OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KALU MALAM

ganesheit July 31, 2019

1.126 திருக்கழுமலம் – திருத்தாளச்சதி
THIRU KALU MALAM


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக என் 1 காண்க (117)பதிகம்

1359 பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் வினைவயத்தால்
Banthathaal van theppaal payinru nin venai vayathaal

Because of previous cause and effect form of bad deeds we are taken birth in this world and then mingled in verities of places and then consider it as their living place
வினைவயத்தால் மண்ணுலகம் வந்து, எல்லா இடங்களிலும் பொருந்தி, அவ்விடங்களே தமக்கு இருப்பிடமாய்


பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
Paaleea seervaayi eenoor kaan payil gana muni vargallum

In the upper world living deevaass and in the forest place living saints
வாழும் தேவர்களும் மற்றவர்களாகிய கானகங்களில் வாழும் முனிவர்களும்


சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
Sinthitheea vanthippa selambin mangai tann nodum

To think over in mind and then prayed lord Siva and then get upliftment in life and in this way lord Siva clubbed with rock king daughter parvathi
மனத்தால் சிந்தித்து வழிபட்டு உய்தி பெறுமாறு மலையரசன் மகளாகிய பார்வதி தேவியோடு


சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
Seer vaar naal naal neel kaiyilai thigal tharu parisa theellaam

And those people who are approaching lord Siva in the ever growing kaiyilai hills place existing specialty
சேர்ந்தவரே நாளும் நாளும் நீண்டு உயர்ந்த கயிலை மலையில் விளங்கும் திருவோலக்கச் சிறப்புகள்


சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
SANTHI THEEA EANTHIP PAAR SANANG GAL NINRU THANGA NAAL

And all are seen by this world living people with visual eye form
எல்லாவற்றையும் இந்த உலகில் வாழும் மக்கள் தங்கள் கண்களால்


தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
THAA MEEA KAANA VAAL VAARATH THAGAYUU SEI THAVAN EADAM

And all are seen by themselves and living and that lord Siva grace giving form living place it is
தாமே கண்டு வாழ்பவராகப் பெருங் கருணையோடு காட்சி நல்குபவனது இடம்


கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
GANTHATHAAL EANN THIKKUM KAMALNTHU EALNGU SANTHANA

In the eight directions the fragrance filled form of growing the sandal wood trees
எட்டுத் திசைகளிலும் மனம் கமழ்ந்து விளங்கும் மலர்களோடு கூடிய சந்தன மரக் காடுகள்


காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
KAADAAR POOVAAR SEER MEAYUM KALUMALA VALA NAGAREEA

And in this way specially rich form growing place is seergaali
சிறந்து வளர்ந்து செழிக்கும் கழுமல நகராகும்

1360 பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
PECHAIKKEEA EACHITHU PESAINTHU ANINTHA VEN PODI

To get begging food willingly so that in the water place dipped sacred ashes are adorned all over the body
பிச்சை ஏற்பதை விரும்பி நீரில் குலைத் தணிந்த வெண் பொடியினராய்


பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
PEEDAAR NEEDAAR MAA DAA RUM PRAI NUTHAL ARIYAI YODUM

And that greatness filled form and then glory spread over form and nearby existing the curved moon form of forehead possessed lordess yumaadevi and then with her
பெருமை பொருந்தியவரும் புகழால் விரிந்தவருமாய் அருகில் விளங்கும் பிறை போன்ற நெற்றியவளாகிய உமையம்மையோடு


உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே
YUCHATHAAL NACHI POL THODARN THDARNTHA VEEN GANEEA

The bull which will kill its enemies and that form of ferocious bull on it seated form in the mid-day time
உச்சிப் போதினை விரும்பித் தன்னை எதிர்ப்பவரைத் தொடர்ந்து கொல்லும் விடையேற்றின் மிது அமர்ந்து


றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை
YOORAA YOORAA NEEL VEETHI PAYIL VODUM OLI SEI EASAI

Moving in the long streets willingly singing form
ஊர்ந்து ஊர்ந்து நீண்ட தெருக்களில் விருப்பத்த்கோடு பாடுவதால்


வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
VAACHATHAAN NACHUCH SEEAR VADAM KOL KONGAI MANGAI YAAR

Ever persuading form and pearls long neck ornaments are adorned ladies who has possessed big breasts
நச்சுதளுக்குரியனவும் முத்துவடங்கள் அணிந்தவனுமாகிய கொள்கையை உடைய மகளிர்


வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
VAARAA NEEREEA MAAL AAGUM VACI VALAVA VANA EADAM

And that music filled form of songs are heard and then got lust filled faintings form and in that way attracted all by lord Siva and whose residential place it is
அவ்விசையைக் கெட்டு வந்து தமக்கு முன்னே விரகமயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வண்ணம் பொருந்திய சிவபிரானது இடம்


கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
KACHAA THAAN MECHI POO KALANTHU EALANGU VAND INAM

By the upward moving wind and with oneness form of mingling with flowers and those honey bees
மேலைக் காற்றினால் அல்லாது ஒற்றுமையோடு பூக்களைக் கலந்து விளங்கும் வண்டினங்களோடு


காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.
KAARAAR KAARAAR NEEL SOLAI KALU MALA VALA NAGAREA

The darkness filled the clouds are crawling on the high grown flower plantations and that place is seergaali which is fertile one
கருமை நிறம் பொருந்திய மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளை உடைய கழுமல வள நகராகும்

1361 திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
THINGATKEA THUNBAIKKEA THAGALNTHU EALANGU MANTHA YIN

On the hair place moon thumbai and yoomathai flowers and all are
திங்கள் தும்பை விளங்கித் தோன்றும் ஊமைத்த மலர் ஆகியவற்றைச்


சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
SEAREA SEAREA NEERAAGA SERI THARU SURA NATHI YOO

And with this Ganges water clubbed form appearing
சேர்த்துச் செறிந்த நீராகிய கங்கை நதி அழகிய கையில் விளங்குவதையன்றி


டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்
ANGAI SEAR VINNE RIKKEA ADAINTHU YUDAINTHA VEN THALAI

And the broken skull carried on hands and are seen and got faintings by bharama
உடைந்த கபாலம் முடி காண மயக்க உணர்வுடையனாய் மேலே


பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
PAALEA MEELEA MAALEA YAP PADER YURU AVAN EARA GUM

And then fly upward and that Anna bird feathers and poison bubbling snakes
பறந்து சென்று பிரமனாகிய அன்னத்தின் இறகு நஞ்சு பொங்கு பாம்பு


பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
PONGAP REEAR NANGAI SEEAR BUYANGAMANGAL KONRAI YIN

And that poison filled snake and kondrai flower garland all are adorned
நஞ்சு பொங்கு பாம்பு கொன்றை மாலை ஆகியவற்றை அணிந்து


போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
POOTHAAR THAAREA THAA MEAVEI PURI THARU SADAYA NIDAM

And the hair is tied in crown form and that lord dwelling place it is
வளைத்துக் கட்டிய சடையை உடைய சிவபிரானது இடம்


கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
GANGAIKEEA YUM POR PAAR KALANTHU VANTHA PONNI YIN

As comparable form Ganges River with the river Cauvery and lovely form flowing the river Cauvery
கங்கைக்கு நிகரான அழகோடு கலந்து வந்த பொன்னி நதியின்


காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
KAALEA VAAEAA MEALEA PAAI KALU MAL VALA NAGAREA

And those canals are flowing form giving fertility and that place is seergali
வாய்க்கால்கள் பாய்ந்த வளம் சேர்க்கும் கழுமல வள நகராகும்

1362 அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
AMMANDATHAAL EANN THIKUM AMAINTHU ADANGA MANDALATHU

In this world place existing form and then invaded eight direction and then won over it
இம்மண்ணுலகில் இருந்து கொண்டே என்திசைகளையும் உள்ளடக்கிய அனைத்து உலகங்களுக்கும் சென்று வெற்றி கொண்டு


தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
AAREA VEEREA VAAN AAL VAAR AVAR AVER EADAMATHU EALLAAM

And then in the upper world ruling deevass are won over in the war
வான் உலகை ஆளும் தேவர்களையும் நெருங்கிச் சென்று வெற்றிப் போர் செய்து


மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
MANDIP POI VENRIP POR MALAINTHU ALAINTHA YUMBARU

And those devaass not fight against the three castles and that powerful three castles
அத்தேவர்களாலும் எதிர்க்க இயலாதவர்களாய் விளங்கிய வலிமைமிக்க முப்புரங்களைத்


மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
MAARU EEAALAATHAR THAA MEAYUM VALI MIGU PURAM EARIYA

But lord Siva with his forehead fire destroyed it
தன் நெற்றி விளியால் வெந்து முடியுமாறு செய்து


முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
MUNDATHEE VEN THI TEEA MUDINTHU EADINTHA EANGI SOOL

That not destroyable and those good old three hamlets are
அவ் இஞ்சி சூழ்ந்த அழியாத பழைமையான மூன்று ஊர்களும்


மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
MOOAA MOOTHOOR MOOTHURAA MUNIYU SEITHAVAN EADAM

And then converted it in to good old form and then got angry and then destroyed it and that lord Siva’s residential place it is
முதுமை உடைய வாய் அழியுமாறு சினந்த சிவபெருமானது இடம்


கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
KANDIT TEA SEN SOL SEER KAVIN SERANTHA MANTHIRA

The pure Tamil words are selected form and then composed it in lovely manthraa form
செஞ்ச்சொற்களைக் கண்டு தேர்ந்து தொகுத்த அழகிய மந்திரங்களை


காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
KAALEA YOOVAA THAAR MEAYUM KALU MALA VALA NAGAREA

In that way chanting repeatedly and give strength to it and those bharamins are living good place is seergali
மூச்சுக் காற்றாகக் கொண்டு உருவேற்றி வருவோர் வாழும் கழுமலமாகிய வளநகராகும்

1363 திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
THIK KITREA VATRATREA THAGALTHU EALANGU MANDALA

In the eight directions are guarded by protection deities and then protect this land
எட்டுத் திசைகளுக்கும் காவலர்களாகிய தெய்வங்கள் ஆங்காங்கு இருந்து காவல் செய்து விளங்கும் இம்மண்உலகைச்


சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
SEERAAR VEERAAR POORAAR THARAGAN YUDAL AVAN EATHI REEA

To leaf forward to destroyed by that asura named tharagan whose body is destroyed
சீறி அழித்ததற்கு வந்த வலிய போர் வல்ல தாருகன் உடலை அவன் எதிரிலேயே


புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
PUKKITEA VETTITEA PUGAINTHU EALUNTHA SANDA THEE

Who is slashed and that ultimate destruction form of yooli fire like
புகுந்து வேட்டி வீழ்த்தி புதைத் தெழுந்து வந்த ஊழித் தீப் போலத்


போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்
POOLEA POO NEEREA THEE KAAL MEEP PUNAR THARUM YUIRGAL THERAM

And in this world appeared land water wind space and fire of five vast form of and then in this land place living beings are tried to destroyed it and in this way angry form of appeared lordess kali (yumaadevi)
தோன்றி மண் நீர் காற்று விண் ஆகிய ஐம்பூத வடிவாய் விளங்கும் இவ்வுலகில் வாழும் உயிர்களை அளிக்க சிவந்த கோபத்தோடு


சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
SOKKATHEA NERTHATHEE THODARNTHA MANGAI SENGATHATH

And in that soka thuratham place lordess kaali dancing form appeared but lord Siva danced against her and then subdued her anger and then won over her
சொக்கத் நிறுத்தத்தில் நடனமாடி வந்த காளியின் கோபத்தை அவனோடு எதிர் நடனம் ஆடி வென்று


தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
THOO DEEA YAAMEA MAALOGATH THUYAR KALAIPAVANATHU EADAM

And in this lord Siva removed the sorrows of this world beings and that lord Siva’s residential place it is
பெரிதான இவ் உலக உயிர்கள் துயரைக் கலைந்தவன் ஆகிய சிவபிரானது இடம்


கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
KAIKKAP POO YUKKATHEA KALANRU MINDU THANDALAI

All are defied firm the ultimate destruction approached this world but in seergali place which is covered by the plantations and
பலரும் வெறுக்க கனன்று வந்த பேரூழிக்காலத்தும் செறிந்த சோலைகளாகிய


காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.
KAADEEA YOODAA YOOR SEEAR KALU MALA VALA NAGAREA

Forests not destroyed and that place is seergali which is fertile one
காடுகளோடு அழியாத ஊராக விளங்கும் கழுமல வள நகராகும்

1364 செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
SEETRITEEA VETRI SEEAR THAGALNTH THATHUMBI MOIM PURUM

The asuraass named salantheren three castle asurassand others are killed and then won over them and then taken the mighty powerful elephant form taken
சலந்தரன் திரிபுரத்தசுரர் முதலானவகளைக் கொன்று வெற்றி பெற்று விளங்கும் வலிமை பொருந்திய


சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
SEEAREA VAARAA NEEL KOTHAI THEIR EALAI PIDIYATHU VAAI

And on seeing it by lordess parvathi who has taken female elephant form and
ஆண் யானை வடிவு கொண்ட தன்னைச் சேர்தற் பொருட்டு வரும் நீண்ட மலர் மாலை அணிந்த உமையம்மை பெண் யானை வடிவு கொண்டு


ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
VOTRAI SEEAR MUTRAL KOMBUDAI THADAK KAIMUKKAN MIKK

And then mingled together and then gave birth to lord Vinayaga who has long nose and three eyes and one horn form
வந்து கூட முற்றிய ஒரு கொம்பையும் நீண்ட கைகளையும் மூன்று கண்களையும்


கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
VOO VATHEA PAAI MAATHAANATH THRU PUGAR MUGA EARAIYAI

And ever oozing out mad saliva from the mouth and then doted form of face possessed lord vinayage is given birth
இடைவிடாது மிகுந்து பொழியும் மத நீரையும் புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய விநாயகனைப் பெற்றெடுத்து


பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
PETRITEE MATRIP PAAR PERUTHU MIKKA THUK KAMUM

So that in this world living people are who are not affected form by big problems and big deceases
இவ் உலகில் வாழும் மக்களும் பெரிய துன்பங்களும் நோய்களும்


பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
PEEARA NOI THAAM EEAAYAAMAI PERIYU SEITHAVAN THIDANG

Those people are not affected form and in that lord Siva preserved and whose residential place it is
வந்து போருந்ததாவாறு செய்து காத்து அருளிய சிவபிரானது இடம்


கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
KATRITTEA EATTU EATTU KALAITHURAI KARAI SELA

Sixty four arts are fully learnt and that arts are followed in life and those people are clubbed form living place it is
அறுபத்து நான்கு கலைகளையும் முற்றுக் கற்றுக் கரை கண்டு அவற்றின் வழி ஒழுகுவோர் சேர்ந்து உறைவதும்


காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.
KAANAA THAAREA SEERA MEI KALUMALA VALA NAGAREEA

And those people who are not followed the above rule so they will not enter in to kalumalam temple place
அவ்வார் ஓலைகாதார் அடைய முடியாததுமாகிய கழுமல நகராகும்

1365 பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
PATHI PEER VITHU EATTEA PARANTHA EAIM PULANGAL VAAI

You may sow the love form of seed and then defective form of taste like five form of attractions are kept away
அன்பாகிய விதையை ஊன்றி பழுந்துபட்ட அவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது


பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
PAALEA POOGAAMEA KAAVAA PAGAI ARUM VAGAI NENAIYAA

To preserve ourselves and the lust feeling from it guarded form and to attain mukthi there are three types of impediments
தம்மைக் காத்துக் காமம் முதலிய பகைகளிக் கடிந்து முத்திக்கு இடையூறாகும்


முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
MUTHIKKEA VIKKATHEA MUDIKKU MUKK GUNANGAL VAAI

That anavam kanmam mayai way not followed and then four types of anthakarnaas
முக்குணங்களின் வழி ஒழுகாது அந்தக் கரணங்கள் நான்கையும்


மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
MOODA YOODA NAAL ANTHAK KARANAMUM ORU NERIYAAI

All the activities are controlled and then thinking in the single minded form
ஒரு நெறியப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி விளங்கும்


சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
SEETHIKKEEA YUIN THITTU THEGALTHA MEI PARAM PORUL

Thinking the prime lord Siva in all the times
மெய்ப்பரம் பொருளாகிய தன்னையே என்னுபாவர்களைத் தானாகச்


சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
SEERVAAR THAAMEA THAANAGA SEIYUMAVAN YURAIYUM EADAM

செய்யும் சிவபெருமான் உறையும் இடம்
Ant that place is lord Siva’s residential one


கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்
KATHITTOOR SATTAM ANGU KALANGU NAL PORUL

Those disciples who are learnt six angaass who are mingled with lord Siva
ஆறு அங்கங்களையும் கற்றுனர்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபுரம் பொருளைக்


காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
KAALEA YOOVAA THAAR MEEYUM KALU MALA VALANAGAREA

Who are all the time thinking over lord Siva’s feet and those people living place is seergaali
திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வள நகராகும்

1366 செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
Sembai seear eangi sool serinthu ealangu paim polil

The bronze with it constructed the protection walls and the thick form of plantations are covered place
செம்பினால் இயன்ற மதில்களால் சூழ பெற்றுச் செறிந்து விளங்கும் பசுமையான பொழில்கள் சேர்ந்ததும்


சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
Seearea vaaraa vaaresath therai eari nager earaivan

The long sea waves are lashed form of sea surrounded sri lanka and that place king is Ravana
நீண்ட கடல்களின் அலைகளால் மோதுதல் பெருவதுமாகிய இலங்கை நகருக்கு இறைவன் ஆகிய இராவணன்


இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
Eamberkea tham seithittu earuntharan paiyinra verppu

Who is not only doing harm to this world people but also lord Siva who is dwelling kaiyilai hills
இவ் உலகமக்களுக்குத் துன்பங்களை செய்து வாழ்வதோடு சிவபிரான் உரையும் கயிலை மலையைப்


பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்
Eeaaraar poo near voor pathathu ealil veral avan nerivittu

ravana tried to excavate it but lord Siva who has with his lovely feet stamped him
பெயர்க்க முற்பட்டபோது அழகிய மலர் போன்ற ஒரு திருவடி விரல் ஒன்றை ஊன்றி


டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
Amm pon poon vetri thol alinthu vanthanm seithaakku

The gold ornaments are adorned on the shoulders whose mighty power is destroyed form and then ravana realized his sin and then saluted under lord Siva’s feet
அழகிய பொன் அணிகலன் பூண்ட அல்லது வெற்றி நிறைந்த தோள் வலிமையை அழித்து அவன் பிழையை உணர்ந்து வந்தனம் செய்த அளவில்


காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
Aarr aarr koor vaal vaal naal anru arul puri bavanath idam

Lord Siva gave him rare form of sharpened sphere and then long life instantly that place is lord Siva dwelling one
அவனுக்கு அரிய கூரிய வாளையும் நீண்ட வாழ் நாளையும் அப் பொழுதே அருள் புரிந்தருளிய சிவபெருமானது இடம்


கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
Kambathaar thubbith thinn kauyut serintha mum matham

In the pole place tied the elephant and its cheeks are running over eye tears and saliva
கம்பங்களில் கட்டிய யானைகளின் வலிய கன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால்


காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.
Kaar aar seeraarr maa veethi kalumala valanagarea

So that watered the land is converted in to slush form and those streets are possessed place is seergali
நிலம் கரிய சேறாகும் வீதிகளை உடைய கழுமல நகராகும்

1367 பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
Pannri kolam kondu eipp padithadam payinrida

Thirumal has taken pig form and then blasted this land and then entered in to lower world and then searched lord Siva’s feet
திருமால் பன்றி உருவம் எடுத்து இவ்உலகைப் பிளந்து
சென்று பாதாளம் வரைத் தேடியும்


பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள
Paanaa maal thaanaa meaya parayin yuru kolla

And in the water place germinated lotus flower where dwelling bharma who is all the time chanting veethaas
நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும் நான்முகன் வேதங்களை ஒதுபவனாக இருந்து


ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
Vonrittea ambu seear yuarntha pagayath aven

But who do not know it’s real meaning and then taken anna bird form and then searched lord Siva’s head
அதன் உண்மைப் பொருளை உணராது அன்னப்பறவை வடிவம் எடுத்து வான வெளியில் பறந்து சென்று தேடியும்


னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
Voothaan voothaan agthu yunarraathu yuruvinan athu

But those two persons are not seen head and feet and felt tired and then surrender under lord Siva’s feet and prayed to forgive their sins
எதிரே தோன்றிய வடிவினது அடிமுடிகளிக் காணாது அயர்ந்துச் சென்று வழிபட


சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
Sentritee vanthippa thiru kalam kol paiganin

And those persons eyes the lovely form of blue color throat not appeared
அவர்களின் கருமையான கண்களுக்கு அழகிய நீலகண்டத்தொடு தனது


றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
Reesaal veeroor aagaaram theriyu sei thavana thidam

Lord Siva appeared before them in fire pole form and that lord Siva’s residential place it is
வல்லமையால் வேறோர் வடிவம் தெரியச் செய்தவனது இடம்


கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
Kanurukkea munrikkea kalanth thilam neraikkayum

The staple place milk giving animals are filled form and then giving abundant milk to respective houses
ஆண் கண்டருள் இன்றிரில் நிறைந்து கலந்து நின்று இல்லத்தை நிறைக்கவும் (பால்)


காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
Kaalea vaaraa meealeea paai kalumala valanagarea

And then in the field places leap forward and that wealth filled place is seergali
வயல்களால் வந்து மேல் ஏறிப் பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும் கழுமல வள நகராகும்.

1368 தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
Thatiteea muti kai thadukkittu ninru yunnaa

Begging bowel are carried on hands and then in yet another curved hand palm leaves mat is carried form wandering and without dress adorned form
தட்டைக் கையில் ஏந்தி வளைந்த கையின் தடுக்காவ் இறுக்கி நின்று உண்டு ஆடைகளால்


தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
Thaameea peenathee naalum samanodu yullal bavarum

Who are not clean their body with water and then wandering everywhere with sorrow and those samanass
தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும்


இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
Eadath thaa lathantham thaan eathanra thenru ninravar

As per their wish they propagated their religious doctrine without any clear idea and then as per convenience they explain it to others
தம் விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள் இது என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும்


கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
Eeyaa mea vaa eathum sol ealai mali marutham poo

Thick form of leaves are filled the maruthaa tree flowers are grinded and extracted essence
இலைகள் நெருங்கிய மருத மரத்தின் பூவை அரைத்துப் பின்புறத்தே பூசிச்


புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
Puttathea atti ttu puthaiku mei kol putharum

And then dipped the white cloths and then converted in saffron form and then tied as dress form and those buthaass
சாயமூட்டிய ஆடைகளைத் தம் உடலின் பின் பக்கத்தே சுற்றிக் கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய புத்தர்களும்


போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
Polvaar thaam vooraamea poi punaryu sei thavanath tidam

Who are not known form lord Siva descended place it is
போல்வார் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம்


கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
Kattikaal vetti theeng karumbu thantha paim punal

To cut off the sugar cane from the fields so that from the cutoff place juice is flowing in the canal way
வெள்ளக்கட்டிகளைத் தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனிய சாறு வாய்கால் வழியே


காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
Kaalea vaaraa meealea paai kalumala valanagarea

And in that way flowing place is seergali which is fertile one
வந்து மேல் ஏறிப் பாயும் வளமுடைய கழுமல வள நகராகும்

1369 கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
Kan chath theen yundittea kalithu vandu sanbagam

In the lotus flower place sucked the honey and then enjoyed it and then entered in to the sanbaga tree place

தாமரை மலரிலுள்ள தேனைக் குடித்து களித்த வண்டுகள் சன்பகமரச் சோலைகளில்


கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
Kaaneea theenea pooraarum kalumala nager earaiyai

Where dwelling honey bees with it waging war and that fertile seergali temple place dwelling lord Siva
உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் கழுமல வளநகர் இறைவனைத்


தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
Thangai saar sanbai kon samaitha nal kalai thurai

Ganasambanther who has surrender under lord Siva’s feet and who is also leader to seergaali place
தஞ்ச்சமாகச் சார்ந்துள்ள சண்பை நகரத் தலைவனும் தமிழ்


தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
THAAMEA POL VAAR THEEN VOORAAR TAMIL VERAGANA MOLI

And who is exceled in Tamil language and without any deficiency form of sang the above songs and which is equivalent to honey taste
விரகனுமாகிய ஞானசம்பந்தன் குறைவின்றிப் பாடியமைத்த தேனுக்கு நிகரான


எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்
EEANGA THEEI VINRIKKEA EAMAI THESAI THAMAITHA KONDU

The above decade are well learnt form and which is equal to itself
இப்பதிகம் பாடல்கள நல்ல கலைகளில் துறை போய்த் தமக்குத் தாமே நிகராய்


டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
EEAALEA EEALEA NAALEA MOONRU EAYAL EASAI EASAIYIYAL PAA

With twenty one musical notes are filled form and in natural form without any vengence
இருபத்தொரு பன்முரையினால் இயல்பாக வஞ்சனையின்றி


வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
VANGA THEEI VINRIYKKEA MANAM KOLA PAYITRU VOOR

With devotion filled form singing disciple’s bosom and then devaass are praised form of
மனம் பொருந்தப் பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால்


மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.
MAARBEA SEER VAAL VAANOOR SEER MATHI NUTHAL MADA VARALEA

Wealth god Lakshmi will clubbed with them and that wealth god Lakshmi fore head is just curved moon like one
போற்றப்பெறும் சிறப்பு மிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வார்

திருச்சிற்றம்பலம்

July 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: