THIRU KAADAYOOR VEERATTAM
008 திருக்கடவூர்வீரட்டம்
THIRU KAADAYOOR VEERATTAM
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAM BALAM
காவிரித் தென்கரைத் திருத்தலங்கள் 127 இல் இது47-ஆம் திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. மார்க்கண்டேயர் வழிபட்ட 108 திருத்தலங்களுள் இது 108 – வது திருத்தலம். மார்க்கண்டேயருக்காகக் காலனைச் சம்ஹரித்த திருத்தலம்.
It is Cauvery southern said temple and having in this region 127 temples it is 47th temple
78 சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
SADAI YUDAIYAANUM NEI AADAL LAANUM SARI KOVANA
The long hair possessed lord Siva and then from the cow place got five type of product with it daily lord Siva taking sacred bath and then eye past is adorned form of lords parvathi whose husband is lord Siva
உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
YUDAI YUDAIYAANUM MAI AARNTHA VONN KANN YUMAI KEEAL VANUM
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
KADAI YUDAI NAN NEDU MAADAM VOONGUM KADAYOOR THANUL
The long mansions are filled place is thiru kadayoor veeratam where lord Siva
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.
VEDAI YUDAI ANNALLUM VEERAT TAANATH ARAN ALLANEEA
Ascended on the back of bull who is my lord Siva is protecting thiru veeratam place
சடைமுடியை உடையவனும், பசுவில் இருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும், சரிந்த கோவண ஆடையுடையவனும், மைதீட்டிய ஒளி பொருந்திய கண்ணையுடைய உமாதேவியின் கணவனும், வாயில்களை உடைய நெடிதோங்கிய நல்ல ;மாடங்களை உடைய திருக்கடவூரில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ? 01
79. எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்
EARI THARU VAAR SADAIYAANUM VELLAI EARUTH EERIYUM
The fire like long hair possessed lord Siva, and the white bull is accepted as his travelling medium
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே
PURITHARU MAAMALAR KONRAI MAALAI PUNAINTHU EEATHAVEEA
The best konrai flower garland is adorned in the hair place and then margandaya saint prayed under his feet
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
KARITHARU KAALANAI SAADI NAANUM KADAYOOR THAN YUL
That margandaya life is tried to corner by the dark color death god ema and that ema is kicked and then killed by lord Siva and — that form of glory filled lord Siva seated in thiru veerattaanam temple place seated form blesses all who prime god to this world
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.
VERI THARU THOL PUGAL VEERAT TAANATHU ARAN ALLANEEA
நெருப்பு போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும், வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும், சிறந்த கொன்றை மலர்களான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழி;பட, அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகி, திரு வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ?
02
80. நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண்
NAATHANUM NALL EARUL AADI NAANUM NALIR POTHIN KANN
To all worlds lord Siva is leader and then ultimate destruction of this world where lord Siva is dancing form and then lord Siva seated in the lotus flower form of mind place
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங்
PAATHANUM PAAI PULI THOOLINAANUM PASU VEERIYUM
the leap forward those tiger skin adorned on the waist place and then seated on the back of bull to travel every where
காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே
KAATHALAR THANN KADAYOORINAANUM KALANTHU EEATHAVEEA
The intimate disciples are dwelling cool place is thiru veerattam where lord Siva dwelling in active form
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.
VEETHAM ATHU VOOTHIYUM VEERAT TAANATHU ARAN ALLANEEA
And all are praying form veethaas are blessed and then gave this world who has seated in thiru veeratam temple place
நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண்
NAATHANUM NALL EARUL AADI NAANUM NALIR POTHIN KANN
To all worlds lord Siva is leader and then ultimate destruction of this world where lord Siva is dancing form and then lord Siva seated in the lotus flower form of mind place
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங்
PAATHANUM PAAI PULI THOOLINAANUM PASU VEERIYUM
the leap forward those tiger skin adorned on the waist place and then seated on the back of bull to travel every where
காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே
KAATHALAR THANN KADAYOORINAANUM KALANTHU EEATHAVEEA
The intimate disciples are dwelling cool place is thiru veerattam where lord Siva dwelling in active form
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.
VEETHAM ATHU VOOTHIYUM VEERAT TAANATHU ARAN ALLANEEA
And all are praying form veethaas are blessed and then gave this world who has seated in thiru veeratam temple place
எல்லா உலகங்களுக்கும் தலைவனும், மகா சங்கார காலத்தில் நடனம் புரிபவனும்,அடியார்களின் இதயத் தாமரையில ;வீற்றிருப்பவனும், புலித்தோலாடை உடையவனும், இடபவாகனனும். அன்பர்கள் வசிக்கும் குளிர்;ச்;சி பொருந்திய திருக்கடவூரில் விளங்குபவனுமாகிய இறைவன்;, யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் செய்த வீரட்டானத்து அரன் அல்லனோ?
03
81. மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்
MALU AMAR SELVANUM MAASILAATHA PALA BOOTHA MUNN
The malu battle force carried on hands that resourceful person lord Siva and then flawless form of so many demon forces are beating drums
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக்
MULA VOLI YAAL KULAL MONTHAI KOTTAM MUTHU KAATU EADAI
And yawl musical instrument and flute and monthai all are beaten form and then in the burial ground place
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள்
KALAL VALAR KAAL KUNGITHU AADINAANUM KADAYOOR THAN NUL
Lard Siva’s sacred anklets are raising sound form who has raise his leg in curved form and then dancing and in the thiru kadayoor temple place — all the time festival sounds are hearing form who is veerataam place seated lord Siva in prime god form
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.
VELA VOLI MALGIYA VEERAT TAANATHU ARAN ALLANEEA
மழுப்படையேந்திய செல்வனும், குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க, யாழும், குழலும் இசைக்க, மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட, சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் சிவபெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ?
04
82. சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்
SUDER MANI SUNNA VENNEEYRAANUM SUYAL VAAYATHOOR
The glittering ruby diamond form ruthraatsa seeds are adorned on the neck place and then and then fragrance filled sacred ashes are adorned all over the body– and then swaying form of dancing snake is tied on the waist place as belt form
படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங்
PADAM ANI NAAGAM ARAIKU ASAITHA PARAMEETIYUM
கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள்
KADA MANI MAAYURI THOOLINAANUM KADAYOOR THANULL
The mad elephant skin is pealed and then adorned as upper dress and then in kadayoor place
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.
VEEDA MANI GANDANNUM VEERATAANATHU ARAN ALLANEEA
Poison is adorned on the neck place ruby diamond form and that lord Siva seated in thiru veeratam temple place and then blesses all
சுடர்விடும் மணி போன்ற உருத்திராக்கம் அணிந்துள்ளவனும், வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைக் கச்சாக அணிந்துள்ள கடவுளும், மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் , வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ?
05
83. பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
PANNBU OLI NAAN MARAI PAADI YAADI PALA YOORGAL THOORUM
The four veethaas are singing in musical notes are filled form and then dancing
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய
YUNN PALI KONDU YULVAANUM VAANIN OLI MALGIYA
And then going so many places and then accepting in the skull place begging food
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
KANN POLI NETRI VENN THINGAL AANUM KADAYOOR THAN YULL
The fore head eye possessed lord Siva and space place glittering moon is adorned on the hair place
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.
VENN PODI POOSIYUM VERATTAANATHU ARAN ALLANEEA
Who has adorned sacred ashes all over the body that form of lord Siva is dwelling in the thru kadayoor veeratam temple place as brave fighter form
நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும், நடனம் ஆடுபவனும், பல ஊர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை உடையவனும், வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையில் அணிந்துள்ளவனும், திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூர் வீரட்டானத்து அரன் அல்லனோ?
06
84. செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
SEV ALAL AAI NELAN AAGI NINRA SIVA MOORTHIYUM
Lord Siva is red color fire firm and then land form existing Siva deity form and then — three types of fire form existing in this world and then four veetha form and then those who are gaana form of fire pit creating saints lord Siva is guide form existing in this world
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்
MUVV ALAL NAAN MARAI EAINTHU MAAYA MUNI KEAL VANUM
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
VEVV VALAL VAAI GATHA NAAGA MAARTHAAN KADAYOOR THAN NUL
To catch form of poison filled mouth filled snake which is spiting the fire like poison from the mouth and those angry snakes are adorned all over the body
வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.
EEV ALAL EEANTHU KAI VEERATAANATHU ARAN ALLANEEA
And the well heated form of fire pot is carried on the hand place and that form of lord Siva is descended in the thiru kadayoor veeratam temple place as prime god protection form
செந்நிற நெருப்பாகவும், நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும், மூவகை நெருப்பாகத் திகழ்பவனும், நான்கு வேதங்களாய் விளங்குபவனும், ஞான வேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும், கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகு பாம்பை அணிந்தவனும், வெப்பமுடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?
07
85. அடியிரண் டோ ருடம்ADI பைஞ்ஞான் கிருபது தோள்தச
ADI EARUNDU ORR YUDAMBU AIN JAAN EARU BATHU THOL THASA
In the single body possessed two legs and twenty shoulders and— ten heads who is sir langa king whose mighty wild power is destroyed and prime form of lord Siva in deity form existing in this world
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதல் மூர்த்தியுங்
MUDI YUDAI VEENTHANNAI MOOR GALITHA MUTHAL MOORTHI YUM
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
KADI KAMALUM POLIL SOOLU MANTHAN KADAYOOR THANNUL
The fragrance filled plantations are covered place is thiru kadayoor veerattam
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.
VEDI THALAI EEANTHIYUM VEERATAA NATHU ARAN ALLANEEA
The highly stinking bharama skull is carried on the hand place and that form of lord Siva is descended in the thiru kadayoor veeratam temple place in prime god form
ஓர் உடம்பில் இரண்டு கல்களும், இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராணவணின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும், முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?
8
86. வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
VARAI KUDAIYAA MALAI THAANGINAANUM VALAR POTHIN KANN
The goverthana hill is lifted as umberla form so that cows and cow rearing people are saved from the big rain by thirumal
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே
PURAI KADINTHU VOONGIYA NAAN MUGATHAANPURINTHU EEATHAVEEA
And then flawless form lotus place dwelling bharma who are realized that lord Siva alone is praime god and then surrendered under his feet and then conducted poojaas
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
KARAI KADAL SOOLVAIYAM KAAKIN RAANUM KADAYOOR THAN NUL
The sea covered land is protected by lord Siva who has descended in the thiru kadavoor temple place
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.
VERAI KAMAL POOM POLIL VEERATAANATHU ARAN ALLANEEA
Where fragrance filled flower plantations are covered place is lord Siva seated in god form
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெரு மழையிலிருந்து ஆக்களையும், ஆயர்களையும் காத்த திருமாலும், குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற் பொருள் என உணர்ந்து துதிக்க, பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்ற இறைவன், திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளை உடைய வீரட்டானத்தில் வீற்றிpருந்தருளும் அரன் அல்லனோ?
09
87. தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர்
THEERARUM MAASU KOL MEENIYAARUM THELIYAATHA THOOR
Buthaas and dirty body possessed samanaass who do not have clear wards are talking about lord and then– lord Siva good matter form appearing in this world
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்
AAR ARUM SOL PORUL AAGI NINRA EMATHU AATHI YAAN
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
KAAR EALAM KONRAI VENN THINGA LAANUM KADAYOOR THANUL
Lord Siva who has adorned konrai flowers which are blooming in the summer time and then white moon adorned on the hair place
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.
VEERAMUM SEEAR KALAL VEERAT TAANATHU ARAN ALLANEEA
And then brave anklets are adorned on the leg place and that form of lord Siva is descended in thiru veeratam temple place in prime form
புத்தர்களும், அழுக்கு உடலையுடைய சமணர்களும் தெளிந்து அறிதற்கரிய சொல்லும் பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான் ,கார்காலத்தில் மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும், வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடியுள்ளவனும், வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ?
10
88. வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை
VEENTHA VENN NEER ANI VEERAT TAANATHU YURAI VENTHANAI
As per rule the sacred ashes are prepared and then adorned on the whole body place and then descended in thiru kadavoor veeratam place as god form
அந்தணர் தங்கட வூருளா னையணி காழியான்
ANTHANAR THAMKADAYOORYULLANAI ANI KAALIYAAN
Where bharmins are conducting poojaas in this place
சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம்
SANTHAM EALLAM ADI SAATHA VALLA MARAI GAANA SAM
The lovely place is seergaalli descended veetha learnt gaana sambanthar
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.
BANTHAN SEN THAMIL PAADI YAADAK KEDUM PAAVAMEEA
Whose sag the above pure Tamil poems and those disciples who are in devotion filled form singing and then dancing and that disciples sins will be eliminated
விதிப்படி அகை;கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய், அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை, அழகிய சீர்காழியில் அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியடன் சாத்திப் ;பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும்.
11
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAM BALAM