THIRU SIVA PURAM
1.125 திருச்சிவபுரம் – திருவிராகம்
THIRU SIVA PURAM
பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 21 காண்க
1348 கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
KALAI MALI AGAL ALGUL ARIVAI THAN YURU VINAN
The waist ornament named megali is tied in the broad waist place and that form of lordess yumaadevi is taken left part of lord Siva’s body
மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திரு உருவினனும்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
MULAI MALI THARU THIRU YURUVAMATHU YUDAI YAVAN
So in his one part of the body breast possessed form and in that way descended place is
அதனால் ஒரு கூற்றில் நகில்(முலை) தோன்றும் திரு உருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
SELAI MALI MATHIL POLI SIVA PURA NAGER THOLA
The rock stones are used to construct the protection walls where if we pray
கருங்கற்களால் இயன்ற மதில்களால் பொதியப்பட்டுள்ள சிவபுர நகரைத் தொழுதால்
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.
EALAI NALI VENAI EARUMAIYUM EADER KEADUMEEA
We will get goodness in life and bad deeds will not affect them and then in the upper world also our impediments will be removed
நன்மை நலியும் வினைகள் இல்லை இருமையிலும் இடர் கெடும்
1349 படரொளி சடையினன் விடையினன் மதிலவை
PADER VOLI SADAIYINAN VEDAIYINAN MATHIL AVAI
The light glittering form of hair possessed lord Siva and bull chariot possessor and then three castle asuraass
ஒளி விரிந்த சடையினனும் விடை ஊர்த்தியனும் அசுரர்களின் மும்மதில்களை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
SUDER VOLI KOLUVIYA SEVAN AVAN YURAI PATHI
And fire engulfed form of destroyed three castles and that form of lord Dwelling place is
விளங்கும் எரி கொள்ளுமாறு செய்த அழித்தவனுமாகிய சிவன் உறையும் பதி ஆகிய
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
THEDAL EADU PUNAL VAYAL SIVAPURAM ADAIYA NAM
In the paddy fields in between boundaries are filled water covered form of place is siva puram where if we pray
இடைஇடையே திடலைக் கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.
EADER KEDUM YUAR GATHI PERUVATHU THDANEA
Our problems will be destroyed and then got upliftment in life
நம் இடர் கெடும் உயர்கதி பெறுவது உறுதி
1350 வரைதிரி தரவர வகடழ லெழவரு
VARAI THREE THARA VARA VA KADA ALAL EALA VARU
The manthra hills are used as grinding pole and then vasugi snake is tied as rope to grinding stone and then while grinding time the snake named vasugi spitted the poison
மந்தர மலை மத்தாகச் சுழல அதில் கயிறாகக் கட்டிய வாசுகி என்னும் பாம்பின் வயிற்றில் இருந்து அழலாகத் தோன்றிய
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
NURAI THARU KADAL VEDAM NUGAR PAVER EALIL THEGAL
And in that foam form emanated poison spread over on the sea surface so lord Siva collected it and then consumed and then which is stagnated in the throat place as lovely ruby diamond for appearing
நுரையுடன் வெளிப்படத் விஷம் கடலில் பொருந்த ஆலகாலம் என்னும் அந்த நஞ்சினை உண்டவனுடைய அழகு விளங்கக்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
THERAI PORU PUNAL ARI SELA THADAI SIVA PURAM
And then waves are lashed on the banks of arasil river place situated temple place is sivapuram
கரையில் மோதும் நீர் நிறந்த அரில்லாற்றங்கரையில் விளங்கும் சிவபுரத்தின்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.
YURAI THARUM ADIYAVER YUAR GATHI YINAREA
And that temple lord Siva’s name is chanting persons will get upper world
பெயரைக் கூறுபவர்உயர் கதியைப் பெறுவர்
1351 துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
THUNI YUDAI YAVER SUDU PODI YINAR YUDAL ADU
They will be firm minded persons and then adorned sacred ashes all over the body and then giving pain to body
துணிவுடையவர் ஆவார் திருநீறு பூசும் அடியவர் ஆவர் உடலை வறுத்துக்
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
PENI ADAIVILLAR PERAVIYUM ARA VISURU VAR
And that form of defects will not be affected and then ultimately get rid of repeated birth and death in this world
பிணிகளை அடையார் பிறவியும் நீங்கப் பெறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
THANI YUDAI YAVER PAYIL SIVA PURAM MARU VIYA
That form of modesty and submissive filled people are living place is sivaburam
அடக்கம் உடையா மக்கள் வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே.
MANI MIDARANA THADI EANAI THOLUM AVAREA
The blue color ruby diamond form of throat possessed lord Siva and whose feet are to be prayed
நீல மணி போலும் மிடற்றினை உடைய சிவபிரானுடைய திருவடிகளை வணங்குவோம்
1352 மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
MARAI YAVAN MATI YAVAN MALAI YAVAN NELAI YAVAN
Lord Siva who has given sacred veethaas to this world and adorned curved moon and the kaiyilai hills are taken as his residential place
வேதங்களை அருளியவன் பிறை சூடியவன் கயிலை மாலையை தனது இடமாகக் கொண்டவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
NERAIYAVAN YUMAIYAVAL MAGIL NADAM NAVIL BAVAN
lord Siva who has ever permanent form existing in this world and then filled all the places and then dancing so that lordess yumaadevi see it and then derived happy from it and that form of lord Siva is leader to all
நிலைபேறு உடையவன் எங்கும் நிறைந்தவன் உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் புரிபவன் எல்லோருக்கும் தலைவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
EARAI YAVAN EAMAI YAVER PANI KODU SIVA PURAM
And all the deevaas are doing service under his feet and which is accepted by him and then sivapuram
தேவர்கள் செய்யும் பணி விடைகளை ஏற்றுச் சிவபுரத்தை தனது
உறைவென உடையவன் எமையுடை யவனே.
YURAI VENA YUDAI YAVAN EAMAI YUDAI YAVANEA
Is accepted as his dwelling place and then accepted me as his slave
உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக் கொண்டவனுமாகிய சிவபிரான்
1353 முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
MUTHIR SADAI EALA MATHI NATHI PUNAL PATHI YU SEITHU
In the well ripped form of grown hair place adorned the young moon river Ganges all are adorned
முதிர்ந்த சடையின் மிது இளம் பிறை கங்கை நதி ஆகியவற்றைப் பொருந்த அணிந்த
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
ATHIR KALAL OLISEIYA VARU NADAM NAVIL BAVAN
In the leg place ever moving form of anklets are raising sound form who is dancing all the time
காலில் அசையும் கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
EATHIR PAVER PURAM EAITHA EANI ELI ANAI PATHI
Those asuraas who are defied him and that assuraass castles are destroyed by fire arrow and that wonderful form lord Siva descended place it is
தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் எழுந்தருளிய தலம்
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.
SATHIR PERUM YULA MUDAIYAVER SIVA PURAMEEA
And that place capacity filled disciples are living place is sivapuram
திறமையான மனம் உடைய அடியார் வாழும் சிவபுரமாகும்
1354 வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
VADI YUDAI MALAI MAGAL SALAMAGAL YUDAN AMEAR
The lovely appearance possessed rock lady yumadevi and water form of lady Ganges and with them
அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் நீர்மகளாகிய கங்கை ஆகியோருடன்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
PODI PADU YULAI ATHAL POLI THIRU YURU VINAN
And adorned the doted skin of stage adorned as lower dress and that lovely appearance form
புள்ளி பொருந்திய மானினது தோள் விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
SEDI PADU PALI THREE SEVAN YURAI SIVA PURAM
The highly stinking the skull in it accepting the begging food and wandering everywhere and whose residential place is sivapuram
கெட்ட நாற்றம் விசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உரையும் சிவபுரத்தை
அடைதரும் அடியவர் அருவினை யிலரே.
ADAI THARUM ADIYAVAR ARU VENAI ELAREEA
Where approaching the disciples are left out that rare form of bad deeds
அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்
1355 கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
KARAM EARU PATHUM MUDI ORU PATHUM YUDAI YAVAN
Ravana who has ten heads and twenty shoulders
இருப்பது கைகளையும் பத்துத் தலைகளையும் உடையவன் ஆகிய இராவணனின்
உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
YURAM NERI THARA VARAI ADARYUU SEITHAVAN YURAI
whose bosom and body parts are smashed form by kaiyilai hills and then blessed him and that form of lord Siva dwelling place is
மார்பு நெரியுமாறு கயிலை மழையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும்
பரனென அடியவர் பணிதரு சிவபுர
PARAN EANA ADIYAVER PANI THARU SIVA PURA
Lord Siva is the only highly regarded prime god and in this way his disciples are praying
மேலான பரம்பொருள் இவனேயாவான் என அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.
NAGAR ATHU PUGUTHAL YUAR GATHI ATHUVEA
And that place is Siva puram where if we go and pray there we will get higher place in life
சிவபுரத்தை அடைதல் நமக்கு உயர் கதியைத் தரும்
1356 அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
ANRIAL YURUYUU KOL AYAN ARI EANUM AVER
To do a particular act that bharma and thrumal are taken the pig and anna bird form
தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையோடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரம்மன் ஆகிய இருவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
SENRU ALAVIDAL ARIYAVAN YURAI SIVA PURAM
Who are unable to scale lord Sivas feet and head and that form stood in the sivapuram place
சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
EANRU ERU POLUTHU MUN VALIPADU MAVER THUYAR
And in this way think over lord Siva and then pray him and those disciples are not affected by any form of sorrows
என்று இரு பொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே
ONRILLAR PUGALODUM YUDAIYAVER EVV YULAGEEA
.and then in this world place glory filled form living happily
இலராவர் இவ்வுலகில் புகலோடும் பொருந்தி வாழ்வர்
1357 புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
BUTHAROODU AMANARGAL ARAYURAI PURA YURAI
Those buthaass and samanaass are preaching their rules are against the natural way of life
புத்தர்களும் சமணர்களும் கூறுவான அறவுரைக்கும் புறம்பான உரைகளாகும்
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
VITHAGA MOLIGILA VEDAI YUDAI ADIGAL THAM
Those preaching are against the rule of tharma so we may kept it away and then lord Siva who has bull chariot and those disciples who are seated in meditation form
அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை அவற்றை விடுத்து விடை ஊர்த்தியை உடைய தலைவன் ஆகிய சிவபிரானை நோக்கி செய்யும்
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
EATH THAVAM MUYAL YURIL EARAI VANA SIVA PURAM
And then practicing penance in that efforts if you have taken and then that lord Siva’s siva puram
இத்தவத்தை செய்யும் முயற்சியை மேற்கொள்வீர் ஆயின் இந்த இறைவனது சிவபுரத்தைச்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே
MEI THAGA VALI PADAL VILUMIYA GUNAMEEA
.and you may go there and then pray lord Siva which will give best mannerism in life
சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்
1358 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
PUNTHIYAR MARAI NAVIL PUGALI MANN
The knowlegable persons are chanting the veethass and that glory filled king thiru ganasambanther
அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
PANTHANA Tamil kodu siva pua nager yurai
Who has praised lord Siva with prayer tamil songs and whose residential place is Siva puram
தமிழைக் கொண்டு சிவபுர நகரில் உறையும்
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
Eanthaiyai yurai seitha easai moli baver venai
Who is my father lord Siva and those prayer songs are chanted and then pray lord Siva and those disciples bad deeds are
எந்தையைப் போற்றி உரை செய்த இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள்
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
Sinthi munn yura yuyar gathi peruvar galeea
Remove beforehand and then got upper world easily
முற்பட்டு நீங்க உயர் கதி பெறுவார்கள்
திருச்சிற்றம்பலம்
July 31, 2019