OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU RAMASWARAM

ganesheit September 30, 2019

010 திருஇராமேச்சுரம்
THIRU RAMASWARAM


பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAM BALAM

பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற 14 தலங்களுள் இது 8 ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. இது பன்னிரண்டு சோதிலிங்கத் தலங்களுள் ஒன்று

100 அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை
ALAI VALAR THANN MATHEEYODU AYALEEA ADAKKIYUMAI

The Ganges River and then cool moon is controlled on the hair place and then lords yumaadevi is


முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
MULAI VALAR BAAGAM MUYANGA VALLA MUTHAL VAN MUNI

Mingled on the breast place by lord Siva who is prime god to this world


இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்
EALAI VALAR THAALAIGALVIMMU KAANAL ERAAMEESWARAM

The long petals are filled thalami flowers are bloomed place sea side place Ramesh warm


தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.
THALAI VALAR KOLA NAN MAALAIYAN THAAN IRUNTHU AATCHIYEEA

Where leaves are filled garland adorned form lord Siva ruling this place

கங்கையையும், குளிர்ந்த சந்திரனையும் சடைமுடியிலே அடக்கி, உமாதேவியின் முலை வளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையை உடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான்
01

101. தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
THEEVIYAI VAVIYA THANN ELANGAI THASA MUGAN

Lord rama’s wife named Seetha devi is cornered by ravana whose ten heads are amputated


பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
POO VIYALUM MUDI PONRU VITHA POI ARA

Those flowers adorned ravana is killed and then those sins are removed form


ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
EEAA VIYALUM SELAI ANNAL SEITHA ERAAMEES WARM

And that arrow fighter rama who has prayed in rameshwarm temple and then conducted poojaas


மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.
MEEVIYA SIN THAI YINAAR GAL THAM MEEAL VENAI VEEDU MEEA

Where those disciples who are daily without interruption thinking lord Siva and that disciples bad deeds will be eliminated
சீதா பிராட்டியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான தசமாமுகனின் பூச்சூடிய முடியை உடைய தலைகளை அறுத்துக் கொன்ற பழி நீங்குமாறு, அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அணண்லாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினை அழியும்.
02

102. மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால்
MAAN ANNA NOKI YAITHEEGI THANNAI ORU MAAYAIYAAL

The stage like frightened eyes are possessed is cornered my mesmerism way


கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன்
KAANATHIL VAV VIYA KAAR ARAKKAN YUIR SETRAVAN

In the forest place and that dark color Ravana’s life is destroyed


ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்
EENA MILLAA PUGAL ANNAL SEITHA ERAA MESWARM

And that flawless form of big glory filled Rama who has prayed in ramashwarm temple


ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.
GAANAMUM NAN PORULAAGI NINRA THORU NAN MAIYEEA

Where this land living beings are giving goodness those Siva grana and then its effect form of glory filled mufti happiness giving place it is
மான் போன்ற மருண்ட பார்வையை உடைய சீதாபிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணன் உயிரை நீக்கிய, குற்றமில்லாத பெரும் புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரமானது மன்னுயிர்கட்கு நன்மை தரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையம் தரும்.

03
103. உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
YURAI YUNARAATHAVAN KAAMA MENNUM MURU VEETKAIYAAL

The much lust filled form ravana who has cornered other man’s wife which is false one that ethical rule is not followed ravava


வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
VARAI PORU THOL EARA SETRA VILLI AGILNTHUEEATHIYA

Whose mighty powerful shoulders are amputated those act is happily praised form by all


விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத்
VERAI MARUYUM KADALVOOHA MALGUM ERAA MEE CHARATHU

The fish stinking sea side place is rameswarm sea shore where lord Siva seated in the temple place— and then tied the snake in the waist place and then lord Siva dances in this temple place


தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.
ARAI ARA VAADA NIRU ADAL PEENUM AMMAAN ALLANEEA

மிகுந்த காமவேட்கையால் பிறன் மனைவியைக் கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை போன்ற தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய, புலவு நாறும் கடற்கரையை உடைய இராமேச்சுவரத்தில் வீற்றிருக்கும் இறைவன் , அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும் தலைவனாகிய சிவபெருமான் அல்லனோ.


04
104. ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
YOOR YDAI VEN THALAI KAIYIL EEANHIP PALA YOOR THOORUM

With hand nails are used form plucked the head of bharma and with that skull carried on hand place wandering every hamlets


வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்
VEER YUDAI MANGAIYAR EYAM PEIYA VERAL AARNTHATHOOR

Those young lovely ladies are giving begging food is accepted happily


ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்
EER YUDAI EANTHAI MEEYA ERAMECHURAM

The brave fighting force filled bull emblem studded flag is carried on hand place by lord Siva whose is my father seated in rameswarm temple and then blesses all


பேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.
PEEAR YUDAIYAAN PEYAR EEATHUM MAANTHAR PENI PEERUMEEA

And that heavenly abode giving lord Siva’s names are chanting those disciple’s repeated form of birth and death is removed and then ever permanent form settle down in mukthi place if lord Siva’s feet
கைகளால் பறித்;த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், வீரமுடைய இடபம் பொறிக்கப் பட்டட வெற்றிக் கொடியை உடைய எந்தையாகிய சிவபெருமான் இராமேச்சுரத்தில் வீற்றிருந்தருளுகின்றான். வீடு பேறை நல்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.
05

105. அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்
ANAI ALAI SOOL KADAL ANRU ADAIYHU VALI SEITHAVAN

The waves are emanated sea place dam is constructed and then went to srilanka and that special act is done by Rama


பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
PANAI EALANGUM MUDI PATHU ERUTHA PALI POOKIYA

Whose has palm tree fruit like ten heads are amputated and then sin has to be removed form


இணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுரந்
EANAI EALI EANRUM IRUNTHA KOIL RAAMECHURAM

Rama prayed and then conducted poojaas those unique place is this rameswarm temple


துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.
THUNAI EALI THOO MALAR PAATHA THUYAR NEENGUMEEA

Where pure flowers are sprayed form of praying disciples whose sorrows will be removed by lord Siva in this temple place
அலைகளை உடைய கடலில் அன்று அணை கட்டிக் கடப்பதற்கு வழிசெய்த இராமபிரான், இராவணின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவரும் இல்லாத அப்பெருமானின் தூயமலர் போன்ற திருவடிக் ;கமலங்களைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம் நீங்கும்.


06
106. சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
SANI BUTHAN GAAYITU VELI THINGAL PALA THEEYANA

The planets are sani buthan sooriyan velli chanthiran angaaragan guru ragu keethu from them bad effect will be affected in that way said by astrologer


முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
MUNIVATHY SENRU YUGANTHAANAI VENRU AVV VENAI MOODIYA

And then got angry by Ravana and then all are put in to prison place and that ravana is destroyed and then won over ravana by lord Rama and that sin is to be removed form


இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ENI ARUL NALGIDU ENNRU ANNAL SEITHA RAMAACHURAM

And that grace is requested by rama from lord Siva and that prayer conducted place is rameswarm

பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.
PANNI MATHI SOODI NINRU AADA VALLA PARAMEETIYEEA

Where lord Siva descended in cool moon adorned form and then dancing all the time that prime form of lord Siva dwelling here
சனி, புதன், சூரியன், வெள்ளி, சந்திரன் மற்றும் குரு, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களால் தீமை வரும் என்று சோதிடன் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டு, அவர்களைச் சிறையில் வைத்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழிதீர, அருளை வேண்டி அண்ணல் இராமபிரான் வழிபட்ட தலம் இராமேச்சுரம். அங்கு எழுந்தருளியிருப்பவர் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடித் திரு நடனம் செய்யும் முழுமுதற் பொருளான சிவபெருமானே ஆவார்.
07

107. பெருவரை யன்றெடுத் தேந்தினான் தன்பெயர் சாய்கெட
PORU VARAIANRU EADUTHU EEANHINAAN THAN PEYAR SAAI KEDA

The big kaiyilai hills are tried to lift by ravine whose glory id fallen down form lord Siva stamped him under the hills


அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
ARU VARAIYAAL ADARTHU ANRU NALGI AYAN MAAL LODUM

And then realized his fault that ravana sang samaveetha to appease lord Siva and then instantly lord Siva blessed him long life and boons


இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுரத்
ERUVARUM NAADI NIRU EEATHU KOIL RAMESWARATHU

And then haram and thirumal willingly praying lord Siva in rameswaram temple place


தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.
ORU VANUMEEA PALAVAAGI NINRA THORU VANNAMEEA

And that unique single form of lord Siva who has been different ways appearing in this world
கயிலை மலையை எடுத்த இராவணனுடைய புகழ் சாயுமாறு அவனை அம்மலையால் அடர்த்தும், தன் தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடிய போது அருளுதலும் செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும் நாடி வந்து ஏத்துகின்ற போது விளங்கியும், திரு இராமேச்சுரத்தில் மேவும் ஒருவனே பல வண்ணமாகிக் காட்சி நல்குகின்ற பாங்கினை உடையதாகும்.
08

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
09
108. சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார்
SAAKIYAR VANN SAMAN KAIYAR MEIYIL THADU MAATRATHAAR

Buthaas and samanaas whose wards are falsehood filled one and then giving shaky form of knowledge in this world


வாக்கிய லும்முரை பற்றுவிட் டுமதி யொண்மையால்
VAAKIYALUM MURAI PATRU VITTU MATHI VON MAIYAAL

Those wards are not to be followed in day to day life


ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
EEAKIYALUM SELAI ANNAL SEITHA EERAAMACHURAM

The powerful arrow shooter is lord Rama who has prayed and then conducted poojaas under lord Siva’s feet so as to alleviate the sin from killing ravana


ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.
AAKIYA SELVANAI EEATHI VAAL ENN ARUL LAAGAVEEA

And that rich form of lord Siva where all the disciples in this world are goanna form praying and then get boons from lord Siva
புத்தர்களும் சமணர்களும் கூறுகின்ற உண்மையல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப் பற்றி நிற்காது, ஒளி மிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை ஞானத்தால் ஏத்தி வாழுங்கள்.


10
109. பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்தனை
PAGALAVAN MEETUEAYANGAAMAI KAATHA PATHI YOON THANAI

Ravana who has previously got boons from lord Siva and with that capacity ravana ordered the sun god not to move srilanga in straight equatorial form


இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
EAGAL ALIVITHAVAN EEATHU KOIL ERAAMEESWARM

And that powerful form of ravana is destroyed by rama and then prayed in rameswarm temple place to remove his sin and that powerful place is rameswaram


புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
PUGALIYUL GAANASAMBANTHAN SONNA TAMIL PUNTHIYAAL

Ganasambather who has sang the above ten poems and those disciples who are with mind and body and soul oneness form sing— the above ten poems and that disciples will not be affected by sorrows in this world


அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
AGAL EDAM EANGUM NINRU EETHA VALLAARKU ILLAI ALLALEEA

தான் பெற்ற வரத்தின் வலிமையால் சூரியன் தன் நகருக்கு மேலே செல்லக் கூடாது என்று ஆணையிட்ட இலங்கைக் கோனாகிய இராவணனைப், போரில் அழித்த இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தினை, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ் பதிகத்தால் மனம் ஒன்றி இப்பூமியில் எங்கும் ஒதவல்லார்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM O

September 30, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: