OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

SEERGAALI

ganesheit July 24, 2019

1.102 சீகாழி
SEERGAALI


பண் – குறிஞ்சி
பதிக எண் 1 காண்க


1102 உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
YURAVAAR KALAIYIN KAVITHAI PULAVARK ORU NAALUM
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
KARAVAA VANN KAI KATRAVER SEERUM KALI KAALI

With gaana filled form of singing the poems in musical notes filled form by poets who are given wealth by people and those people are living place is seergaali
ஞானம் நிறைந்த கலை உணர்வோடு கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளமை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலி மிக்க காழிமானகரில் விளங்கும்


அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
ARAVAAR ARAIYAAR AWNAR PURA MOON EARI SEITHA
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.
SARAVAA EANBAAR THATHUA GAANA THALAI YAAREEA

Those disciples who are praised lord Siva with snakes are adorned in the waist place and that prime god he is and then three castles are destroyed by single arrow and that form of bow and arrow carried prime lord and that mentality possessed disciples are gaana filled leaders in this world
பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே என்று போற்றுபவர் தத்துவா ஞானத்தில் தலையானவராவர்.

1103 மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
MOI SEEAR VANDU YUNN MUM MATHA NAAL VAAI MURAN VEELATHU
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
KAI POL VAALAI KAAI KULAI EENUM KALI KAALI

The covered form of honey bees are sucking honey from the flower gardens are filled place and then madness filled form of saliva oozing out and that long nose possessed elephant like banana bunches are yielding that plantations are covered place is seergaali
சூழ்ந்து மொய்த்தலை உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும் தொங்குகின்ற வாயையும் முரண் படு தலையும் உடைய களிற்று யானையின் கை போல வாழை மரங்கள் கனிகளை ஈனும் ஒளி நிறைந்த காழிப்பதியில்


மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே
MAI SEEAR GANDATHU EANN THOOL MUK KANN MARAIYOONEEA
ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே.
EAIYAA EANBAAR KU EALLALGAL AANA ADAIYAAVEEA

Those disciples who are praised lord Siva with blue color throat possessed lord Siva and three eyes are possessed and you are leader to four veethaass and in that way praising people are not affected by problems in life
நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் முன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே தலைவனே என்பவர்களை அல்லல்கள் கிடையாது

1104 இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
ELAGATHU KAMALATHUEENGAL EAYANGUM KALI KAALI
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
KANAGA PURISAI KAVIN AAR SAARUM KALI KAALI

The petals are bloomed form of lotus flowers and from it emanated honey is flowing in the water bodies and with lime paste constructed protection walls in lovely form appearing and that ever emotional festival sounds are filled place is seergali where
முறுக்கு அவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும் சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதிகளை உடையதுமான ஆரவாரம் மிக்க காழிப்பதியில்


அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
ALAGA THIRU NANN NUTHALI PANGAA ARANEEA EANN
றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.
YUUGAL PAADUM ADIYAARKU YURU NOI ADAIYAAVEEA

Lovely form of hair possessed and good fore head possessed lordess yumaadevi’s husband is lord Siva who is prime god in this melted form singing disciples are not affected by any type of sorrows
அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே அரனே என மனம் உருகிப்பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா

1105 எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக்
EANNAAR MUTHAM EERU MARAGATHAM POL KAAITHU
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
KANNAAR KAMUGUU PAVALAM PALUKKUM KALI KAALI

The lovely beetle nut trees in our mind filled white pearls form bloomed and then coral red color form seeds are emanated and in that emotional filled seergaali place existing
அழகிய கமுகு மரங்கள் எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல் அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப்பதியில் விளங்கும்


பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
PEEN VOOR BAAGAA PITHAA PERAANEEA EANBAARKKU
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே
NANNA VENAIGAL NAAL THOORUM EANBAM NAGUM MEEA.

Lord Siva is possessed left part of his body female form and lunatic form and my prime god form and in this way those disciples who are praising and praying lord Siva and they will not affected by bad deeds and daily they will enjoy happiness in life
பெண்ணோர் பாகனே பித்தனே பிரானே என்பவர்களை வினைகள் நண்ணா நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்

1106 மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்
MALAIYAAR SAARAL SEM PUNAL VANTHAG ADI VARUDAK
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
KALAIYAAR KARUMBU KANN VALAR SOLI KALI KAALI

The clouds are stagnated in the western ghosts place flowing red color water which is embraced form of feet of sugar cane fields so that bulky form of sugar cane growing place is seergaali temple place descended
மேகங்கள் தங்கிய குட திசை மலைச் சாரலில் இருந்து சிவந்த நிறமுடைய தண்ணின் வந்து அடிகளை வருட அதனால் மூங்கில் போன்ற பருத்த கரும்புகளின் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலி மிக்க சீகாழிப் பத்தியில் எழுந்தருளிய


உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
YULAIYAAR KARAVAA YUMAIYAALKANAVAA OLIR SAGA
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.
KULAIYAA EANRU KOORA VALLAARGAL GUNAVOOREEA

Lord Siva you have carried stage in your hands and you are husband to lordess yumaadevi and sound raising conch ornaments are adorned on your ear place and in that way praising and praying lord Siva and that disciples are good mannerism filled persons
மானேந்திய கையனே உமையம்மையின் கணவனே ஒளி பொருந்திய சங்குக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற வல்லவர்கள் குணம் மிக்கவர்கள் ஆவார்கள்

1107 குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
KURIYAAR THERAIGAL VARAIGAL NINRUM KOOTAARU
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
THARIYAAR KALISAM PERASAM KODUKKUM KALI KAALI

With musical notes are filled form of flowing down and that waterfalls which are waves emanating form flowing within the boundaries of river flowing and in the water pepper plants are giving taste to water and that emotional filled form of filled place is seergaali where descended place is seergaali
தாள ஒலிக் குறிப்போடு கூடிய அலைகளை உ டைய மலைகளில் இருந்து வரும் அருவிகள் இரு கரைகளுக்கும் உள்ளடக்கிய ஆறாக அடித்துக் கொண்டு வரும் மிளகின் கொடித் தண்டுகளின் சுவையைத் தன் தண்ணிருக்கு வழங்கும் ஆரவார மிக்க காழிப்பதியில் எழுந்தருளிய


வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை
VEERIYAAR KONRAI SADAIYAA VEEDAIYAA EANBAARAI
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.
ARIYAA VENAIGAL ARU NOOI PAAVAM ADAIYAAVEEA

Lord Siva you have adorned konrai flower garland adorned on your pigtail place and then moving on the back of the bull and in that way those disciples who are praising and then praying him and that disciples are not affected by bad deeds and they are not affected by deceases and sins
மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே விடையை ஊர்ந்து வருபவர் என்று கூறுபவரை வினைகள் அணுகாது அகலும் அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய மாட்டா

இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

1108 உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
YULAM KOL SANGATHU AAR KALI VOOTHA THTHAI YUNDU
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
KALANGAL VANTHU KAAR VAYAL EEAARUM KALI KAALI

The big conches are lashed by the sea waves and then placed on the sea shore place and then the wooden small ships are placed on the sea shore place and in that dark color sound raising seergaali place descended lord Siva
வலிய சங்குகளை உடைய கடலினது அலைகளால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய -6வயலின் கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய


இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
EALANGAI MANNAN THANAI EADER KANN ARUL SEITHA
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.
ALANG KOL SENNI MANNAA EANNA THAVAM AAMEEA

At first ravana is stamped under the kailai hills and then after realizing his sin and prayed and then begged under lord Siva’s feet and afterwards lord Siva blessed him with boons and lord Siva you have adorned Ganges on your hair and your my king and in that way praising lord Siva and that disciples penance will enhance power to them
இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புருத்திய பின் அருள் செய்த கங்கை சூடிய திருமுடியை உடையவனே மன்னவனே என்று சிவபிரானைப் போற்றத் தவம் கைக்கூடும்

1109 ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
AAVI KAMALATHUANNAM EAYANGUM KALI SOOLA
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
KAAVI KANNAAR MANGALAM VOOVAA KALI KAALI

In the water bodies place bloomed lotus flower place living anna birds are wandering in the salt field place where dark color flower like eyes are possessed spinsters whose sacred sounds are raising without any interruption with that rich place is seergaali
ஓடையில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்களிகள் சூழ்ந்திருப்பதும் நீல மலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பதுமாகிய செழிப்புமிக்க சீகாழியில்


பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
POOVILTHOONRUM PUTHTEEL VODU MAALAVAN THAANUM
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.
MEEVI PARAVYUM ARASSEA EANNA VENAI POOMEEA

In the lotus flower place dwelling bharma and therumal are come over here and then prayed and praised lord Siva in this way if we are praising lord Siva our bad deeds will be removed
தாமரை மலர் மேல் உறையும் பிரமனது திருமாலும் வந்து பரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்

1110 மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
MALAIYAAR MAADAM NEEDU YUAR EANGI MANJAARUM
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்
KALAIYAAR MATHIYAM SEEAR THARUM ANTHEN KALI KAALI

The hill form of high raised storied buildings where the clouds are crawling and on the long protections wall place staying the curved moon and in that cool place leader lord Siva
மலை போல் உயர்ந்த மாட வீடுகளின் மேகங்கள் தவழும் நீண்பெயர்த்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தாங்கும் அழகிய குளிர்ந்த ஒலி மிக்க காழிப்பதியின் தலைவனே


தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
THALAIVAA SAMANAR SAAKIYARKKU EANNUM ARI VONNAA
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே.
NELAIYAAI EANNA THOL VENAI YAAYA NILLAAVEEA

Samanaass and buthaass are not known lord Siva in that highly regarded state form existing lord Siva in this way praised by disciples and then whose good old bad deeds will be eliminated
சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே என்று போற்ற நம் தொல் வினைகள் நில்லா

1111 வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
VADI KOL VAAVI SENG KALUNEER KONG AADI
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
KADI KOL THEANRAL MUNRIL VAIGUM KALI KAALI

The honey fragrance filled the water pond place bloomed the red color kaluneer flowers where the soft breeze is penetrated and then carried away that fragrance breeze is wandering in the high raised buildings entrance place and in that sound raising seergaali place
தேன் மணங் கொண்ட வாவியின் மலர்ந்த செங்கழுநீர் நீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மனத்தைக் கொண்ட தென்றல் முன்றில் வந்து உள்லாவும் ஒலி மிக்க காழிப்பதியில்


அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
ADIYAAR THAM MAI ANTHAMIL GAANA SAMBANTHAN
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.
PADI KOL PAADAL VALLAVER THAM MEEAL ALI POOMEEAA

Where lord Siva descended and that infinitive glory filled ganasambanther who has praised form sang the above poems and those disciples who are repeatedly sung it and on them inflicted curse will be removed
வீற்றிருக்கும் அடிகளை முடிவற்ற புகழை உடைய ஞானசமந்தன் இந்த உலகிடைப் போற்றிப் பாடிய பாடல்களை வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்.

திருச்சிற்றம்பலம்

July 24, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: