and the gruel consuming mouth possessed buthaas


பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
PEDA GUDAI PEEANI LAAR PEENU KOIL

Where the butha religious book peedam is disregarded those disciple are dwelling place it is


மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
MADA MUDAI AVAR PAIYIL VAIGAL MAANAGER

The hesitation and shyness filled ladies are daily going to temple place is thiru vaigal city place


வடமலை யனையநன் மாடக் கோயிலே.
VADAMALAI ANAIYA NAN MAADAK KOILEEA

Which is meru hills like glory filled temple it is

கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களையும், கஞ்சி குடிக்கும் வாயுடைய சமணர்களையும், புத்தர்களின் பிடக நூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது, மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.


101
197. மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
MAIN THANA THEDAM VAIGAL MAADAK KOILAI

The infinitive power possessed lord Siva who has seated in thiru vagal temple place


சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
SANTHAMAR POLIL ANI SANBAI GAANA

And the sadal wood trees are covered place is seergalli where descended gana sambanther


பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
SAMBANTHAN TMIL KELU PAADAL PATHIVAI

Who has sung the above ten Tamil poems


சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே?
SEN THANAI SEI BAVER SIVALOOGAM SEERVAREEA

And then placed it in the mind place and then chanting lord Siva all the time those disciples will ultimately enter in to mukthi
அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய , திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச், சந்தன மரங்கள் சோலைகளையுடைய திருச்சண்பை நகரில் அவதரித்த, ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வைகனாதேசுவரர், தேவியார் – வைகலம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

October 5, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: