OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

4.POON THURUTHI NAMBI KAADA NAMI ARULIYA THIRU VESAIPAA

ganesheit August 17, 2019

பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
POON THURUTHI NAMBI KAADA NAMI ARULIYA THIRU VESAIPAA

4.திருவாருர்
THIRUVAROOR

183. கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
KAIKKU VAAN MUTHIM SARI VALAI PEITHU

In the hand place the white pearls are embedded form red color bangles are adorned form of
தமது கரங்களில் வெண்மையான முத்துகளாய் பதிக்கப் பெற்ற சிவந்த வளையல்களை அணிந்து


கழுத்திலோர் தனிவடங் கட்டி
KALUTHI VOOR THANI VADAM KATTI

கழுத்திலே ஒப்பற்ற மாலையைத் தரித்து
And in the neck place wonderful garland adorned


முக்கண்நா யகராய்ப் பவனிபோந் (து) இங்ஙன்
MUKKAM NAAYAGA GARAAI PAVANI PONTHU EANGAN

The three eyed possessed form of lord Siva in the street place going procession
மூன்று கண்களை உடைய இறைவராய் வீதியில் திரு உலா வந்து


முரிவதோர் முரிவுமை அளவும்
MURIVATHOOR MURI YUMI ALAYM

And in that way lord Siva body is twisted form dancing and its meaning is known by lordess parvathi
அங்ஙனம் உடம்பை வளைத்து எம் பெருமான் ஆடும் ஆட்டத்தில் விளக்கம் உமாதேவி அளவிலும்


தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
THAKKA SEERGANGAI ALAYUU MATRU EANNOO

And then in the Ganges place not controlled form and that highly regarded form appearing lord Siva and whose concept is what type we do not know it
கங்கா தேவி அளவினும் அடங்காத மேம்பட்டு உள்ளது எம் பெருமான் உடைய கொள்கை தான் யாதோ


தம்மொருப் பாடுல கதன்மேல்
THAM MORU PAADULA GATHENN MEEAL

And in this world place specialty filled form
இந்த உலகிலே மிக்க சிறப்பை


மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி
MIKKA SEER AAROOR ATHIYAAI VEETHI

And then in the thiruvaaroor place the principal form and in that street place going in royal procession form handsome manner
உடைய திருவாரூரில் முதல்வராய் வீதியில் திரு உலாப் போகும் அழகராய்


விடங்கராய் நடம்குலா வினரே. 1
VEDANGARAAI NADAM KULLAA VINAREEA

Lord Siva who is dancing a particular dance named aasaba dance in that procession
அசபா நடனம் என்று போற்றப்படும் கூத்தினைச் சிறப்பாகப் புரிந்து வருகின்றார்

184. பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
PATHIYAAI YUNARVOOR ARULAI VAAI MADUTHU

Those disciples who are with devotion form seated in meditation and those disciples are to consume his grace

சிவபெருமாநிடத்துப் பக்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப் பருக


பருகுதோ(று) அமுதம்ஒத் தவர்க்கே
PARUGU THOORUM AMUTHAM VOOTHAVERKEEA

While consuming it is nectar form
அவர்கள் பருகும் தோறும் அமுதம் போல அவர்களிடத்தில்


தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
THITHIYAA EARUKKUM THEVERGAL EAVER THAM

It gives tastier experience and then deevaas whose
இனிக்கும் தேவர்களே அவருடைய


திருவுரு இருந்தவா பாரீர்
THIRU YURU EARUNTHAVAA PAAREER

Sacred appearance is this form only
திருஉருவம் (அருள் வடிவம்) இருந்த வீதம் இத்தன்மையது


சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
SATIYAAI SEVAMAAI YULAGU EALLAAM PADAITHA

Lord Siva appeared in the sakthi grace filled form and then in prime Lord Siva form all the worlds are created
எம் பெருமான் அருள் சக்தியாகவுள் மங்கலமாகிய சிவமாகியும் உலகங்கள் எல்லாம் படைத்த


தனிமுழு முதலுமாய் அதற்கோர்
THANI MULU MUTHALLUMAAI ATHER KOOR

And that wonderful prime god matter form and then this world is created form
ஒப்பற்ற முழுமுதல் பொருளாகியும் உலகம் தோன்றுவதற்கு


வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி
VITHUMAAI AAROOR AATHIYAAI VEETHI

He is seed form existing in this world and then in the thiruvaaror place prime deity form and then in the streets
வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில்


விடங்கராய் நடம்குலா வினரே. 2
VEDANGARAAI NADAM KULLAVINAREEA

Who is going in procession form of dancing asabaa dance
உலா வரும் அழகரை அசபா நடனம் என்றும் கூத்து நிகழ்த்துகின்றார்

  1. கோயில் – முத்து வயிரமணி
    KOIL—MUTHU VAIYIRA MANI

185. முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்
MUTHUU VAIYIRA MANI MAANIKKA MAALAI KANN MEEAL

The pearls diamonds and ruby and all the stones are studded form of garland made and then on it
முத்து வயிரம் மாணிக்கம் என்ற மணிகளால் செய்யப்பட்ட மாலையின் மேல்


தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப்
THITHU MILIRVANA POL THOONDU VELAKKU EEAIPA

The flower bunches are light flashed form and then stimulated light form
பூங்கொத்துக்கள் ஒளி வீசும் போன்று தூண்டப்பட்ட விளக்கின் ஒளி போன்று


எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
EANN THESAI VAANAVARUM EAATHUM EALIL THILLAI

And then all directions seated deevaas are prayed and praised form of lord Siva and then in the Chidambaram temple place
எல்லாத் திசைகளிலும் உள்ள தேவர்கள் போற்றிப் புகழும் தில்லை திருத்தலத்தில் உள்ள


அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. 1
ATHANUKKU AMBALAMEEA ADARANGAM AAYITREEA

The light glittering temple named ponnambalam where lord Siva all the time dancing stage
ஒளி வீசும் பொன்னம் பலம் எம் பெருமானுக்கும் திருக்கூத்து நிகழ்த்தும் அரங்கமாக உள்ளது

186. கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
KADIYAAR GANAMPULAR KANNAPPER EANNUL

My dear lord Siva your specialty filled disciples named pulla nayanaar and kannap pa naayanaar who are ruling the
எம் பெருமானே சிறப்பு மிக்க புள்ள நாயனார் கண்ணாப்ப நாயனார் என்று பெயர் கொண் உன்


அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே
ADIYAAR AMAR YULLAGAM AALLA NEE AALAATHEEA

The sivaogam place but you do not ruled it
பக்தர்கள் சிவலோகமாக்கிய வீடு பேற்றுலகத்தே ஆளவும் நீ அதன் கண் ஆட்சி செய்வதனை விடுத்து


முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும்
MUDIYA MUTH THEE VEELVI MOOVAA YIRVAR RODUM

And then not perishable form of three types of fire are daily developing those chithamparam place living three thousand Brahmins are
என்றும் அழிதல் இல்லாத முத்தீர்க்களால் வேள்விகளை நிகழ்த்தும் தில்லை மூவாயிராவர்


குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. 2
KUDI VAALKAI KONDU NEE KULLAAVI KOOYHU AADINAIYEEA

With them lord Siva you are living those life form you have happily accepted and then happily dancing here
அந்தனரோடு உடன் உறையும் வாழ்கையை மேற்கொண்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்து ஆடுகின்றாய்


187. அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்
ALLIYAM POOM PALANATHU AMMOOR NAYUKU ARASI

With internal petals are filled those lovely ponds place where descended saint thirunayukku araser
அக இதழ்களோடு கூடிய அழகிய பூக்கள் பொருந்திய வயல்களை உடைய திருவாரூரில் அவதரித்த திருநாவுக்கரசு சுவாமிகள்


செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்
SELLA NERI VAGUTHA SEVAGANEEA THEN THILLAI

Lord Siva you’ve showed him mukthi way of life that brave hero you are, and then in chithambaram place
முக்தியை அடையும் பொருட்டு வழியினைக் காட்டிய வீரனே அழகிய தில்லை நகரில்


கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்
KOLLAI VEDAI YEERI KOOTHAADU ARANGAAGA

In the hilly place grassing the bull one is accepted as travelling medium and then to dance that stage
முல்லை நிலத்தில் மேயும் காளையை ஒத்த காளையை இவர்ந்தவனே நீ கூத்தாடுதலைநிகழ்த்தும் அரங்கமாகச்


செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. 3
SELVAM NERAINTHA CHITRAMBALAMEEA SEERN THANAI YEEA

Which is wealth filled place chitrambalam temple you have got as permanent one
செல்வம் மிகுந்தில்ள்ள சிற்றம்பலத்தே அடைந்துள்ளாயே

188. எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்
EAM BANTHA VALVENAI NOOI THEERTHIYTTU EAMAI YAALUM

I am bound the wild miss deed decease is lord Siva you have completely eradicated and then accepted me as your disciple
எம்மைப் பிணித்திருக்கும் கொடிய வினையாகிய நோயினை அறவே அழித்து எம்மை அடியவராகக் கொண்ட


சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளி
SAMBANTHAN KAALIYAR KON THANAIYUM ATT KONDU ARULI

The seergaali place king thiru gaanasambantha naayanaaris accepted as your slave and then blessed him
சீர்காழி மன்னனாகிய திருஞானசம்பந்த நாயனாரையும் அடிமையாகக் கொண்டருளிய பெருமானுக்கு


அம்பந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்
AMM BANTHUM KANN AALUM THAANUM ANI THILLAI

The arrow like sharp eyes are possessed lordess yumaadevi and lord Siva and then descended in the lovely chithambaram place
அம்பு போன்ற கண்களை உடைய உமாதேவியும் தாமுமாக அழகிய தில்லைத் திருத்தலத்திலுள்ள


செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே. 4
SEMBON SEI AMBALAMEEA SEERN THIRUKKAI AAYITREEA

That ponnambalam place is permanent dwelling place
பொன்னம்பலமே எழுந்தருளி இருப்பதற்குரிய இடமாக ஆகிவிட்டது


189. களையா உடலோடு சேரமான் ஆருரன்
KALAIYAA YUDALOODU SEERAMAAN AAROORAN

Sundara moorthy naayanaar and searamaan perumaan naayanaar who are with their own body
தம் உயிர் இந்த உடம்பை விடுத்து நீங்கமால் இந்த உடலோடு சேரமான் பெருமான் நாயனாரோடும் ஆரூரன் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார்


விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
VELLAIYAA MATHA MAARAA VELL YAANAI MEEAL KOLLA

The mad saliva shedding the white elephant on it ascended form suntherer moving and then seeramaan perumaan naayanaar travelled on the back of horse and then approached the kaiyilai hills
மதத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தல் நீங்காத வெள்ளை யானையைக் கயிலை மலையை அடைவதற்கு இலர்ந்து செல்லவும் சேரமான் குதிரை மீது கயிலையை அடைந்தார்


முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
MULAIYAA MATHI SOODI MOOVAA YIRAVAR RODUM

Lord Siva you have adorned the curved moon on the hair place and in Chidambaram place dwelling three hundred Brahmins
இளம் பிறையைச் சூடிய பெருமானே நீ தில்லை மூவாயிரவரோடும்


அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. 5
ALAIYAA VELAI YAADUM AMBALAM NINN AADARANGEEA

With them clubbed form that temple named thiru chitrambalam is all the time dancing form you are blessed your disciples
கவர்ந்து விளையாடுகின்ற திருச்சிரம்பலமே உனக்குக் கூத்தாட்டு நிகத்தும் அரங்கமாக உள்ளது

190. அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
AGA LOOGAM EALLAAM ADIYAVARGAL THAR SOOLA

My dear lord Siva in the whole world disciples are covered form moving
இறைவனே உலகம் முழுவதும் உள்ள அடியவர்கள் உன்னைச் சூழ்ந்துவர


புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
PUGALOOGAM YUNDU EANNRU PUGUM EADAM NEE THEEDAA THEEA

There is yet another place available and in that you do not searing yet another place
அடையத்தக்க உலகம் வேறு உண்டு என்று கருதி நீ அந்த இடத்தைத் தேடிச் செல்லாமல்


புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்க்
BUVALOGA NERI PADAITHA PUNIYANGAL NANNIYA SEER

To go upper world those Siva punniyaa acts are filled place and that speciality filled
மேல் உலகங்களுக்குச் செல்லும் வழியை உண்டாக்கும் சிவா புண்ணியச் செயல்கள் பொருந்திய சிறப்பினை உடைய


சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே. 6
SIVALOGAM AAVATHUYUM THILLAI CHITRAM BALAMEEA

That Sivalogam form available place is Chidambaram temple named chitrambalam
சிவலோகமாக விளங்குவதும் தில்லைத் தளத்தில் உள்ள சிற்றம்பலமே ஆகும்


191. களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
KALAGA MANI MAADAAM SOOLIGAI SOOL MAALIGAI MEEAL

The white lime paste is applied form constructed the upper storied mansions and its entrances which are covered big houses and its top place
வெண்மையான சுண்ணாம்புச் சாந்து பூசிய அழகிய மேல் மாடமும் மேல் மாடத்தின் முகப்பும் சூழ்ந்துள்ள பேர் இல்லங்களின் மேல் நிலத்தில்


அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ALAGA MATHI NUTHALAAR AAYILAIYAAR POTRI EASAIPPA

The hairs are set in the forehead place which is curved moon form appearing
கூந்தல் வது பிடித்திருக்கும் பிறை போன்ற நெற்றியை உடையவராகிய


ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
OLI KONDA MAAMANIGAL VOONGU EARULAI AANGU AGATRUM

Well selected form adorned the ornaments ladies are pray and praised with prayer songs where glittering form of ruby diamond stones are heaped form darkness is removed
ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த மகளிர் உன்னைப் போற்றிப் பாட நல்ல பிரகாசம் உடைய இரத்தினக்கல் அவ்விடத்தில் குவியும் இருளைப் போக்கும்


தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே. 7
THELI KONDA CHITRAMBALAM SEERN THANAIYEEA

The clear light filled thillai chithabaram temple place named chitrambalam where you have approached
தெளிந்த ஒளியை உடைய தில்லைப் பதிக்கண் உள்ள சிற்றம்பலத்தையே நீ வந்து சேர்ந்துள்ளாய்


192. பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
PAADAGAMUM NOO PURAMUM PAL SELAMBUM PEER THU OLIPPA

On the ladies leg place adorned chapels and nooburm and anklets all are swayed form raised sound
மகளிர் கால்களில் அணியும் பாடகம் நூபுபுரம் சிலம்பு என்பன அசைந்து ஒலிக்கவும்


சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்
SOODAGAKKAI NALLAAR THOLUTHU EEATHA THOL YULAGIL

The bangles are adorned ladies are daily thinking form praying and then good old world
வளையல்களை அணிந்த கையினை உடைய பெண்கள் நாள்தோறும் நினைந்து வணகித் துதிக்கவும் பழமையான உலகமாகிய


நாடகத்தின் கூத்தை நவிற்றுமலர் நாடோறும்
NADAGATHIN KOOTRAI NAYTRUM AVER NAAL THOORUM

In the actor stage pace al the living souls are allowed to dance in this world and that lord you are
நாடக மேடையில் உயிர்களை எல்லாம் கூத்தாடச் செய்பவராகிய சிவபெருமானே


ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. 8
AADAGATHAAL MEEINTHU AMAINTHA AMBALAM NIN AADARANGEEA

The 24 karat gold with it established ponnambaam temple is your dancing stage
மாற்று உயர்ந்த பொன்னால் அமைக்கப்பட்ட பொன்னம்பலமே உனது நடனமிடும் நடன அரங்கு ஆகும்

193. உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
YURUVATHU EARI YURUVAAI YOOLI THORUM EATANNAIYUM

The lovely fire pole form lord Siva you have appeared so many karpaa period
அழகை உடைய தீப்பிளம்பாக தூண்வடிவத்துடன் பல கற்பகாலம் அளவும்


பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
PARAVI KEDATHA AYANUM MAALUM PANINTHU EEATHA

In all place lord Siva you have spread over form but your head and feet not seen by bharma and thirumal and then prayed under your feet
எங்கும் பறந்து நின்றபோது பிரமனும் திருமாலும் நின் அடி முடி காண இயலாமல் வணங்கித் துதிக்கவும்


இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
EARAVIKKU NEER AAGI EAITHU EALANGUMAALIGAI SOOL

The mansions are spread over rays just like sun form
சூரியனுக்குச் சமமாக ஒளி பொருந்தி விளங்குகின்ற மாளிகைகள் சூழ்ந்துள்ள


அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
ARAVIKKUM AMBAAMEEA AADARANGAM AAYITREEA 9

The god praising sound hara hara and then prayer conducting place is chitram balam which is your dancing plot form
அரகர என்று சப்தம் எழுப்பி போற்றுவதற்கு இடமாகிய திருச்சிற்றம்பலமே உனது நடன அரங்கம் ஆகும்

194. சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்
SEEDAR YURAI THILLAI CHITRAM BALATHAAN THANN

The elderly people are living place is chithambarm where established temple named chitrambalam which you have possessed
சான்றோர்கள் வசிக்கின்ற தில்லைச் திருத்தலத்தில் உள்ள சிற்றம்பலத்தை உடையவனாகிய


ஆடல் அதியசத்தை ஆங்கறித்து பூந்துருத்திக்
AADAL ATHSAIYATHAI AANG ARINTHU POON THURITHEE

Lord Siva who is dancer and your specialty is sung by poon thuruthi place descended
கூத்தப் பிரானுடைய ஆனந்தக் கூத்தின் சிறப்பினை பூந்துருத்திக்


காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து
KAADAN THAMIL MAALAI PATHUM KARUTHU ARINTHU

Kaada name who has composed the above Tamil garland which are ten in number and its meaning is known form
காட நம்பி இயற்றிய தமிழ் மாலையில் உள்ள பாடல்கள் இவை பத்தினையும் அவற்றின் கருத்து அறிந்து


பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே. 10
PADUM EAVAI VALLAAR PATRU NELAI PATRUVAREEA

Those disciples who are singing it they will ultimately enter in to sivalogam
பாடும் தொழிலில் வல்லவர்கள் அடையத்தக்க இடமாகிய வீடுபேற்றினை அடைவர்

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

August 17, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: