OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MUTHU GUNTRAM

ganesheit July 20, 2019

1.93 திருமுதுகுன்றம் – திருவிருக்குக்குறள்
THIRU MUTHU GUNTRAM


பண் – குறிஞ்சி
பதிக எண் 12 காண்க


1003 நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.
NINDRU MALAR THOOVI INDRU MUTHU KUNDRAI
NANDRUM EATHTHU VEERK KONDRUM INBA MEA

Today itself go to thiru muthugundram and then the lord Siva is prayed with floral tribute and then conducted poojaas and with good minded form prayed lord Siva and that you will all the time living in happy state form
இன்றே திருமுதுகுன்றம் சென்று அங்குள்ள இறைவரை மலரால் அருச்சித்து நின்று நல்ல முறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.

1004 அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.
ATHTHAN MUTHU KUNDRAIP PATH THIYAAKI NEER
NITHTHAM EATHTHU VEERK KUITH THAL SELVAMEA

You may daily with full devotion form prayed lord Siva in thiru muthu gundram and then your wealth will multiply daily
நீர் திருமுதுகுண்டத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன் மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்

1005 ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே.
AIYAN MUTHUKUNDRAI POIKAL KEDA NINDRU
KAIKAL KOOPPU VEER VAIYAMUM AATHAAMEA

In the thiru muthgundram place dwelling lord Siva and you may pray him without any falsehood form and pray with true devotion filled form with folded hands and then the whole world will come under your control
திருமுதுக்குன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்கள் ஆயின் உலகம் உம்முடைய தாகும்

1006 ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே.
EESAN MUTHU KUNDRAI NESA MAAKI NEER
VAASA MALAR THOOVAP PAASA VINAI POOMEA

Lord Siva who has descended in the thiru muthugundram and with love form daily conducted poojaas with flowers then your relationship bond and then from it emanated bad deeds will be removed
திருமுதுகுன்றம் ஈசனை நீர் அன்போடு மனம் பொருந்திய மலர்களால் அருச்சிருச்சித்தவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்

1007 மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.
MANI YAAR MUTHU KUNDRAIP PANI VAAR AVAR KANDEER
PINI YAAYINA KETTUTH THANIVAAR RULAKILEA

The handsome form of lord Siva who has descended in the thiru muthugundram temple place who are surrender under his feet and that persons will get relief from deceases and then live calm life in this world
அழகிய திருமுதுகுன்றத்து இறைவரைப் பணிபவர்கள் பிணிகளில் இருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்

1008 மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.
MOIY YAAR MUTHU KUNDRIL AIYAA VENA VALLAAR
POIYYAA RIRA VORK KUCH SEIY YAAL ANI YAALEA

The intimate disciples are filled lord Siva who has descended in the thiru muthgundram temple place and if you call him as your father and the prayed under his feet daily and then those who are begging under his feet wealth god Lakshmi will give you wealth and then all the time live in prosperity form
அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை நீர் ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்வீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியவள் ஆவாள்

1009 விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே.
VIDAI YAAN MUTHU KUNDRAI IDAIYAA THETH THUVAAR
PADAIYAA YINA SOOLA UDAIYAAR ULAKAMEA

The lord Siva who is moving on the bull back and those disciples who are praying without any interruption and they are king form battle forces are covered form ruling this world and that highly regarded place they will attain
திருமுதுகுன்றத்து விடை ஊர்த்தியை உடைய சிவபிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர் படைகள் பல சூழ உலகத்தை ஆட்சி செய்யும் உயர்வை உடையவராவர்.

1010 பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.
PATH THUTH THALAI YONAIK KATH THA VERAL OONDRUM
ATH THAN MUTHU KUNDRAI MOITH THUP PINI MINEA

The ten heads are possessed ravana who is cried with pain form lord Siva put his leg thumb finger on the kaiyilai hills and then stamped him. In that form of lord Siva who has descended thiru muthugundram you may go near him and then pray him
பத்துத் தலைகள் உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.

1011 இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.
IRUVAR ARIYAA THA ORUVAN MUTHU KUNDRAI
URUKI NINAI VAARKAL PERUKI NIKAL VOOREA

The two persons bharma and thirumal are unable to see head and feet of lord Siva and in that form lord Siva descended in the thiru muthu gundram temple place so you may go there and then control your sense organs and then pray him
திருமால் பிரம்மர்கலாகிய இருவரும் அறிய வொண்ணாத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி உள்ளார் அங்கு செல்வீர் புலன்களை அடக்கி உள்ளத்தை ஒடுக்கி வழிபடுவீராக

1012 தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.
THERAR AMANA RUNJ SERUM VAGAI ILLAAN
NERIL MUTHU KUNDRAI NEER NIN RULKUMEA

Not comparable that buthass and samanaass are not possessed punniya to approach lord Siva who has descended in the thiru muthu gundram temple place so you may go there and then control your mind and body and the five sense organs and then pray lord Siva
நேர்+இல் = இணை இல்லாத புத்தர் சமணர் ஆகியோருக்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமான் ஒப்பற்ற திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி உள்ளார் அங்கு செல்வீர் புலன்களை அடக்கி உள்ளத்தை ஒடுக்கி வழிபடுவீராக

1013 நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.
NINDRU MUTHU KUNDRAI NANDRU SAMANTHAN
ONDRUM URAI VALLAAR ENDRUM UYAR VOOREA

Ganasambanther who has sung the above songs on thirumuthu gundram lord Siva and those disciples who are daily singing it before lord Siva and that disciples will get all the time elevated pace
திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடையவனாகிய ஞானசமந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஒத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

July 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: