OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEDAI MARUTHOOR

ganesheit July 20, 2019

1.95 திருவிடைமருதூர் – திருவிருக்குக்குறள்
THIRU VEDAI MARUTHOOR


பண் – குறிஞ்சி
32 ஆம் பதிகம் பார்க்க

1025 தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே.
THODOR KAA THINAN PAADU MARAI YINAN
KAADU PENI NIND RAADU MARU THANEEA

Lord Siva who has descended in the thiru vedai maruthoor temple place who has adorned the ear ornament thodu in his left ear and all the time chanting the four veethaass and in the burial ground place standing form carried fire in the hand place and dancing
திருவிடைமருதூர் இறைவன் தோட்டை இடது செவியில் அணிந்தவராய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய் சுடுகாட்டை விரும்பி அதன் கண் நின்று ஆடுபவன் ஆவான்.

1026 கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.
KARU THAAR PURAM EIVAR EUTHEA INITHOOR VAR
MARUTHEY IDA MAAGUM VIRU THAAM VINAI THEER PAAREA

The three castle asuraas are disregarded lord Siva and whose three castles are destroyed by fire arrow and bull is used as travelling medium and with it moving everywhere whose willing residential place is thiru vedai marutoor. If you pray him your glory will multiply and then bad deeds will be eliminated
தம்மைக் கருதாதவர்கலாகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும் எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும் அவரைத் தொழுதால் புகழ் சேரும் வினைகள் தீர்த்தலை உடையனவாரும்
the three castle asuraas are disregarded lord Siva

1027 எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.
ENNUM ADIYAAR KAL ANNAL MARU THARAI
PANNIN MOZHI SOLLA VINNINTH THAMA THAAMEA

Those disciples who are think over with mind and musical notes filled form singing glory filled prayer songs and that disciples will rule the upper world
மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவானாரைப் பண்ணிசையோடு அவர் தம் புகழைப் போற்ற விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.

1028 விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.
VIRIYAAR SADAI MENI ERIYAAR MARU THARAAITH
THARIYAA THETH THUVAAR PERIYAA RULAKI LEA

The spread over hair possessed lord Siva and then fire like body color possessed lord Siva in this form lord Siva descended in the thiruvedai maruthoor temple place in the name of marutha vaanar and those disciples who are pray early and that people will be considered as elderly people and then praised by all
விரிந்த சடை முடியை உடையவரும் எரி போன்ற சிவந்த மேனியருமாகிய மருதவானாரைத் தாமதி யாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப் போற்றப்படுபவர்.

1029 பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.
PANTHA VIDAI YEERUM ENTHAI MARU THAARAI
SINTHAI SEI PAVAR PUNTHI NALLAA REA

In the pole place tied the bull is used by maruthavanar (lord Siva) as travelling medium and those disciples who are thinking lord Siva in meditation and they are with gaana knowledge considered as highly regarded persons
கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எருதையாராகிய மருதவானரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவர் ஆவர்

1030 கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.
KALALUNJ SILAM PAARKKUM ELILAAR MARU THARAIP
THOZHALEA PENU VAARK KULALUM VINAI POMEA

Lord Siva who has in his one leg kalal ornament and in another leg silambu ornament in that form lord Siva takes half part of body of lordess yumaadevi and in that lovely form of maruthavanar is prayed by those disciples in calm form and they will be got relief from painful sorrows
ஒரு காலில் கழலும் பிறிதொரு களில் சிலம்புப் ஒலிக்கும் உமையாராகிய அழகிய மருதவானாரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்ததிருக்கு உரிய வினைகள் துன்பங்கள் அகலும்

1031 பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.
PIRAIYAAR SADAI YANNAL MARAI YAAR MARU THARAI
NIRAI YAAL NIANI PAVAR KURAIYAAR INBAMEA

The curved moon adorned on the hair of lord Siva who is leader to veethaass and in that form descended in the name of maruthavaanar and those disciples who are full-fledged form thinking and that disciples will not got reduced happiness
பிறை பொருந்திய சடைமுடியினை உடைய ஞான வேதங்களை அருளிய மருதவானாரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.

1032 எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.
EDUTH THAAN PUYAN THANNAI ADUTH THAAR MARU THARAITH
THODUTH THAAR MALAR SOOTTA VIDUTH THAAR VEET KAIYEA

The kaiyilai hills are lifted ravana whose shoulders are stamped by maruthavaanar to whom flowers are tied as garland and then adorned it by those disciples who will get rid of the repeated birth which is the child of lust feelings
கயிலை மாலையை எடுத்த இராவணனின் தோள்கள் நெரித்த மருதவானருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள் பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்கள் ஆவார்.


1033 இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.
IRU VAARK KERI YAAYA URUVA MARAU THAARAIP
PARAVI YETH THU VAAR MARUVI VAAL VAAREA

Bharma and thiru mal are unable to know the feet and head and in that fire form of stood lord Siva and who is glorified by prayed songs and those disciples will get all the benefits in life and then mingled with lord Siva
திருமால் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவாய் நின்ற மருதவானாரைப் புகழ்ந்து எத்தித் துதிப்பவர் எல்லா நலங்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்

1034 நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.
NIND RUN SAMAN THERAR ENDRU MARU THARAI
ANDRI YURAI SOLLA NANDRU MOZHI YAAREA

In the standing form consuming food by samanaass and buthaass who are all the time talking ill about lord Siva so they are not good person in any point of time
நின்று உண்ணும் சமணரும் புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்

1035 கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.
KARUTHU SAMPAN THAN MARUTHA RADI PAADI
PERUTHUM THAIL SOLLAP PORUN THA VINAI POOMEA

All the time lord Siva’s glory only is considered by mind by ganasambanther who has glorified lord Siva by prayer songs by the above Tamil songs and those disciples who are repeatedly singing before lord Siva and that disciples bad deeds will be removed
இறைவன் திரு அருளையே கருதும் ஞானசமந்தன் மறுத வாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்களுக்குத் துன்புருத்திய வினைகள் போகும்.

திருச்சிற்றம்பலம்

July 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: