OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KOOTAARU

ganesheit October 1, 2019

012 திருக்கோட்டாறு
THIRU KOOTAARU


பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OMTHIRUCHITRAMBALAM

தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 – இல் இது 53- வது திருத்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. கொட்டாரம் என வழங்கப்படுகிறது. வெள்ளையானை பூசித்த தலம்.


121 வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
VEETIYAN VINNAVER EEATHA NINRAAN VELANGUM MARAI

Lord Siva who is excelled in veethaas and those veethaas are all the time praising him and in that form existing lord Siva — who is praised those highly regarded matter form existing in this world


ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
VOOTHIYA VONN PORULAAGI NINRAAN VOLIYAAR KILI

கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
KOTHIYA THANN POLIL SOOLNTHA ALAGAAR THIRU KOOTAATRUL

And that form of lord Siva whose is seated in the plantations are covered place kottaaru


ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே.
AATHIYAI YEEA NINTHATHU EEATA VALLAARKU ALLAL ELLAIYEEA

And that good old form of lord Siva and those disciples who are thinking in meditation place and that disciples will not affect problems in life
வேதத்தில் வல்லவராய்த் தேவர்களால் ஏத்தப் பெறுபவராய் விளங்குகின்ற சிவ பெருமான், வேதங்களால் போற்றப்படும் உயிர்ந்த பொருள் ஆகியவர். அப்பெருமான் பொழில் நிறைந்த அழகிய திருக் கோட்டாற்றில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தியானம் செய்து வணங்குப வர்களுக்கு இம்மையில் அல்லல் ஏதும் இல்லை.

01
122. ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள்
EEALA MALAR KULLAL MANGAI NALLAAL EMAVAAN MAGAL

The fragrance filled hair possessed lords yumaaadevi who is hill lady


பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங்
PAAL AMARUM THIRUMEENI EANGAL PARAMEETIYUM

Who is kept left part of his body and that prime lord Siva


கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
KOOLA MALAR POLIL SOOLNTHU EALLILAAR THIRU KOT TAATRUL

The colorful flowers are bloomed those plantations are covered place is thiru kottaaru


ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே.
AALA NELAL KEEL EARUNTHU ARAM SONNA ALAGANEEA

Where under papal tree shadow seated and the preached the inner meanings of veethas to sanagathi saints in thacinaa moorthi teacher form
மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான, இமவான் மகளாகிய உமா தேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம் பொருளான சிவபெருமான், வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமர நிழலில் தட்சணா மூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான்
02


123. இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை யோர்தொழ
EALAI MALGU SOOLAM ONRU EEANTHI NAANUM EMAIYOOR THOLA

Where lord Siva carried leaves form of soolam battle force on hand and then upper world deevaas are praying form


மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங்
MALAI MALGU MANGAI YOOR PANGA NAAYA EMM MANI GANDANUM

And then lords yumadevi is given left half part of his body and those ruby diamond form of throat possessed lord Siva


குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
KULAI MALGU THANN POLIL SOOLNTHA ALAGAAR THIRU KOTRAA THUL

The bunch form of fruits are filled those plantations are covered place is thiru kottaaru


அலைமல்கு வார்சடை யேற்றுகந் தஅழ கனன்றே.
ALAI MALGU VAAR SADAI YEETRU YUGANTHA ALAGAN ANREEA

Ganges are lovely hair place adorned lord Siva in lovely form descended in this place
சிவபெருமான் இலை போன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன் விண்ணோர்களும் தொழுது வணங்க, மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன். கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன், காய்களும் கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான். .

03
124. ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும்
YUOON AMARUM YUDALUL EARUNTHA AVV YUMAI PANGANUM

Lord Siva is existing sole within soul form and then lords yumadevi is taken left part of his body


வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியுந்
VAANN AMARUM MATHI SENNI VAITHA MARAIYOOTHI YUM

And then in the space place crawling moon is adorned on the hair place and then veethaas are blessed form given to this world and then bull is accepted as his traveling medium


தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
THEEN AMARUM MALAR SOLAI SOOLNTHA THIRU KOOTAATRUL

Honey bees are filled plantations are covered place is thiru kottaaru


தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.
THAAN AMARUM VEDAI YAANUM EANGAL THALAIVAN ANREEA

Where lord Siva seated as my leader form and then blesses all
Where lord Siva seated on the bull place and then blesses all
இறைவன் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன். உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டவன். வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன். வேதங்களை அருளிச் செய்தவன். இடபத்தை வாகனமாக உடையவன். அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான்.
04


125. வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ்
VAM BALARUM MALAR KOTHAI BAAGAM MAGIL MAINTHANUM

The fragrance filled flowers are adorned on the hair place by lords yumaadevi who has been kept left part of his body and got happy for that act and that mighty powerful lord Siva


செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங்
SEM PAVALAM THIRU MEEANI VEEN NEER ANI SELVANUM

The red color coral form of body color possessed lord Siva who has adorned sacred ashes all over the body that wealth filled form of lord Siva


கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
KOMBU AMARUM MALAR VANDU KENDUM THIRU KOTTATRUL

In the tree branches place flower buds are penetrated form of honey bees are sucking honey and that thiru kottaaru place lord Siva dwelling


நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.
NAMBAN EANNA PANIVAARKU ARUL SEI EANGAL NAATHANEEA

Where those disciples who are surrender under lord Sivas feet and then pray him and that disciples will get lord Siva’s grace
சிவபெருமான் நறுமணம் கமழும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன். செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன். கொம்புகள் உள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, தன்னைப் பணிந்து வணங்குபவர்களுக்கு அருள் புரிபவன். ;.

05
126. பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமா
PANTHU AMARUM VERAL MANGAI NALLAL ORU BAGAMAA

Lord Siva has taken lords yumadevi in his left part of his body and that yumadeevi is possessed ball like finger tips


வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகுங்
VENTHU AMARUM PODI POOSA VALLAVEGIRTHAN MIGUM

And then lord Siva who has adorned burnt down ashes as paste form all over the body


கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
KONTHUAMARUM MALAR SOLAI SOOLNTHA THIRU KOTAATRUL

The bunch form of blooming flower gardens are filled place is thiru kotaaru


அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
ANTHANANAI NENAINTHU EEATHA VALLARKU ILLAI ALLALEEA

And that bharamin form of lord Siva whose feet is praying disciples will de relived from daily problems
சிவபெருமான் பந்து போன்ற திரட்சியான விரல்களை உடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன். கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, அனைத்து உயிர்களிடத்தும் அருளுடைய அவனை நினைத்து வழிபடுகின்றவர்களுக்கு அல்லல் சிறிதும் இல்லை.
06
127. துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
THUNDAMARUM PERAI SOODI NEEDU SUDAR VANNANUM

The cut form of moon is adorned on the hair place and then fire glow form of body color possessed lord Siva


வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனுந்
VANDU AMARUM KULAL MANGAI NALLAAL ORU PANGANUM

The honey bees are sucking honey from hair place adorned those lords yumadevi is given half part of body


தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
THENN THIRAI NEER VAYALSOOLTHA ALAGAAR THIRU KOTTAATRUL

Sea wealth and water bodies are filled paddy fields are covered place is kottaaru


அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே.
ANDAMUM EANN THESAI YAAGI NINRA ALAGAN ANNREEA

Temple place descended lord Siva whose is pervaded all the universe place and then spread over eight directions that lovely form of lord Siva dwelling here
துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சூடியவன். நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன். பூவிலுள்ள தேவை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூற்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். கடலும், நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும், எட்டுத் திசைகளுமாக நிறை அழகன் அல்லவோ.
07
128. இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் கைக்கிறை
EARAYU AMARUM NERAM PETRYU YUDAIYA ELANGAIKU EARAI

The dark night form of body color possessed ravana who is srilanga king


கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
KARAYU AMARA KAYILAI EADUTHAAN VALI SETRAVAN

who has tried to pluck the kailai hills whose mighty power is destroyed by lord Siva


குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
KURAYU AMARUM MALAR SOOAI SOOLNTHA THIRU KOTTATRUL

The kuraa flowers are filled place is thiru kootaaru and in that temple place


அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே.
ARAVAM AMARUMSADAIYAAN ADIYAARKU ARUL SEIYU MEEA

Where lord Siva adorned in the hair place snakes and that form lord Siva blesses his disciples
இரவு போன்ற கருமை நிறமுடைய இலங்கை மன்னனான இராவணன், வஞ்சனையால் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, அவன் வலிமையை அழித்த சிவபெருமான், குராமலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில் பாம்பணிந்து விளங்க, தன் அடியவர்கட்கு அருள் புரிகின்றான்.


08
129. ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகை
VOONGIYA NAARANAN NAAN MUGANUM YUNARRA VAGAI

The ego filled thirumal and bharama are not known form appearing in this world


நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற்
NEENGIYA THEE YURU VAAGI NINRA NEMALAN NILAL

Who is naturally given up relationship feelings and then lord Siva appeared before them on fire glow form and that pure form of lord Siva


கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
KOONGU AMARUMPOLIL SOOLNTH EALILAAR THIRU KOTAATRUL

The shadow giving kongu tree flower bloomed place and lovely thiru kottaaru temple place


ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே.
AANGUAMARUM PERUMAAN AMARARKU AMARAN ANREEA

Seated lord Siva who is blessing his disciples is leader to all other deevaas
செருக்குடைய திருமாலும் பிரமனும் உணராவண்ணம் அளந்தறிய முடியாத தீ உருவாகி நின்ற சிவபெருமான். இயல்பாகவே பாசங்சகளின்று நீங்கியவன். நிழல் தரும் கோங்கு மலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான்.தேவர்களுக்கு எல்லாம் தேவனாவான்
09

130. கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
KADUK KODUTHATH THUVAR AADAIYAAR KAATCHI ELLAATHA THOOR

The saffron color dipped cloths are adorned buthaas


தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள்
THADUKU EADUKKI SAMANEEA THIREEVAR KATKUTH THAN ARUL

and small mate carried form wandering samanaas those persons are not approached lord Siva so they are not got grace from lord Siva


கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள்
KODUKKA GILLAAK KULAGAN AMARUM THIRU KOOTAATH RUL

And that lovely form of lord Siva seated in kottaaru temple place and then blesses all


இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.
EADUKKAN ENRI THOLUVAAR AMARARKU ERAI AAVAREEA

Those disciples who are simple form praying that disciples will ultimately attain the position of deevaas leader
சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி உடைய அணிந்த புத்தர்களுக்கும், சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால், அருள் புரிய மாட்டான் அழகன் சிவபெருமான். திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியாக வழிபடுகின்றவர்களும் , தேவர்கள் தலைவராவர்


10
131. கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள்
KODI YUAR MAAL VEDAI YOORTHI YINNAAN THIRU KOOTAATRUL

The bull flag carrier and then travelling on the back of the bull and that form of lord Seated in thiru kotaaru temple place


அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக்
ADI KALAL AARKA NINRA AADA VALLA ARUL LAALANAI

Whose leg place adorned anklets are raising sound and that way lord Siva dancing and that form lord Siva blesses all


கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற்
KADI KAMALUM POLIL KAALIYUL GAANASAMBANTHAN SOL

The fragrance filled plantations are covered place is seergali where descended gaanasambanther who has sung the above poems


படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.
PADI EVAI PAADI NINRU AADA VALLAARKU EALLAI PAAVAMEEA

Those disciples who are sung before lord Siva repeatedly and that disciples sins are eliminated
இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டு, திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்கத் திருநடனம் புரியும் அருளாளன். நறுமணம் கமழும் சோலைகளை உடைய சீர்காழியில் அவதரரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்கள் பாவம் யாவும் நீங்கும்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஐராபதேசுவரர்,
தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

October 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: