THIRU KOLLIK KAADU
016 திருக்கொள்ளிக்காடு
THIRU KOLLIK KAADU
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 – இல் இது 118 – வது திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கள்ளிக்காடு என வழங்கப் பெறுகிறது. அக்கனி பகவான் பூசித்தது.
165 நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்
NENAM PADU SUDALIYIN NEERU POOSI NINRU
The man burning ground where fatty body burnt down and from it emanated ashes are adorned all over the body
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
EANANGUVAR PEEIGALOODU IDUVAR MAANADAM
And then with demon forces clubbed form lord Siva dancing in this burial burning fire place
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்
YUNANGAL VENN THALAI THANIL YUNBER AAGINUNG
In the dried bharma skull place lord Siva is collecting begging food and then eat it
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
GUNAM PALA YUDAIYAR NAM KOLLI KADAREEA
But lord Siva possessed highly regarded mannerism and then who is dwelling in thiru kollikaadu temple place and then blesses all
பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்தாடுகின்ற இறைவர், உலர்ந்த பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பார். ஆயினும் அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராவார். திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
01
166. ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்
AATRAL NALL ADI YINNAI ALAR KONDU EEATHUVAAN
The goodness filled the sacred feet of lord Siva ii prayed by margandayaa with floral tribute giving form chanting manthraas and then daily conducting poojaass
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
SAATRIYA ANTHANAN THAGUTHI KANDA NAAL
Whose 16th year of life going to end to day
மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை
MAATRALAAGI MUNN ADARTHU VANTHU ANAI
And then death god comes and try to corner his life which is not to be stopped by anybody
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
KOOTRINAI YUTHAITHANAR KOLLI KAADAADAREEA
And that ema is kicked and then killed by lord Siva and then saved margandeya from the clutches of death god ema
நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர் கொண்டு வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள் இறுதியை அறிந்து, யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி , மார்க்கண்டேயனை நெருங்க வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவன் திருக் கொள்ளம்பூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றான்.
02
167. அத்தகு வானவர்க் காக மால்விடம்
ATH THAGU VAANAVERK KAAGA MAAL VIDAM
To live permanently by deavaas for that sack they are praying god so once they prayed under lord Siva to save from sea emanated poison so lord Siva accepted their request and then consumed those poison and then conserved in the throat place
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
VAITHAVER MANI PURAI GANDATH INNULLEEA
In that allowed to stay in ruby diamond form in the throat place
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
MATHAMUM VANNIYUM MALINTHA SENNI MEEAL
The yoomathai flower vanni flower filled in the head hair place
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.
KOTHALAR KONRAIYAR KILLIK KAADAREEA
And then bunch form adorned konrai flower and that form of lord Siva seated in thiru kollikaadu temple place and then blesses all
தாம் வாழ்நாள் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக், கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய சிவபெருமான், ஊமத்தம் பூவும், வன்னியும் அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றையைச் சூடியவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார்.
03
168. பாவணம் மேவுசொன் மாலை யிற்பல
PAA VANNAM MEEYU SOL MAALAIYIL PALA
The grammar rules are followed form composed the poems wards are used in garland form
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
NAAVANAMKOLGAIYIN NAVINRA SEIGAIYAR
And then with tongue chanting form giving this world by lord Siva
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்
AAVANAM KONDU EAMAI AALVER AAYINUM
And that form of lord Siva who has taken us slave form and then ruled us
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.
KOVANA KOLGAIYAR KOLLIK KAADA REEA
Who has only adorned the loin cloths only and that simple rule following lord Siva who is dwelling in thiru kollikaadu temple place
யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றையும் நாநயத்துடன் நவிலுமாறு செய்தவர் இறைவர். அவர் உயிர்களாகிய எங்களை அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவண ஆடை உடையவர். அப்பெருமான் திருக் கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
04
169. வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்
VAAR ANI VANA MULAIM MANGAI YAAL ODUM
The bra adorned form of lords yumadevi and then with her
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
SEER ANI THIRU YUMTHIGALNTHA SENNIYAR
In good decorated appearance form available to his devotes
நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
NAARANI SELAI THANNAAL NANUGA LAAR EAYIL
The rope tied firm meru hills are converted as bow and then opponent three asura’s castles are
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.
KOOR EARI KOLUVINAR KOLLIK KAADEREEA
Shot an fire arrow and then destroyed it with fire engulfed form
கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு, சிறந்த அழகிய திரு உருவத்துடன் விளங்கும் சிவபெருமான், நாண் பூட்டிய மேரு மலையை வில்லாகக் கொண்டு பகைவர்ளாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர்.
05
170. பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
PANNGU THOOI MEL ADI PAAVAI YALLAAL LODUM
The cotton like soft feet are possessed lords yumadevi with her
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
MANJU THOOI KAIYILAIYUL MAGIVAAR NAAL THORUM
In the clouds are crawling kayilai hills place lord Siva happily mingling with lords Parvathi and then blesses all his disciples
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
VEN SENA MARUPPODUM VERAIYA VANTHU ADAI
Wild angry form moved towards lord Siva and that elephant skin is pealed and then adorned it as upper dress
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.
KUNJARAM YURITHAVER KOLLIK KAADEREEA
And that form of lord Siva seated in kollikaadu temple place and then blesses all
பஞ்சு போன்ற மென்மையான அடியை உடைய அம்பிகையை உடனாகக் கொண்டு, மேகங்கள் தோயும் கயிலை மலையின் கண் மகிழ்ந்து நாள்தோறும் அருள் பாலிக்கும் வெஞ்சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான் கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.
06
171. இறையுறு வரிவளை இசைகள் பாடிட
IRAI YARU VARI VALAI EASAIGAL PAADIDA
In the sacred hand place adorned the lovely bangles by lords parvathi singing form
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
ARAIYURU KALAL ADI AARKKA AADUVAAR
In the leg place adorned anklets are raising sound form lord Siva dances
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
SERAIYURU VERI PUNAL SENIYIN MISAI
In that form of lord Siva who has stopped Ganges and then conserved it in the hair place and then
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.
KURAI YURU MATHIYINAR KOLIK KAADAREEA
In the hair place the third day moon is adorned form seated in the thiru kollikaadu temple place and then blessing all
திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களை உடைய உமாதேவி இசைபாட, திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க இறைவர் திருநடம் புரிகின்றார். அப்பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையி;ல் தாங்கி, கலை குறைந்த சந்திரனையும் சூடி, திருக் கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார்.
07
172. எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
EADUTHANAN KAYILAI YAI EAYAL VALI YINAAL
Ravana who has tried to lift the kaiyilai hills and then tried to place it somewhere else
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
ADAR THANAR THIRU VERALINAAR ALARIDA
But lord Siva stamped him under the kaiyilai hills so that ravana cried with pain
படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்
PADUTHANAR ENRU AVAN PAADAL PAADALUM
And then ravana realized the mistake and then sang sama veethaa so as to appease lord Siva
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.
KODUTHANAR KOTRAVAAL KOLLIK KAADAREEA
And then lord Siva gave him fighting brave sphere and that form of lord Siva seated in the thiru kollikaadu temple place
தன்னுடைய வலிமையினால் கயிலை மலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனனை, தம் காற் பெரு விரலையூன்றி அம்மலையின் கீழ் அடர்த்து அலறும்படி செய்தவர். இராவணன் தவறுணர்ந்து தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட, இறைவர் இரங்கி வீரவாளை அருளினாhர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார்
08
173. தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
THEEDINAR AYAN MUDI MAALUM SEEVADI
Bherma searched lord Siva’s head and then thirumal searched lord Siva’s feet
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
NAADINAR AVER EANRU NANUGA GINRILLAR
But they are not in a passion to approach lord Siva
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
PAADINAR PARIVODU PATHER SITHAMUM
And then disciples are love melted form singing and then praying to whom lord Siva put his grace on them
கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.
KOODINARKKU ARUL SEIVAR KOLIK KAADAREEA
And that form of lord Siva dwelling thiru kolikaadu temple place
பரமன் திருமுடியினையும், திருமால் திருவடியையும் தேட , அவர்களால் எப்பொழுதும் காண முடியாதவராய் விளங்கும் சிவபெருமான், பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள் செய்வார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார்.
09
174. நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
NAADI NINRA ARIVIL NAANILLIGAL SAKKIYAR
The real god truth is not known in the mind place those buthaas and samanaas
ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல
VOODI MUNN VOOTHIYA YURAIGAL MEIALLA
At fabricated form saying wares are not true one
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்
PAADUVAR NAAN MARAI PAYINRA MAATHIDUM
The four veethaas are blessed form given by lord Siva whose has seated with intimate love form
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
KOODUVAR THIRU YURU KOLLI KAADAREEA
And that twin form of lord Siva seated in thiru kollikaadu temple place and then blesses all
இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற சமணரும், புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல. நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான், நன்கு பழகிய உமாதேவியோடு திருக் கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசி;த்து உய்தி அடையுங்கள்
10
175. நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
NAL THAVER KAALIYULGAANA SAMBANTHAN
With good penance perform bharmins are living place is seergal where descended gaana sabanther
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
KUTRAMILPERUM PGAL KOLIK KAADARAI
The glory filled form of seated lord Siva in thiru kolli kaadu temple place
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
SOL TAMIL EANN ISAI MAALAI SOORVINRI
In lovely Tamil language with musical notes are filled form singing and then those disciples without any tiredness form learnt and then chanting before lord Siva
கற்றவர் கழலடி காண வல்லரே
KATRAVER KALAL ADI KAANA VALLAREEA
Those disciples will see the lord Siva’s feet and then enter in to mukthi
நல் தவத்தோர் வாழுகின்ற சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , குற்றமற்ற பெரும் புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற இறைவனை, அழகு தமிழில் இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அக்கினீசுவரர், தேவியார் – பஞ்சினுமெல்லடியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAM BALAM
October 5, 2019