OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU RAAMANA THEECHAM

ganesheit July 31, 2019

1.115 திரு இராமனதீச்சரம்
THIRU RAAMANA THEECHAM

பண் – வியாழக்குறிஞ்சி
This is river Cauvery southern side temple and now it is called in the name of thiru kannapuram. In this temple place lord rama conducted poojaass
Ganasabanther who has at first prayed in the thiru panaiyoor temple and then entered in to ramanatheecharam and then sang the following songs
காவிரி தென்கரைத்தலம் திருக் கண்ணபுரம் என வழங்கப்படுகிறது. இராமர் பூசித்த தலம்.
திருப்பனையூரை வணங்கி வருகின்ற சிரபுரச் செல்வர். திரு இராமனதீச்சரத்தை அடைந்து சங்கொளீர் என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்


1238 சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
SANGOLIR MUNN KAIYAR THAM MEDAIYEEA ANGIDUM PALI KOLLUM AVER KOBAM

The conch bangles are adorned fore hands are possessed the saints wives and who are living streets gone and then those ladies putting the food is happily accepting
சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பெண்கள் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும்


பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சுரமே.
PONGU ARAYUU AADALOON BUVANI YOONGA EANGUM MANN ERAMANA THEE CHARAMEEA

The angry bubbling form of snakes are catching on hands and then allowed them to dance and then this land people got upliftment in life and then he is filled everywhere and that lord Siva’s dwelling place is ramana theecharm
சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும் உலக மக்கள் உயர்வு பெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1239 சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் தாதையோதான்
SANTHA NAL MALAR ANI THAAL SADAIYAAN THANTHA MATHATHAVAN THAATHOO THAAN

The lovely flowers are adorned on the lowly hanging hair and his son lord Vinayaga who has long teeth and then madness filled saliva oozing out form
அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும் தந்ததையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும்


அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
எந்தவன் இராமன தீச்சுரமே.
ANTHAMIL PAADALOON ALAGAN NALLA EANTHAVAN EARAAMANA THEESARAMEEA

And without end and that type of musical notes are filled form singing all the time and that lord Siva appearing in handsome form and that good person dwelling pace is ramanatheecharam
முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும் அழகனும் எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1240 தழைமயி லேறவன் தாதையோதான்
மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
THALAI MAYIL EAARAVAN THATHAI YOO THAAN MALAI POLI SADAI YAVAN MANNU KKAATHIL

The good feathers are possessed peacock on it ascended form travelling lord Muruga’s father and to this world water wealth is giving Ganges adorned on the hair place
தழைத்த பீலியோடு கூடிய மயில் மீது ஏறிவரும் முருகனது தந்தையும் உலகிற்கு நீர் வளம் தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும்


குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமன தீச்சுரமே.
KULAI ATHU VELANGIYA KOLA MARBIN EALAI AVAN ERAAMANA THEECHAREMEEA

In the ear place permanent form existing kulai ornaments are adorned form and then in the lovely bosom place three knotted thread adorned in lovely appearing form and whose residential place is ramana theecharam
காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும் அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1241 சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
SAKTHI YULL AATHIYOOR THAIYAL PANGAN MUNTHIYA THAAGIYA MOORTI YOO THAAN

To give body power (sakthi) and that dynamic form of goddess yumadevi is taken lord Siva (static power possessed person) left part of his body and that lord Siva alone give mukthi to living beings and that prime god he is
சக்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் உயிர்களுக்கு முக்திப் பேராக விளங்கும் கடவுளும்


அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சுரமே.
ATHIYA KAIYINIL ALAGU SOOLAM VAITHAVAN ERAAMA NEETHEECH SARAMEEA

The fire pot carried hand place lovely soolam battle force carried form and that lord Siva’s residential place is ramanatheecharam
தீ ஏந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1242 தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப்
THAALNTHA KULAL ADAI MUDI ATHEN MEEAL THOOINTHA EALAM PERAI THULANGU SENNI

In the head place lowly hanging pigtail on it and that lovely form of curved moon adorned
தலையில் தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின் மேல் அழகு தோய்ந்த இளம் பிறை


பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே.
PAAINTHA GANGAI YOODU PADA ARAVAM EAAI THAVAN EARAAMANA THEECHARAMEEA

The flooded form ganges and then dancing snake and all are adorned on the head place and that lord Siva’s residential place is raamaatheecharam
பாய்ந்து வரும் கங்கை படப் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1243 சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
SARI KULAL EALANGIYA THAIYAL KAANUM PERIYAVAN KAALI THANN PERIYA KOOTHAI

On the back head place available the curling hair possessed form of lordess yumadevi is seen by lord Siva in nearby place and then with kali devi’s big dancing enter in to competition that who is the best dancer
பிடரியின் மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகில் இருந்து காணும் பெரியவனும் காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு


அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
எரியவன் இராமன தீச்சுரமே.
ARIYAVAN AADALOON ANGAI EAANTHUM EARIYAVAN ERAAMANA THEECHARAMEEA

And that rare form of lord Siva who is known by her and that way dancing form on the hand place fire carried way and that form of lord Siva dwelling place is raamanaatheecaram
அவனால் அறிதற்கு அரியவனாய் நடமாடுபவனும் அழகிய கையில் எரி ஏந்தி விளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1244 மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது ஆடலோன் நீள்சடைமேல்
MAARILAA MAATHORU PANGAN MEENI NEER ATHU AADALOON NEEL SADAI MEEAL

Lordess yumadevi is unique form of beautiful appearance possessed and then who is taken left part of lord Siva’s body and then the sacred body place white ashes are adorned form and then on the long hair place
தனக்கு ஒப்பாரிலாத அழகிய உமையம்மையை ஒரு பாக்கமாகக் கொண்டவனும் திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும் நீண்ட சடைமுடி மேல்


ஆறது சூடுவான் அழகன்விடை
ஏறவன் இராமன தீச்சுரமே.
AAR ATHU SOODUVAN ALAGAN VEDAI EEARAVAN EERAAMANA THEECHARAMEEA

The river Ganges are adorned and then handsome appearing to the whole world and then ascended on the bull place and those lord Siva’s dwelling place is eraamaneethacharm
கங்கையை சூடியவனும் அழகனும் விடையின் மீதி ஏறி வருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1245 தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
THADAVARAI ARKKANAI THALAI NERITHOON PADA VARA VAATIYA PADER SADAIYAN

With the big kaiyilai hills lord Siva stamped ravana’s head and then the dancing snake is made to dance and then got from that act, and the spread over head hair possessed form
பெரிய கயிலி மழையால் இராவணனின் தலையை நெரித்தவனும் படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகில்பவனும் விரிந்த சடைமுடியை உடையவனும்


நடமது வாடலான் நான்மறைக்கும்
இடமவன் இராமன தீச்சுரமே.
NADAMATHU AADALAA NAAN MARAIKKUM EADAMAVAN ERAA MANA THEECHARAMEEA

Lord Siva all the time dancing and who is four veethaass meaning embedded form and that lord Siva’s abode is ramaneethcharam
நடனம் புரிபவனும் நான்கு வேதங்கட்க்கும் இடமாக விலகுபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்

1246 தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி அயன்அணி முடியுங்காணான்
THANA MANI THAIYAL THAN BAGAN THANNAI ANA MANI AYAN ANI MUDIYUM KAANAAN

The lovely big breasts are possessed lordess ymaadevi’s husband and then bharma converted himself as anna bird form searched the head of lord Siva but come back without seeing it
அழகிய தன பாரங்களை உடைய உமையம்மையின் கேள்வனும் அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன்


பனமணி அரவரி பாதங்காணான்
இனமணி இராமன தீச்சுரமே.
PANA MANI ARAVARI PAATHAM KAANAAN EANA MANI ERAAMANA THEECHARAMEEA

And then thirumal has taken pig form and searched lord Siva’s feet but did not see it that thirumal who is sleeping on the snake bed and then above two persons are given up their ego and then prayed lord Siva with love form and then lord Siva blessed them and that lord’s residential place is raamanee thacharm
திருவடியைக் காணாத, படங்களில் மணிகளை உடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பலவகையான மணிக் குலைகளை உடைய இராவதீச்ச்சரம் ஆகும்

1247 தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
THARI POOLAAM SAMANAR SAAKIYAR SOL KEELEEAL ARIYOORAAL NAAMAM ARINTHU YURAIMIN

With the big pole form of ignorance filled samanaass and buthaass whose preaching’s are not to be heard of and then with the help of true saints lord sivaas true names are to be known form
மரத்தால் இயன்ற தடி போன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர் மெய் ஞானியர்கள் வாயினால் இறைவன் திருபெயரை அறிந்து கொள்வீர்களாக


மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சுரமே.
MARI KAIYOON THAN MUDI MANIYAAR GANGAI EARIBAVAN ERAAMANA THEECHARAMEEA

Lord Siva who has carried stage on his hands and then on the lord Siva’s hair place ruby diamonds are lashing form of Ganges on the head place where lord Siva descended that lovely place is ramanaa theecharam and then you may go there and then prayed him
அப்பெருமான் இளங்கன்றை ஏந்திய கையினனைத் தனது முடியில் மணிகளோடு கூடிய கங்கை நதி அலை மோதுபவனாய் இராமனதீச்சரத்தில் எழுந்தருளி உள்ளான் சென்று வழிபடுக

1248 தேன் மலர்க் கொன்றை யோன்……..
…….. முந்தமக்கூனமன்றே.
THEAN MALARK KONDRAIYON
MUNTHAMAK KOONAMANDREA

The honey filled konrai flower garland adorned form of lord Siva
தேன் பொருந்திய கொன்றை மாலையை சூடியவன்.

(*) இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இராமநாதேசுவரர், தேவியார் – சரிவார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

July 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: