OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PUGALI

ganesheit July 24, 2019

1.104 திருப்புகலி
THIRU PUGALI


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 1 காண்க


1122 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
AADAL ARAYU ASAITHAANARU MAAMARAI THAAN VERITHAAN KONRAI
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
SOODIYA SEN SADAIYAAN SUDU KAADU AMERNTHA PERAAN

The dancing snake is adorned on the waist place and then rare form of four veethaas are given to this world in blessed form and then kondrai flower garden adorned on the red hair place and then dwelling in the burial ground place as his residential place
படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியவனும் அறிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும் கொன்றை மலர் மாலையைச் சூடிய செஞ்சடை முடியை உடையவனும் சுடுகாட்டை தனது இருப்பிடமாகக் கொண்டு உறைபவனும்


ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
EAADU AVIL MAAMALAI YAAL ORU BAAGAM AMARNTHU ADIYAAR EEATHA
ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.
AADI YA EAMM EARIYOOR PUGALI PATHIYAAMEEA

The petal are bloomed form in the kaiyilai hills and that hill king daughter lordess parvathi devi is given left part of his body willingly and then those disciples are praised form dancing and that form of lord Siva dwelling place is seergaali
இதழ் அவிழும் மலர்கள் பூத்த பெரிய இமயமலை அரசனின் புதல்வியாகிய பார்வதி தேவியின் ஒரு பாகமாக விரும்பி ஏற்று அடியவர் போற்ற நடனம் ஆடியவரும் ஆகிய என் இறைவரது ஊர் புகலிப் பதியாகும்.

1123 ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
EEALA MALI KULAL AAR EASAI PAADI EALUNTHA ARULLAL SENRU
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
SOOLAI MALI SUNAIYIL KUDAINTHU AADI THUTHI SEEIYA

The fragrance filled paste is adorned on the hair place and those ladies are awaking up in the early morning and then singing prayer songs so that to get god’s grace and then entered in the plantations are covered water bodies place and then taking dip in to it and then go for deep swimming form and then entered in to the temple place and conducted poojaass
மயில் சாந்து அணிந்த கூந்தலினை உடைய மகளிர் காலையில் எழுந்து இசைபாடிக் கொண்டு இறையருள் பெரும் வேட்கையோடு சென்று சோலையின் கண் விளங்கும் அனையில் துளைந்து நீராடித் துதி செய்ய


ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
AALAI MALI PUGAI POI ANDER VAANATHAI MOODI NIRU NALLA

மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.
MAALAI ATHU SEIYUM PUGALI PATHIYAAMEEA
மகளிர் நீரடித் துதி செய்ய விளங்குவது புகலிப் பதி என முடிவு செய்தல்
From the sugar cane industry emanated fumes are went up to sky level and then covered the space place and then converted morning time is evening time form and that active place is seergaali
கரும்பு ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை சென்று தேவர்கள் உறையும் வானகத்தே மூடி நின்று காலையில் நல்ல மாலைப் போதாகச் செய்வது புகழிப் பதியாகும் மகளிர் நீராடித் துதி செய்ய விளங்குவது புகலிப் பதி என முடிவு காண்க.

1124 ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
AAR ANI SEN SADAIYAAN ALAGAAR PURAM MOONRU MATRU VEEVA

நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
NEER ANI YAAGA VAITHA NIMIR PUNN SADAI EAMM EARAIVAN
கங்கை சூடிய செஞ்ச்சடையினை உடையவனும் அழகமைந்த முப்புரங்களைத் தீயில் வேவச் செய்தவனும்
Lord Siva who has adorned Ganges on his head place and then lovely three castles are fired and then destroyed it and then sacred asheses are lovely form adorned all over the body and upward tied red color hair in crown form and who is my god
திருநீற்றைத் தன் திருமேனியில் அழகாக பூசியவனும் மேல் நோக்கிய சிவந்த சடையை உடைய எம் இறைவனும்


பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
PAARANI VENDALAIYIR PAKALEA PALI ENDRU VANTHU NINDRA
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.
VERANI KOLATHTHINAAN VIRUMBUM UGALIYATHEA                         
The vultures are coved form white skull is carried on hands and then going for every door steps and then requesting for begging food and then unique form tied loin cloths in the waist place and that appearance form of lord Siva willingly dwelling place is seergaali
பருந்து சூழும் வெள்ளிய தலையோட்டை ஏந்திப் பகலில் பலி இடுக என்று நிற்பவனும் வேறுபாடு உடையவனாய்ப் புனையப் பெற்ற கோவணத்தினனும் ஆகிய சிவபிரான் விரும்பும் தலம் புகலியாகும்.

1125 வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
VELLA MATHU SADAI MER KARANTHAAN VIRIVAAR PURANGAL MOONDRUNG

The Ganges are adorned on the hair place and then three castles are put in to flames which are opponents castles
கங்கையை சடையில் கரந்தவன் திரிபுரம் தீ மடுத்தவன் உறையும் பெருக்கி வந்த கங்கை வெள்ளத்தைச் சடைமேல் கரந்தவனும் பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும்


கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
KOLLA ERIMADUTHTHAAN KURAIVINDRI YURAI KOYIL

In that form destroyed by fire and that lord Siva without any deficiency form dwelling place it is
ஏறி மடுத்தவனும் ஆகிய சிவபிரான் குறைவிலா நிறைவோடு உறையும் கோயில்


அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
ALLAL VILAIKALANI ALAKAAR VIRATH THAAMARAIMEL ANNAP

The slush filled lotus flower ponds where germinated lovely fragrance filled lotus flowers and then on it walking Anna birds
சேறு நிறைந்த வயல்களில் முளைத்த அழகிய மணங் கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும்


புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.
PULLINAM VAIKIYELUM PUGALIP PATHITHAANEA

And other birds are coming and then taking rest that place is seergaali
பிற பறவைகளும் வந்து தங்கிச் செல்லும் புகலிப் பதியாகும்

1126 சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
SOODUM MATHICHSADAI MEL SURUMPAAR MALARK KONDRAITHUNDRAI NATTAM

The curved moon adored on the hair place where the honey bees are going encircled form adorned konrai flower garland and then dancing that deevass leader lord Siva
மதி சூடிய சடையின் மீது வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்களைப் பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடும் தேவர் பிரானும்


ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
AADUM AMARAR PIRAAN ALAKAAR UMAIYODUMUDAN

And then lovely form of lordess yumaadevi and with her taken hunter form
அழகிய உமையம்மையோடு உடனாய் வேட்டுவக் கோலத்தோடு


வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
VEDU PADA NADANTHA VIKIRTHAN KUNAM PARAVITH THONDAR

And that hunter form appeared before Arjuna and then waged war with him and then blessed him with pasubatha battle force and that unique form of lord Siva’s mannerism is praised form by those disciples
வேட்டுவர் கோலத்தோடு தோன்றி அருச்சுனனுக்கு அருள் புரிய நடந்த வேறுபாடு உடையவனும் ஆகிய சிவபிரானின் குணங்கள் போற்றித் தொண்டர்கள்


பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.
PAADA INITHURAIYUM PUGALIP PATHIYAAMEA

Are praying and then praising with prayer songs and in that place happily dwelling place is seergaali
பாட அப்பெருமான் இனி துறையும் பதி புகலியாகும்.

1127 மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
MAINTHANI SOLAIYIN VAAI MATHUIPPAAI VARI VANDINANGKAL VANTHU

The young fertile place plantations are covered one where the bloomed flower place the stripped bees are sucking the honey
இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய சோலையின் கண் அலர்ந்த பூக்களின் தேனில் பரவிய வரி வண்டுகள்


நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
NANTHISAI PAADANADAM PAYILKINDRA NAMPANIDAM

Where coming form and then all the time singing the humming songs and that lord Siva’s residential place it is
வந்து வளரும் இசையைப் பாட நடனம் பயிலும் பெருமானது இடம்


அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
ANTHI SEI MANTHIRATHTHAAL ADIYAARKAL PARAVIYEZHLA VIRUMBUM

At the time of morning mid-day and evening doing the mantra form of pujas conducted by disciples and then praising lord Siva
அந்திக் காலங்களில் செய்யும் சந்தியா வந்தன மந்திரங்களால் அடியார்களாய்ப் போற்றுவதற்கு


புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.
PUNTHI SEI NAALMARAIYOR PUGALIP PATHITHAANEA

And in the four veethaass excelled bharmins are willingly think over in the mind place is seergaali temple lord Siva
நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர் விருப்போடு தமது புந்தியில் நினைக்கும் புகலிப் பதியாகும்

1128 மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
MANGAIYOR KOORUKANTHA MAZHUVAALAN VAAR SADAIMEL THINGAL

Lordess yumadevi is taken left part of body and then got happy for it and then malu battle force carried on his hands and then in the long hair pace carried moon
உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவனும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தியவனும் நீண்ட சடைமேல் திங்களையும்


கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
KANGAITHANAIK KARANTHA KARAIKKANDAN KARUTHUMIDANJ

And then adorned on the hair place and then poison tainted throat possessed form of lord Siva dwelling place is
கங்கையையும் அணிந்தவனும் விடக்கறை பொருந்திய மிடற்றினனும் ஆகிய சிவபிரான் கருதி உறையும் இடமாகிய


செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
SENGAYAL VAAR KALANI THIKALUM PUGALITHANAICH SENDRU THAM

The red color kayal fishes are swimming the deep water bodies surrounded the thiru pugali temple place and those disciples who are went there
சிவந்த கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு விளங்கும் திருப்புகலிக்குச் சென்று


அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.
ANGAIYINAAL THOZHUVAAR AVALAM ARIYAAREA

And with their hands are folded form praying disciples are getting relief from their sorrows
தம் அழகிய கைகளிக் குவித்து வணங்குபவர் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

1129 வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
VALLIYA NUNNIDAIYAAL UMAIYAAL VIRUPPANAVAN NANNUM

The light glittering form of waist are possessed the lordess yumaadevi is liked by lord Siva whose descended place it is
ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையவளுடன் பெரு விரும்பனனாகிய சிவபிரான் எழுந்தருளிய மேம்பட்ட இடம்


நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
NALLIDAMENDRIYAAN NALIYUM VIRALARAKKAN

Kaiyilai hills are highly regarded place and which is not recognized by ravana so who has tried to pluck the kaiyiai hills and that ravana’s teeth and
என்று கருதாது கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனாகிய இராவணனின் பற்களும்


பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
PALLODU THOL NERIYA VIRALOOUNDRIP PAADALUMEA KAIVAAL

And shoulders are smashed form lord Siva stamped him under the kaiyilai hills and then afterwards who has praised lord Siva with samaveethaa and then on hearing it lord Siva gave him the fighter force sphere
பற்களும் தோள்களும் நெரியுமாறு கால் விரலை ஊன்றி அடர்ந்த அளவில் அவன் தன்னைப் புகழ்ந்து பாடக் கேட்டுக் ஏந்திப் போர் செய்யும் வாளை


ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.
OLLAI ARUL PURINTHAAN URAIYUM PUGALIYATHEA

Fastly gave it and then blessed him and that lord dwelling place is seergaali
விரைந்து அருள் புரிந்தவனாகிய சிவபிரான் உறையும் இடம் திருப்புகலியாகும்

1130 தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
THAATHALAM THAAMARAI MEL AYANUM THIRUMALLUM THEDI

The pollen filled lotus flower place dwelling bharma and thirumal are searched lord Siva’s feet and head
மகரந்தம் விரிந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும்


ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
OOTHIYUNG KAANPARIYA UMAIKON URAIYUMIDAM

And then praised by them but unable to see lord Siva who is lordess yumadevi’s husband and whose dwelling place it is
புகழ்ந்தும் காண்பதற்கு அரியவனாய் நின்ற உமை மனவாளனாம் சிவன் உறையும்


மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
MAADHAVI VAANVAKULAM MALARNTHONGUM VIRAITHOYA VAAINTHA

The trees are mathavi and then up to the sky level grown the magila tree all are spread over form of fragrance filled place
மாதவி வானளாவ உயர்ந்த மகிழமரம் ஆகிய மலர்ந்து எங்கும் மணம் பரப்புமாறு


போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.
POTHALAR SOLAIKAL SOOL PUGALIP PATHITHAANEA

And that flower plantations are covered place is seergaali
பொருந்திய மலர் விரிந்த சோலைகள் சூழ்ந்த புகலிப் பதியாகும்.

1131 வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
VENTHUVAR MENIYINAAR VIRIKOVANA NEETHTHAAR SOLLUM

The wild saffron tainted dress adorned the buthaass and not even adorned that loin cloths and that samanaass whose falsehood filled wards are not to be heard
கொடிய மருதத் துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரித்த கோவணம் உடுப்பதையும் துறந்த திகம்பர சமணரும் சொல்லும்


அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
ANTHARA GNANAMELLAM AVAIYOOR PORULENNEL

and those perishable form of gaana giving preaching are not to be considered as matter form
அழிவு தருள் ஞானங்கலாகிய அவற்றை ஒரு பொருளாகக் கொள்ளாதீர்


வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
VANTHETHERUMPURA MOONRORITHTHAAN URAIKOYIL VAAINTHA

Lord Siva is defied by three castle assuraass are destroyed by fire arrow and that form of lord dwelling place is seergaali
தம்மை வந்து எதிர்த்த திரிபுரங்க்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில்


புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.
PUNTHIYINAAR PAYILUM PUGALIP PATHITHAANEA

That good knowledge possessed disciples are dwelling place it is you may go in that temple place and then pray lord Siva there
பொருந்திய அறிவு உடையவர் வாழும் புகலிப் பதியாகும் அதனைச் சென்று தொழுமின்

1132 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
VEDHAMOR KEETHAMUNAR VAANAAR THOZHUTHETHTHA MIGUVAASAP

Veethaas and prayer songs are well learnt form and weeping form chanted them and the bharma form vethaa leart bharmins are
வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர் தொழுது ஏத்தவும் மிக்க மனமுடைய தாமரை மலர் உறையும் நான்கு முகனைப் போல


போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
POTHANAIP POLA MARAIYOR PAYILUM PUGALITH THANNUL

And in that form of persons are daily conducted poojaas and then praised lord Siva in that seergaali place
விளங்கும் மறையவர் போற்றவும் விளங்கும் புகலியுள் உறையும்


நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
NAATHANAI GNANAMIGU SAMPANTHAN THAMILMAAZHAI NAAVIL

And that form of lord Siva is praised by gaana filled ganasambanther who has sung the above Tamil poems and then those disciples who are sung with their tongue
சிவபிரானை ஞானம் மிகும் சம்பந்தன் பாடிய இத்தமிழ் மாலையை நாவினால்


ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.
OTHAVALLAARU ULAKIL URUNOI KALAIVAAREA

And that disciples are daily chanting it before lord Siva and who will get away from the repeated birth and death
ஓதி வழிபட வல்லவர் மேம்பட்ட பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.

திருச்சிற்றம்பலம்

July 24, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: