OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

SEERGAALI

ganesheit July 19, 2019

1.81 சீர்காழி
SEERGAALI


பண் – குறிஞ்சி
875 நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
NA LLAA THEE MEVYUNTH THOLI LAAR NAAL VEEDHAM SOL LAAR KEEAN MAI YAAR SUDAR POR KALAL EEATH THA

GOOD BHARAMINS DAILY DOING YAAGA PIT FIRE AND THEN CHANTING FOUR VEETHAAS AND LOVE FILLED MINDED PERSONS those qualities filled Brahmins are daily praising and praying and conducting poojaass
நல்லவர்கள் நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும் நான்கு வேதங்களை ஒதுபவர்களும் அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள் ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற


வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங் கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.
VILLAAR PURANJ SETRAAN MEEV YUM PATHI POLUM KALLAAR MATHIL SOOLN THA KAALI NAGAR THAA NEEA

With meru mills are converted in to bow and then shot a fire arrow and destroyed three castles and that form of lord Siva descended temple place is seergaali which is protected by protection high raised walls
மேரு வில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம் மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்

876 துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந் தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
THULI VANDEEAN PAAYUM ITHALI THOOMATH THATH THELI VEN DINGKAL MAA SUNA NEER THIKAL SENNI

The rich honey dews are shedding konrai flower garland and then pure yoomathai flowers and clear form of curved moon snakes and Ganges River and all are adorned in the head place
வளமான தேன் துளி பாயும் கொன்றை மலர் தூய ஊமத்தம் மலர் தெளிந்த வெண்மையான பிறைமதி பாம்பு கங்கை ஆகியன விளங்கும் சென்னியின் கண்


ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங் களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.
OLI VEN DALALI MAALAI UKANTH THAA NOOR POLUM KILI VANDI YAAL SEIYYUM KAALINTH NAGAR THAA NEEA

The light glittering form of white skull garland are willingly adorned by lord Siva whose dwelling place it is, where honey bees are consumed honey and enjoyed it and then raising yaal musical instruments form humming sound is raising
ஒளி பொருந்திய வெள்ளிய தலை மாலையை விரும்பிச் சூடிய சிவபிரானது ஊர் கள், உண்டு களித்த வண்டுகள் யாழ் போல ஒலிக்கும் சீகாழி நகராகும்.

877 ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச் சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
AALAK KOOLATH THIN NAJ UNDA MUTHATH TAI SAALATH DEVARK KEEN THALITH THAAN THAN MAIYAAL

In the milk sea place emanated lovely poison is consumed and full nectar is given to deevaas to consume it and in that good mannerism filled person
பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய்


பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால் காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
PAALAR KAAI NEND RUM PARIN THU PAATHATH THAAL KAALAR KAAIN THAA NOOR KAALINTH NAGAR THAANEA

Daily margandaya praised and then prayed and conducted poojaas and with that holly feet lard Siva kicked and then killed him that place is seergaali where lord Siva dwelling
மார்கண்டேயன் போற்றுத் தன் பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர் சீகாழி நகராகும்

(*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின.
1.81.4-7


878 இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும் நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
IRA VIL THIRI VOOR KAT KIRAI THOLI NAI PATH THUM NIRA VIK KARA VAALAI NEEARN THAAN IDAM POLUM

At the night time wandering the bad asuraas whose leader is ravana and then whose ten heads and twenty shoulders are tapped under the kaiyilai hills and then smashed it and after wards who has realized his sin and sang samaveetha to appease lord Siva and then lord Siva got happy and give him long sphere and that place is seergaali where lord Siva dwelling
இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருப்பது தோள்களையும் நெரித்து பின் அவன் வருந்திய அள்ளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம்


பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங் கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.
PARA VITH THIRI VOORK KUM PAAL NEER ANI VORK KUM KARAVIL THADAK KAIYAAR KAALINTH NAGAR THAANEA

Those disciples who are spread over lord Siva’s glory and milk like white sacred ashes are adorned people to whom without any interruption with long hands are possessed philanthropists are living place is seergaali
இறைவனைப் பரவித் திரியும் அடியவர்களுக்கும் பால் போன்ற திருநீற்றை அணிபவர்களுக்கும் ஓயாமல் வழங்கும் நீண்ட கைகளை உடைய வல்லமை மிக்க அடியார் வாழும் சீகாழிப் பதியாகும்

879 மாலும் பிரமனும் அறியா மாட்சியான் தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
MAA LUM PRAMA NUM ARIYAA MAATCH IYAAN THOOLUM PURI NOOLUM THUTHAIN THA VARAI MAAR PAN

Thirumal and bharma are not known that head and feet possessed lord Siva who has adorned the stage skin as dress and then three knotted thread and rock like bosom whose descended place is seergaali
திருமால் பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமை உடையவனும் மான் தோலும் முப்புரிநூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய பதி


ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங் காலம் பகராதார்காழிந் நகர்தானே.
EELUM PATHI POLUM IRANTH THORK KENTH NAALUM KAALAM PAKA RAA THAAR KAALINTH NAGAR THAANEA

Those who are approached philanthropists they are giving alms to them instantly without asking them to come yet another day and that rich people are living place is seergaali
தம்பால் இரந்த்தவர்களுக்கும் எந்நாளும் பிறிதொரு நாளையோ நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழி நகராகும்

880 தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள் பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
THAN GAI YIDA UNN PAAR THAAL SEEVARATH THAARKAL PONGAI UNA RAA THE PEE NITH THOLU MINKAL

Those who are giving food which is accepted on bear hands and then consumed it those samanaass and then low graded saffron tainted cloths are adorned buthhaass whose bad character is not kept in mind
உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தரும் ஆகியவர்களின் தீ ஒழுக்கத்தை மனத்துள் கொள்ளாமல்


மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக் கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
MANGAI YORU PAAKAM MAKILN THAAN MALARCH SENNI KANGAI THARI THAA NOOR KAALINTH NAGAR THAANEA

Lordess yumaadevi is given left side of body and flower adorned hair place Ganges river is also adorned form of that lord Siva descended in the seer gaali temple place you may serve there and then pray lord Siva there
உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்பவனும் மலர் அணிந்த சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழி நகரைப் பேணித் தொழுவீர்களாக

881 வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
VAA SANG KAMAL KAALI MATHI SENJ SADAI VAITH THA EESAN NAGAR THANNAI INAI YIL SAM PANTHAN

Curved moon is adorned on the red color hair and then fragrance filled place is seergaali where descended gaaasambanthan
பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மனம் கமழ்கின்ற சீகாழிப் பதியாகிய நகரின் ஒப்பற்ற ஞானசமந்தன்


பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப் பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.
PESUM THAMIL VALLOR PERU NEER ULAKATH THU PAA SANTH THANAI YATRUP PALI YIL PUGA LAAREA

Who has praised lord Siva and the above tamil poems who are memorized and then singing it before lord Siva and those disciples in this world relationship intimacy is relieved form and without any sin and glory filled form live long life in this world
போற்றிப் பேசிய இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கல்கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.

திருச்சிற்றம்பலம்

July 19, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: