OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPPARAAITHTHURAI

ganesheit August 2, 2019

1.135 திருப்பராய்த்துறை

THIRUPPARAAITHTHURAI


பண் – மேகராகக்குறிஞ்சி

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் – பொன்மயிலாம்பிகையம்மை.
This is chola kingdom temple. This is River cauvery southern side temple. Lord Siva who has converted himself as nacked beggar form and then tharugavanam saints ego is suppressed and then bless them all so this place is called in the name of tharugaavanam. The palm tree is temple tree. In this place Indira gubearen sabtha rishis are prayed here


காவிரி தென் கரைத்தலம் இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அருள் புரிந்த திருத்தலம் தாருகாவனம் என வழங்கப்படுவது பராய்மரம் தருக்க விருட்சம் இந்திரன் குபேரன் சப்தரிஷிகள் வழிபட்ட தலம்.
திருக்கருவூர் ஆணிளையைப் போற்றி திருஞனசமந்தப் பிள்ளையார் திருப்பராய்த் துறையை அடைந்தார்கள்
அங்கே நெற்றித் தனிக் கண்ணர் கோயிலை நண்ணிக் கும்பிட்டு கேதில் தமிழ்ச் சொல் மாலையாகிய நீர் சேர் வருவதோர் என்றும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்


In the thiru karuvoor temple place at first prayed and then entered in to thiru paraai thurai temple place and then sang the following songs


1448 நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
Neeru seer vathoor meaniyar neerealai

The sacred ashes are adorned on the sacred body place
திரு நீறு அணிந்த திருமேனியை உடையவர்


கூறுசேர்வதொர் கோலமாய்ப்
Kooru seervathoor kolamai

So many attractive ornaments are wearied lordess yumadevi is given left part of lord Siva’s body and that twin appearance possessed form of
அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர்


பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
Paaru sear thalai kaiyar paraai thurai

The vultures are followed and that highly stinking the bharma skull is carried on hands place and then going for begging food in thirupparaaithurai place
பருந்துகள் தெடரத் தக்க தாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரம்மன் தலையோட்டைக் கையில் கொண்டவர் திருப்பராய்த் துறையில்


ஆறுசேர்சடை அண்ணலே
Aaru sear sadai annalea

Lord Siva who has adorned Ganges on his hair place
கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர்.

1449 கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
Kanthamaa malar konrai kamal sadai

The fragrance filled best flowers and konrai flowers are adorned on the head hair place
மணம் கமழும் சிறந்த மலர்களும் கொன்றையும் மணக்கும் சடை முடியின் மேல்


வந்தபூம்புனல் வைத்தவர்
Vantha poom punal vaithavar

The flooded form of going Ganges is kept on his hair place
பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளார்


பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
Paithann mathavi soolntha paraaithurai

The lust green form of kurukkathi creeper plants are covered place is thirupparaai thurai where active form of
பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த் துறையில் விளங்கும்


அந்தமில்ல அடிகளே.
Anthamilla adigalea

And that ever permanent form of lord Siva
அழிவற்றவராகிய இறைவர்.

1450 வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
Veethar veetha mellaam muraiyaal veritha

Veethaass are blessed form given to this world and all the veethaass are as per rule explained
வேதங்களை அருளிச் செய்தவர் எல்லா வேதங்களையும் முறையாக விரித்து


தோதநின்ற ஒருவனார்
Vootha ninra oruanaar

Its meaning and that wonderful form of lord Siva
பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர்


பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
Pathi pennuru aavaar paraithurai

Lord Siva on his body half part is appearing in female form and in thirupparaai thurai temple place
தமது திருமேனியில் பாதிப் பெண்ணுருவாக விளங்குபவர் திருப்பராய்த் துறையில்


ஆதியாய அடிகளே.
Aathiaayiya adigalea

To all the life form he is the creator form existing in this world
எல்லா உயிர்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளி உள்ள இறைவர்

1451 தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
Thoolum tham marai aadai sudar vidu

Tiger skin is adorned in the waist place as dress and then glittering form of
புலித் தோளைத் தம் இடையிலே ஆடையாக உதித்தவர் ஒளி பொருந்திய


நூலுந்தாமணி மார்பினர்
Noolum thaam ani maarbinar

Three knotted thread adorned on the bosom place
பூணூல் அணிந்த மார்பினை உடையவர்


பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
Paalum neiyum payinraadu paraaithurai

Lord Siva given daily bath by milk and ghee which is willingly accepted lord Siva in thirupparaai thurai temple place
பால் நெய் முதலியவற்றை விரும்பி ஆடும் இறைவர் திருப்பராய்த் துறையில்


ஆலநீழல் அடிகளே.
Aala neelal ninra adigalea

In the papal tree under it dwelling lord Siva
ஆலமரத்து நிழலில் எழுந்தருளிய இறைவர்

1452 விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
Veeravi neeru mei poouvaar meani meal

Lord Siva in his whole body place sacred ashes are adorned in paste form
திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப் பூசியவர்


இரவில்நின்றெரி யாடுவர்
Earavilninru eari aadupaver

At the night time in the burial ground place lord Siva carried fire on his hand and then all the time dancing
நல் இரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர்


பரவினாரவர் வேதம்பராய்த்துறை
Paravinaar aver veetham paraai thurai

Veethaas are all the time chanting him and in that form seated in thiru paraai thyrai temple place
வேதங்களால் பரவப் பெற்றவர் திருப்பரைத்துரையில்


அரவமார்த்த அடிகளே
Aaravam aaratha adigalea.

In the waist place snake is tied as belt form and who is prime lord Siva
பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர்

1453 மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
Maraiyum oothuvaar maan marikkaiyar

Veethaas are all the time chanting form and carried stage on the hand place
வேதங்கள் ஓதுபவர் மான் கன்றைக் கையின் கண் உடையவர்


கறைகொள்கண்ட முடையவர்
Karai kol ganda mudaiyaar

The poison tainted throat possessed lord Siva
விடக் கறை கொண்ட கண்டத்தை உடையவர்.


பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
Paraiyum sangum oli sei paaraithurai

The drums and conch sounds are all the time hearing form of festivals are conducted and in that busy thirupparai thurai temple place
பறை சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பரைத்துரையில்


அறையநின்ற அடிகளே
Araiya ninr adigallea

All the time praised form of descended in the thirupparrai thurai temple place by lord Siva
எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர்.

1454 விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
Veedum eearuvar venn podi poosuvar

In the bull back ascended form moving everywhere and then white ashes are adorned all over the body places
விடையேற்றினை ஊர்ந்து வருபவர் வெண்மையான திருநீற்றைப் பூசுபவர்


சடையிற்கங்கை தரித்தவர்
Sadaiyil gangai tharithaver

And in the hair place Ganges are adorned form
சடையின் மேல் கங்கையைத் தரித்தவர்


படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
Padai kol venn malu vaalar paraaithurai

The white malu force and in the thirupparai thurai place carried on hands
வெண்மையான மழுவைப் படைக் கலனாகக் கொண்டவர் திருப்பரைத்துரையில்


அடையநின்ற அடிகளே
Adaiya ninra adigallea

Embedded form existing lord Siva
பொருந்தி விளங்கும் இறைவர்.

1455 தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
Tharukkin mikka thasakerevan thannai

The mighty powerful ravana whose ten heads are smashed with his single leg finger
வலிமை மிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத்


நெருக்கினார்விர லொன்றினால்
Nerukkinar veral onrinaal

In that way leg finger used form smashed him
தம் கால் விரல் ஒன்றினால் நெரித்தவர்


பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
Parukkinaar avar polum paraai thurai

In the thakken conducted yaga fire where thiruparai thurai place descended lord Siva
தக்கன் வேள்வியில் திருப்பராய்த் துறையில் எழுந்தருளிய இறைவன்


அருக்கன்றன்னை அடிகளே.
Arrukkan thannai adigalea

The son god’s teeth are blasted
கதிரவனின் பற்களை தகர்த்தவர்

1456 நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
Natraa maamalar raan nodu maalumaai

The fragrance filled lotus flower place seated bharma and thirumal
மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன் திருமால் ஆகியோரால்
And above persons are not seen your feet and head and that appearance possessed form


தோற்றமும் மறியாதவர்
Thotramum ariyaathavar

அடிமுடி ஆரியப் பெறாத தோற்றத்தினை உடையவர்


பாற்றினார்வினை யானபராய்த்துறை
Patrinaar venai yaana paarai thurai

Those disciples who are praying lord Siva and whose bad deeds are removed form lord Siva seated in thirupparaai thurai temple place
தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர் திருப்பரைத்துரையில்


ஆற்றல்மிக்க அடிகளே
Aatral mikka adigalea

And that capacity possessed lord Siva
ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள் .

1457 திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
Thiru veli sela theraman aathargal

Not punniya form of buthaa and samana who are low graded persons
புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும் சமணர்களாகிய கீழ் மக்களும்


உருவிலாவுரை கொள்ளேலும்
Yuruvilla yurai kollelum

Whose immaterial form of preaching need not be heard
கூறும் பொருளற்ற அருவுரைகளிக் கேளாதீர்


பருவிலாலெயில் எய்துபராய்த்துறை PARUVILALEYIL EITHUPARAAITH THURAI
The big meru hills are converted as bow form and then shot an arrow and then destroyed the three castles and then protected this world from destruction and that form of lord Siva who is dwelling in thirupparaai thurai temple
பெரிய மேரு மலையாகிய வில்லால்முப்புரங்க்களை எய்து அழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துரையில்


மருவினான்றனை வாழ்த்துமே.
Maruvinaan thanai vaalthuthmea

Where descended lord Siva you may pray and praise him
எழுந்தருளி இருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக

1458 செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
Selvam malkiya selvar parrai thurai

With material wealth filled form of living Siva grana people in thirupparai thurai temple place where descended lord Siva
பொருட் செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர் வாழும் திருப்பராய்த் துறையில் எழுந்தருளிய


செல்வர்மேற் சிதையாதன
Selvar meal sethai yaathana

Who has possessed mukthi ever permanent wealth and on that lord Siva , and then Tamil ganasambanther
வீடு பேராகிய செல்வத்தை உடைய இறைவன் மீது


செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
Selvan gaanasambanthan sen Tamil

The grace wealth filled ganasambanther who has sung the above nonperishable form poems and those disciples who are singing it
அருள் செல்வனாக விளங்கும் ஞானசமந்தன் அருளிய அழிவற்ற இச் செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால்


செல்வமாமிவை செப்பவே.
Selvammam eavai seppavea

Those disciples will get all form of wealth in this world
ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

August 2, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: