OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KODI MADA SENGUNROOR

ganesheit July 25, 2019

1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்
THIRU KODI MADA SENGUNROOR


பண் – வியாழக்குறிஞ்சி
In the thiru eengooi mountain place prayed ganasambanther, after wards entered in the kodi maada sengunroor temple place. In that city place living people and Siva disciples are decorated the streets and then invited him before hand at the entrance of the temple place with drum beaten sounds are raised form
This is Kong kingdom temple place and now it is called in the name of thiruchengkoodu. The other names of this place is theivath thirumalai sengoodu naagagiri kaalagiri and here lord muruga temple is available
திருவீங்கோய் மாலையை வழிபட்ட சிவஞானப் பிள்ளையார் திருக்கொடிமாடச் செங்குன்னூரை அடைந்தார்.அந்நகரில் வாழ்கின்ற மக்களும் சிவனடியார்களும் மகரதோரணம் முதலியவற்றால் நகரை அலங்கரித்து வாத்தியம் முழங்க எதிர்கொண்டு அழைத்தனர்.
கொங்கு நாட்டுத்தலம் திருசெங்கோடு என வழங்கப்படுகின்றது. வேறு பெயர்கள் தெய்வத்திருமலை,செங்கோடு,நாககிரி,காளகிரி முதலிய பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் திருத்தலமாக விளங்குகிறது.


1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
VENTHA VENNEERANINTHU VIRINOOL THIKAL MAARPIN NALLA

In good form burnt down sacred ashes are adorned and then in the broad bosom place three knotted thread adorned form
நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்துவிரிக்கப் பெற்ற பூணூல் திகழும் திருமார்பினறாம்


பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
PANTHANAVUM VIRALAAL ORU PAAKAM AMRANTHARULIK

The tip of the fingers are ball form appearing hands are possessed lordess yumadevi is given left part of lord Siva’s body
பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையமையை ஒரு பாகமாகக் கொண்டு


கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
KONTHANAVUM POLIL SOOL KODIMAADA SENKUNOOR NINDRA

The flower bunches are filled place of flower garden surrounded place and that place is named kodi mada sengunroor where descended lord Siva
பூங்கொத்துகள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்னூரில் எழுந்தருளிய


அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
ANTHANANAITH THOZHUVAAR AVALAM ARUPPAAREA

Lord Siva who is descended in the bharmin form and who are prayed him and that disciples will get relief from the sorrows and pains
அழகிய தண்ணிளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பர்கள் நீங்கப் பெறுவர்.

1153 அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
ALAIMALAI THANPUNALEA ARANVANJ SADAIKKANINTH THAAKAM

The waves are filled the cool form of Ganges river besides snakes are adorned on the hair place and then in the sacred body place
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும் சடையின் கண் அணிந்து தந்து திருமேனியில்


மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
MALAIMAKAL KOORUDAIYAAN MALAIYAAR ILAVAALAIK

The rock lady lordess yumadevi is given left part of his body and then in the hilly place growing the bananas are yielding the bunch of fruits
மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டு உள்ளவனும் மலையின் கண் வளரும்


குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
KULAIMALI THANPOLIL SOOL KODIMAADACH SENKUNDRURRO NINDRA

In that cool place is covered by plantations that place is kodi mada sengundroor
குலைகள் நிறைந்துள்ள இள வாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடி மாடச் செங்குன்னூரில்


தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
THALAI MAGANAITH THOZHUVAAR THARUMAAR ARUPPAAREA

Where descended the prime god Siva and those disciples who are praying lord Siva and that disciples will get rid of hesitation in life
எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வார்கள்


1154 பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
PAALANA NEERUPUNAI THIRUMAAR PIR PALVALAIKKAI NALLA

The milk like white sacred ashes are adorned with the fingers
பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் புனைந்த கையினனாய்


ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
EALAM MALARKKULAALAAL ORU PAAKAM AMARNTHARULIK

The fragrance filled the flowers are adorned on the hair place and that form of lodess yumadevi is given left part of his body and with that arthanari form of twin appearance
மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினாலகிய உமையம்மை ஒருபாகமாக அமைந்த கோலத்தோடு


கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
KOLA MALARP POLIL SOOL KODIMAADACH SENKUNNOOR MALKUM

The lovey flowers are bloomed in that plantations are covered place is kodimada sengundoor place descended lord Siva
அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்னூரில் எழுந்தருளிய


நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.
NEELA NAN MAAMIDATRAAN KALALETHTHAL NEETHIYEA

The blue color throat possessed lord Siva and whose sacred anklet adorned that feet are prayed and it is our duty in life
நீல நள் மாமிடற்றினானின் கழல் அணிந்த திருவடிகளை எத்துதலே நீதியாகும்


1155 வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
VAARURU KONGAI NALLA MADAVAAL THIKAL MAARPIL NANNUNG

The bra adorned breasts are possessed lordess yumadevi appearing in lovely form
கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின் கண்


காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
KAARUR KONDRAIYEDUNG KATHANAAYAKAM POONDARULICH

And in the summer time bloomed the konrai flower garland and with it the angry filled the snakes are adorned all over the body
கார் காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு


சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
SEERURUM ANTHANAR VAAL KODIMAADACH SENGUROOR NINDRA

The specialty filled bharmins are living in the kodimaadada sengonroor place descended lord Siva
சிறப்புப் பொருந்திய கந்தர்வர்கள் வாழும் கொடிமாடச் சென்குன்னூரில் எழுந்தருளிய


நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.
NEEROORU SENSADAIYAAN KALALETHTHAL NEETHIYEA

And that form of lord Siva adorned the Ganges river in his red color hair and whose anklet adorned sacred feet are daily praising it and it is rightful act on our part
கங்கை அணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்

1156 பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
PONDRIKAL AAMAIYOODU PURINOOL THIKAL MAARPIL NALLA

The wealth god existing with thirumal who has taken the avathaar of tortoise and its skull is pealed and then adorned in the bosom place besides the three knotted thread and then in good
திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஒட்டினோடு முப்புரிமூல் திகழும் மார்பின் கண் நல்ல


பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
PANDRIYIN KOMPANINTHU PANAITH THOLIYOOR PAAKAMAAKA

The pig teeth are adorned as garland form and bamboo like soft hands are possessed lordess Yuma devi is given left part of his body
பன்றியின் கொம்புகளையும் அணிந்த மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒருபாகமாக


குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
KUNDRANA MAALIKAI SOOL KODIMAADACH SEMNGUROOR VAANIL

All are adorned form of lord Siva and the hills form of high raised mansions are filled place is kodi madasengunroor and then in the space place
விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்னூரில் வானில்


மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.
MINDRIKAL SENSADAIYAAN KALALETHTHAL MEI PORULEA

Existing lord Siva in lighting form red color hair possessed whose anklet adorned feet are prayed and then praised it and it is true mater in this world
திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை எத்துதலே மெய்ப் பொருளாகும்

1157 ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
ONGIYA MOOVILAI NAAR SOOLA MORUKAIYAN SENNI

The highly regarded three leaves form of soolam battle force carried on hands and in the sacred hair place
மேற்ப்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய் திருமுடியில்


தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
THAANGIYA KANGAIYODU MATHIYANJ SADAIK KANINTHU

Ganges river is stagnated form and curved moon adorned on the hair place
தடுத்த கங்கையோடு பிறையையும் சடையின் கண் அணிந்து


கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
KONGKANVUM POLIL SOOL KODIMAADA SENKUNROOR VAAINTHA

The honey filled the flower plantations are covered place is kodi mada sengunroor where lord Siva descended
தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடக் செங்குன்னூரில் பொருந்திய


பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.
PAANGANATHAAL THOZHUVAAR VINAIYAAYA PATRRARUMEA

Lord Siva existing in the friend form and whose sacred feet are prayed and that persons deceases are at root level removed
தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் பிணிகள் வேர் பற்றோடு நீங்கும்

1158 நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
NEEDALAR KONDRAIYODU NIMIL PUN SADAI THAALA VELLAI

In the bunch form of bloomed konrai flowers and in the straight form appearing red hair place low form hanging and in the white
கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க வெண்மையான


வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
VAADALUDAI THALAIYIR PALI KOOLLUM VAAIKKAIYANAAIK

The flesh removed skull place accepting the begging food and eat it that type of life is leading form
புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய்


கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
KODAL VALAM PURAVIR KODIMAADACH SENGAKUNDROOR NINDRA

The red color ganthal flowers are bloomed in the bush place where the fertile form of mullai creeper plants are covered form of place is kodimada sengunroor place where lord Siva descended
செங்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்னூரில் எழுந்தருளிய


சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.
SEDANTHAAL THOZHUVAAR VINAIYAAYA THEYUMEA

That glory filled form of lord Siva’s feet are praying disciples and whose bad deeds will vanish and then gone away
பெருமை உடையயோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந் தொழியும்

1159 மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
MATHTHA NAN MAAMALARUM MATHIYUM VALAR KONDRAIYUDAN THUNDRU

On the red color hair place adorned good yoomathai flowers and young moon and in the bunch form of bloomed konrai flowers and all are together
செஞ்சடை மீது நல்ல ஊமைத்த மலரையும் இள மதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலரும் ஒரு சேர


தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
THOTHTHLAR SENSADAI MEL THUHAIYAVUDAN SOODIK

In thick form adorned it and that flower bunches
நெருங்கச் சூடிய பூங்கொத்துகள்


கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
KOTHTHALAR THAN POLIL SSOL KODIMAADACH SENGUNDROOR MEYA

The flower bunches are blooming the cool flower plantations are covered form of place is kodi maadasengundroor temple place descended lord Siva
பூங்கொத்துகள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் சென்குன்னூரில் எழுந்தருளிய


தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
THATHUVANAITH THOLUVAAR THADUMAATRU ARUPPAAREA

And that concept form of lord Siva is praying disciples will get relief from life
தத்து வனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இல்லை

1160 செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
SEMPONIN MENIYANAAM PIRAMAN THIRUMAALUM THEDA NINDRA

The red color body possessed form of bharma and then thirumal are searched lord Siva’s feet and head
சிவந்த பொன் போன்ற மேனியினான் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு


அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
AMBAVALATHTHIRAL POL OLIYAAYA AATHIPIRAAN

Lord Siva appeared red color coral form of light and in that way appearing the prime cause of lord Siva
பவளத்திரள் போல ஒளி வடிவினனாய் ஓங்கி நின்ற முல காரணனும்


கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
KOMBANAVUM POLIL SOOL KODIMAADACH SENKUNDROOR MEYA

The branches are filled form of thick trees are filled place and the flower plantations are covered place is kodi mada sengundoor where descended lord Siva
கொம்புகளாகக் நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கொடி மாடச் செங்குன்னூரில் எழுந்தருளியவனுமாகிய


நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.
NAMBANATHAAL THOZHUVAAR VINAIYAAYA NAASAMEA

And that lord Siva’s feet are praying disciples bad deeds are perished for ever
சிவபிரான் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்

1161 போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
POTHIYAR PINADIYARENRIVARKAL PURANGKOORUM POINTHNOOL

Under Bodhi tree praying betas and then Asoka tree place praying samanass whose falsehood filled books
போதி மரத்தை வழிபடும் புத்தர் அசோகமரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய் நூல்களை


ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
OOTHIYA KATTURAI KETTOZHALVEER VARIK KUYILKAL

They read the sentence in the books and then explain it in fabricated manner so you hear it as true one and then toiling and moiling in this world and the singing birds
மேற்கோள்களாகக் காட்டிக் கூறுவார் புனைந்துரைகளைக் கேட்டுஅவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே இசை படும் குயில்கள்


கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
KOTHIYA THANPOLIL SOOL KODIMAADACH SENKUNDROOR NINDRA

Are eating the tender leaves and that cool plantations are covered place is kodi mada sengunroor where descended lord Siva
கோதிய தளிர்களோடு கூடிய தண் பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்னூரில் எழுந்தருளிய


வேதியனைத் தொழநும் வினையான வீடுமே
VETHIYANAITH THOZHANUM VINAIYAANA VEEDUMEA

And that veethas are chanting lord Siva who is to be prayed and then our bad deeds all are perished
வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின் நம் வினைகள் யாவும் அழியும் .

1162 அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
ALAIMALAI THANPOLIL SOOLNTHA ALAKAAR PUGALINNAGAR PENUM

The waves are filled the cool water covered place and that lovely seergali city place is liked
அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
THALAIMAKARAAKI NINDRA THAMIL GNANA SAMPANTHA

And that leader form of gaanasambanther
தலை மகனாகிய தமிழ் ஞானசமந்தன்


கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
KOLAIMALI MOOVILAIYAAN KODIMAADACH SENKUNRORETHTHUM

The killing work is done that three leaves soolam battle force is carried in the hand place by lord Siva who has descended in the kodi maada sengunroor place is praised form of sang the above poems
கொல்லும் தொழிலில் வல்ல முன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடி மாட செங்குன்னூரைப்போற்றிப் பாடிய


நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.
NALAM ALI PAADAL VALLAAR VINAIYAANA NAASAMEA

The goodness filled songs are those disciples who are singing it before lord Siva and that disciples bad deeds will be perished
நலம் மிக்க இப்பதிகப் பாடல்களை ஒத வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமிபெயர் – அர்த்தநாரீசுவரர், தேவியார் – அர்த்தநாரீசுவரி.

திருச்சிற்றம்பலம்

July 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: