OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEELI MELALAI

ganesheit July 31, 2019

1.124 திருவீழிமிழலை – திருவிராகம்
THIRU VEELI MELALAI


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் நான்கு காண்க


1337 அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்;
ALAR MAGAL MALI THARA AVANIYIL NIGAL BAVER

With wealth god grace lot of wealth is given to this world living people
திருமகளின் கருணையால் செல்வன் நிறைய பெற்று உலகில் வாழ்வர்.


மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
ALAR MAI KULAL YUMAI THANAI EADAM MAGIL BAVER

Lordess yumadevi is adorned the fragrance filled flowers on her hair and then lord Siva gave her left part of his body and then got happy for that
மலர் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும்


நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
NALA MALI YURU YUDAI YAVER NAGER MIGU PUGAL

In that twin appearance of appearing arthanari form to this world and then lord Siva’s
அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது


நிலமலி மிழலையை நினையவ லவரே.
NELAMALI MELLAIYAI NINAYA VALA VEREEA

Who is living in this world place with fully happy form and that lovely appearance form existing in this world
நில உலகத்தே நிறைந்த உலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவார்

1338 இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
Earu nila eathen misai ealil perum yuruvina
r
And in this spread over world in lovely appearance form existing
பறந்து விரிந்த இவ் உலகில் அழகிய உருவோடு விளங்குவோர் ஆவார்


கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
Karu mali thagu migu puvi muthal yulaginil

Innumerable living beings are living in this land and other lands
எண்ணற்ற உயிரனங்கள் வாழும் மண் முதலிய அனைத்து உலகங்களிலும்


இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
Earul athu mathiyinar eamai yaver tholu thu ealu

To remove darkness and then give coolness to all and all the deevaass are praying under his feet and that unique form of lord Siva
இருளைப் போக்கும் மதிலை போல் ஒளியும் தன்னோளியும் செய்பவரும் தேவர்களால் தொழப் பெரும் தனக்கு ஒப்பிலாதவரும்


நிருபமன் மிழலையை நினையவ லவரே.
Neru baman milalaiyai neinaiya val averea

Those disciples who are thinking over this thiruveeli melalai temple place
ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து

1339 கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
Kalai magal thalai magan eaven eana varu baver

And that disciple are excelled in the education and other arts and then attain leadership state in that line and then got all the benefits in life
கலைமகளின் தலைவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க் கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்


அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
Alai mali tharu punal aravodu nagu thalai

The waves are filled the Ganges river and snakes with vilvam leaves
அலைகள் நிறைந்த கங்கை நதி பாம்பு தலையோடு வில்வ இலை


இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
Ealai mali eathaliyum easai tharum sadai yinar

And then konrai flower garland all are adorned in the hair place by lord Siva
வில்வ இலை மிக்க கொன்றை ஆகியன பொருந்திய சடை முடியினனாகிய சிவபெருமான்


நிலைமலி மிழலையை நினையவ லவரே.
Nelai mali melalaiyai nenai ya vallaareea

Where lord Siva dwelling in the thiruveeli melalai temple place and then those people pray here
உறையும் நிலைபேறு உடைய திரு விழி மிழலையை நினைய வல்லவர்

1340 மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
Madamer sanamagil tharumanam yudaiyaver

And those disciples whose relatives are nearby place dwelling will got happy form give benefits to them
அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும் மனம் உடையவராவர்


காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
Kaadu amer kaluthugal avai mula vodu mesai

In the burial ground living ghosts are raising emotional filled sound and then big drums all are raised the sound
இடுகாட்டில் வாழும் பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க

பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
Paadalin navil baver migu tharum yulaginil

Lord Siva sing songs and then whose descended place is thiruveeli melalai which is glory filled place
இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான் இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு


நீடமர் மிழலையை நினையவ லவரே.
Need amar melaliyai neiya vallaverea

Which has long life in this world and that place is thiruveeli melalai and those disciples who are thinking this place in meditation and that people will excel in life
நின்டகாலம் விளங்குவதுமாகிய திருவிழிலிமிலலையை நினைய வல்லவர்கள்

1341 புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
Pugal magal thunaiyinar puri kulal yumai thanai

That people will get glory filled way and then the curling hair possessed lordess yumadevi
புகழ் மகளைப் பொருந்துவார் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையை


இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
Eagalyuu sei thaven yudai ealil marai vali valer

Whose father is thakken and that person cursed lordess yumaadevi and those thakken who has chanted veetha manthra and then developing yaaga fire
இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேத நெறிகளை ஓதி வளர்க்கும்


முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
Mugamathu sethai thara muniyuu seithaven migu

And that thakken head is amputated and afterwards blessed him
தலையைச் சினந்து சிதைத்து அருளியவனாகிய சிவபிரானது


நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.
Negal tharu milalaiyai neiya vallaverea

And that form of place is thiruveeli melalai who are thinking over it
புகழ் பொருந்திய திருவிழிமிழலையை நினைய வல்லவர்


1342 அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
Anrinar ari eana varu baver arithinil

They are lion form of appearing powerful person in this world
பகைவர்கட்குச் சிங்க ஏறு போன்ற வண்மை உடையவராவர்


ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
Onriya three puram oru nodiyinil eari

Three castles are came in straight line form only once in thousand years and as per the request of deevaass lord Siva destroyed with in a second time with fire arrow
ஒன்றுபட்ட முப்புரங்களைத் தேவர்கள் வேண்டுகோள் படி ஒரு நொடிப் பொழுதில் ஏரி


சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
Senru kol vagai siru muruval kodu oli pera

Those three castles are fire consumed form lord Siva made small laughter and that way glory filled lord Siva
உண்ணுமாறு சிறு முறுவல் செய்து புகழ் பெற்றவனாகிய சிவபிரானது


நின்றவன் மிழலையை நினையவ லவரே.
Ninravan milayaiyai nenaiya vella varea

Whose dwelling place is thiru veeli melalai and those people think over it
திருவீழிமிழலையை நினைய வல்லவர்.

1343 கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
Karam paiyil kodaiyinar kadi malar ayana thoor

And that people are all the times giving alms to others and that mighty powerful mind possessed persons and then the fragrance filled lotus flower on it dwelling bharma
தம் கைகளால் பலகாலும் கொடுக்கும் வண்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர், மணம் கமழும் தாமரை மலர் மேல் உறையும் பிரமனுடைய


சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
Seram paiyilyu ara eari sevan yurai selu nager

Whose out of five head one at the central place is snipped form by lord Siva whose wealthy residential place is thiruveeli melalai
தலைகளில் ஒன்றை அவனது உடலில் பொருந்தா வண்ணம் கொய்தா சிவபிரான் உறையும் செழுமையான நகரை


வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
Varam payil kalai pala marai murai ara neri

Where the highly regarded arts are learnt and with it and then veethaa rules and ethical way of life leading
மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேத விதிகளையும் அர நெறிகளையும்


நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.
Nerambinar milayaiyai neinaya val lavereea

Is leading persons are filled place is thiruveeli melalai and those disciples who are thinking it in meditation
அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்.

1344 ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
Orungiya yunarvin nodu oli neri sellum aver

And then persons are with oneness form of mind and then lead kindly light in that gaana way of life is following persons
ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்


அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
Arakken nan mani mudi vorupathum earupathu

Ravana whose crown adorned ten heads and then twenty soulders
இராவணனுடைய மணி முடி தரித்த பத்துத் தலைகளும் இருப்பது கரங்களும்


கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
Karakkana neri thara malar adi veral kodu

With the sound crack raised form of smashed with lord Siva’s sacred feet thump finger
நெரியுமாறு தன் மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு


நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.
Nerukkinan milaliyai nenaiya vala avareea

And in that way stamped and then afterwards blessed him and that form of lord Siva’s dwelling place is thiruveeli melali and those people think over it in meditation
நெரித்தருளியவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர்.

1345 அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
Adiyavar kulu mida avaniyil negal baver

And that disciples are living happily with other disciples are covered form
அடியவர் பலர் தம்மைச் சூழ இவ் உலகில் இனிது வாழ்வர்.


கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
Kadi malar ayan ari karu tharu vagai thalal

The fragrance filled lotus flower place dwelling bharma and thirumal are not known form and then afterwards appeared before then in fire pole form
மணம் மிக்க தாமரை மலர் மேல் விளங்கும் பிரம்மனும் திருமாலும் அறிய வகையில் தழல்


வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
Vadi yuru eayalbinodu yulagugal nerai tharu

And in all the worlds are filled form blessed all and that form of lord Siva
வடிவோடு எல்லா உலகங்களிலும் நிரந்தருளிய


நெடியவன் மிழலையை நினையவ லவரே.
nediyavan melaiyaiyn nenai baver vala vareea

And then elderly person is lord Siva whose residential place is thiruveeli melalai and those people think over in meditation
பெரியோனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர்.

1346 மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
MANMATHAN EANA VOLI PERU AVAR MARUTHU AMER

They will appear just like manmatha form in this word
மன்மதன் போன்ற அழகினைப் பெறுவார்கள்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
With marutha tree flowers from it extracted essence on it dipped the saffron color adorned those buthass and sanaaass
மருதத்தின் வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர்


துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
THUN MATHI AMAARGAL THODER YARU MIGU PUGAL

And above people not good minded persons so they are unable to know lord Siva and that form of gory filled
சமணர்களும் துன்மதியாளர்கள் அவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய


நின்மலன் மிழலையை நினையவ லவரே.
NI MALAN MELAIYA NEINAYA VALAVEREEA

Lord Siva who is pure form and whose dwelling place is thiruveeli melalai and then those people think over him in meditation
நின் மலனைய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள்

1347 நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
NITHILAN MELALAIYAI NEGER ELI PUGALIYUL

And that pearls form of lord Siva whose dwelling place is thiruveeli melalai whose is praised by the unique place descended ganasambanther
முத்துப் போன்றவனாகிய சிவபிரானது திருவிழி மிழலையை ஒப்பற்ற புகலிப் பத்தியில் வாழும்


வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
VITHAGA MARAI MALI TAMIL VERAGA GANA MOLI

Who is excelled in veethaas and Tamil grammar and legends and that form of gaanasambanther
சதுரப் பாடுகளோடு வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசமந்தன் அது


பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
PATHIYIL VARU VANA PATH EAVAI PAILVODU

Whose devotion filled the above prayer songs are ten in number which are memorized
பத்தியால் விளைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று


கற்றுவல் லவருல கினிலடி யவரே.
KATRU VALLAVER YULAGINAIL ADIYA VEREEA

And fully known its meaning and that disciples are best disciples in this world
காற்று வல்லவர் உலகில் சிறந்த அடியவராய் விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

July 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: