OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEDAI MARUTHOOR

ganesheit July 25, 2019

1.110 திருவிடைமருதூர்
THIRU VEDAI MARUTHOOR


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 32 காண்க


1185 மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
Maruthu avan vaanaver thanaverkkum perun thagai peravinody earayum aanaan

Lord Siva who is the medicine to repeated birth and death who is also leader to deevaass and asuraass and then who is the cause and effect to repeated birth and death and then rare penance performing
பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும் தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும் உயிர்களின் பிறப்பு இறப்பிற்கும் காரணமானவனும் அரியதவம் உடைய


அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.
Arum thava munivaroodu all nelal keel earun thavan vala nager eadai marutheea

And those sana gaathi saints to whom lord Siva descended in the papal tree shadow and then teach then the inner meaning of veethaas and then whose dwelling place is idaimaruthu temple place
சனகாதி முனிவர்களோடு கல்லால மர நிழலில் எழுந்தருளி இருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வள நகர் இடைமகுது ஆகும்

1186 தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
THOOTRAVEN KEEDAVAN THUNAI MULAIYAAL KOOTRU AVAN KOL PULI THOL ASAITHA

To all living beings, lord Siva is the cause and effect form germination and its destruction and then twin breasts are possessed lordess yumaadevi is given left part of his body and then who is excelled in the killing instincts filled tiger is killed and then pealed its skin and adorned it as lower dress
உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரணமானவனும் இணையான தனங்கள் உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும் கொல்லும் தொழிலில் வல்ல


நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.
NEETRAVAN NERAI PUNAL NEEL SADAIMEEAL EAATRAVAN VALA NAGER EADAI MARUTHEEA

And then all over the body sacred ashes are adorned form and the flooded Ganges is adorned on the hair place so that save the whole world from destruction and that form of lord Siva’s residential pace is fertile idaimaruthu temple place
புலியினது தோலை இடையில் கட்டியவனும் மெய் எல்லாம் திருநீறு அணிந்தவனும் பெருக்கி வந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைத் காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடை மருதாகும்.

1187 படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
PADAI YUDAI MALUVINAN PAAL VENN NEETRAN NADAI NAVIL EAATRINAN GAANA MELLAAM

Malu battle force carried on his hands and the milk like white color of sacred asheses are adorned all over the body and good walking filled the bull is tamed and then used as his travelling medium
மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும் பால் போன்ற வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும் இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும்


முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.
YUDAI THALAI EADU PALI KONDU YULAL VAAN EADAI MARYTHU EANITHU YURAI EAMM EARAIYEEA

In the broken skull place accepted the begging food so that wandering all over the world and who is also my lord Siva and who is happily dwelling place is idai maruthu
உடைந்த தலையோட்டில் பலி கொண்டும் உலகெலாம் திரிந்து உழல்பவனும் எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடை மருதாகும்.

1188 பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
PANAI MULAI YUMAIYORU PANGEN VONNAAR THUNAI MATHIL MOONRAIYUM SUDARIL MOOLGA

The bulky breasts are possessed lordess yumaadevi is given left part of his body and then the opponent assuraass are used to kill common people with the help of three castles so which is destroyed by fire arrow
பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரனங்களியும் தீயில் முழ்கி அழியுமாறு


கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.
KANAI THURANTHU ADU THERAL KAALAN SETRA EANI EALI VALANAGER EADAI MARUTHEEA

And that way shot an arrow and destroyed three castles and then the death god ema is punished by unique lord Siva whose fertile place is eadaimaruthu
கணையைச் செலுத்தி அழித்தவனும் காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருது ஆகும்

1189 பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
POLIL AVEN PUYAL AVEN PUYAL EALANGUM THOLIL AVEN THYAR AVEN THUYARA KATTRUM

Lord Siva in the form of seven worlds and he is in the form of clouds and pouring rain in that work is doing form and then giving pain to some people
ஏழ் உலகங்களாக இருப்பவனும் மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும் துன்பங்களைத் தருபவனாகவும்


கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.
KALAL AVEN KARI YURI PORTHU YUGANTHA EALIL AVEN VALA NAGER EADAI MARYTHEEA

And then afterwards removed those pains and sorrows and that anklet adorned feet form of blessing all and then elephant skin is pealed and then adorned it as upper dress form and then whose dwelling place is eadaimaruthu
அவற்றைப் போக்கும் கழல் அணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும் யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்து அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வள நகர் இடைமருதாகும்.

1190 நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
NERAI YAVEN PUNALODU MATHIYUM VAITHA PORAI AVAN PUGALAVEN PUGALA NINRA

Without any deficiency full- fledged form existing in this world and then river Ganges and moon is adorned in the hair place and carried its weight in that glory filled form existing in this world and then all are praised and glorified
குறைவற்ற நிறைவாக விளங்குபவனும் கங்கையை திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும் புகழ் வடிவினனாக விளங்குபவனும் எல்லோராலும் புகழப்படும்


மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.
MARAIYAVEN MARI KADAL NANJAI YUNDA EARAI YAVEN VALANAGER EADAI MARUTHEEA

That veetha form existing in this world and then waves are curved form falling on the sea place emanated poison and which is consumed by lord Siva and whose fertile dwelling place is eadai maruthu
வேதங்காளாக விளங்குபவனும் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின் கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்

1191 நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
NANI VALAR MATHIYODU NAAGAM VAITHA PANI MALAR KONRAIYAM PADER SADAIYAAN

Daily slowly growing moon is adorned on the hair place besides snakes are adorned all over the body and then cool konrai flower garland adorned on the hair place
நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறைமதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர் மாலை சூடிய விரிந்த சடைமுடியை


முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.
MUNIVARODU AMARARGAL MURAI VANANGA EANI THURAI VALA NAGER EADAI MARUTHEEA

And in that form of lord Siva is prayed by saints and deevaass and in that way dwelling place is wealthy idaimaruthu temple place
உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.

1192 தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
THARUKINA ARAKKAN THAALUM THOLUM NERITHAVAN NADUM KAIMAA MATHA KARIYAAN

The ego filled ravana whose heads and shoulders are smashed form and then the long hand form of nose possessed mad elephant and once upon a time
செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள்களையும் தோள்களையும் நெரித்தவனும் நீண்ட கையை உடைய பிரியா மத யானையை அக்காலத்தில்


றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.
YURITHAVAN VON ALAR PURANGAL MOONRUM EARITHAVAN VALA NAGER EADAI MARUTHEEA

And its skin is pealed it and then adorned it as upper dress and then the enemies of those assuraas three castles are fired and then burnt it down and whose fertile place is idai maruthu temple place
உரித்துப் போர்த்தவனும் பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

1193 பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
PERIYAVAN PENINODU AANUM AANAAN VARI ARAVANAI MARI KADAL THUYINRA

Lord Siva who is elderly person to the whole universe and who has given left part of his body to lordess yumaadevi and then the long strips are possessed snake bed place is dark color thirumal sleeping
கீற்றுக்கலாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகிய திருமால் தாமரைமலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய


கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே
KARIYAVAN ALARAVAN KAANBARIYA EARIYAVEN VALA NAGER EADAI MARU THEEA

Those thirumal and lotus flower place dwelling bharma.who are unable to see head and feet of lord Siva but after they gave up their ego lord Siva appeared in fire pole form and that lord Siva’s residential place is thiru vedai maruthoor
எரி உருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்

1194 சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
SINTHAIYIL SAMANODU THEER SONNA PUNTHIYIL YURAI AVAI PORUL KOLLAATHEEA

Not thinking capacity possessed those samanaass and buthaass whose ignorance filled words are not to be considered as true one
சிந்திக்கும் திறனற்ற சமணர்களும் புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரையாகக் கொள்ளாதீர்


அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.
ANTHENAR VOOTHI NODU ARAVAM VOOVAA EANTHAI THAN VALA NAGER EADAI MARUTHEEA

In the idaimaruthu place bharmins are all the time chanting the veethaa manthraass besides the festival sounds are not left over and that ever active place is idaimaruthu where dwelling lord Siva is my father so you may go there and then pray him
அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்


(*) ஓத்து என்பது வேதம்.

1195 இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
EALAI MALI POLIL EADAI MARUTHU EARAIYEEA NALA MIGU GAANA SAMBANTHAN SONNA

The leaves are filled and that plantations are covered place is idaimaruthu where dwelling lord Siva. the rare form of penance filled gaanasambanther who has praised form of sang the above Tamil poems
இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடைமருதில் உறையும் சிவபெருமான் அருந்தவம் மிகும் ஞானசமந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு பாடல்களால் இயன்ற


பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே.
PALA MIGU TAMIL EAVAI PATHUM VALLAARR YULAGURU PUGALINODU VOONU VAREEA

The above ten poems are chanting form those disciples are praying lord Siva daily and that disciples are got glory filled way and then live long life
இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லாளர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.

திருச்சிற்றம்பலம்

July 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: