OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru punavaayil

ganesheit October 1, 2019

011 திருப்புனவாயில்
Thiru punavaayil
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்—om thiru chitram balam

பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் இது 7வது திருத்தலம். திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றது. ;இத்தலத்தில் உள்ள நடராசர் சபை சிவஞானசபை என வழங்கப் படுகிறது. ஊரின் பக்கத்திலே கடல் உள்ளது.

110 மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
MINN EAYAL SENSADAI VENN PERAI YAN VERI NOOLINAN

The lighting form of red color hair possessed lord Siva who has also adorned the moon on the hair place and then broad bosom place three knotted thread adorned form of appearing


பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
PANNIYA NAAN MARAI PAADI YAADI PALA YOORGALPOI

And then frequently chanting veethaas are singing form and then so many temple places are praying


அன்னம்அன் னந்நடை யாளொ டும் அமரும்மிடம்
ANNAM ANNA NADAIYAALODUM AMARUM EDAM

Where lord Siva seated with lords yumaadevi who is walking soft form of Anna birds like


புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.
PUNNAI NANN MAAMALAR PON YUTHIRKKUM PUNA VAAYILLEA

Those thiru punavaayil temple place where punnai trees are golden form pollens are shedding place it is
மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும்;, வெண்மையான பிறைச் சந்திரனும், விரிந்த மார்பினில் முப்புரி நூலும் கொண்டு, அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியபடி பல திருத்தலங்கட்கும் சென்று, அன்னம் போன்ற நடையை உடைய உமாதேவியொடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது, புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் ஆகும்.


01
111. விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை யேறிப்போய்
VONDAVER THAM PURAM MOONRU EARITHU VEDAI YEERIP POOI

The opponent three castles are destroyed by fire and then converted it in to ashes and the bull back ascended moving everywhere and then —the bees rare seated hair place those hair possessed lords yumaadevi and then happily mingled with her that twin form of appearing place it is


வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடங்
VANDU AMARUM KULAL MANGAIYADUM MAGILNTHAAN EDAM

கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
KANDALLUM JAALALUM NINRU PERUM KADAL KAANAL VAAIP

Lord Siva descended place is thiru puna vayil where thaalai trees and gaalal trees are bloomed form appearing in the sea shore place of


புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.
PUNDARIGAM MALAR POIGAI SOOLNTHA PUNA VAAYILLEA

And the lotus flowers are bloomed in the natural ponds are filled place is thiiru punavaayil
பகையரசர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடப வாகனத்தில் ஏறி, வண்டமர்ந்துள்ள கூந்தலை உடைய உமாதேவியோடு மகிழ்ந்து, இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாவது , தாழையும் ,புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்துள்ள திருப்புன வாயில் ஆகும்.


02
112. விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
VEDAI YUDAI VEL KODI YEENTHINAANUM VERAL PAAR EDAM

The bull studded winning force filled flag carried on the hand place and then demon forces are covered form of


புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற்
PUDAI PADA AADIYA VEEDATHAANUM PUNA VAYILIL

Dancing form of appearance possessed lord Siva who has descended in the thiru punavaayil temple place


தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்
THODAI NAVIL KONRAIYAM THAARINAANUM SUDAR VEN MALU

And then long konrai flower garland adorned form of and then glittering form maul battle force is carried on his right hand


படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.
PADAI VALAN EENTHIYA PAAL NEI AADUM PARAMAN ANREEA
And that form of lord Siva who is daily taking bath with milk ghee and with other cow products happily and then blesses all those prime lord Siva descended place it is
இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும், வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான சிவபெருமான், திருப்புன வாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, கொன்றை மாலைஅணிந்து ஒளியுடைய மழுப்படையை வலக்கையிலே ஏந்தி, பலகாலம் நெய்யாலும் திருமுழுக்காட்டப் பட்டு, அடியவர்கட்கு அருள் புரியும் பரம்பொருள் ஆவான்.


03
113. சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
SANGA VENN THOODU ANI KAATHINAANUM SADAI THAALAVEEA

Lord Siva who is descended in thiru punavaayil temple place who has adorned conch ornaments in the ear place and the lowly hanging long hair possessed form


அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
ANGAI YIL ANGU ALAL EEANTHI NAANUM ALAGAAGA VEEA

And then fire pot carried on the hand place and then lovely form of


பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற்
PONGU ARAVAM MANI MAARBINAANUM PUNA VAYILIL

The snake which is angry form dancing all over body place of lord Siva and that temple place is thiru punavaayil


பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.
PAIN KAN VELL EEATRU ANNAL AAGI NINRA PARA MEETI YEEA

And that form of lord Siva ascended on the back of the bull who prime lord to this world
திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண் சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன். தாழ்ந்த நீண்ட சடையுடையவன். உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன். சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய கண்களை உடைய இடபவாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான்.


04
114. கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
KALI PADUTHANN KADAL NANGAM YUNDA KARAI KANDANNUM

The cool milk sea place appeared wild poison is consumed by lord Siva so that who has got dark color throat


புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
PULI ATAL PAAM PARAI SUTRINAANUM PUNA VAAYILIL

And then adorned in the waist place tiger skin as lower dress and then in the waist place snake is tied as belt form and those appearance form lord Siva descended in the thiru punavaayil temple place


ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
OLI THARU THANN PUNALOODU EARUKKUM MTHA MATHAMUM

The wave sound raising form of cool Ganges and the earukkam flower yoomathai flower and then lean form third day moon adorned on the hair place


மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.
MELI THARU NEN PERAI SOODI NINRA VEDAI YOOR THIYEEA

And then lord Siva seated on the back of the bull and then blesses all
ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கறுத்த கண்டத்தை உடையவன் சிவபெருமான். புலித்தோலை ஆடையாகவும், பாம்பை அரையில் கச்சாகவும் கட்டியவன். திருப்புனவாயில் என்னும் தலத்தில் ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு, எருக்கு, ஊமத்தம் ஆகிய மலர்களையம், மெலிந்த வெண்ணிறப் பிறைச் சந்திரனையும் சடையில் சூடி, இடப வாகனத்தில் வீற்றிருந்து அருளுகின்றான்.


05
115. வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
VAAR YURU MENN MULAI MANGAI PAADA NADA MAADIP POOI

The bra adorned and then sift form of tender breast adorned lords yumaa devi is singing accordingly lord Siva is dancing and then


காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர்
KAAR YURU KONRAI VENN THINGAL LAANUM KANAL VAAYATHOOR

in the summer time blooming konrai flowers are adorned form and then white moon is also adorned on the hair place


போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற்
POOR YURU VENN ALU EEANTHINAANUM PUNAL VAAYINIL

The fire form of glittering malu battle force carried on hand place and then seated in thiru punavaayil temple place

சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.
SEER YURU SELVA MALGAV ERUNITHASIVA LOOGANEEA

And that form of lord Siva who will blessed his disciples with wealth and then put his grace on them
கச்சணிந்த மெல்லிய ;முலைகளையுடைய உமாதேவி பாட, அதற்கேற்ப நடனம் ஆடி, கார்காலத்தில் மலர்கின்ற கொன்றை மலரையும், வெண்ணிறத் திங்களையும் சடையிலே சூடி, நெருப்புப் போன்று ஒளிர்கின்ற , போர் செய்யப் பயன்படும் வெண்மழுப் படையைக் கையில் ஏந்தித், திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் தன் அடியவர்கட்குச் சீருறு செல்வம் அருள்வான்.


06
116. பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத்
PERUM KADAL NANGU AMUTHU YUNDU YUGANTHU PERUM KAATU EADAI

While grinding the milk sea at first emanated wild poison which is consumed by lord Siva happily and then in the big burial ground


திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்
THIRUN THU EALA MEN MULAI THEEVI PAADA NADA MAADIP POOI

The young breasts are possessed lordess yumaadevi is singing accordingly lord Siva is all the time dancing


பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில்
PORUNTHU ALAR THAMPURAM MOONRUM EAITHU PUNA VAAYILIL

The opponent three castles are destroyed by fire arrow and that form of lord Siva descended in the thiru punavaayil temple place


இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே.
ERUNTHU AVAN THANN KALAL EEATHU VAAR KATKU EADER ILLAIYEEA

Whose feet are all the time praying disciples will not affect any form of sorrow
பெரிய பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன் சிவ பெருமான். சுடுகாட்டில் இளமென் முலையுடைய உமாதேவி பாட நடனம் ஆடியவன். பகையரசர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை.


07
117. மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி யொல்கிட
MANAMIGUVEELAN AVV VAAL ARAKKAN VALI VOL GIDA

The ego filled form of sphere carrying and then vel force carrying form of that asura named ravana whose mighty power is destroyed form


வனமிகு மால்வரை யாலடர்த் தானிட மன்னிய
VANA MIGU MAAL VARAI YAAL ADARTHAN EADA MANIYA

And handsome and glory filled form of lord Siva who has stamped ravana under kaiyilai hills whose dwelling place it is


இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய
EANA MIGU THOL PUGAL PAADAL AADAL EALIL MALGIYA

The good old glory is in variety of ways propagating those songs are singing and then dancing are ever going form of place is thiru punavaayil


புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.
PUNA MIGU KONRAIYATH THEANRAL AARNTHA PUNA VAYILLEA

Where the konrai flower fragrance is carried form of blowing the breeze in this place
செருக்குடைய மலம் உடையவனும், வேல், வாள் போன்ற படைகளை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு, அழகும் பெருமையுமுடைய கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பழம் புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும் ஆடல்களும் நிறைந்து அழகுற விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்து வரும் தென்றல் காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும்.


08
118. திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்
THIRU VALAR THAAMARAI MEEVINAANUM THEGAL PAALKADAL

The lovely lotus place seated bharma and then sacred milk sea place dwelling thirumal who are unable to see lord Siva in visual form


கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்
KARU NIRA VANNANUM KAAN BARIYA KADAYUL EDAM

sacred milk sea place dwelling thirumal who are unable to see lord Siva in visual form

நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய
NARAL SURI SANGODUM EEPIYUM YUNTHI NALAM MALGIYA

In thiru punavaayil sea place where the white waves are lashing on the sea shore place which has brought

பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.
PORU KADAL VEN THERAI VANTHU ERIYUM PUNA VAAYILLEEAA

the sound raising conches and ippes are filled those wealth filled place it is

அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கு அரியவன் சிவபெருமான். அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும் , சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும்.


09
119. போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
BOTHI ENAPEYAR AAYINAARUM PORIYIL SAMAN

Buthaas and samanaas who are swerved form saying statements are


சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
SAATHI YURAIPPANA KONDU AYARNTHU THALAR VEITHAN MIN

You do not got tired and then do not lost your mental balance


போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
POTHAVIL THANN POLIL MALGUM ANTHAN PUNA VAAYILLEEA

The flowers are bloomed form of cool place is thiru punavaayil


வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.
VEETHANAI NAAL THIRUM EEATHUVAAR MEEAL VENAI VEEDUMEEA

Where lord Siva seated in veetha meaning filled form those place lord Sivas feet are praying disciples whose bad deeds will be eliminated
புத்தர்களும், சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வவழிந்து, தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த் திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளான சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும்


10
120. பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
PON THODI YAAL YUMAI PANGAN MEEYUM PUNA VAAYILAI

Lords yumaavi is taken left part of the body by lord Siva whose dwelling place is thiru punavaayil


கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
KATRAVAR THAAM THOLUTHU EETHA NIRA KADAL KAALIYAAN

Where lord Siva is prayed and then praise as per veethaas and agamaass in that seer gaali place descended gana sambanther


நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
NAL TAMIL GAANA SAMBANTHAN SONNA TAMIL NANMAIYAAL

Who has gave the pure Tamil form of poems to this world


அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.
ATRAMIL PAADAL PATHU EETHA VALLAAR ARUL SEERVAREEA

And then those disciples who are repeatedly singing before lord Siva and that disciples will get lord Siva’s grace
பொன் வளையல் அணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, திருப்புனவாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு, கடல் வளம் மிக்க சீர்காழியில் அவதரித்த நற்றமிழ் ஞானசம்பந்தன் அருளிய, குற்றம் இல்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள் இறையருளைப் பெறுவர்.
11


the sound raising conches and ippes are filled those wealth filled place it is

அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கு அரியவன் சிவபெருமான். அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும் , சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும்.

09
119. போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
BOTHI ENAPEYAR AAYINAARUM PORIYIL SAMAN

Buthaas and samanaas who are swerved form saying statements are


சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
SAATHI YURAIPPANA KONDU AYARNTHU THALAR VEITHAN MIN

You do not got tired and then do not lost your mental balance


போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
POTHAVIL THANN POLIL MALGUM ANTHAN PUNA VAAYILLEEA

The flowers are bloomed form of cool place is thiru punavaayil


வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.
VEETHANAI NAAL THIRUM EEATHUVAAR MEEAL VENAI VEEDUMEEA

Where lord Siva seated in veetha meaning filled form those place lord Sivas feet are praying disciples whose bad deeds will be eliminated
புத்தர்களும், சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வவழிந்து, தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த் திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளான சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும்.
10

120. பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
PON THODI YAAL YUMAI PANGAN MEEYUM PUNA VAAYILAI

Lords yumaavi is taken left part of the body by lord Siva whose dwelling place is thiru punavaayil


கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
KATRAVAR THAAM THOLUTHU EETHA NIRA KADAL KAALIYAAN

Where lord Siva is prayed and then praise as per veethaas and agamaass in that seer gaali place descended gana sambanther


நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
NAL TAMIL GAANA SAMBANTHAN SONNA TAMIL NANMAIYAAL

Who has gave the pure Tamil form of poems to this world


அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.
ATRAMIL PAADAL PATHU EETHA VALLAAR ARUL SEERVAREEA

And then those disciples who are repeatedly singing before lord Siva and that disciples will get lord Siva’s grace
பொன் வளையல் அணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, திருப்புனவாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு, கடல் வளம் மிக்க சீர்காழியில் அவதரித்த நற்றமிழ் ஞானசம்பந்தன் அருளிய, குற்றம் இல்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள் இறையருளைப் பெறுவர். .
11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – புனவாயிலீசுவரர்,தேவியார் – கருணையீசுவரியம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

October 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: