OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PAING SEELI

ganesheit October 2, 2019

014 திருப்பைஞ்ஞீலி
THIRU PAING SEELI


பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

தலவரலாறு – காவிரி வடகரைத் தலங்கள் 63 -இல் இது 61- வது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. சுவாமி, திருநாவுக்கரசருக்குப் பொதி சோறு அளித்துப் பசியைப் போக்கிய தலம். வசிட்டருக்கு நடனக் காட்சி அருளிய தலம்.


143 ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
AAR EADAM PAADILAR ADIGAL KAADU ALLAAL

Lord Siva who has blessed form taught veethaas to irudies and then whose dwelling place is burial ground


ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
VOOR EADAM KURAI VILLAR YUDAIYAVER KOOVANAM

But who do not have any deficiency in life whose dress is loin cloths only


நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
NEER EADAI SADAI VEDAI YOORTHI NITHALLUM

In the hair place bearing River Ganges and then ascended form in bull and then travel everywhere and then daily


பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.
PAAR EADAM PANI SEIYUM PAIYIL PAINGEELIYEEA

Demon forces are covered form doing menial service under his feet and then dwelling in thiru paingeeli temple place
சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடப வாகனத்தில் ஏறியவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணி செய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.


01
144. மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
MARU VILLAARTHIREE PURAM EARIYA MAAL VARAI

The enmity developed three castle assuraas whose castles are destroyed by the ego filled meru hills are converted as bow and then shot an fire arrow and then burnt it down as ashes

பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
PARU VILLAA KUNITHA PANGGEELI MEEVALAAN

And that warrior form of lord Siva seated place is thiru paingeeli


உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத்
YURU VILLAAN PERUMIYAI YULLAM KOLLAATHA ATH

Lord Siva does not have any permanent form so that lord Sivas glory is not think over and not praised by those people do not have any gaana wealth


திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே.
THIRU VILLAAR AVER GALAI THERUTTA LAAGU MEEA

So we cannot instruct them and then allow them to live happy life is impossible on our part
பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு , மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். வடிவம் அற்றவராய் விளங்கும் அப்பெருமானுடைய பெருமையை உள்ளத்தில் கொண்டு ஏத்தாதவர்கள் திரு இல்லாதவர் ஆவர். அவர்களைத் தெளிவித்து நலம் கொளச் செய்தல் ஆகுமா?
02
பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு , மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். வடிவம் அற்றவராய் விளங்கும் அப்பெருமானுடைய பெருமையை உள்ளத்தில் கொண்டு ஏத்தாதவர்கள் திரு இல்லாதவர் ஆவர். அவர்களைத் தெளிவித்து நலம் கொளச் செய்தல் ஆகுமா?
The lovely honey bees are approached the honey filled flowers and then sucking the honey and then afterwards singing


பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
PANJURUM PAYINRU PAINGGELI VERUVA VANTHA THOOR

Punjuram form of musical notes in that sacred temple place lord Siva seated


வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
VEN JURAM THANIL YUMMAIVERUVA VANTHA THOOR

The heated forest place approached the mad elephant and then on seeing it frightened form of lords yumaadevi,


குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.
KUNJARAM PADA YURI POORTHA KOLGAIYEEA

lord Siva pealed its skin and then adorned it as upper dress
அழகிய வண்டு மலரை அடைந்து, தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற, திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்.


03
146. கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
KODALA GAL PURA VANIKOLLAI MULLAI MEEAL

Gaanthal flowers and then forest place bloomed jasmines and then on it seated


பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
PAADAL VANDISAI MURAL PAYIL PAINGGELI YAAR
Honey bees are raised the musical notes filled form of sound hearing place is thiru paigeeli


பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
PEEDALAR AAN ALAR PENNUM ALLA THOOR

Lord Siva is not ali or male or female


ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே.
AADALAI YGANTHA EMM ADIGAL ALLAREEA

And that form of lord Siva liked to dance all the time who is my leader
காந்தள் மலர்களிலும், முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசை போல் ஒலிக்க, திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர், ஆணுமல்லர், பெண்ணும் அல்லர், திருநடனம் புரிவதில் விருப்பம் உடைய சிவபெருமானார் எங்கள் தலைவர் ஆவார்.


04
147. விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
VEELI YILLAA NAGU THALAI VELANGI ELAM PERAI

The eyes are removed and then teeth possessed white bharma skull carried on hands and ten moving everywhere for begging food and then the young moon


சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
SULLI ELLAAR VARU PUNAL SOOLAL THAANGINAAN

and Ganges are carried on the hair place by lord Siva


பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
PALI YILLAAR PARAYUM PAIN JEELI PAADALAAN

The sinless disciples are praying and then singing form of lord Siva who has descended in the thiru pangeeli temple place


கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.
KELI YILLAAR KEENMAIYAIK KEDUKKA LAAGUMEEA

And that form of lord Siva who has blessed the poverty stricken disciples are to live wealth filled form
விழியிலாத பற்களோடு கூடிய பிரம கபாலத்தைக் கiயில் ஏந்தி, இளம்பிறையையும், கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான். பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வமில்லாத வறுமை நிலையைப் போக்குவான்.


05
148. விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
VEEDAI YUDAI KODI VALAN EEANTHI VENN MALU

The bull studded flag is carried on left hands and then white malu battle force


படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
PADAI YUDAI KADAYUL PAINGGELI MEEVALAAN

Carried on hand place and in this form lord Siva descended in thiru paingeeli temple place


துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
THUDI EADAI KALAI ALGUL LLAAL ORR BAAGAMAA

The small drum named yudukkai like narrow belly possessed place tied megalaa ornaments and then waist place sari adorned form lordes yumaadevi is kept left part of the body

சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.
SADAI DADAI PUNAL VAITHA SATHURAN ALLANEEA

— and then Ganges are adorned on the hair place that wise person is lord Siva

இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி, வெண்மழுப் படையை உடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான். உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்த, சீலையால் மறைத்;த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு;, சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான்.


06
149. தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற்
THOOYAVAN THOOYA VENN NEERU MEENI MEEAL


பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
PAAYAVAN PAAYA PAINGGELI KOILAA

Lord Siva has possessed pure body and then pure sacred ashes are adorned all over the body in paste form — And then in thiru paingeeli temple place willingly seated


மேயவன் வேய்புரை தோளி பாகமா
MEEAYAVAN VEEI PURAI THOLI BAAGAMAA

The bamboo like even shoulders are possessed lords yumaadevi is taken left part of the body

ஏயவன் எனைச்செயுந் தன்மை யென்கொலோ.
EEAYAVAN EANAI SEIYUM THANMAI YENN KOLOO

And that form of lord Siva who has converted me from this body soul into Siva qualities filled form and what type of highly regarded mannerism it is
இறைவன் தூய உடம்பினன். தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன். திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன். மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே.


07
150. தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
THOOTHINA THOOLMUDI YUDAIYA VANN THALAI

The bunch form of twenty shoulders are possessed ravana whose ten heads are smashed under kaiyilai hills place


பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
PATTHINAI NERITHA PAINGEELI MEEA VALLAAN

And that form of lord Siva descended in thiry pangeeli temple place


முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமாப்
MUTHINAI MURUVAL SEI THAAL VOOR BAGAMAA

The pearls like teeth possessed lords Yumaaddevi is annexed left part of lord Siva’s body


பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.
POTHINAN THIRUNTHU ADIPORUNTHI VAALMINEEA

And that form of protector lord Siva whose sacred feet place mingled form living in this world
கொத்தாக உள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்; விரும்பி வீற்றிருந்து அருளுகின்றான். முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக.


08
151. நீருடைப் போதுறை வானும் மாலுமாய்ச்
NEER YUDAI POOTHURAI VAANUM MAALUMAAI

In the water bodies place blooming lotus flower where dwelling bharma and thtrumal tried to search head and feet of lord Siva


சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
SEER YUDAI KALALA ADISENNI KAAN GILAR

but failed in their mission and then stood there in sorrow filled form

பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
PAAR YUDAI KADAYUL PAINGGLI MEEVIYA

This world is taken under the passion of lord Siva who has descended in the thiru paingeeli temple place


தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.
THAAR YUDAI KONRAIYAN THALAI VAR THANMAIYEEA

Who has adorned konrai flower garland and then leader form seated and then blessed all
நீர் நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் திருமுடியையும், கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க, இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றை மாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்து அருளுகின்றான்.


09
152. பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையுஞ்
PEELIYAR PERUMAIYUM PEDAGER NOON MAIYUM

The peacock feathers are carrying on the hands place by ego filled form appearing samanaas and then butha religious book named peadagam carried in the hand place those buthaas


சாலியா தவர்களைச் சாதி யாததோர்
SAALI YAA THAVER GALAI SAATHIYAA THA THOOR

Those people are not teach their religious ideas are in acceptable manners


கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
KOLI YAA VARU VARAI KOOTI EAAITHA PAINGEELI

The meru hills are converted as bow form and then shot an arrow to destroy the three castles and that form of lord Siva seated in thiru paingeeli temple place


ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.
YAAN KALALADI NINAINTHU VAAL MINEEA

And that form of lord Siva’s sacred feet are prayed form to live in this world
மயிற்பீலி கொண்டு பெருமை கொள்ளும் சமணரும், பாடக நூல் கொண்டு மேவும் சாக்கியரும் தாம் கூறியவற்றைச் சாதிக்கும் தன்மையில்லாதவர்கள். மேருவை வில்லாக்கி, அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்த பைஞ்ஞீலியில் மேவும் பரமன். அப்பெருமானுடைய மலரடிகளை வணங்கி வாழ்வீராக.
10
153. கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
KAN PUNAL VELAI VAYAL KAALI KARPAGAM

The water is naturally flowing in the paddy fields and that karpaga tree form of benefit giving place is seergaali


நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
NAN PUNAL ARU MARAIGAANA SAMBANTHAN

And with love form goodness is giving gaana sambanther who is excelled in veethaas


பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
PAN BINAR PARAYUM PAINGEELI PAADU VAAR

The good qualities are filled disciples are singing prayer songs before lord Siva and then those disciples who are singing it before lord Siva daily


உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.
YUNN BINA YULAGINIL VOONGI VAAL VAREEA

They will kept away the bad deed effects and then in this flowery land place highly regarded form live in this world forever
தண்ணீர் பாய்கின்ற வயல் வளமுடைய சீர்காழியில் கற்பகமரம் போன்று, அன்பினால் அனைத்து உயிர்கட்கும் நலம் சேர்க்கும் அருமறை வல்ல ஞானசம்பந்தன், நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத் தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஒத வல்லவர்கள், வினைப் பயன்களை நுகர்வதற்காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நீலகண்டேசுவரர், தேவியார் – விசாலாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

October 2, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: