OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KALIL

ganesheit July 31, 2019

1.119 திருக்கள்ளில்
THIRU KALIL


பண் – வியாழக்குறிஞ்சி
This is thondai kingdom temple place. Now it is called in the name of thiru kallam, thiru kandalam. In this temple place bhurugu saint conducted poojaass
தொண்டை நாட்டுத்தலம் இது திருக்கள்ளம் திருக்கண்டலம் என வழங்கப்படுகின்றது பிருகு முனிவர் பூசித்த திருத்தலம்.


1282 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
MULLIN MEEAL MUTHU KOOGAI MURALLUM SOLAI
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
VELLIN MEEAL VEDU KOORAI KODI VELAINTHA

The thorn filled the tree top place stayed the good old awls are raising sounds and that plantations are covered place and villaam fruits bearing trees top place spread over creeper plants
முள்ளுடைய மரத்தின் மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்தும் விளா மரங்களின் மரல் படர்ந்தத கூரைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய


கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
KALIL MEEYA ANNAL KALALGAL NAALUM
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.
YULLU MEEAL YUAR EAITHAL ORU THALAIYEEA

The temple place name kalil where lord Siva descended whose sacred feet are thinking daily it will certainly give upliftment in life
கள்ளில் என்றும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும் நினைவோமானால் உயர் வெய்துதல் உறுதியாகும்

1283 ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
AADALAAN PADALLAAN ARAVANGAL POONDAAN
ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
VOODU ALLAA KALANN EALLAAN YURAI PATHIYAAL

Lord Siva who is excelled in the dancing and singing and then so many snakes are adorned all over the body and then only skull is carried on the hands as begging bowel and then burial ground is considered as his
ஆடல் பாடல்களில் வல்லவனும்பாம்புகள் பலவற்றை அணிந்தவனும் தலை ஒட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும் சுடு காட்டித் தவிர வேறு ஓர் இடத்தை


காடலாற் கருதாத கள்ளில் மேயான்
KAADU ALLAL KARUTHAATHU KALLIL MEEYAAN
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.
PAADELLAAM PERIYAARGAL PARASU VAAREEA

Dwelling place and the elderly people are standing in nearby place and then glorified his glory and in this way lord Siva taken kalil as his dwelling place
தமது இடமாகக் கொள்ளாதவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்கள் அருகில் இருந்து அவன் புகழைப் பரவக் கல்லில் என்னும் தளத்தைத் தான் உறையும் பதியாக கொண்டு உள்ளான்

1284 எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
EANNAR MUM MATHIL EAIHA EAMAIYAA MUK KANN
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
PANNAAR NAAN MARAI PAADUM PARAMA YOOGI

The opponents three asuraass castles are destroyed by fire and lord Siva who has possessed not winking three eyes are possessed form and then in proper form composed four veethaass are all the time chanting form and then got happy from it and that form of saint lord Siva
பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதிகளை எய்து அளித்தவனும் இமையாத முன்று கண்களை உடையவனும் அமைப்போடு கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் யோகியும்


கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
KAANAAR NEER ANI MAARBER KALLIL MEEAAYAAN
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.
PENN AANAAMPERUMAAN EAMM PINGAGANEA

In the eyes are attractive form of lordess parvathi is given left part of his body and in that twin form lord Siva descended in the kalil temple place
கண்களைக் கவரும் வண்ணம் உமைபங்கனும் ஆகிய பெருமான் கல்லில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளான்

1285 பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
PERAI PETRASADAI ANNALPEDAI VANDU AALUM
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
NARAI PETRA VERI KONRAI THAAR NAYATHA

The curved moon adorned on the hair place that form of leader he is. The female honey bees are mingled with male honey bees and then raising the humming sounds in and around the honey filled konrai flower garland which is willingly adorned by lord Siva
பிறை சூடிய சடையை உடைய அண்ணலும் பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை விரும்பிச் சூடிய


கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
KARAI PETRA MEATTRU ANNAL KALIL MEEYAAN
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.
NELAI PETRA ADIYAAR GAL NENJUU YULLAANEA

Lord Siva who has possessed the poison tainted throat and then those disciples who are full -pledged mind possessed disciples in their mind lord Siva happily filled form existing and that form of lord Siva descended in the kalil temple place
விடக் கறை பொருந்திய கண்டத்தை உடையவனும்மான நிறைவு பெற்ற அடியவர்களின் நெஞ்சங்கள் நிறைந்து நிற்பவனுமாகிய சிவபிரான் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளான்.

1286 விரையாலும் மலராலும் விழுமை குன்றா
VERAI YAALUM MALARAALUM VELUMAI KUNDRAA
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
YURAI YAALUM EATHIR KOLLA YOORAA RAM MAAKAAK

The five type of fragrance filled material and fragrance flowers and then glory filled form of wards used to praise him and that hamlet people entertain him in beforehand and then lovely and big form of
மணம் கமழும் ஐவகை மணப் பொருள்களாலும் மலர்களாகும் சீர்மை குன்றாத புகழ் உரைகளாலும் ஊர்மக்கள் எதிர் கொள்ள அழகியவும் பெரியவுமான


கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
Karaiyaar ponn punal veeli kalil meeyaan
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.
Araiyaar venn kovanatha annal thaaneea

The river bank of river Cauvery and its distributaries are covered place kalil where lord Siva descended and then in the waist pace loin cloth is adorned form
கரைகளை உடைய பொன்னி நதியில் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தை எழுந்தருளி உள்ளான் இடையில் வெண்ணிறமான கோவணத்தை உடுத்தி உள்ளான்

1287 நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
NALLANAAYA PALI KOLGAI NAMBAN NALLA
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
VALANAAYA MALU VAALUM VEELUM VALLAAN

To give goodness to people with that mentality lord Siva going to every door steps for begging food and then reliable form of lord Siva and winning force filled malu and vel battle force carried on hand place and then excelled in using it
மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலி ஏற்கும் கொள்கையனகிய நம்பனும் அழகிய வெற்றியைத் தரும் மழவாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும்


கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
KALANAAYA THALAI VOOTTAAN KALIL MEEYAAN
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.
MALANAAYA THEER THEAITHUM MAA THAVATHOORKEEA

The skull begging bowel carried on hands and those big penance performing saints and whose three types of impurities are removed form (anavam kanmam mayai) blessed them and in that form lord Siva descended in the kalil temple place
உண்கலன் ஆகிய தலையோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான் தன்னை எய்தும் மாதவர் தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனைக் கள்ளில் என்றும் இத்தலத்தில் எழுந்தருளிய உள்ளான்

1288 பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
PODIYAAR MEI POOSINUM PURAVIN NARAVANG
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
KUDIYAA VOOR THIRIYINUM KOOPIDINUM

The lovely form of water bodies and plantations are covered place
Is kalil where descended lord Siva where dwelling his disciples are adorned sacred ashes all over the body
மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழ்ந்த கல்லிளில் எழுந்தருளிய இறைவன் அடியாங்கள் திருநீற்றுப் பொடியை உடலில்பூசியும்


கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
KADIYAAR POOM POLIL SOOLAI KALIL MEEYAAN
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.
ADIYAAR PANBU EAGALVAAR GAL AATHER GALLEEA

In the plantations place collected honey is consumed form and then murmuring so many lord Siva’s names and their mind is dipped in the lord Siva’s grace and that big penance performing saints and whose mannerism is cursed persons are only ignorance filled persons
சோலைகளில் எடுத்த தேனை உண்டு திரியும் பலவாறு பிதற்றியும் அவர்கள் மனம் இறைவன் திரு அருளிலேயே அழுந்தி இருக்கும் மாதாவின் அடியவர்களின் குணச் செயல்களை இகழ் பவர்கள் அறியாதவர்கள் ஆவார்

1289 திருநீல மலரொண்கண் தேவி பாகம்
THIRU NEELA MALAR VONN KANN THEEVI BAAGAM
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
PURI NOLUM THIRU NEERUM PULGU MAARBIL

The blue color flower like light filled eyes are possessed lordess Yuma devi is given left part of lord Siva’s body and three knotted thread and sacred ashes are adorned form of bosom possessed lord Siva
அழகிய நீல மலர் போன்ற ஒலி பொருந்திய கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு முப்புரிநூலும் திருநீறும் பொருந்திய மார்பினனாய் விளங்கும்


கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
KARU NEELA MALAR VEEMMUU KALIL EANRUM
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.
PERU NEELA MEDATRU ANNAL PEENU VATHEEA

The dark color throat possessor lord Siva who has all the time liked place is, where dark color flowers bloomed place is kalil temple place
கரிய மிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கரு நீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்


1290 வரியாய மலரானும் வையந் தன்னை
VARIYAAYA MALARAANUM VAIYAM THANAI
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
YURI THAAAYA ALANTHAANUM YULLUTHARKKU ANGU

The best veins are possessed lotus flower and on it dwelling bharma and then thirumal who has scale the world with three feet and got it as his asset and by the above two persons are not known that rare form of lord Siva who is elder person to this world
சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் உலகத்தைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும் நினைத்தற்க்கும் அரியவனாய் விளங்கும் பெரியோன் ஆகிய இறைவன்


கரியானும் அறியாத கள்ளில் மேயான்
KARIYAANUM ARIYAATHA KALIL MEEYAAN
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.
PERIYAAN ENRU ARIVAARGAL PEESU VAAREA

And in this rare place named kalil where lord Siva descended and those disciples who are well known lord Siva and that disciples will praise lord Siva as elderly person
அறிய தலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள்ளான் அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப் போற்றிப் புகழ்வர்

1291 ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
AACHIYA PEEIGALOODU AMANAR GUNDER
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
PEECH EAVAI NERI ALLA PEENU MINGAL

To curse that ghost form of samanaass and buthaass whose wards are not to show the true path to attain lord Siva so their wards are not to be heard
பரிச்சிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும் புத்தர்களும் கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை எனவே அவர் தம் உரைகளைக் கேளாது விடுத்து


மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
MAACHITHA VALA VAYAL MALGU KALLIL
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.
THEE SEITHA SADAI ANNAL THIRUNTHUU ADIYEA

The greatness filled and fertile place is kalil where lord Siva possessed the fire glow form of hair and that lord Siva’s sacred feet are daily pray and then praise him
பெருமைக்குரிய வள வயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய அழகிய திருவடிகளையே போற்றுவீர்களாக

1292 திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
THEEGAI NAANGUM PUGAL KAALI SELVAM MALGU
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
PAGAL POOLUM PEER VOLIYAAN PANTHAN NALLA

The four direction world people are praised form of gaanasambanther who has descended in the wealth filled place is seergali where the fragrance filled flower buds are filled place
நாற்றிசை மக்களாலும் புகழப் பெரும் சீகாழிப் பத்தியில் செல்வ வளம் நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞானசம்பந்தன் நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த.


முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
MUGAI MEEYU MUTHIR SADAIYAAN KALLIL EAATHA
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.
PUGAL LOODUM PEER EANBAM PUGUTHUM ANREEA

The well grown hair possessed lord Siva who has descended in the kalil temple place , and that form of lord Siva is praised form of composed the above poems and which are praised form of daily singing it before lord Siva and that disciples will get not only happiness but also get glory in this world
முதிர்ந்த சடைமுடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால் புகழோடு பேரின்பம் அடையாலம்.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சிவானந்தேசுவரர், தேவியார் – ஆனந்தவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

July 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: