OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEN KAADU

ganesheit October 2, 2019

015 திருவெண்காடு
THIRU VEN KAADU


பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

தலவரலாறு – காவிரி வடகரைத் தலங்கள் 63-இல் இது11- வது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. இந்திரன், வெள்ளையானை வழிபட்டது. இங்குள்ள முக்குளம் பிரசித்து பெற்றது.


154 மந்திர மறையவை வான வரொடும்
MANTHIRA MARAI AVAI VAANAVAROODUM

The five letter manthra wards are om sivayanama om namasivaya and then om ponnambalam all are chanting veethaas and the upper world deevaas


இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
IN THIRAN VALIPADA NINRA EMM EARAI

And devas leader indran praying form lord Siva seated who is also my god


வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
VENTHA VENN NEETRAR VENN KAADU MEEVIYA

The burnt down white ashes are adorned form of lord Siva seated in the thiru venkaadu temple place


அந்தமு முதலுடை அடிக ளல்லரே.
ANTHAMUMMUTHAL YUDAI ADIGAL ALLEREAA

Who is the beginner of this world and then ultimately destroying this world at the end of yooli time and that prime god he is
பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும், தேவர்களும், இந்திரனும் வழிபட விளங்குகின்ற எங்கள் இறைவனாய், வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்ற சிவபெருமான் அந்தமும் , ஆதியுமாகிய அடிகள் அல்லரோ?
01


155. படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
PADAI YUDAI MALU VINARPAAI PULI THOOLINER

Lord Siva carried malu battle force on his hands and then leap forward those tiger skin adorned


உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
YUDAI VERI KOOVANAM YUGANTHA KOLGAIYAR

On his waist place and then willingly adorned loin cloths in the waist place


விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
VEDAI YUDAI KODIYAR VENN KAADU MEEVIYA

Lord Siva who has carried bull emblem studded flag on his hands and then seated thiru ven gaadu temple place


சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே.
SADAI EADAI PUNAL VAITHA SATHURAR ALLEREEA

Who has carried Ganges in his head hair place and those mighty power possessed lord Siva

இறைவர் மழுவைப் படையாக உடையவர். பாய்கின்ற புலித் தோலை உடையவர். கோவணத்தை உகந்து அணிந்தவர். இடப வடிவம் பொறிக்கப்பட்ட கொடி உடையவர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ?
02


156. பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
PAAL LODU NEI THYIR PALAYUM AADUVAR

Lord Siva is given bath with milk curd and ghee and other articles

தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
THOOLODU NOOL EALAI THUTHAINTHA MAARBINAR

Lord Siva adorned elephant skin as upper dress and then tiger skin as lower dress tied form appeared and then three knotted thread adorned on the bosom place


மேலவர் பரவுவெண் காடு மேவிய
MEEAL AVER PARAYUU VEN KAADU MEEVIYA

Siva saints are praying place is thiru ven kaadu where lord Siva seated form


ஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே.
AALAMA THAMARNTHA EMM ADIGAL ALLAREEA

Lord Siva seated under the shadow of aall tree and then preached veethaas inner meanings to sanagathi saints who is also my leader
இறைவர் பாலொடு நெய், தயிர் மற்றும் பலவற்றாலும், திருமுழுக்கு ஆட்டப் படுபவர். யானைத் தோலைப் போர்வையாகவும், புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர். முப்புரி நூலணிந்த மார்பினர். சிவஞானிகள் துதி;க்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ்; வீற்றிருந்து அறம் உரைக்கும் எம் தலைவர் அல்லரோ?
03


157. ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னையுந்
GAALALUM SERYNTHIYUM NARU MALAR PUNNAIYUM

Gnaalal flowers and serunthi flowers and then fragrance filled punnai tree flowers and


தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
THAALAI VENN KURUGAYAL THAYANGU KAANALIL

Then thaalai kurukkathi all the bloomed form of sea side forest place of thiru ven kaadu temple surrounded form


வேழம துரித்தவெண் காடு மேவிய
VEELAM ATHU YURITHA VENN KAADU MEEVIYA

Where lord Siva pealed the elephant skin that mighty power possessed form


யாழின திசையுடை இறைவ ரல்லரே.
YAALEANTHUEASAI YUDAI ERAIVAR ALLEREEA

And then yawl musical sound form of talking lord Siva who has seated here and then blessed all
புலிநகக் கொன்றையும், செருந்தியும், நறுமணமிக்க புன்னை மலர்களும், தாழையும் குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில்;, யானையின் தோலை உரித்த ஆற்றல் உடையவராகவும், யாழிசை போன்ற இனிமை உடையவராகவும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார் அல்லரோ?


04
158. பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
BOOTHANGAL PALA YUDAI PUNITHAR PUNNIYAR

Demon forces are covered form of lord Siva who is punniyaa form appearing in this world


ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறை
EEATHANGAL PALA EADER THEERKUM EMM EARAI

In this land place people sins and then from it emanated problems are removed by lord Siva who is also my god


வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய
VEETHANGAL MUTHAL VAR VENN KAADU MEEVIYA

Lord Siva is prime god to veethaas who has seated thiru ven gaadu temple place


பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.
PAATHANGAL THOLA NINRA PARAMER ALLEREEA

Whose sacred feet are prayed form seated that prime god form appearing here
பூதகணங்கள் பல உடைய புனிதர் ஆகிய புண்ணியத்தின் வடிவினராய் விளங்கி, மன்னுயிர்களின் குற்றங்களையும், அதனால் நேரும் இடையூறுகளையும் தீர்த்தருளுகின்ற, எமது இறைவன் ஆவர். அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம் பொருள் அல்லவோ?


05
159. மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
MANNAVER VINNAVER VANANGA VAIGALLUM

This land people and then upper world deevaass and all are daily praying


எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
EANNIYA THEEVARGAL EARAINGUM EMM EARAI

And then praising with prayer songs and then conducting poojaass


விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
VINNAMER POLIL KOL VENN KAADUMEEVIYA

Up to sky touching form growing big trees those place is thiru ven kaadu


அண்ணலை அடிதொழ அல்ல லில்லையே.
ANNALAI ADI THOLA ALLAL ILLAIYEEA

Whose sacred feet are daily praying disciples will not affect by sorrows
மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும், மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர். வானளாவிய சோலைகளையுடைய திரு வெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்க்குத் துன்பம் இல்லை.
06


160. நயந்தவர்க் கருள்பல நல்கி இந்திரன்
NAYANTHAVERKKU ARULPALA NALGIYA IN THIRAN

Those disciples are liked lord Siva and requested anything from him which is fulfilled by him and then and then indiran whose


கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
KYANTHIRAM VALI PADA NINRA KANNUTHAL

White elephant prayed under lord Sivas feet and then lord Siva put his grace on it and that form of lord Siva possessed fore head eye


வியந்தவர் பரவுவெண் காடு மேவிய
VEYAN THAVAR PARAYUU VENN KAADU MEEVIYA

All are astonishing form praised lord Siva’s grace and that form seated in thiru vvenkaadu temple place


பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே.
PAYAN THARU MALU YUDAI PARAMAR ALLAREEA

Who has carried fear emanating malu battle force on his hands and then appearing to all prime god form
விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வெண்டுவன வேண்டியவாறு அருளி, இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள் புரிந்தவர் நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் ஆவார். அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரும் மழுப்படையை உடைய பரமர் அல்லரோ?
07


161. மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி
MALAI YUDAN EADUTHA VALL ARAKKAN NEEL MUDI

Ravana who has lifted kaiyilai hills whose heads


தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்
THALAI YUDAN NERITH ARUL SEITHA SANKARAN

Hands and bosom are stamped under the hills by lord Siva and then afterwards who has realized his sin and then sang sama veetha to appease lord Siva who has blessed him with so many boons


விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
VELAI YUDAI NEETRAR VENN KAADU MEEVIYA

The valuable sacred ashes are adorned all over the body who has seated in thiru venkaadu temple place


அலையுடைப் புனல்வைத்த அடிக ளல்லரே.
ALAI YUDAI PUNAL VAITHA ADIGAL ALLEREEA

And then waves are emanating Ganges are adorned on the head place who is prime god to whole universe
கயிலை மலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்ட முடி, தலை, உடல் ஆகியவற்றை நெரித்து, பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட, அருள் செய்த சங்கரர், மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர். அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித், திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் அவர் அல்லரோ?


08
162. ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
EAADU AVIL NARUMALR AYANUM MAALU MAAI

The flower petals are filled lotus flower place seated bharma and then thirumal


தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்
THEEDAYUM THERIN THAVAR THEERA GIR KILLAAR

Who are searched lord Siva’s head and then feet but failed in their mission


வேடம துடையவெண் காடு மேவிய
VEEDA MATHU YUDAIYA VENN KAADU MEEVIYA

So many appearance form appearing lord Siva in this world who has seated in thiru ven kaadu temple place


ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே.
AADALAI AMERNTHA EMM ADIGALA ALLAREEA

Where lord Siva liked to dance all the time
பூவிதழ்களை உடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் திருமுடியையும் , திருவடியையும் காண்பதற்கு அரியவராய் நெருப்பு மலையாய் விளங்கியவரும், பல பல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ?


09
163. போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள்
BOOTHIYAR PINDIYAR PORUTHAM ILLIGAL

Buthas and samanas are not appropriate persons to this world


நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
NEETHIYUMSOLLIYUM NINAYA GIR KILLAAR

They are known the real truth of lord Siva but they are not following it in the day to day life so they do not enjoyed good life in this world


வேதியர் பரவுவெண் காடு மேவிய
VEETHIYAN PARAYUM VENN KAADU MEEVIYAA

The veetha well learnt bharmins are daily conducted poojaas in thiru ven kaadu temple place


ஆதியை யடிதொழ அல்ல லில்லையே.
AATHIYAI ADI THOLA ALLAL ILLAIYEEA

That good old prime god sacred feet are prayed those disciples will not affected by sorrows in life
புத்தரும், சமணரும் பொருத்தம் இல்லாதவராய், இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும் , நலவாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்;த்தலும் செய்யாதவர் ஆயினர். வேத வித்துக்கள் பரவித் தொழும் திருவெண்காட்டில் வீற்றிருக்கும் ஆதிநாயகனாகிய பதி புண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற , திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்து அருளும் திருவெண்காட்டின் மேல், பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும்.
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

October 2, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: