OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NAAGAI KAARONAM

ganesheit July 19, 2019

1.84 திருநாகைக்கரோணம்
THIRU NAAGAI KAARONAM


பண் – குறிஞ்சி
THIS River Cauvery southern side temple. The saint thiru punndarigar is allowed to mingle with his body. To saint agathiar lord Siva showed his marriage attaiyer in this place. The nayanar named athipather who has descended in this place. Other names of this place are Siva rasa thaani, parpatheecharm, arava nagaram. This is one of the sabthavedanga temples. Here lord Siva danced sunthara veedanga dance
Other vedanga temples are
Thiru naagai kaaronam thiruvaaroor thiru marai kaadu thirunallaaru thiru vaaimoor thiru kolili thiru kaaraaiyil
காவிரி தென் கரைத்தலம் புண்டரீக முனிவரை ஈசன் தன் திருமேனியில் ஆரோகளித்துக் கொண்ட திருத்தலம் அகத்திய முனிவருக்குத் திருமணக் காட்சியை அருளிய தலம் அதிபத்த நாயானார் திரு அவதாரத்தலம் திருமணக் காட்சியாய் அருளிய தலம் அதிபத்த நாயனார் திரு அவதாரத்தலம் இத் தலத்தில் வேறு பெயர்கள்.
சிவராசதானி பார்பதீச்சரம் அரவநகரம்
சப்தவிடங்கத் இஸ்தலங்கள் ஒன்று சுவாமி சுந்தரலிங்கன் நடனம் பாராவாத ரெங்க நடனம் ஏனைய விடங்கத்தலமாவன விடங்கத் தலங்கள்
திருநாகைக் காரோணம் திருவாரூர் திருமறைக்காடு திருநள்ளாறு திருவாய்முள் திருகோளிலி திருக்காறாயில்
In the thiru satha mangai place stayed in thiru neela nakka naayanar mansion and sang so many decades. After some time he wanted to pray in other temple places and then moved with his disciples and then prayed in so many temples and then ultimately entered in to naagai kaaronam and then sang the following decade and there stayed some more days
திருச்சாத்த மங்கையில் திரு நீல நக்கநாயனார் திருமாளிகையில் தங்கி வழிபட்டுத் திருப்பதிகம் பாடி எழுந்தருளிய இருந்த பிள்ளையார் பிற பத்திகளையும் வழிபடத் திருவுளம் பற்றி அடியார் கூட்டங்களோடு நாகப்படிடினத்தை அடைந்தார்கள். திருநாகைக் காரோனத்தைக் கை தொழுது கலந்த ஓசைக் சொற்றமிழ் மாலையாகிய “புனையும் விரி கொன்றை என்னும் இப்பதிக்கத்தைப் பாடிச் சில நாள் தங்கி இருந்தார்.

904 புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
punaiyum virikondraik kadavul punal paaya nanaiyum sadai melor nagu vendalai soodi

The fully bloomed konrai flower garland on the hair place and that form of lord Siva who has that Ganges wetted hair place the laughing white skull garland adorned form
விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுள் ஆகிய சிவபிரான் கங்கையை தாங்கியதால் நனைந்துள்ள சடையின் மேல் வாய்விட்டு சிரிப்பது போல் வெள்ளிய தொருதலை மாலையைச் சூடி


வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
VINAIYIL ADIYAARKAL VITHIYAAL VAZHI PATTUK KANAIYUNH KADAL NAAGAIK KAARONATH THAANEA

The bad deeds are removed form of good disciples who are as per rule conducting prayer in that sea side nagai kaaronam temple place dwelling lord Siva
வினை நீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செரிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

905 பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
PEN NAAN ENA NINDRA PEMMAAN PIRAICH SENNI ANNAA MALAI NAADAN AARRO RURAI YAMMAAN

Lord Siva appearing in male and female form appearing in single appearance who has adorned the curved moon on his hair place and then thiru annamalai and thiruvaaroor temple place dwelling leader form
பெண்ணும் ஆணுமாய் ஓர் உருவில் விளங்கும் பெருமானும் பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை அரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும்


மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
MANNAAR MULA VOVAA MAADA NEDU VEETHIK KANNAAR KADAL NAAGAIK KAARO NATH THAANEEA

The prayer form of raised drum sound are hearing without any interruption in that broad street place existing the storied buildings in that sea shore place மார்ச்சனை பொருந்திய முழவின் ஒளி இடைவிடமால் கேட்கும் மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலை அடுத்த

906 பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
PAA ROOR THOZHA VINNOOR PANIYAM MATHIL MOONDRUM AARAAR ALAL OOTTI ADIYAARK KARUL SEITHAAN

In that lord Siva descended place form people are praying and then upper world deevaass are submitted under his feet who has fed fire on three castles and then saved them from destruction
மண்ணாக மக்கள் தொழுவும் விண்ணவர் பணியவும் அனைவருக்கும் நெருங்குவதர்கரிய அழலை ஊட்டி அளித்து அடியவர்க்கு அருள் செய்து


தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே
THEERAAR VIZHAVO VAACH SELVAN THIRAI SOOLNTHA KAARAAR KADAL NAAGAIK KAARONATH THAANEA

The big chariot procession that special festivals are conducted without any interruption and festivals are funded by wealthy people and that place is nagai Karonam where waves are filled and clouds are crawling in the sea shore place lord Siva dwelling
தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது திகழும் சிறப்பினை ஏற்று அருளும் செல்வர் ஆகிய சிவபெருமான் அலைகள் நிரம்பிய மேகங்கள் பொருந்திய கடலில் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளி உள்ளான்.

907 மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப்
POZHI SOOL MARAIPAADI MUTHIRUNJ SADAI THAN MEL AZHI SOOL PUNAL EAATRI ANNAL ANIYAAYAP

The meaning filled and words are filled veethaass are chanting form of moving lord Siva who has controlled Ganges on his grown up hair place and then blessed her and that form of leader lord Siva
பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு முதிந்த தன் சடைமுடிமேல் உலகை அழிக்க வந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவன் ஆகிய சிவபெருமான்


பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.
PAZHI SOOL VILARAAYA PATH THAR PANIN THEETH THA KALI SOOLI KADAL NAAGAIK KAARONATH THAANEA

With lovely activities are doing in this place and not even think of sins and curse in their mind those disciples are submitted under lord Siva’s feet and then pray and praise him that place is naagai karoonam sea shore place lord Siva dwelling
அழகிய செயல்களோடு பழிபாவங்களை மனத்திலும் கருதாதவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

908 ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
AANUM PENNU MAAI ADIYAARK ARUL NALKIK SENINRAVARK KINNARJ SINTHAI SEYA VALLAAN

The male and female appearance form available to his disciples and then blessed them besides deevaas are given his grace in his willingness filled form of mind possessed lord Siva
ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து அடியார்களுக்கு அருள் வழங்கி வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள் புரிய விரும்பும் மனத்தை உடையவனாய் விளங்கும் சிவபிரான்


பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
PENI VALIPAADU PIRIYAA THELUNTH THODAAR KAANUNG KADAL NAAGAIK KAARONATH THAANEEA

With that love form not separated from lord Siva and those disciples are daily conducted prayer and then all are seeing form lord Siva dwelling in the nagai kaaronam sea side temple place dwelling lord Siva
அன்புடன் வழிபாடி செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளான்

909 ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
EANATH THEYIRODUM MARAVA MEI POONDU VAANTH THILANTHTHINGAL VALARUNJ SADAI YANNAAL

The pig teeth and snakes are adorned in the body place and then in the space place wandering moon is adorned on the hair place that leader form of lord Siva
பன்றியின் பல் பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு வானகத்தே இயங்கும் இளம் பிறை தாங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரான்


ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.
GNANATH THURAI VALLAAR NAALUM PANIN THETH THA KAANAR KADAL NAAGAIK KAARONATH THAANEA

The true wards are always talking those disciples are daily submitted under lord Siva’s feet and then pray and praised him and that place is nagai kaaronam which is situated at sea side place where lord Siva dwelling
மெய் அறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைகாரோனத்தில் எழுந்தருளி உள்ளான்.

910 அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
ARAIYAAR ALAL NAAGAM AKKO DASAINTHITTU VIRAIYAAR VARAI MAARPIN VENNEER ANI YANNAL

In the waist place fire like wild poison filed snake is tied with conches and ruby diamond together tied form and then fragrance filled rock like bosom place sacred ashes are adorned form of lord Siva
இடையில் அழல் போலும் கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணிறு அணிந்துள்ள


வரையார் வனபோல வளரும்வங்கங்கள்
கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
VARAIYAAR VANAPOLA VALARUM VAKANG KAL KARAI YAAR KADAL NAAGAIK KAARONATH THAANEA

And in the sea place rocks are floating form of ships are coming and then approaching in the sea shore place and nearby place is naagai kaaronam where lord Siva descended
மலைகள் மிதந்து வருவனபோலக் கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

911 வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள்
இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
VALANGKOL PUGAL PEENI VARAIYAA LUYAR THINDOL ILANGAIK KIRAIVAADAA ADARTHTHANG KARUM SEITHAAN

One after another so many battle fields are won over form ravana and who has got ego so he tried to lift the kailai hills with his mighty powerful shoulders who are got sorrow and in that way stamped under the kailai hills and then after realizing the sin lord Siva gave him so many boons and then blessed him
மேலும் மேலும் வெற்றிகாளால் பெற்ற புகழால் தருக்கி மலை போன்ற உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மாலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்த சிவபிரான்


பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.
PALAG KOL PUGAL MANNIR PATH THAR PANIN THEETHTHA KALANG KOL KADAL NAAGAIK KAARONATH THAANEA

In this world living benefit form glory acquired and those disciples are in this land place praying and praising lord Siva and that place is nagai kaaronam which is sea shore place ships are entering where lord Siva descended
வாழ்வின் பயனாகக் கொள்ளத்தக்க புகழை உடையவாகள் ஆகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து எத்த மரக் கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளான்.

912 திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
THIRUMAAL ADI VEELA THISAI NAAN MUGAN EEATHTHAP PERUMAAN ENENA NINDRA POMMAAN PIRAICH SENNI

Thirumal who has bowed his head under lord Siva’s feet and then prayed and then bharma chanted veetha manthara who are realized lord Siva alone is prime and first god to this world in that way lord Siva appeared before them in fire pole form and that form of lord Siva adorned curved moon on his hair
திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும் நான்முகன் ஏத்தவும் தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழல் உருவாய் ஓங்கி நின்ற பெருமானும் பிறைமதியை முடியிற் சூடிப்


செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.
SERUMAAL VIDAI YOORUNJ SELVAN THIRAI SOOLNTHA KARUMAAL KADAL NAAGAIK KAARONATH THAANEA

The opponents are defied that form of bull vehicle on it ascended form moving that rich person is lord Siva who has descended in the nagai kaaronam temple place which is covered by sea waves in that dark color place it is
பகைவரை எதிர்க்க வல்ல விடைஎற்றை ஊர்த்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான் அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளான்

913 நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
NALLAARANJ SOLLAP POLLAAR PURANG KOORA ALLAR ALAR THUUTRA ADIYAARK KARUL SEIVAAN

Good people are ethical form of life is preached to common people and wild samana’s are talked about ill words and bad people of buthaass are cursing lord Siva and all are disregarded by lord Siva and then blessed his disciples and in that mannerism filled lord Siva
நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும் பொல்லாதவர்களாகிய சமணர்கள் புரங்க்கூரவும் நல்லவர் அல்லாத புத்தர்கள் பழி தூற்றவும் தன் அடியவர்களுக்கு அருள் புரியும் இயல்பினான்


பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
PALLAAR THALAIMAALAI ANIVAAN PANI THEE THAK KALAAR KADAL NAAGAIK KAARONATH THAANEA

In that pure minded form of lord Siva who has collected the skulls in the burial ground place and then tied in the garland form and then adorned it in the neck place and all are submitted under his feet and then prayed and praised form and in the nagai kaaronam place gull form sound raising sea waves and nearby sea shore place lord Siva is dwelling
ஆகிய சிவபெருமான் சுடுகாட்டில் கிடக்கும்
பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோர்த்து அணிந்தவனாய் பலரும் பணிந்து ஏத்த கல் என்னும் ஒளியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

914 கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
KARAIYAAR KADAL NAAGAIK KAARONAM MEEYA NARAIYAAR VIDAI YAANAI NAVILUNJ SAMBAN THAN

Without any interruption the sea waves sounds are all the time hearing form of nagai kaaronam temple place descended and then white bull is possessed as his vehicle to travel and that form of lord Siva
இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசமந்தன்


உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்
கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.
URAIYAAR THAMIL MAALAI PAADU MAVAR ELLAANG KARAIYAA VURU VAAKKIK KALIVAAN ADAI VAAREA

Ganasambather who has prayed and praised the above decade form those disciples who are chanting it daily under lord Siva’s feet and without any perishable form and then enter the emotional filled upper world
பரவிப் போற்றிய புகழ் பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவுவார் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்க வானுலகத்தை அடைவார்கள்.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காயாரோகணேசுவரர், தேவியார் – நீலாயதாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

July 19, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: