THIRUVILIMILALAI
009 திருவீழிமிழலை THIRUVILIMILALAI
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
காவிரித் தென்கரைத் தலங்கள் 127- இல் இது 61-வது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. இங்கு திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் படிக்காசு பெற்று, அடியார்களுக்கு அமுது அளித்தனர்.
89 கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா
KEELVIYAR NAAL THOORUM VOOTHUM NAL VEETHATHER KEEDU YILLAA
The hearing knowledge is possessing form and then daily good veethaas are chanting and then flawless form of and then melted mind possessed form of
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்
VEELVI SEI ANTHANER VEETHIYAR VEELI MILAIYAAR
Developing yaaga fire in the thiru veeli melalai temple place where lord Siva permanently dwelling and then blesses all
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
VAALIYAR THOTRAMUM KEEDU VAIPAARUM YUIR KATKU ELLAAM
That form of lord Siva as per their past deeds giving birth and death and his mannerism
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.
AALIYAR THAM ADI POTRIYEN PAARKATKU ANIYAREEA
Is not known by others and those disciples who are praying under lord Siva’s feet he is so intimate to them
கேள்வி ஞானம் உடையவர்களும், நாள்தோறும் நல்ல வேதத்தை ஓதுபவர்களும், கெடுதலில்லாத யாகத்தைச் செய்கின்ற, எவ்வுயிர்களிடத்தும் இரக்கம் உடையவர்களுமான அந்தணர்கள் போற்றுகின்ற வேதநாயகர் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவார். அவர் ஆருயிர்கட்கெல்லாம் வினைப் பயனுக்;கேற்பப் பிறப்பும், இறப்பும் செய்வார். கடலாழம் கண்டறிய வரப்படாதது போல அவருடைய தன்மை பிறரால் அறிதற்கு அரியது. தம்முடைய திருவடிகளைப் போற்றி வணங்கும் அன்பர்கட்டு நெருக்கமானவர்.
01
90. கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
KALLIN NALL PAAVAIYOOR BAGATHER KATHALITHU EEATIYA
The rock lady lords yumaadevi is given left part of lord Siva’s body and then the bharmins are liking form
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்
MEL EANATHAAR PAKKAL MEEVI NAAR VEELI MILAYAIYAAR
Who are sift mannerism possessed persons are with love form daily conducting prayer in thiruveeli melalai temple place
நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்
NAL EANNATHAAR SEITHA VEELVI SEGUTHUEALU GAAYITRIN
Lord Siva is not given due respect while conducting yaaga by thakkan so in those yagga fire the sun god whose teeth are blasted
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.
PAL ANATHUM THAGERHAAR ADIYAAR PAAVA NAASAREEA
And then those disciples who are conducting pujas whose sins are removed by him
இறைவர் மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். பக்தியோடு துதிக்கும் மென்மையான இனத்தாராகிய அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலையில் விளங்குபவர். சிவனை நினையாது செய்த தக்கனது யாகத்தை அழித்தவர். அந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களைத் தகர்த்தவர். தம்மைத் தொழும் அடியாவர்களின் பாவத்தைப் போக்குபவர்.
02
91. நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
NANGINAI YUNDU EARUL GANDER PANDU ANTHAGANAI SETRA
Lord Siva who has consumed poison so that his throat is turned as darkened ruby diamond form
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார்
VENG SINA MOOVELAI SOOLATHAARR VEELI MILAIYAR
The much angry filled aura named athakasvaran is killed and then possessed three soolam battle fore on his hands and then seated in thruveeli melalai temple place
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
ANJANA KANN YUMAI PANGINAR GANGAIYAM AADIYA
The darkened form of paste adorned on the eye place and that yumaadevi is given left part of his body and then Ganges are
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.
MANJANA SEN SADAI YAAR EANA VAL VENAI MAAYUMEEA
Giving sacred bath to lord Siva so that the hair is turned in to red color form and that form of lord Siva is dilly praying those disciples the wild bad deeds are perished
இறைவர் நஞ்சுண்டதால் இருள் போன்ற கறுத்த கண்டத்தையுடையவர். கடுங்கோபம் கொண்டு அந்தகாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற மூவிலைச் சூலைப் படையை உடையவர். திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர். மைதீட்டிய கண்களை யுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். கங்கையால் அபிடேகம் செய்யப்பட்ட சிவந்த சடைமுடியையுடையவர். அத்தகைய சிவபெருமானைத் தொழும் அடியவர்களின் கொடுவினை யாவும் அழியும்.
3
92. கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
KALAI EALANGUM MALU KATTANGAM KANDIGAI KUNDALAM
Lord Siva possessed stage maul battle force yogathandam pole ruthrachcha garland and ear ornament named kundallam all are adorned form — seated in thiru veeli mallei temple place which is covered by well decorated ruby diamonds those mansions are filled place it is
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்
VELAI EALANGUM MANI MAADATHER VEELI MELAIYAAR
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
LAI EALANGUM PERAI THAAL VADAM SOOLA THAMARUGAM
In head place moon adorned form and then in the neck place bone garland and then in the hand place slam battle fore and yudukkai small drum and then— ever waves are emanated Ganges are allowed to see in the head place and then carried bull emblem studded flag carried on hand place and then moving every where
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.
ALAI EALANGUM PUNAL EEATRAVER KUM ADI YAARKUMEEA
மான், மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கக் குண்டலம் முதலியன கொண்டு, விலை மதிப்;புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களை உடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்தருளுகின்ற, தலையிலே; பிறைச் சந்திரன் திகழக் கழுத்திலே எலும்புமாலை விளங்க, கையில் சூலம், உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று, இடபக் கொடி கொண்டு விளங்குபவர்.
04
93. பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
PEAIYUM SENG SADAIYAAR VEDAIYAAR PECHAI NACHIYEEA
Lord Siva adorned curved moon on the head place and then possessed that red color hair
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்
VERI YURU NAAT PALI THEERNTHU YULAL VEELI MILAI YAAR
And then while collecting begging food he will wander everywhere and in this form lord Siva seated thiruveeli melalai temple place
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்
MURAI MURAI YAAL EASAI PAADU VAAR AADI MUNN THONDERGAL
Those disciples who are singing the poems in musical notes are filled form and then dancing accordingly
இறையுறை வாஞ்சியம் அல்லதெப் போதுமென் உள்ளமே.
EARAI YURAI VAANGIYAM ALLATHU EAPPOTHU MEEA
And in those mong lotus place lord Siva seated and then all the time lord Siva is thinking my mind and nothing else
திருவீழிமிழலையில் விற்றிருக்கும் இறைவர் பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடைமுடி உடையவர். இடபத்தை வாகனமாக உடையவர். பிச்சையெடுத்தலை விரும்பும் நாள்களில் பலியேற்றுத் திரிவார். தொண்டர்கள் பண்முறைப்படி இசைபாடி அதற்கேற்ப ஆட முற்பட, அவர்களின் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர். அவரையல்லாது உள்ளம் வேறெதையும் நினையாது.
05
94. வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்
VASAI YARU MAATHAVAM KANDUVARI SELAI VEEDANAAI
Arjuna who has did bid penance and then on seeing it lord Siva carried the hunter form and then put his grace on him
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்
VISAYANUKKU ANRU ARUL SEITHAVAR VEELI MELAIYAAR
And in this form lord Siva seated in thiruveeli melalai temple place
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்லவ டமிட்டுத்
ESAI VARA VTIYAL KEET PITHU KALLA VADA MITTU
Those disciples who are singing lord Siva in musical notes are filled form and then those persons are heard form
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.
THESAI THOLUTHU AADIYUM PAADUVAR SENTHAIYUL SEERVAREEA
And then drums are beaten form and then lord Siva seated direction prayed and then dancing in those disciples mind lord Siva seated
திருவீழிமிழiயில் வீற்றிருக்கும் இறைவர் அருச்சுனன் செய்த குற்றமற்ற பெருந்தவம் கண்டு இரங்கி, அழகிய வில்லேந்திய வேட்டுவ வடிவில் அவனுக்கு அருள் புரிந்தவர். தம்மை இசைத் தமிழால் பாடி, தம் திருப்புகழைப் போற்றி உரைத்துப் பிறரைக் கேட்கும்படி செய்து, முரசொலிக்கத் திசை நோக்கித் தொழுது ஆடிப்பாடுவார் சிந்தனையில் வீற்றிருப்பார்.
06
95. சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல் மூவிருதொன்னூலர்
SEEDER VINOOR KATKU THEEVAR NALMOOVIRU THOLNOOLAR
Lord Siva is far away to deevaass and then the four veethaas are learnt and six angaas are practicing bharmins and then three types of yagaa fire developing bharmines he is so intimate to them and then giving them mukthi and in form lord Siva seated in thiru veli milalai temple place
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்
VEEDER MUTH THEEYAR NAAL VEETHATHER VEELI MILAI YAAR
காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ
KADU ARANGA YUMAI KAANA ANDATHU EMAIYOOR THOLA
The burial ground is taken as dancing place which is seen by lords parvathi and then got happy from his dance and then upper world deevaas are praying form who
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.
NAADAGAM AADIYAI EEAATHA VALLAAR VENAI NAASAMEEA
Are dwelling in all the universe place seeing form dancing and those feet are prayed and praised by those disciples whose bad deeds are removed
திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் விண்ணோர்கட்குத் தூரமானவர். மேன்மை வாய்ந்த வேதாங்க நூல்கள் ஆறினையும் கற்று வல்லவர்களாய், மூவகை அழலை ஓம்பி, நால் வேதங்களையும் பயின்ற அந்தணர்கட்கு அணியராகி வீட்டின்பம் நல்குபவர். சுடுகாட்டை அரங்காகக் கொண்டு உமாதேவியார் கண்டு மகிழ, எல்லா அண்டங்களிலும் உள்ள தேவர்கள் தொழத் திருநடனம் செய்வாராகிய, சிவபெருமானை ஏத்தி வழிபடுபவர்களின் வினையாவும் அழியும்.
07
96. எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் வீழ்தர
EADUTHAVAN MAA MALAI KEEL RAAVANANAN VEEL THARA
The big kaiyilai hills are lifted by ravana who is trapped under hills and then stamped him
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்
VEDUTHU ARULSEI THESAI KEETAVER VEELI MILAIYAAR
And then afterwards who has realized his sin and then sang sama veethaa with musical notes are filled form and that form of lord Siva seated in thiru veeli melalai temple place and then blesses all
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
PADUTHUU VENG KAALANAI PAAL VALI PAADU SEI PAALARKU
The wild death god is kicked form and then nearby standing margandaya is given happiness form
கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே.
KODUTHANER IN BAM KODUPPAR THOLA KURAIYU ILLAIYEEA
And then those disciples who are praying under his feet is will be given all the boons in life without any deficiency form
பெரிய கயிலை மலையை எடுத்த இராவணனை அம்மலையின் கீழேயே கிடந்து அலறுமாறு அடர்த்து, பின் அவன் சாமகானம் பாடிய இசைகேட்டு அருள் புரிந்தார் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவர் கொடிய காலனை உதைத்துத் தம்அருகில் நின்று வழிபாடு செய்த பாலனான மார்க்கண்டேயயனுக்குப் பேரின்பம் கொடுத்தார். அச்சிவபெருமான் தம்மைத் தொழுது போற்றும் அடியவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லாமல் எல்லா நலன்களையும் கொடுப்பார்.
08
97. திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட
THIKK AMAR NAAN MUGAN MAAL ANDAM MANDALAM THEEDIDA
The four directions are seeing face possessed bharma and then thirumal all the upper world and then lower worlds are searched feet and head
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
MIKK AMAR THEE THIRALAAYAVER VEELI MILAI YAAR
But failed in their mission and then after realized their sin lord and in that form seated lord Siva appeared before them in fire pole form
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
CHOKKA MA THAADIYUM PAADIYUM PAAR EADAM SOOL THARUM
Lord Siva who has danced one type of dance named sokku and then singing form of demon forces are covered form
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.
NAKKER THAM NAAMAM NAMACHIVAAYA EANBAAR NALLAVAREEA
In naked form lord Siva appearing whose sacred name is namasivaaya in this way saints are calling him
நான்கு திக்குகளிலும் முகங் கொண்டு மேவும் பிரமனும் திருமாலும் வானத்திலும், பூமிக்கு அடியிலும் தேடிய ஞான்று, மிகுந்து எழும் PதீPப்பிழம்பு ஆகியவர் திருவீழிமிழலை நாதர். அப்பெருமான் “சொக்கு” எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும், பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரராய்க் காட்சி நல்கியவர். அவர் திருநாமம் நமச்சிவாய என்பர், சிவஞானியர்.
09
98. துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
THURU ARAIYAAR THUVAR AADAIYAR THUPPU VONRU ILLAA
The appropriate saffron color dress adorned buthaas and then naked form of dirty body possessed saamanaas
வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்
VETRU ARAIYAAR ARIYAA NERI VEELI MILALAI YAAR
They are not known way appearing in thiruveeli melalai temple place
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
CHOTRU ARIYAAP PORUL SOTHIKKAP PAAL NINRA JOOTHIYAAN
Wards and meanings are surpassed form of grace light form appearing lord Siva
மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.
MATRU ARIYAA ADIYAARGAL THAM SENTHAIYUL MANNUMEEA
Those disciples who are pray lord Siva only and then in their mind settled down permanently
பொருந்திய காவியுடை அணிந்த புத்தர்களும், ஆடையணியாத சுத்தமில்லாத சமணரும் அறியாத நெறியில் விளங்குபவர். திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர், சொல்லையும் பொருளையும் கடந்து அருள் ஒளியாக விளங்கிய இறைவர், தம்மைத் தவிர வேறொன்றையும் அறியாத அடியார்கள் சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார்.
10
99. வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய
VEETHIYAR KAI THOLU VEELI MELALAI VERUMBIYA
The Brahmins are prayed lord Siva in folded hands form that place is thiruveeli milalai where lord Siva permanently seated
ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனாய்ந்
AATHIYAI VAAL POLIL KAALIYUL GAANA SAMBANTHAN AAINTHU
The flower plantations are covered place is seergali where descended gaana sambanther who has enquired form
தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
VOOTHIYA VON TAMIL PATHU EVAI YUTRU YURAI SEI BAVER
Those disciples who have chanted above ten poems before lord Siva and then pray him
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.
MATHIYAL PANGAN MALAR ADI SEEARAYUM VALLAREEA
Lord Siva has taken lords yumaadevi in left part of his body and then attain lord Siva’s flowery feet and then entered in to mukthi
அந்தணர்கள் கைகூப்பித் தொழுது போற்றும் திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் இறைவனை, சோலைகள் விளங்கும் சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன் ஆராய்ந்து, ஓதிய ஒண்;தமிழ்ப் பாக்கள் பத்தினையும் கூறிப் போற்றி வழிபடுபவர்கள், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின்ன மலர் போன்ற திருவடிகளைச் சேர்ந்து முத்திப் பேற்றினைப் பெறுவர்.
11
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAM BALAM