OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAVADU THURAI

ganesheit September 25, 2019

004 திருவாவடுதுறை THIRU VAAVADU THURAI
நாலடிமேல் வைப்பு
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பதிக வரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 -இல் இது 36 வது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. அம்பிகை பசு வடிவத்தில் ஈசனை வழிபட்ட தலம். திருஞான சம்பந்தர் தமது தந்தையார் வேள்வி புரிவதற்காக ஈசனிடம் பொற்கிழி பெற்றது

34 இடரினுந் தளரினும் எனதுறுநோய்
EADARINUM THALRINUM EANATHU YURU NOOI

In my life so many impediments are appeared so that sorrows are emanated and my young age gone away and then old age sets in and then because of bad deeds deceases are followed me but all the time I will pray under your feet


தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
THODARINUM YUNN KALAL THOLUTHU EALUVEEAN


தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
THODARINUM YUNN KALAL THOLUTHU EALUVEEAN

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
KADAL THANIL AMUTHODU KALANTHA NANGAI

In the sacred milk sea place which is grinded to get nectar but wild poison emanated


மிடறினில் அடக்கிய வேதியனே
MIDARINIL ADAKKIYAA VEETHIYANEEA

Lord Siva you have preserved it in to your throat place so that you have guarded devas from destruction and that veethaa chanting bharmin form you are appearing in this world


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
EATHUVOO EMAI AALUMAARU EEVATHU ONRU EMAKKU EILAI YEEAL

Lord Siva if you will not give me the necessary goods to conduct day to day life


அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU EANN ARUL AAVADU THURAI ARANEEA

Is it sacred grace lovelier one on your part my dear lord Siva you are dwelling in thiru vaavaduthurai temple place

வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சியுற்றாலும், தீவினைப் பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன் திருவடிகளைத் தொழுது வணங்குவேன். திருப்பாற் கடலில் அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்த போது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர்களைக் காத்த வேத நாயகனே. திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமோ?

01
35. வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
VAALINUM SAANINUM VARUNTHINUM POI

In this life because of good deeds I am enjoying the life happily and then because of old age sets in so that if I am going to die and then because of old bad deeds got pain and then put in to sorrow position and then


வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
VEELINUM YUNN KALAL VEDUVEEN ALLEEAN

From good ethical way of life is deviated form them and then fallen in to filthy way of life and all the time I will firmly hold your feet and then left out from it


தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
THAAL EALAM THADAM PUNAL THAYANGU SENI

Lord Siva you have adorned Ganges on your head place


போழிள மதிவைத்த புண்ணியனே
POL EALA MATHI VAITHA PUNNIYANEEA

Besides the young moon adorned on your hair place and that punniyaa form you are appearing in this world


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
ETHUVOO EMAI AALUMAARU EEVATHU VONRU EAMAKKU ELLAI YEEAL

Lord Siva you have taken me as your slave which is known by the whole world but you are not giving anything to conduct day to day life


அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
ATHU VOO YUNATHU EANN ARUL AAVADU THURAI ARANEEA

Is it good grace on your part and lord Siva you have seated in thiru vaavadurai temple place calmly without replying to my request
இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத்திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறியினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப் போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். அத்தகைய என்னை ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?

02
36. நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
NANAVINUM KANAVINUM NAMBAA YUNNAI

In the conscious time and then in the dreaming time you are reliable person to all


மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
MANAVINUM VALI PADAL MARAVEEAN AMMAAN

With oneness and full devotion form I will not forget to pray you


புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
PUNAL VERI NARUM KONRAI POTHU ANINTHA

The Ganges water and the good fragrance filled konrai flower garland adorned on the hair place


கனலெரி யனல்புல்கு கையவனே
KANAL EARI ANAL PULGU KAI AVANEEA

And then fire pot carried on hand place and then dancing all the time


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
EATHU VOO EMAI AALUMAARU EEVATHU ONRU EMAKKU ELLAI EANIL

Is it right way to employ me without giving any money to me


அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU ENN ARUL AAVADU THURAI YANEEA

Is it your grace my dear lord Siva you are dwelling in thiru vaa vadu thurai temple place in mum form

அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்கும் உரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன். கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றையையும் அணிந்து, எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தியுள்ளவனே, இத்தகைய நீ என்னை ஆட்கொள்ளுமாறு இதுவோ? திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?
03
37. தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
THUMMALODU ARUM THUYAR THONRIDINUM

With sneezing form big sorrow is appearing and then giving pain to me


அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
AM MALAR ADI ALLAAL ARATRAATHU ENN NAKKU

Even at that time my tongue all the time chanting your sacred names only


கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
KAI MALGU VARI SELAI KANAI ONRINAAL

On the hand place meru hills are converted as bow and then fire arrow is used


மும்மதிள் எரியெழ முனிந்தவனே
MUM MATHILEARI EALA MUNITHA VANEEA

And then shot it on three opponents castles and then destroyed by fire and in that way you have got angry towards those assuraass


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
ETTHUVOO EMAI AALUMAARU EEVATHU ONRU EMAKKU ELLAI YEEAL

Lord Siva you have taken me as slave but does give anything to conduct day to day life


அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
ATHUVOO NINATHU IN ARUL AAVADU THURAI YAANEEA

Is it appropriate act on your part and my dear lord Siva you have descended in thiru vaa vadu thuri temple place without giving any regard from your part
தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும் பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியம்படி செய்தவனே. திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானே. இத்தகைய தன்மையடைய நீ என்னை ஆடகொள்ளும் முறை இதுவோ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

04
38. கையது வீழினுங் கழிவுறினுஞ்
KAIYATHU VEELINUM KALI YURINUM

My wealth are lost and then got sorrow and then others low graded form talked and then I am waste material form put in to dust bin and in those period I will praise your pure feet only nothing else I will do


செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
SEI KALALADI YALLAAL SINTHAI SEIYEEAN

கொய்யணி நறுமலர் குலாயசென்னி
KOI ANI NARU MALAR KULAAYA SENNI

To pluck and then adorned in the hair place


மையணி மிடறுடை மறையவனே
MAI ANIMIDARUDAI MARAIYAVANEEA

The dark color paste like throat possessed lord Siva you are available in this world veethaa form to all


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
ETHUVOO EMAI AALUMAARU EEVATHU ONRU EMAKKU ELLAI EANIL

And then in that poverty stricken form I am appearing in this world but you have taken me as your slave but giving nothing to live in this world


அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU INN ARUL AAVADU THURAIYAANEEA

Is it your grace and lord Siva you are dwelling in thiru avaduthurai temple place

கைப் பொருள்கள் யாவும் இழந்து வருந்தும்; காலத்திலும,; பிறரால் இழிவாகக்க கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல், வேறெதனiயும் நான் சிந்தை செய்யேன். கொய்து அணியப் பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியினையும், மை போன்ற கருநிறக் கண்டத்தையம் உடைய பிறையவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானே, இத்தன்மையுடைய நீ என்னை ஆட்கொள்ளும் முறை இதுவோ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமோ?

05
39. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
VEN THUYAR THONRI YOOR VERUYU YURINUM

I am got afraid of wild sorrow


எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
EAN THAAIYUNN ADIYALLAAL EEAATHAATHU EAN NAA

My dear lord Siva my tongue only praise your glory only


ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
EAIN THALAI ARAYU KONDU ARAIKKU ASAITHA

The five headed snake is tied in the waist place as belt


சந்தவெண் பொடியணி சங்கரனே
SANTHA VENN PODI ANI SANGARANEEA

The fragrance filled sacred asheses are adorned all over the body in sagara name


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
EATHU VOOEAMAI AALUMAARU EEVATHU EAMAKKU ELLI EANIL

Lord Siva if you do not give me sufficient amount to so as to conduct day to day life


அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU INN ARUL AAVADU THURAIYAANEEA

Is it your grace please tell me and then lord Siva you are dwelling in thiruvaavadu thurai temple

கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்துள்ள சங்கரனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே,நீ எம்மை ஆட் கொள்ளும் வகை இதுவோ? தேவையான பொருளை எனக்கு தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமோ?

06
40. வெப்பொடு விரவியோர் வினைவரினும்
VEPPODU VERAVI VOOR VENAI VARINUM

Because of bad deeds sorrows are attacked me that wild fire form


அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
APPAA YUN ADI ALLAAL ARATRAATHU ENN NAA

Lord Siva you are my father so I will praise with my tongue your glory only nothing else


ஒப்புடை யொருவனை உருவழிய
VOPPUDAI ORUVANAI YURU ALIYA

Monmatha who is only comparable to himself only and that handsome form who is destroyed by fore head eye fire by lord Siva


அப்படி அழலெழ விழித்தவனே
APPADI ALAL EALLA VELITHAVANEEA

In that way lord Siva you have got angry and then opened your fore head eye


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
ETHUVOO EMAI AALUMAARU EEVATHU ONRU EMAKKU ELLAI EANIL

So as to rule me as slave but you do not give wealth to me


அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU ENN ARUL AAVADU THURAIYAANEEA

Is it your sacred act tell me my dear lord Siva you are dwelling in thiru vaa vaduthurai temple place

கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல்; என் நா வேறொன்றையும் நவிலாது. அழகில் தனக்கு ஒப்புமையாகாத தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை அவனுடைய வடிவம் அழியுமாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே. இப்படிப்பட்ட நீ என்னை ஆட்கொள்ளும் முறை இதுவோ? தேவையான பொருள்களை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமோ?

07
41. பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
PEER EDARPERUGI YOOR PENI VARINUM

Because of bad deeds big sorrow giving decease affected me


சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
SEER YUDAI KALAL ALLAALSINTHAI SEIYEEAN

Lord Siva your feet alone giving life in this world that feet alone praised by me nothing else I will think in this world


ஏருடை மணிமுடி இராவணனை
EEAR YUDAI MANI MUDI RAVANANAI

The lovely crown adorned the king ravana


ஆரிடர் படவரை யடர்த்தவனே
AARR EDAR PADAVARAI ADARTHAVANEEA

Who has been stamped under the kailai hills so that got big pain under the hills


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
ETHUVOO EMAI AALUMAARU EEVATHU EMAKU ILLAI EANIL

In that form of lord Siva is it your way of taken me as your slave but do not give any wealth to me to conduct day to day life

அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU INN ARUL AAVADU THURAI ARANEEA

Is it your grace towards me and lord Siva you are dwelling in thiru vaavadu thurai temple place in mum form

தீவினையால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வு தரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்யேன். அழகிய மணிமுடியணிந்த இராவணன் பெறுதற்கரிய துன்பம் அடையும்படிக் கயிலை மலையின் கீழ் அடர்த்தவனே, இப்படிப்பட்ட நீ என்னை ஆட்கொள்ளும் முறை இதுவோ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமோ?

08
42. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
YUNNINUM PASIYINUM YURANGININUM NINN

I am in eating state and then in hunger form got tired


ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
VONN MALAR ADI YAAL YURAIYAATHU ENN NAAKU

The light glittering feet alone I will praise with my tongue nothing else


கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
KANNANUM KADI KAMAL THAAMARAI MEEL

Thirumal and bharma who is seated in the lotus flower place


அண்ணலும் அளப்பரி தாயவனே
ANNALUM ALAP PARITHAA AVANEEA

Who are unable to scale lord Siva’s feet and head and then failed in their mission


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
ETUVOO EAMAI AALUMAARU EEVATHU EMAKKU ELLAI YEEAL

And that power full lord you are but you are unable to give me anything in this world to remove my poverty


அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU INN ARUL AAVADU THURAIYAANEEA

Is it your good grace towards me please tell me you are seated in thiru vaavaduthurai temple place in dumb form
நான் உண்ணும் நிலையிலும், பசியால் இளைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளி பொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே, அப்படிப்பட்ட நீ என்னை ஆட்கொள்ளும் முறை இதுவோ? தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமோ?

09
43. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
PITHODU MAYANGI YOOR PINI VARINUM

If I am converted as lunatic form and then got fainting’s


அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
ATHAA YUNN ADI ALLAAL ARATRAA EANN NAA

I will all the time chanting lord Siva’s name alone nothing else


புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
PUTHARUM SAMANARUM PURAN YURAIKKA

Buthaas and samanaas are talked ill wards towards lord Siva


பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
BAKTHARKAT ARYL SEITHU PAYINRAVANEEA

But you do not care about it and all the time you are putting grace towards on your disciples


இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
ETHU VOO EMAYIAALUMAARU EEVATHU VONRU EMAKKU ILLAI EAAL

But lord Siva you have taken me as slave but put in penury condition


அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
ATHUVOO YUNATHU INN ARUL AAVADU THURAI YAANEEA

Is it your grace towards me please tell me thiru vaavaduthurai temple place seated lord Siva
பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது, உன்னை வணங்குகின்ற பக்தர்களுக்கு அருள் புரிகின்றவனே, இப்படிப்பட்ட நீ என்னை ஆட்கொள்ளும் முறை இதுவோ. தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமோ?

10
44. அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
ALAI PUNAL AAVADU THURAI AMARNTHA

The waves are emanating thiru vaavaduthurai temple place seated lord Siva


இலைநுனை வேற்படை யெம்மிறையை
EALAI NUNAI VEL PADAI EAMM EARAIYEEA

The leaves tip form soolm battle force carried on the hands by lord Siva you are my lord


நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
NALAM MIGU GAANA SAMBANTHAN SINNA

This world goodness is liked gaanasam banther who gave the above songs to this world


விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
VELAI YUDAI ARUM TAMIL MAALAI VALLAAR

That Tamil garland form of poems who are memorized it and then daily sing before lord Siva


வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
VENNAI YAAYINA NEENGI POI VINNAVAR VEYAN YULAGAM

Those disciples’ bad deeds are relieved form and then entered in to the upper world


நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
NELAI YAAGA MUN NEERUVAR NILAMISAI NELAI YELLAREEA

Permanently and then they will not get re birth in this world

அலைகளையுடைய காவிரி வளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும்,இலை போன்ற நுனியை உடைய திரிசூலப்படையை ஏந்திய எம் இறைவனை, உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று, விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம் மண்ணுலகிலே மீண்டும் வந்து பிறவார்.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

September 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: