OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

10.SEEANTHANAAR BLESSED AND GAVE THIRU PALLAANDU

ganesheit August 17, 2019

  1. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
    SEEANTHANAAR BLESSED AND GAVE THIRU PALLAANDU

கோயில் மன்னுக
In this decade praised lord Siva to live long life in this universe?
Ponnambalm means golden Saba and it is also called in the name of chitrambalam.
The five sabaass are
1 thiru aalangaadu—ratina Saba (ruby diamond Saba)
2 thillai –pond samba (gold Saba)
3 Madurai– velli sabai (silver Saba)
4 thirunel veeli –thamirasaba (copper saba)
5 kutraalam –chithira Saba (art Saba)
If you pray in Chidambaram temple you will automatically get mukthi.
இத்திருப்பதிகம் இறைவனைப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறது.இத் திருப்பதிகம் அறுசீர் அடிகளால் ஆய பாட்டுக்களால் இயன்றது எனினும் சீர் நிலைமை வரையறை இன்றியும் சில அடி சீர் மிக்கும் குறைந்தும் வரப் பெற்றுள்ளது. இது பதின் மூன்று திருப்பாட்டுக்களை உடையதாய் இருத்தல் குறிப்பிடத்தக்கது.
பொன்னம்பலம் என்பது பொற்சபை (கனகசபை சிற்சபை) சிற்றம்பலம் எனவும் பெயர் பெரும் திருவாலங்காட்டில் இரத்தின சபையும் தில்லையில் பொற்சபையும்,மதுரையில் வேல்லிசபையும், திருநெல்வேலியில் தாமிரச்சபையும், திருக்குற்றாலத்தில் சித்திரசபையும் ஆகிய ஐந்து சபைகள் உள்ளன.இவ் ஐந்தும் தனித் தனிச் சிறப்புடையன.
கோயிலை தரிசிக்க முத்தி என்ற முதுமொழி எழுந்ததாகும். சிதம்பர ரகசிய தரிசனம் மிகச் சிறப்புடையது.

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
mannuga thillai valarga nam bathergal vangekar poi agala

The sacred place of chitrambalam ever permanent form to guide devotees to get mukthi and our Lord Siva disciple will live ever permanent life in this world and those who are not liked to do slavery service they left away from lord Siva’s protection
தில்லை திரு நகரம் என்றும் நிலை பெருக நம் அடியார்கள் பல்லாண்டு வாழ்க அடிமை செய்ய ஒருப்பாடாதவர்கள் இல்லாது ஒழிக


பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
Ponnin sei mandabath thullea pugunthu buvani eallaam velanga

The golden form of lord Siva’s temple place we may enter and then this world will be in permanent form stood here for ever
பொன் மயமான மண்டபத்திலே நுழைந்து உலகம் எல்லாம் நிலைபெற்று நின்று


அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
ANNA NADAI MADAVAAL YUMAI KON ADIYOOMUKKU ARUL PURINTHU

The Anna bird like gaiety walking that young form of lordess yumaadevi whose husband is lord Siva who will put his grace on all his disciples
அன்னம் போன்ற நடையினை உடைய இளையவள் ஆகிய உமாதேவியின் கணவன் அடியவர்களாகிய நமக்கு அருள் பாவித்து


பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1
PINNAI PERAVI ARUKKANERI THANTHA PITHARKKU PALLAANDU
KOORUTHUMEEA

So that here after we are going to get cause and effect form of repeated birth and death is cut off and then throw it away and then in this way lord Siva who has poured his sacred grace on his disciples and then sacred feet gaanaa way of life is blessed form given to his disciples and that form of abounded love possessed lord Siva we will praise him to live long life so that all his disciples are to get mukthi in this life itself ( pithan means lunatic person and that person will give you anything you want without any reservation) ( lord Siva is the only powerful person to give whatever you want without any reservation and that unlimited bliss possessed person he is but who do not have any ego on his part so he is called pithan) ( ravana lifted the kaiyilai hills but lord Siva did not get any angry mood and then after ravana realized his fault lord Siva instantly forgive and then gave long life and weapons and this type of act is only did lunatic person)
மேல்வரும் பிறவியை நாம் அறுத்துக் கொள்ளும் படி அடியோ முக்குத் தம் திருக் கூத்தாகிய அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளி உள்ளான் அந்த
பித்தனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக

290. மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
MINDU MANATHAVER POMINGAL MEI ADIYAAR GAL VERAINTHU VAMMIN

So those who are filled ego and elated form of mind and then talked controversial form those artificial persons may go away and then those disciple who are simple form and without any expectations and reservations on their part you may fastly move towards chitrambalam temple so as to get mukthi
செருக்குக் கொண்டு மாறுபடப் பேசும் மனத்தை உடையவர்கள் போய் விடுங்கள் மெய் அடியாராக இருப்பவர்கள் விரைந்து வாருங்கள்


கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
KODUM KODUTHUM KUDI KUDI EESARKU AAT SEIMIN KULLAAM PUGUNTHU

Those simple form of disciples you are put bliss towards lord Siva and then got his grace at Siva logam place and then from time immemorial time those disciples are serving under lord Siva’s feet you may mingle with them and then doing service under his feet (lord Siva not only living in sivalogem but also in this land so where ever we will be with him. here after we will not get cause and effect form of birth but only as per order of lord Siva we will again take in this world human form so that serve not only lord Siva but also his disciples ( just like Thiruganasambanther Thiru naayukku araser Suntherer Manikka vasager etc,)
சிவபெருமான் இடத்துப் பேரன்பு செலுத்தியும் அவன் அருளைப் பெற்றும் தலைமுறை தலைமுறையாய் அடியார் கூட்டத்துள் கலந்து எம் பெருமானுக்கு தொண்டு செய்யுங்கள்


அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
ANNADAM KADANTHA PORUL ALLAVILLATHOOR AANATHA VELLAP PORUL

And that vastness form of lord Siva who has controlled all the universe and then also above place living matter form so we cannot measure his vastness form just like our happiness has no boundary in this world and that happiness giving matter form of lord Siva appearing in this world
அப்பெருமான் அண்டசராசரங்கள் எல்லவற்றையும் தன்னுள் அடக்கி அவற்றின் மேலும் அப்பாற்பட்ட பொருள் என்றும் அளவில்லாததான ஒப்பற்ற இன்ப வெள்ளமாகிய பொருள் என்றும்


பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2
PANDUM EANRUM EANRUM YULLA PORUL EANREEA PALLAANDU KOORUTHUMEEA

Lord Siva not only existed in the previous period but he is also now existing with us and then in future also will be existing and that prime matter form of lord Siva so lord Siva is infinitive form in this world so that form of lord Siva is praised and prayed and then salute him so as to live long life in this world
முற்காலத்தும் இக்காலத்தும் எக்காலத்தும் உள்ள பராபரப் பொருள் என்றும் ஆகிய நம் சிவபெருமானைப் புகழ்ந்து பலாண்டு வாழ்க எனக் கூறி நாம் வாழ்த்துவோம்

291. நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
NITTAI EALLA YUDAL NEETHU EANNAI AANDA NEGAR EALLA VANNANGAL

I am not ever permanent form of devotion filled mind and with it I am all the time not standing there and that form of body is converted in to motionless form by the meditation and then taken me lord Siva under your control and then unique form of activities are
இறைவனிடத்தும் அசையாது ஈடுபட்டு நிற்றல் இல்லாத அடியேனுடைய உடலை நிட்டைக்குத் துணை செய்வதாக மாற்றி அடியேனை ஆட்கொண்டு நிகரிலாச் செயல்களையும்


சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
SITTAN SEVAN ADIYAARAI SEERAATUM THERANGALLU MEEA SINTHITHU

Lord Siva highly regarded form who has wanted to glorify his disciples and those type of activities are thinking in his mind
மேம்பட்டவன் ஆகிய சிவபெருமான் தன அடியவர்களைப் பெருமைப் படுத்தும் செயல்களையுமே மனத்துக் கொண்டு


அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
ATTA MOORTHIKU EANA AGAM NEGA YOORUM AMIRTHINUKKU AALA NELAL

Eight types of deities form descended in this world and then my mind melted form of nectar oozing and then all tree shadow place seated in guru teacher form
அட்ட மூர்த்தியாய் என் மனம் நெகிழுமாறு ஊரும் அமுதமாய் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த குருமூர்த்தியாய்


பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3
PATTANUKKU EANAI THAN PAAL PADUTHAANUKKEA PALLAANDU KOORUTHUMEEA

And then through ganna form of teaching and I am surrender as slave and then lord Siva taken me in his control and that form of lord Siva we may praise him to live long life so that this world beings will flourish permanently in this world
அடியேனைத் தன் அடிமையாக ஆட் கொண்ட நாம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக

292. சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
SOLAANDASURUTHIPORUL SOTHITHA THOO MAATHU THONDER YULLEER

With body experience form and with veetha books are reading form and then its meaning is hearing form and in that way glorified form said veetha wards in matter form enquired and then got clear intuitive knowledge in pure form got those disciples you are
மெய்ம் மொழிகளால் நிறைந்த புகழ்ந்து சொல்லப்பெற்ற வேதப் பொருள்களை ஆராய்ந்து துணிந்த தூய மனத்தை உடைய அடியிர்களே


சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
SIL AADIL SEITHAIYUM SELA THEEVAR SERU NERI SEERAAMEEA

In some years appeared flourished and then decayed so many deevaas are need not be taken as prime god form and those short cut route we need not be travel
சில ஆண்டுகள் மறைந்து அழியும் சில தேவர்களைப் பரம்பொருளாகக் கருதும் சிறிய வழியில் ஈடுபடாமல்


வில்லாண் டகன கந்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
VIL AANDA KANAGATH THIRAL MERU VEDANGAN VEDAI BAAGAN

Lord Siva who has converted mere hills as bow and then used it to shoot an arrow and that handsome form of lord Siva who has converted the meru hill as bow and bull as his chariot
பொன்மலையாகிய மேருமலையை வில்லாகப் பணி கொண்ட அழகனை காளையை வாகனமாக உடையவனாய்


பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4
PALLANDU EANNUMPATHAM KADANTHAANUKKEA PALLAANDU KOORUTHU MEEA

Lord Siva who has surpassed the time factor and that form of lord Siva is praised by us to live long life in this world
பல ஆண்டுகள் என்ற காலத்தைக் கடந்தவனாய் உள்ள சிவபெருமான் பல்லானு வாழ்க என்று வாழ்த்துவோமாக

293. புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)
PURAN THARAN MAAL AYAN POOSALITTU

Inthiran thirumal bharma who are filled with ego mind
இந்திரன் திருமால் பிரமன் முதலியோர் செருக்குத் தோன்ற


ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
VOOLAM EATTU EANNAM PUGAL ARITHAAI

They are considered themselves as prime god and then emotional filled form fought among themselves and they failed in their mission and then up to today
முதன்மை பாராட்டி ஆரவாரம் செய்து பின் இன்று வரை


இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட
EARANTH EARANTHU ALAIPPA EANN YUIRAANDA

Because of their ego filled position they are unable to surrender under lord Siva’s feet and then so many yoga’s they are melted form called lord Siva but in vain
எம் பெருமானைச் சரண் என்று அடைய இயலாதவராய் பலகாலம் கெஞ்சிக்கெஞ்சி அழைத்தும்


கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
KOOVINUKKU EANNSEIYA VALLAM EANNUM

But lord Siva in simple form my soul is taken under his control and that form of egoless leader lord Siva to whom what form of consideration will be given to him by us and there is nothing we do not have any capacity to do it in return
அடியேனுடைய உயிரை ஆட்கொண்ட தலைவனுக்கு என்ன கைம்மாறு அடியோம் செய்யும் ஆற்றல் உடையோம்


கரந்துங் கரவாத கற்பக
KARANTHUM KARAVAATHA KARPAGAN

Lord Siva who is all the time concealed to our naked eyes but whatever we want which is given to us in that karpaga tree form appearing in this world
எக்காலத்தும் கண்ணுக்குப் புலனாகாமல் இருந்தும் வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் கற்பக மரம் போல்பவனாய்


னாகிக் கரையில் கருணைக்கடல்
AAGI KARAIYIL KARUNAI KADAL

And that infinitive form grace filled sea way spread every where
எல்ல்லையற்ற கருணைக் கடலாய் எல்லா


பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்
PARANTHUM NERANTHUM VARAM BILLA

And then all the places filled without any vacuum and then surpassed all the barriers and boundaries and then stands every where
இடக்களிலும் விரிந்தும் இடையீடின்றி நிரந்தும் எல்லை கடந்து நிற்கும்


பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5
PAANGERKEEA PALLAANDU KOORUTHUMEEA

That form of lord Siva will be praised by us to live long life in this world
அடிகள் ஆகிய நம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்

294. சேவிக்க வந்தயன் இந்திரன்
SEAVIKKA VANTHA AYAN EANTHIRAN

Those bharma and inthiran come before lord Siva to conduct prayer
வழிபட வந்த பிரம்மன் இந்திரன்


செங்கண்மால் எங்கும்திசை திசையென
SENG KANN MAAL EANGUM THESAI THESAI EANNA

And then red color eye possessed thirumal who has come there and then all the devas are ordered from all the directions to bring prayer material cornered and then carried on hands with ego filled form and then go near lord Siva
சிவந்த கண்களை உடைய திருமால் எண்டும் பல திசைகலாகிய இடங்களில்


கூவிக் கவர்ந்து நெருங்கிக்
KOOVIK AVARNTHU NERUNGI

And then praised lord Siva and then go near to him
அழைத்து வழிபாட்டுக்கு பொருள்களைக் கைக் கொண்டு நெருங்கிக்


குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்
KULLAAM KULLAAM AAI NINRU KOOTHAADUM                                   
and then in group form standing there and sacred dancing is conducted by lord Siva
கூட்டம் கூட்டமாக நிற்க திருக் கூத்தினை நிகழ்த்தும்


ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்
AAVIKKU AMUTHAI EANN AARVATH

And lord Siva who is nectar form to my soul and then to my aspiration
என் உயிர்க்கு அமுதம் போல்பவனை என் அவாவிற்கு


தனத்தினை அப்பனை ஒப்பமார்
THANATHINAI APPANNAI VOPPA MAAR

Lord Siva is wealth to me and then leader form as per birth the highly regarded devaass
உரிய செல்வமாய் எங்கள் தலைவனாய் பிறப்பு வகையால் ஒரு நிகரான தேவர்கள்


பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்
PAAVIKKUM BAVAGATHU APPUATH

Those devaass thinking lord Siva not trapped by them and in those deeva persons thinking power is surpassed form and then stand above them
நினையும் நினைவுக்கு அகப்படாமல் அவர்கள் நினைளையும் கடந்து நிற்கும்


தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6
THAANUKKEA PALLANDU KOORUTHUMEEA

Who is our lord visual form appearing in guru teacher form to us so we praise lord Siva to live long life in this worldநம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக

295. சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
SEERUMTHIRU YUM POLIYA SIVALOOGA NAAYAGAN SEEVADI KEEL

Siva way of character following life and whose grace which are embedded in to my Mind and those Sivaloga hero lord Siva and then under his feet
சிவ நெறி ஒழுக்கமும் அவன் திரு அருளும் அடியேன் இடத்தில் நிலை பெற்று விளங்கும்படி அச்சிவலோக நாயகனாகிய பெருமானுடைய திருவடிகளின் கீழ்


ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?
AARUM PERAATHA ARIYU ETREEAN PETRATHAAR PERUVAAR YULAGIL

And then nobody has got knowledge and that self-knowing knowledge I have got and then from that self- knowledge I have got so many boons and is there anybody to get that self- knowledge I do not know
மற்றயாவரும் பெறாதனதான அறியும் அறிவினைப் பெற்றேன் அந்த அரிவால் அடியேன் பெற்ற பேற்றினை வேறு யாவர் பெறக் கூடும்


ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
YOORUM YULAGUM KALARA YULARI YUMAI MANAVAALANUKKU AAM

In this world living people and then in this state living people and in this hamlet place living people I am lord Siva’s glory is murmured and lordess yumaadevi’s husband named lord Siva
இந்த உலகில் நாட்டில் உள்ளாறும் ஊரில் உள்ளாறும் எடுத்துக் கூறும்படி அ
வன் புகழைப் பிதற்றி உமாதேவியின் கணவனாகிய எம் பெருமானுக்கு


பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7
PAARUM VESUM BUM ARIYUM PARISU NAAM PALLAANDU KOORUTHUMMEEA

We are surrender under lord Siva’s feet which is known by this world people and then upper world people and all are known form we praise lord Siva to live long life in this world
நாம் அடிமையாகிய திறத்தை இந்த நில உலகத்தாரும் தேவர் உலகத்தாரும் அறியும் வகையில் அப்பெருமான் பல்லாடு வாழ்க என்று வாழ்த்துவோமாக

296. சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
SEELUM KAYALUM THELAIKKUM KANNAAR EALAM KONGAI SENG KUNGUAM

The sale fishes and kayal fishes are comparable form of broad eyes are possessed ladies who are adorned in their breast place adorned kum kum form
சேல் மீனையும் கயல் மீனையும் உவமை கூறும் படியான கண்களை உடைய இளமைகளிரின் கொங்கைகளில் பூசப்படும் குங்குமத்தைப் போல


போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
POOLUM PODI ANI MAAR BELANGUM EANRUPUNNIYAR POTRI EASAIPPA

Lord Siva who has adorned in his sacred bosom place the white ashes and in that way disciples are glorified form praising lord Siva
எம் பெருமான் திருமார்பில் திரு நீறு விளங்குகிறது என்று அடியவர்கள் புகழ்ந்து கூற


மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
MAALUM AYANUM ARIYAA NERI THANTHU VANTHEEAN MANATHUAGATHEEA

Bharma and thirumal not know that way is showed to me and then in to my mind
திருமாலும் பிரம்மனும் அறிய முடியாத வழியைக் கட்டி அடியேன் உள்ளத்தில்


பாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8
PAALUM AMUTHAMUM COYHU NINRAANUKKEEA PALAANDU KOORUTHUMEEA

Lord Siva appeared milk and nectar form that wonderful lord who gives me new way of life and ever permanent form of lord Siva we praise him to live long life
பாலும் அமுதும் ஒத்து இனிமையானவாகியும் புத்துயிர் அளிப்பவனாகியும் நிலை பெற்றிருக்கும் எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக

297. பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
PAALUKKU BALAGAN VEENDI ALUTHIDA PAAL KADAL EENTHA PERAAN

The saint named veyakiratha father whose son named yubamanuu who has lost his mother so that he cried for milk to who lord Siva gave Milk Sea to drink that benevolent form of lord Siva
பாலை உண்பதற்கு வியாக்கிர பாத முனிவர் புதல்வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால் பெறாது அழுது வருந்த அவனுக்குப் பால் கடலையே அழைத்து வழங்கிய பெருமானாய்


மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
MAALUKKU SAKKARAM ANRU ARUL SEITHAVAN MANNIYA THILLAI THANNUL

Once up on a time lord Siva gave circle force to thermal as per his request and in that grace filled form lord Siva who has in ever permanent place thillai
ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய் நிலை பெற்ற தில்லைத் திருப்பதியிலே


ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
AALIKUM ANTHANAR VAAL GINRA CHITRAMBALAMEEA EADAMAAGA

The veethaass are chanting bharmins are living those place chitrambalam where lord Siva stayed permanently
வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நின்ற சிற்றம்பலத்தையே இடமாகக் கொண்டு


பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9
PAALITHU NATTAM PAIYILA VALLAANUKKEEA PALAANDU KOORUTUMEEA

Those grace pouring is dancing is conducted lord Siva to whom feet we pray and then praised him to live long life
அருளை வழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக

298. தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
THAATHAIYAI THAAL ARA VEESIYA SANDIKKU EAVV ANDATHOODUM YUDANEEA

Sandeesa nayanaar who has amputated his father’s feet with malu battle force to whom lord Siva gave so that not only upper world deevaas but also in this land people are praying form
தன் தந்தையின் கால்கள் நிங்கும்படி மழு ஆயுதத்தை வீசிய சண்டேச நாயனாற்குக்கு அந்தவான் உலகத்தோடு


பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்
POO THALATHOORUM VANANGA PON KOIL LUM PONAGAMUM ARULLI

Lord Siva gave him lovely place to pray and then in addition the sacred food placed before lord Siva is also given to him
நில உலகத்தவர் ஒரு சேர வணங்குமாறு அழகிய இருப்பிடமும் தனக்கு நிவேதிய உணவும் வழங்கி


சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
JOOTHI MANI MUDI THAAMAMUM NAAMAMUM THONDERKKU NAAYAGAMUM

And then lord Siva in his lovely hair place adorned the flower garland and then gave him sandman and those special name and then leadership position on his disciples
ஒளி பொருந்திய அழகிய முடியில் அணிந்த தன் மாலையையும் சண்டன் என்ற சிறப்புப் பெயரும் அடியவர்களுக்குத் தலைமையும்


பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10
BAATHAGATHUKKU PARISU VAITHAANUKKEA PAL LAANDU KOORUTHUMEEA

Those wild act done by him but lord Siva gave praise for his act so we pray under his feet and blessed him to live long life
தாம் செய்த பாதகச் செயலுக்குப் பரிசாக வழங்கிய எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக

299. குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
KULAL OLI YWAL OLI KOOTHU OLI EEATHU OLI EANGUM KULLAAM PERUGI

The flute sound and yawl musical instrument sound and then dancing and singing sound and then prayer sound all are clubbed form of big sound
வேய்க் குழல் ஓசை யாழின் ஓசை கூத்தாடுதலின் ஒலி துதித்தலின் ஓசை என்பன கூட்டமாகப் பெருகித்


விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
VELA VOLI VINNALAYUM SENRU VIMMI MIGU THIRU AAROORIN

At the festival time in thiru vaaroor raised sound went up to the sky level in multiplied form
திருவிழா நாளில் நிகழ்த்தப்படும் ஓசையோடு கூடிய வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில்


மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
MALA VEDAI YAAR KU VALI VALI AALLAAI MANAM SEI KUDI PERANTHA

Lord Siva who has young bull as his chariot and then hereditary form of slavery service is doing under lord Siva’s feet win that sect marriage is conducted and then in that family place taken birth
இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமானுக்கு பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய குடும்பங்களுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்கின்ற குடும்பங்களில் பிறந்த


பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11
PALA ADIYAAR RODUM KOODI EAMMAANUKKEEA PALANNDU KOORUTHU MEEA

And that hereditary form of disciples who will praise lord Siva to live long life
பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக


300. ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
AARAA VANTHAAR? AMARAR KULAATHIN ANI YUDAI AATHIRAI NAAL

The lovely in the Tamil month margali and those thiruvathirai day to praise lord Siva who are come from upper world
அழகிய மார்கழித் திருவாதிரை நாளில் சிவபெருமானைப் புகழ்ந்து பாடுதற்கு தேவர் கூட்டத்தில் யார் ஆர் வந்தனர்


நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
NAARAAYINA NODU NAAN MUGAN ANGI EARAVIYUM EANTHIRANUM

It is good thirumal bharma fire god and sun god all are come over here
திருமாலும் பிரதேவனும் அக்கினி தேவரும் சூரிய தேவனும் வந்தனரா நன்று


தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
THEER AAR VEETHIYIL THEAVER KULANGAL THESAI ANAITHUM NERAINTHU

And then chariots are running those big four streets where deeva cluster all the places spread over form standing
தேரோடும் சிவமே நிலவும் நான்கு திருவீதியிலும் தேவர்களின் கூட்டங்கள் எல்லா திசைகளிலும் பரவி நிற்க


பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12
PAAR AAR THOL PUGAL PAADIYUM AADIYUM LALLAANDU KOORUTHUMEEA

The whole world filled lord Siva whose good old glory is singing form and dancing form we will praise lord Siva to live long life
உலகெலாம் நிறைந்த இறைவனின் பழமையான புகழைப் பாடிக் கொண்டும் மெய் மறந்து கூத்து ஆடிக் கொண்டும் அவனைப் பல்லாண்டு வாழ்க என கூறி நாம் போற்றுவோம்

301. எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
EANTHI EAN THAAI SUTRAM MUTRUM EAMAKKU AMUTHAAM EAM BIRAAN EANRU EANRU

Lord Siva you are my father and mother and then my relatives and then nectar form to me and in this way appearing lord Siva and in this way so many times and long period said and then prayed before lord Siva
என் தந்தையும் என் தாயும் என் உறவினர் எல்லாரும் ஆகி எமக்கு அமிர்தமாகி நின்ற எம் பெருமானே என்று பலகால் சொல்லித் துதித்து


சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
SEIN THAI SEIYUM SEVAN SEER ADIYAAR ADI NAAI SEP PURAI

Without any interruption thinking form of lord Siva’s disciples to whom I am serving under those disciples feet that dog like person I am and then descended seppurai hamlet place
இடைவிடமால் நினைக்கின்ற சிவபெருமானது சிறப்புள்ள அடியார்களுக்கு அடிமை புரியும் நாய் போன்ற செப்புரை என்ற ஊரில் உள்ள


அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
ANTHAMIL AANANTHA SEEANTHAN EANAI PUGAL THAANDU KONDAAR YUIR MEEAL

I am named seanthanaar and got much happiness and then lord Siva who has forcefully entered in to me and then taken me as slave
முடிவு இல்லாத மிகுந்த பரவசம் அடைந்த சேந்தன் ஆகிய என்னை வலிய வந்து ஆட்கொண்டு என்னுள் புகுந்து


பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13
PANTHAM PERIYA PARINTHAVANEEA EANRU PALLAANDU KOORUTHUMEEA

My ego filled mind and its bonds are terminated form and then in my rare life lord Siva you have poured your grace and then those lord Siva’s glory we may praised and then pray under his feet and then live long in this way we praised him
எனது ஆணவம் முதலிய மலக் கட்டுகளை அழித்து என் அறிய உயிர் மீ
து அருள் பாவித்து விளங்குபவனே என்று சிவபெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம்.
OM THIRU CHITRAM BALAM

திருச்சிற்றம் பலம்

திருவிசைப்பா – 9ம் திருமறை முற்றிற்று

This page was first put up on Jan 9, 2001
This file was last revised on 9th October 2008
Please send your comments and corrections to the Webmaster of this site

OR
Please send your corrections

August 17, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: