OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PUGALI

ganesheit September 25, 2019

  1. 003 திருப்புகலி THIRU PUGALI

  2. நாலடிமேல் வைப்பு
    பண் – காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
    See decade no 260

தலவரலாறு – ஞானப் பிள்ளையார் சீர்காழியில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளிய செந்தமிழ் மாலை. விகற்பச் சொற்களில் இத்திருப்பக்கே ஒன்றாகும்.

23 இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
EAYAL ESSAIEANNUM PORULIN THERAMAAM

The natural Tamil language and musical language drama language and in all the places are saying meaning effect form of


புயலன மிடறுடைப் புண்ணியனே
PUYAL ANNA MEDARU YUDAI PUNNIYANEEA

The dark color clouds like throat possessed lord Siva you are appearing in punniya form


கயலன அரிநெடுங் கண்ணியொடும்
KAYALANNA ARI NEDUM KANNIYODUM

The kayal fish like long eyes are possessed lords yumaadevi and then with her


அயலுல கடிதொழ அமர்ந்தவனே
AAYAL YULA KADI THOLA AMAR THAVANEEA

All the worlds are praying form you are seated


கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
KALAN AAVATHU VEN THALAI KADO POLIL PUGALI THAN NUL

The bharama skull is carried on hands and then fragrance filled flower plantations are covered place is pugali temple place lord Siva you are dwelling


நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.
NELAN NAAL THORUM ENN BURA NERAI MATHI ARULINA NEEA

This land is cool form existing way so that lord Siva you have blessed and then day by day growing form and then appeared in full moon form lord Siva you have blessed

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இவற்றில் கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற , கார்மேகம் போன்ற கருநிறக் கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே, கயல்மீன் போன்ற நீண்ட கண்களை உடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும் தொழும்படி வீற்றிருப்பவனே, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி நறுமணம் கமழும் , பொழில் விளங்கும் புகலியில் மேவி, இம்மண்ணுலகானது குளிர்ச்சியுடன் விளங்கும் சந்திரனுக்கு அருள் நல்கியும், வளச்சியுற்று நிறையுமாறும் நீவீர் அருள் புரிந்தீர்.

01
24. நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
NELAN YURUM EADAR NELAIYAATHA VANNAM

We are unable to remove away those ever permanent sorrows are to be removing way


இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
EALAI YURUM MALARGAL KONDU EAATHUM YAAM

We conduct poojaas with leaves and flowers and then pray lord Siva


மலையினில் அரிவையை வெருவவன்தேரல்
MALIYINIL ARIVAYAI VERUVA VAN THOL

With emotional filled way appeared the mad elephant is pealed by you and then on seeing it lords yumadevi got afraid of


அலைவரு மதகரி யுரித்தவனே
ALAI VARU MATHA GARI YURITHAVANEEA

இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
EMAIYOOR GAL NINN THAAL THOLA EALIL THEGAL POLIL PUGALI

The upper world deevaas are praying under your feet in pugali temple place


உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.
YUMAI YAALLODU MANINAI YUAR THIRU VADI EANNAI

Lord Siva you have seated in twin form in plantations are covered place that is pugali

எங்களால் நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை நீ நீக்கும் வண்ணம் இலைகளையும், மலர்களையும் கொண்டு, உன் திருவடிகளை அர்ச்சித்து நாங்கள் வழிபடுவோம். ஆரவாரித்து வரும் மதயானையின் வலி;ய தோளினை மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே, அழகிய சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து உன் திருவடிகளைத் தொழும் பொருட்டு உமா தேவியோடு நிலையாக வீற்றிருக்கின்றாய்.

02
25. பாடினை அருமறை வரன்முறையால்
PAADINAI ARUMARAI VARAN MURAIYAAL

The rare veethaas are sung as per musical notes rules are followed form


ஆடினை காணமுன் அருவனத்திற்
AADINAI KAANA MUNN ARU VANATHIL

The saints and then their wives are seeing form lord Siva you have danced in the tharugaavanam forest place


சாடினை காலனைத் தயங்கொளிசேர்
SAADINAI KAALANAI THAYANGU OLI SEER

The saint named margandaaya whose life is tried to corner it at the end of 16th year old period but lord Siva you have kicked and then killed him


நீடுவெண் பிறைமுடி நின்மலனே
NEEDU VENN PERAI MUDI NIN MALANEEA

In that way lord Siva you have adorned curved moon on your hair place and you are in flawless form in all the time


நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
NINEIYEEA ADIYAAR THOLA NEDU MATHIL PUGALIN NAGER

All the disciples are all the time pray under your feet lord Siva you have seated long protection wall covered pugali temple place


தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே
THANNAIYEEA EADA MEEVINAI THAVA NERI ARUL EMAKKEEA

And that prime form lord Siva you may bless us the penance way of life to us

அரிய வேதங்களை இசையின்கண் முறைப்படி பாடியருளினாய், முனிவரும், தேவர்களின் பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில் திருநடனம் ஆடீனாய். ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய வெண்பிறையைத் தலையில் சூடிய நின்மலனே. மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்தாய். முழுமுதற் கடவுளான உன்னை அடியார்கள் தொழும்படி நீண்ட மதில்கள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வீற்றிருந்து அருளினாய். எங்கட்குத் தவநெறியினை அருள்வாயாக.

03
26. நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
NELAL THEGAL MALUVENAI YAAAI YIN THOL

Ever active form of malu battle form you have carried on your hand and then the pealed elephant skin


அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
ALAL THEGAL MEENYIL ANINTHAVANEEA

The fire form of appearing body place lord Siva you have adorned it


கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
KALAL THEGAL SELAMBU OLI ALAMBA NALLA

In the leg place adorned anklets are all the time raising sound and with it


முழவொடும் அருநட முயற்றினனே
MOLAVODUM ARU NADAM MUYATRINANEEA

The drum sound is beaten form lord Siva accordingly you are dancing


முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
MUDI MEEAL MATHI SOODINAI MURUGU AMAR POLIL PUGALI

In the hair place lord Siva you have adorned curved moon and then the lovely plantations are covered place is pugali where lord Siva


அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே.
ADIYAAR AVER EEATHURA ALAGODUM ERUNTHAVANEEA

You have seated so that your disciples are praised form pray and then surrender under your feet

ஒளி விளங்கும் மழுப்படையை உடையவனே, யானையின் தோலை நெருப்புப் போல் விளங்குகின்ற உனது சிவந்த திருமேனியில் அணிந்தவனே. திருவடியில் விளங்கும் வீரக் கழல்களும்;, சிலம்பும் ஒலிக்க , நல்ல முழவு முழங்கத் திருநடனம் புரிபவனே. சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடியவனே, அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலியில் அடியார்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கும்படி வீற்றருளினாய்

04
27. கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட
KARUMAIYIN OLIR KADAL NANJA MUNDA

In the milk sea place emanated dark color poison is consumed


உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
YURIAIYIN YULAGU YUIR ALITHA NINRAAN

Your prime god responsibility is going to reveal the whole world so you have saved all the living beings in this world


பெருமையை நிலத்தவர் பேசினல்லால்
PERUMAIYAI NELATHAVAR PEEASIN ALLAAL

In this land people only praise your glory


அருமையில் அளப்பரி தாயவனே
ARUMAIYIL ALAP PARI THAAYA VANEEA

But they are unable to Annalise your activities in this world by using any form of scale


அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப்
ARAVERIAI YAALODUM ALAI KADAL MALI PUGALI

The dancing snake like broad waists are possessed lords yumaadevi lord Siva you have seated in the pugali sea shore place which is sea wealth filled place


பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.
PORUL SEEAR THARA NAADORUM PUVI MISAI POLINTHAVANEEA

Lord Siva you have seated so that giving four types of boon to this world people (Aram porul inbam and then veedu) the philanthropist act following ethical form of acts, earning wealth and enjoying happiness in this world and then all are enjoyed up to saturation point and then got dis taste from it you may attain mukthi with lord Siva’s grace
பாற்கடலில் தோன்றிய கருநிற நஞ்சை உண்டு, உன் முழுமுதற் பண்பினை விளங்குமாறு செய்து உலகுயிர்களைப் பாதுகாத்து அருளிய, உன்னுடைய பெருமையை மண்ணுலகத்தோர் போற்றலாமே தவிர, மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு அரியவனாய் உள்ளவனே. அரவம் அன்ன இடையையுடைய உமாதேவியோடு அலைகளையுடைய கடல்வளம் பொருந்திய திருப்புகலியிலே, இப்பூவுலகில் நாள்தோறும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி நீ வீற்றிருந்தருளுகின்றாய்.

05
28. அடையரி மாவொடு வேங்கையின்தோல்
AEAI YARIMAAVODU VEENGAIYIN THOL

With lion skin adorned as upper dress and tiger skin as lower dress


புடைபட அரைமிசைப் புனைந்தவனே
PUDAI PADA ARAI MESAI PUNAINTHAVANEEA

In that appropriate way lord Siva you have adorned it


படையுடை நெடுமதிற் பரிசழித்த
PADAI YUDAI NEDU MATHIL PARISU ALITHA

The battle force instruments are filled on the long castle place which is destroyed by you


விடையுடைக் கொடிமல்கு வேதியனே
VEDAI YUDAI KODI MALGU VEETHIYANEEA

lordSiva you have carried the bull emblem studded flag on your hands lord Siva you are hero form to veethaass


விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித்
VEEGIRTHAA PARAMA NINAI VINNAVAR THOLA PUGALI

Lord Siva you are unique form you are the prime form seated in this world so that the upper world deevaas are also praying together with lords parvathi in that form lord Siva you may bless all those disciples who are praying under your feet


தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே
THAGU VAAI MAATHODUM THALL PANINTHAVER KEEA

In that twin form bless all

சிங்கத்தின் தோலைப் போர்த்து, புலியின் தோலையும் உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே. படைக்கருவிகைளக் கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின் வலிமையை அழித்தவனே. இடபக் கொடியுடைய வேதநாயகனே, விகிர்தனே, எப்பொருட்கும் மேலானவனே, விண்ணோர்களும் தொழத் திருப்புகலியிலே உமாதேவியோடு விற்றிருந்து உன் திருவடிகளை வணங்கும் அனைவர்க்கும் அருள் புரிகின்றாய்.

06
29. அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
ADIYAVAR THOLUTHU EALA AMARER EETHA

The disciples are daily praying under your feet and then deevaass are praising your glory,


செடியவல் வினைபல தீர்ப்பவனே
SEDI AVAL VENAI PALA THEERP PAVANEEA

So that those wild persons bad deeds are removed form


துடியிடை அகலல்குல் தூமொழியைப்
THUDI EADI AGAL ALGUL THOO MOLIYAI

The narrow stomach place and then broad waist are possessed form and then pure wards are talking lords yumaadevi


பொடியணி மார்புறப் புல்கினனே
PODI ANI MAAR BURA PULGINANEEA

Lord Siva you have adorned sacred ashes all over the body and with it who has embraced lords parvathi


புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
PUNNIYAA PUNITHA PUGAR EETRINAI PUGLIN MAGER

Lord Siva you are appearing in punniyaa form and holly form and then ascended on the back of the bull so that travel everywhere and in this way lord Siva you have seated in pugali temple place


நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே.
NANNINAAI KALAL EEATHIDA NANA GILLAA VENAIYEEA

Those disciples who are pray and then praise your glory and that disciples will not be affected by any form of problems

அடியவர்கள் தொழுதெழ, தேவர்கள் புகழ்ந்து வணங்க,அவர்களின் துன்பம் தரும் கொடிய வினைகளைத் தீர்த்தருளும் எம் இறைவனே. உடுக்கை போன்ற இடையையும், அகன்ற அல்குலையும், தூய மொழிகளையும் உடைய உமாதேவியைத் திருநீறு அணிந்த தன் திருமார்பில் தழுவியவனே. புண்ணிய மூர்த்தியே, புனிதனே, இடபவாகனனே, திருப்புகலி நகரில் வீற்றிருக்கும் பெருமானே , உன் திருவடிகளை வணங்கிப் போற்றுபவர்களை வினைகள் வந்தடையா.

07
30. இரவொடு பகலதாம் எம்மானுன்னைப்
EERAVODU PAGAL ATHAAM EMMAAN YUNNAI

The night and day concept is evolved and then activated it and that form of lord Siva you are


பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
PARAYUTHAL OLIYEEAN VALI ADIYEEAN

I am from good old time your slave so I am daily thinking and then saluting and then praising which is not kept away from my day to day activities


குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
KURA VERINARUM KONRAI KONDU ANITHA

Lord Siva you have adorned kuraa flowers konrai flowers on the hair place and then


அரவிரி சடைமுடி ஆண்டகையே
ARAVERI SADAI MUDI AANDAGAIYEEA

The snakes are also adorned on the hair place and then in this way lord Siva you have taken me under your control


அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
ANNA MEN NADAI YAALODUM ATHIR KADAL ELANGAI MANNAI

Lord Siva you have seated with lords yumaadevi in thiru pugali temple place and then ever sound raising form of sea waves are encircled place is sri langa and its king named ravana


இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.
EENA MAAR THARU THOL ADARTHU EARUNTHANAI PUGALI YUL LEEA

Whose twenty shoulders are stamped under kaiyilai hills and that powerful person you are

இரவு, பகல் போன்ற கால தத்துவத்தை இயக்கும் பெருமானே, வழிவழி அடிமையாக வந்த நான் உன்னை நினைந்தடி வணங்கிப் போற்றுதலில் தவறேன். குராமலர்களையும், விரிந்த நறுமணமுடைய கொன்றை மலர்களையும், பாம்பையும் சடைமுடியி;ல் அணிந்து எம்மை ஆண்டருளும் பெருமானே. ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராணவனின் இருபது தோள்களையும் அடர்த்த நீ அன்னம் போன்ற மென்மையுடைய உமாதேவியோடு திருப் புகலியில் எழுந்தருளியுள்ளாய்.

08
31. உருகிட வுவகைதந் துடலினுள்ளால்
YURUGIDA YUVAGAI THANTHU YUDALIN YULLAAL

The mind and body melted form of those disciples who are praised lord Siva


பருகிடும் அமுதன பண்பினனே
PARUGIDUM AMUTHANA PAN BINANEEA

You are appearing Siva happiness nectar form in their mind oozing out and that form of happiness giving person you are


பொருகடல் வண்ணனனும் பூவுளானும்
ORU KADAL VANANUM POO YULLAANUM

The sea like blue color body possessed thirumal and then lotus flower place dwelling bharma are unable to see your feet and head


பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய்
PERU GIDUMARUL EANA PERANGU EARIYAAI

But they are failed in their mission and then afterwards realizing their fault lord Siva you have appeared before then in fire pole form


உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ்
YUAR THAAIEANNI NEE EANNAI ONN MALAR ADI EANAI KEEL

The high raised protection walls are covered place is thiru pugali where lord Siva you have seated
You may put me under your light filled feet and in that way you may put your grace on me


வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.
VAYAM THAANGURA NALGIDU VALAR MATHI PUGALI MANEEA

உள்ளமும் உடலும் உருக உன்னைப் போற்றும் அடியவர்கட்குச் சிவானந்தம் அளிக்கும் அமுதம் போன்ற இனிமை வாய்ந்தவனே. கடல் போன்ற நீல நிறமுடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், அடிமுடி காணாதபடி நெருப்பு மலையாய், உன்னுடைய பெருகும் அருளென உயர்ந்து நின்றாய். மதில்களையுடைய திருப்புகலியில் வீற்றிருக்கும் இறைவனே, நீ என்னை உன் ஒளி பொருந்திய திருவடியிணைக் கீழ் விரும்பி வீற்றிருக்கும்படி அருள் புரிவாயாக.

09
32. கையினி லுண்பவர் கணிகைநோன்பர்
KAIYINIL YUN BAVAR KANIGAI NON BAR

In the hands place accepting food and then eat it those samanaas and then ganabangam form talking buthaas


செய்வன தவமலாச் செதுமதியார்
SEI VANA THAVAMALAA SETHU MATHIYAAR

They are not doing good deeds they are deficiency filled minded persons only


பொய்யவ ருரைகளைப் பொருளெனாத
POI AVER YURAI GALAI PORUL ENNAATHA

The true matter form of lord Siva is not realized and then they are only talking day to day life problems those persons preaching’s are not true one so you need not follow it


மெய்யவ ரடிதொழ விரும்பினனே
MEI AVAR ADI THOLA VERUM BINANEEA

The matter form of lord Siva who has been fully known by saints who are surrender under your feet lord Siva you are putting your grace on them


வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
VEEYANTHAAIVEL EETRINAI VINNAVAR THOLUM PUGALI

Lord Siva you have taken white bull as your vehicle to traval and then upper world deevaas are also praised form lord Siva you have descended in pugali temple place


உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.
YUAR THAAR PERUM KOILYUL ORUNGUDAN EARUN THAVANEEA

Which is high raised form established where you are seated with lords yumaadevi in oneness form

கையில் உணவேற்று உண்ணும் சமணர்களும், கணபங்க வாதம் செய்யும் புத்தர்களும், தவமல்லாததைச் செய்யும் அற்பமதியினர். உண்மைப் பொருளாம் இறைவனை உணராமல் வெறும் உலகியலறங்களை மட்டுமே பேசுகின்ற அவர்களுடைய உரைகளைப் பொருளெனக் கொள்ளாது, மெய்ப்பொருளாம் சிவனையுணர்ந்த ஞானிகள் வந்து திருவடிகளைத் தொழ விரும்பி அருள்புரிபவனே. வெண்ணிற எருதினை வாகனமாகக் கொண்டாய். விண்ணவர்கள் தொழ, திருப்புகலியில் உயர்ந்த அழகிய பெருங் கோயிலினுள் உமாதேவியுடன் ஒருங்குடன் வீற்றிருக்கின்றாய்.

10
33. புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
PUNNIYAR THOLUTHU EALU PUGALI NAGER

The Siva’s punniyaa form of disciples are praying in the pugali temple place


விண்ணவ ரடிதொழ விளங்கினானை
VINNAVAR ADI THOLA VELANGINAANAI

Where upper world deevaas are also praying under your feet


நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
NANNIYA GAANA SAMBANTHEN VAIMAI

Gana sambather who has with mind wards body are oneness form singing the above songs


பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
PANNIYA ARUM TAMIL PATHUM VALLAAR

Those disciples who are singing the above ten poems in memorized and then meaning is known form singing before lord Siva


நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
NADALAIAVAI EANRIP POI NANNUVAR SIVAN YULAGM

They will go on without any impediments in life and the going on penance way of life and then this repeated birth and left out and then enter in to Siva land


இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.
EDAR AAYINA EANRI THAAM EAITHUVAR THAVA NERIYEEA

சிவபுண்ணியர்கள் வணங்குகின்ற திருப்புகலிப் பதியில் விண்ணவர்களும் தன் திருவடிகளைத் தொழும்படி விளங்கும் சிவபெருமானை, மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபடப் போற்றிய திருஞானசம்பந்தனின் அருந்தமிழ்ப் பாசுரங்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள், எவ்வித இடர்களுமின்றித் தவநெறியில் நின்று, பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிச் சிவனுலகம் அடைவர்.
11

திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM

September 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: