KOYIL
3.001. கோயில்
KOYIL
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
THIRUCHITRAMBALAM
Place history—this is river Cauvery northern side temple and out of 127 temples it is first one this is called in the names of chitrambbaram Thillai vanam perum patrappuliyoor
There are five types of sabaas are available in the name of peramblam chitrambalam kanaga sabai nirutha sabai and raja sabai. Out of five vast forces in this world (land fire water wind and space) this is space place
தலவரலாறு – காவிரி வடகரைய உள்ள தலங்கள் 127 – ல் முதலாவது. சிதம்பரம், தில்லைவனம், பெரும் பெற்றப்புலியூர் என்பன வேறு பெயர்கள். பேரம்பலம், சிற்றம்பலம், கவனகசபை , நிருத்தசபை, இராஜசபை என்னும் ஐந்து சபைகள் உள்ளன. பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயம் இதுவே.
1 ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
AADINAAI NARU NEI YODU PAAL THIYIR
THE FRAGRANCE FILLED the ghee milk curd and then with all it you have been daily taking bath
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
ANTHANAR PERIYAATHA CHITRAMBALAM
the Brahmins are not separated from the chitrambbaram temple place where lord Siva you have been in space place gaana dance performing form
நாடினாயிடமா நறுங்கொன்றை
நயந்தவனே
NAADIYAAI YEDAMAA NARUM KONRAI NAYANTHA VANEEA
lord Siva you have been adorning konrai flower garland willingly
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
PAADI NAAYIMARAIYOODU PAL GEETHAMUM
with sama veetha you have been singing four veethaas all the time
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
PAL SADAI PANI KAAL KATHIR VENN THINGAL
In the spread over hair the rays are pouring the moon is adorned and in this way my good old deeds are removed form please bless me
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
SOODINAAI ARULLAAI SURUNGA ENN THOL VENAIYEEA
நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே, தில்லைவாழ் அந்தணர்கள் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே, கொன்றைப் பூமாலையை விரும்பிச் சூடியவனே, நான்மறையுள் சாமகானத்துப் பல கீதங்களையும் பாடியவனே. பலவாகிய சடைமேல் குளிர்பனியைச் சொரிகின்ற வெண்ணிலவைச் சூடியவனே, எம் தொல்லை வினை இல்லையாம் எனும்படி திருவருள் செய்க.
2. கொட்டமேகம ழுங்குழ லாளொடு
KOTTAMEEA KAMALUM KULAL LAAL LODU
The fragrance filled the hair possessed lordess Sivagami with her lord Siva you are mingled form
கூடினாயெரு தேறினாய் நுதல்
KOODINAAI EARUTHU EAARINAAI NUTHAL
With clubbed form ascended on the back of the bull
பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா
PATTAMEEA PUNAI VAAI EASAI PAADUVAA PAAREADAMAA
Lord Siva you have adorned fore head ornaments and then demon forces are singing form accordingly lord Siva you are dancing
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை
NATTAMEEA NAVIL VAAI MARAIYOOR THILLAI
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
NALLAVAR PERIYATHA CHITRAM BALAM
The veetha chanting bharmins are living in chitram balam temple place where lord Siva you are willingly dwelling
இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ.
EATTAMAA YURAI VAAI EAVAI MEEVIYA THENNAI KOLOO
Those five grace filled form lord Siva you are dwelling tell me the reason for it
நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவாகமி அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப் பட்டம் அணிந்தவனே, பூதகணங்கள் இசை பாடுவனவாகத் திருத் கூத்தாடுவோனே, வேத விற்பன்னர்களாக விளங்குகின்ற தில்லைவாழ் அந்தணர்கள் பிரியாத தில்லைச் சிற்றம்பலத்தே விருப்போடு வாழ்பவனே, இவ்வைந்து கருணைச் செயல்களையம் மேவியது யாது காரணம் பற்றியோ.
3. நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல
NEELATAAR KARIYA MEEDATRAAR NALLA
The blue color throat possessed lord Siva and then good
நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று
NETTRI MEEL YULLA KANNINAAR PATRU
Fore head place lord Siva you have possessed fore head eye
சூலத்தார்சுட லைப்பொடிநீறணி வார்சடையார்
SOOLATHAR SUDALAI PODI NEER ANI VAAR SADAIYAAR
Lord Siva you have carried soolam battle force on your hands and then burial place emanated sacred ashes are adorned all over the body
சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
SEELATHAAR THOLUTHU EEATHU CHITRAM BALAM
Good qualities are filled form lord Siva you are entered in to chithambaram temple place where bharmins are living
சேர்தலாற்கழற் சேவடி கைதொழக்
SEEAR THALAAL KALAL SEEVADI KAI THOLA
Those chitram balan temple place is all the time thinking form entering
கோலத்தாயரு ளாயுனகாரணங் கூறுதுமே.
KOLATHAAI ARULLAAI YUNA KAARANAMKOORUTHUMEEA
And those dancing form of lord Siva please allow me to pray under your anklet adorned feet and that form of grace lord Siva you may allow me to get
நீலநிறத்தைப் பொருந்திய கரிய திருக் கழுத்தினர், அழகிய நெற்றியின் மீது ஒரு கண் உடையவர், திரிசூலம் பற்றியவர், காடுடைய சுடலைப் பொடி பூசியவர், சடையினர், சீலம் மிக்கவர். தில்லைவாழ் அந்தணர் வணங்கி யேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நிநை;து சேர்தலால் திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே, நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய்.
4. கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக்
KOM KALAITH THALAGU EAITHIYA NUNN EADAI
The tender creeper plant not equal to me and in that way lords yumaadavi possessed soft lean form of waist
கோலவாண்மதி போல முகத்திரண்
KOLA VANNMATHI POLA MUGATHU EARANDU
And lovely form of light filled glittering moon and then in the face place two arrow like sharp ended eye are possessed which is not equal to anything in this world
டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான்
AMBU ALAITHA KANNALL MULAI MEEVIYA VAAR SADAIYAAN
Those form of eyes are possessed lords yumaadeevi and whose lovely breasts are possessed lords yumaadevi is liked by long hair possessed lord Siva
கம்பலைத்தெழு காமுறு காளையர்
KAMBU ALAITHU EALU KAAMURU KAALAIYAR
The disciples are intimate form with love form praying lord Siva who is appearing young bull form
காதலாற்கழற் சேவடி கைதொழ
KATHALAAL KALAL SEEVADI KAI THOA
And that love form praying under his feet
அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே.
AMBALATHU YURAIVAAN ADIYAARKU ADAYAA VENAIYEEA
Those disciples will not be affected by any type of bad deeds and in that benevolent form lord Siva dwelling in chi tram balsam temple place
பூங்கொம்பு தனக்கு இணையாகாதவாறு அலையச் செய்து அதனழகினையும், தான் பெற்ற நுண்ணிய இடையையும் அழகும் ஓளியும் உடைய திங்கள் போலும், முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக்கண்களையும் உடைய சிவகாமி அம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான், அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப் போன்ற உடற்கட்டினன். பக்தியோடு அப்பொருமானைக் கைதொழும் அடியவர்களுக்கு வினையானது பற்றி நிற்காது.
5. தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
THOLLAI AARR AUTHU YUNNAA NANJU YUNDATHOOR
The good old deevaas are allowed to drink the nectar but lord Siva you have grace filled form consumed the poison and then got darkened form of appearing throat possessed lord Siva
தூமணிமிட றாபகு வாயதோர்
THOO MATHI MIDARAA PAGU VAAYA THOOR
The pure ruby diamond form of throat possessed lord Siva you have carried opened mouth possessed human skull carried on your hands
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
PALLAI YAAR THALAIYIL PALIYEETRU YULAL PANDARANGAA
And then in that skull place Siva you have been collecting begging food for this you are wandering everywhere with dancing form
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
THILLAIYAAR TOLUTHU EEATHUM CHITRAMBALAM
The chithambaram place dwelling bharmains are daily praying and then praising your glory
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
SEEAR THALAL KALAL SEEVADI KAI THOLA
Where disciples you are praying lord Siva with folded hands and then you will get relief from bad deeds and in that way lord Siva you have shot arrow to destroy three castles and that form of mighty power lord Siva you have possessed
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே. EALLAIYAAM VENAI THANN EARIYAM MATHIL EITHAVANEEA
திரிபுரத்தை எரித்தொழிக்க மலை வில்லால் தீக்கணையை எய்தவனே, பழந்தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால்
நஞ்சினை உட்கொண்டு நீலகண்டனாகத் திகழும் பெருமானே, பற்கள் நிறைந்த பிளந்த வாயுடைய தொரு பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே, தில்லை வாழ் அந்தணர்கள் வணங்கி ஏத்தும் சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் தேவரீரே. கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலால் இருவினையும் பற்றக் கழியும்.
6. ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்
AGAM THOOI ANI KONRAI YAAI ANAL
In the sacred body place the konrai flower garland embraced form and then
அங்கையாய்அம ரர்க்கம ராஉமை
ANGAIYAAI AMARAR KU AMARAA YUAI
In the sacred hand place fire pot carried form of appearing in the devaass god form
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
BAAGAM THOOI PAGAVAA PALI YEETRU YULAL PANDU ARANGAA
And then lorddess parvathi is given left part of your body and then in this form wandering everywhere for begging food and then dancing padarangam dancing form
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
MAAGAM THOOI POLIL MALGU CHITRAMBALAM
And plantations are grown up to sky level of chiram balam temple place where lord Siva descended in permanent form
மன்னினாய்மழு வாளினாய் அழல்
MANNINAAI MALU VAALINAAI ALAL
And that permanent form lord Siva you have carried malu battle force on hands and the fire form of poison spitting
நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே.
NAAGAM THOOI ARAIYAAI ADIYAARAI NANAA VENAIYEEA
Snake tied on the waist places belt form and then your disciples are not approached bad deeds
திருமேனியில் தோய்ந்த அழகிய கொன்றை மாiiயை உடையவனே, திருக்கரத்தில் நெருப்பு ஏந்திய தேவாதி தேவனே, அம்பிகை பாகமுடைய பகவானே, பலி ஏற்றுத் திரியும் பாண்டரங்கக் கூத்தனே, வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலை பெற்றவனே, மழுவாளை ஏந்தியவனே, நச்சுத் தீயை உடைய நாகத்தை அரையிலே கட்டி மேவும் உன் அடியாரை வினைகள் அடையா.
7. சாதியார்பலிங் கின்னொடு வெள்ளிய
SAATIYAAR PALINGIN NODU VELLIYA
The good qualities possessed marbiles and then with it white conch
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
SANGA VAAR KULAIYAAI THEGALAPPADUM
With it made kulai ornaments and gundalam adorned on the ear place
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
VEETHIYAA VEGIRTHAA VELAVAAR ANI THILLAI THAN NUL
The greatness filled form of four veethaass form appearing you are in unique form and then all the time festivals are going on and that chithambaram place
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
ATTIYAAIKU EADAM AAYA CHITRAMBALAM
In good old form existing in chitram balam temple place
அங்கையாற்றொழ வல்லடி யார்களை
ANG KAIYAALTHOLA VALLADIYAAR GALAI
Those disciples who are praying lord Siva with folded hands
வாதியாதகலுந் நலியாமலி தீவினையே.
VAATHIYAA THA AGALUM NALIYAA MALI THEEVANAIYEEA
Those disciples are not affected by bad deeds and then it will gone away from them
நல்ல இனத்துப் பொருந்திய வெண்சங்கு கொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையோனே, பெருமை திகழும் நான்கு வேதங்களும் ஆகிய விகிர்தனே, விழாக்கள் மலிந்த தில்லையில் ஆதியாக விளங்கிச் சிற்றம்பலத்தில் மேவும் நாதனே. தேவரீரைத் தமது கரங்களால் தொழ வல்லவர்;களுக்குத் தீவினையானது துன்புறுத்தாது அகன்று ஏகும்.
8. வேயினார்பணைத் தோளியொ டாடலை
VEEYINAAR PANAI THOLINODU AADALAI
The bamboo like bulky shoulders are possessed lords kali with her you are liked to dance
வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு
VEENDI NAAI VIGERTHAA YUIRKATKU AMUTHU
LORD Siva those disciples who are praying under your feet you are nectar form to them
தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே
AAYINAAI EADUKAATU EARI AADAL AMARNTHAVANEEA
And then in the burial ground place lord Siva you are dancing on the fire place
தீயினார்கணை யாற்புர மூன்றெய்த
THEYINAAR KANAIYAAR PURAM MOONRU EAITHA
With fire arrow lord Siva you have destroyed three castles
செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம்
SEMAIYAAI THIGAL GINRA CHITRAM BALAM
The sacred grace filled chitrambalam place where lord Siva you are
மேயினாய்கழலே தொழுதெய்துதும் மேலுலகே.
MEEEIYINAAI KALALEEA THOLUTHU EAITHUTHUM MEEAL YULAGEEA
You are all the time dancing form where we are pray under your feet and then enter in to Siva logam place
மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியோடு திருக் கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதம் ஆகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முளையாகக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையானே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங்கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம்.
9. தாரினார்விரி கொன்றை யாய்மதி
THAARINAAI VERI KONRAIYAAI MATHI
The bloomed form of konrai flower garland adorned form of
தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல
THAANGU NEEL SADAIYAAI THALAIVAA NALLA
And moon is bearing form of long hair possessed lords Siva you are leader to me
தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னுட்
THEERINAAR MARUGIN THIRU VAAR ANI THILLAI THAANNUL
The lovely form of chariot moving form of broad street are possessed chitham baram temple place
சீரினால்வழி பாடொழி யாததோர்
SEERINAAL VALI PAADU OLIYAATHA THOOR
As per veetha rule form daily prayers are conducted
செம்மையாலழ காயசிற் றம்பலம்
SEMMAIYAAL ALAGAAYA CHITRAMBALAM
With pure form of lovely place chitram balam temple where you are daily appearing in dancing form
ஏரினாலமர்ந் தாயுனசீரடி யேத்துதுமே.
EEARINAAL AMARNTHAAI YUNN SEER ADI EEATHUTHUMEEA
Lord Siva you have seated on the back of the bull so that your sacred feet are daily given floral tribute
மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே, பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகு பொலியும் தேரோடும் வீதிகளையுடைய செல்வத் தில்லையுள், சாத்திரத்தில் விதித்தவாறு வழிபாடு செய்யப் பெறும் செம்மையால்; அழகான திருச் ;சிற்றம்பலத்தைத் திருக்கூத்து எழுச்சியால்
விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவோம், ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு.
10. வெற்றரையுழல் வார்துவ ராடைய
VEETRU ARAI YULAL VAAR THUVAR AADAIYA
In naked form wandering samanaas and saffron color tainted dress adorned, upper body covered form of buthaas
வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின்
VEEDATH THAAR AVER GAL YURAI KOLAL MIN
Those pretending form propagating preaching’s are not to be accepted as true one
மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்
MATRAVAR YULAGIN ANALM AVAI MAATRA GILLAAR
And in this land place taken birth by those living beings sorrows will not be removed by them
கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங்
KATRAVAR THOLUTHU EEATHUM CHITRAM BALAM
The veethaas are well learnt form of those chirambalam place dwelling bharamins who are daily conducting prayers
காதலாற்கழற் சேவடி கைதொழ
KAATHALAAL KALAL SEEVADI KAI THOLA
With love form of those disciples who are daily praying the anklet adorned feet with folded hands
உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே.
YUTRAVAR YULAGIN YURUTHI KOLLA VALAVAREEA
And those disciples alone in this world ever permanent matter mukthi will be attain by them
சமணர்களும், சாக்கியர்களும் சொல்லும் உரைகளை ஒரு பொருட்டாகக் கொள்ள வேண்டாம். மன்னுயிர்களுக்கு விதியின் வசத்தால் நேரும் துன்பங்களை அவர்களால் தீர்க்க இயலாது. வேதங்களைத் நன்கு கற்றுத் தேர்ந்து, அவற்றின் மாண்பினை நன்கு உணர்ந்த அந்தணர்கள் தொழுதேத்தும் சிற்றம்பலத்தின் ஆராத காதலால், கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி கொள்ள வல்லவராவர். (ஆன்மலாபம்)
11. நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
NAARU PPOOM POLIL NANIYA KAALIYUL
The fragrance filled seergaali temple place flower plants are covered form of
நாண்மறைவல்ல ஞானசம் பந்தன்
NAAN MARAI VALLA CAANA SAMBANTHAN
Where descended ganasambanther who is excelled in four veethhaass
ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
YUURUM INN TAMILAAL YUARTHAAR YURAI THILLAI THANNUL
With oozing out lovely nectar form of pure Tamil preaching’s are singing in chithambarm temple place
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத்
EEARU THOL PUGAL EEATHU CHITRAM BALATHU
The veethhaa and siva aahamaas are well learnt those three thousand bharmins are living place is chithambaam where good old glory filled form
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
EESANAI ESAIYAAL SONNA PATHU EAVAI
The above ten poems are musical notes are filled form of singing and those disciples
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.
KOORU MAARU VALLAAR YUARTHAARODUM KOODU VAREEA
Who are memorized and meanings are known form of singing daily and then those disciples will ultimately mingle with deevaas and then live there for ever
மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீர்காழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞான சம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும், வேத சிவாகமங்களை உணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன் மேல் ஏறும் தொன்மைப் புகழ் உடையதாகும். ஈசனைப் போற்றிப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர்.
திருச்சிற்றம்பலம்—OM THIRU CHITRAM BALAM
September 24, 2019