THIRU KAANOOR
1.73 திருக்கானூர்
THIRU KAANOOR
பண் – தக்கேசி
At first Thiru gaanasambanther prayed in the thirumalabadi temple place and then sang a decade, and then afterwards entered in to thiru kaanoor temple place and the sang the following decade
This is Cauvery northern side temple and now it is called in the name of manal medu
While parvathi deavi alias ambigai seated in meditation lard Siva appeared before her in fire glow forms
The following poems are composed in the hero and heroine form
திருமழ பாடியை வணங்கிப் பதிகம் பாடி அங்கு எழுந்தருளிய பிள்ளையார் திருக்கானூரை அடைந்தார்கள் வானார் சோதி என்றும் இந்த வளமார் பதிகத்தைப் பாடி வணங்கினார்கள்.
காவிரி வட கரைத் தலம் மணல் மேடு என அழைக்கப்படுகின்றது
அம்பிகை சிவயோகத்தில் இருந்த பொது ஈசன் தீ வண்ணராகத் திரு உருவம் காட்டிய தலம்.
பதிகக் குறிப்பு தலைவன் தலைவி பாவனையில் அமைந்து
787 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்
VAANAAR JOTHI MANNU SENNI VANNI PUNANG KONDRAI
In the space place light and heat filled form of sun and then moon all are adorned on hair place besides vanni leaves and forest place grown kondrai flowers
வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரியன் சந்திரன் போன்ற ஒளி மண்ணும் சென்னியில் வன்னி
தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
THEEA NARR POOTHU THAA NAAR KANGAI THINGKA LODU SOODI
The bloomed form of honey filled kondrai flowers and then naturally come over Ganges and curved moon all are adorned on the hair place
பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர் தானே வந்து தங்கிய கங்கை திங்கள் ஆகியவற்றைச் சூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
MAANEER NOKKI KANDANG YUVAPPA MAALAI YAADU VAAR
The stage like frightening eyes are possessed lords yumaadevi who has got happy form ,lord Siva dancing in the evening time
மான் போன்ற மருண்ட கண்களை உடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக் காலத்தில் நடனம் புரிபவராவர்
கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே.
KANOOR MEYA KAN NAAR NETRI AANOOR SELVA REEA
In the thiru kaanoor place lord Siva descended with forehead eye possessed form moving on the back of bull in young chap form
திருக்கானூரில் மேவிய கண் பொருந்திய நெற்றியினை உடையவரும் ஆனேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய செல்வர்
788 நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
NEENTHA LAAKAA VELLA MUULGU NEEL SADAI THAN MEELOOR
In uncontrollable form flooded Ganges is dipped in to the hair place and then vanished from the scene and that mighty powerful hair place the curved moon
தடுக்க முடியாத படி பெருகி வந்த கங்கையினது வெள்ளம் முழ்கி மறைந்து போன நீண்ட சடையின் மேல்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
EEAIN THA KOOANAR PIRAI YOODARAVYU KONDRAI YELI LAARA
and the snake konrai flower all are adorned form moving in the street procession form
பொருந்த வளைந்த பிறைமதியோடு பாம்பு கொன்றை மலர் ஆகியன அழகு தார வீதி உலா வந்து
போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
PON THA MEN SOL INBAM PAYANTHA MAINTHA RAVAR POO LAANG
In that form of lord Siva who has talked the soft love words and then gave me happiness that form of young chap he is
அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே.
KAAN THAL VIMMU KAA NOOR MEEYA SAANTHA NEET RAAREEA
The gaanthal plants are rich form grown and bloomed and then spread over fragrance everywhere that place is thiru kaanoor where lord Siva descended in sandal paste and sacred ashes are adorned form of
காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர்
789 சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
SIRAI YAAR VANDU THENUM VIMMU SEIYYA MALARK KONDRAI
The wings are possessed the honey bees are sucked the honey with that kondrai flower garlands are adorned form of
சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உன்னப் பெரும் தேனும் நிறைந்த செவ்விதாகிய மலர் கொன்றை சூடியவராய்
மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
MARAI YAAR PAADAL AADA LODU MAAL VIDAI MEL VARU VAAR
Lord Siva who has singing the veetha poems and then dancing form and then ascended on the back of the bull and then moving every where
வேதப் பாடல்களைப் பாடி ஆடுபவராய் பெரிய விடைமேல் வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
IRAI YAAR VAN THEN ILL PUGUN THEN ELIL NALA MUNG KONDAAR
And in that form of lord Siva who has entered in to my house and then cornered my modesty and beauty is it acceptable act on his part
அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார் இது முறையாகுமோ
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே.
KARAI YAAR SOLAI KANOOR MEYA PIRAI YAAR SADAI YAAREA
The dark color thick plantations are covered place is thiru kaanoor where lord Siva adorned the moon on his hair place
கருமை நிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினாராகிய இறைவர்
790 விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித்
VIN NAAR THINGAL KANNI VELLAI MAALAI YATHU SOODI
In the space place appearing the curved moon is adorned as flower form and the white color garland is adorned form
வானத்தில் பொருந்திய பிரைமதியைக் கன்னியாகச் சூடி வெண்ணிறமான மாலையை அணிந்து
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
THANNAA RAK KO DAAMAI POONDU THALAI PUN SADAI THAALA
The cool form of born garland and then tortoise skull all are adorned on the red hair place in hanging form
குளிர்ந்த எலும்பு மாலை ஆமை ஓடு ஆகியவற்றை புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க
எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
ENNAA VAN THEN IL PUGUN THANG KEV VA NOI SEI THAAN
So as to corner me who has entered to my house and created lust feelings towards me and then vanished from the Sean is it ethical one on his part
என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து எனக்கு மிக்க விரக வேதனையைத் தந்து சென்றார் இது முறையோ
கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே.
KANAAR SOLAIK KAA NOOR MEEYA VI NOOR PERU MAANEA
The well broad place and then plantations are covered place is thiru kaanoor where descended lord Siva who is also leader to deevass
இடம் அகன்ற சோலைகள் சூலத் திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபெருமான்
791 தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
THAAR KOL KOND RAI KANNI YODU THANN MATHIYANJ SOODI
The konrai flower long garland adorned on the neck place and then the curved moon is adorned on the hair place
கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி
சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
SEER KOL PAADAL AADAL LODU SEDARAAI VAN THU
The specialty form dancing and then singing form in that glory filled form moving in to my place
சிறப்பு மிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்கு உரியவராய் வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
OOR KAL THOO RUM AIYAM EEAT RA REN NUL VENTH NOI SEI THAAR
In all the places wandering and then accepted the begging food and then in my mind place lord Siva created the lust form of fire and then gave that pain and then moved away from me
ஊர்கள் தோறும் திரிந்து பலியேற்று என் மனத்தகத்தே கொடிய விரக வேதனையைத் தந்து சென்றார்
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே.
KAAR KOL SOLAIK KAA NOOR MEYA KARAIK KANDATH THAAREA
The dark color plantations are covered place is thiru kaanoor where lord Siva descended in the dark color throat possessed form
கரு நிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர்
792 முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
MULI VELL LELUMBU NEERU NOOLUM MOOLGU MAAR PARAAI
The well dried the bone garland and then sacred ashes and then three knotted thread adorned on the bosom place
காய்ந்த வன்மையான எழும்பும் திருநீறும் முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்
ELI VAN THAAR POL AIYAM MEND REN ILEA PUGUN THULLA THU
In simple form coming and requested to give begging food and in this way talked who has entered in to my house
எளிமையாக வந்தவர் போல் வந்து ஐயம் இடுக என்று கூறிக் கொண்டே என் இலத்தில் புகுந்து உள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
THELIVU NAA NUNG KOND AKALVAR THERALA LAAR POOVIL
And then my mind clarity and hesitation all are cornered form ,who is culprit to me
தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்
களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே.
KALI VANDI YAAL SEI KAA NOOR MEYA OLI VEN PIRAI YAAREA
The honey filled the flowers from it honey is sucked form and then enjoyed it and then honey bees are yawl musical instruments form raising the humming sound
And that place is thiru kaanoor where lord Siva adorned the white moon on his hair place
தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ் போல ஒலி செய்யும் திருக் கானூரில் மேவிய ஒளி பொருந்திய வெண் பிறையை முடியில் சூடிய இறைவர்
793 மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
MOOVAA VANNAR MULAI VEN PIRAI YAR MURU VAL SEI THIN GEEA
Not to get old age in that lovely handsome form and the third day moon adorned form
மூப்பு அடையாத அழகினர் ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர்
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப் POVAAR KON DRAI PUNAIN THU VAN THAAR POKKAM PALA PEESI
That form of lord Siva who has adorned konrai flower garland and then sexual appetite creating form of soft laughter possessed form and then who has entered in to my house and then falsehood filled wards are uttered in vesper form
அவர் கொன்றை மாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புண் சிரிப்புடன் என் இல்லம்நோக்கி வந்து பொய் கலந்த வார்த்தைகளை பேசி
போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
POVAAR POLA MAAL SEITH ULLAM PUKKA PURI NOOLAR
And then gone away form and then mesmerized me and then entered in to my heart in lover form who has adorned the three knotted thread on his bosom place
கொண்டிருந்து நல்லவரைப் போல் காட்டி என்னை மயக்கி என் உளத்தில் புக் கொளித்த புரிநூலர் ஆவார்
தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே.
DEVAAR SOLAIK KAA NOR MEYA DEVA DEVAREEA
The godly appearance filled that plantations are covered place is thiru kaanoor where descended in thiru kaanoor place in deevaass leader form of lord Siva
தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவவேராகிய சிவபிரனார்
794 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
THAMI LIN NEER MAI PESITH THAALAM VEENAI PANNI NALLA
The tastier form of Tamil words are talking and with thalam instrument from it musical sound raised form and then veena sound is raised from the strings
தமிழ் போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி தாளத்தோடு வீணையை மீட்டி
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
MULA VAM MON THAI MALGU PAADAL SEIKAI YIDA MOO VAAR
The skin instruments are drum monthai and hole instruments all are turned form songs are singing and then not moving away from my place
முழவம் மொந்தை ஆகிய துளைக் கருவிகளும் கூடிய பாடல்களைப் பாடி என் இல்லத்தை அடைந்து அதனை விட்டுப் பெயராதவராய்
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
KUMI LIN MEENI THAN THU KOLA NEERMAI YATHU KON DAAR
And then after created the pasalai desease lust and the body color is worn out form
எனக்கு குமிலம் பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.
KAMA LUNJ SOLAIK KAA NOOR MEYA PAVALA VAN NEREEA
The fragrance filled flower plantations are covered place is thiru kaanoor where lord Siva descended in coral like red color body possessed form
மணம் கமழும் சோலைகள் சொல்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர்
795 அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
ANTHA MAATHI AYANU MAALUM AARKKU MARI VARI YAAN
To do, at the end of life of bharma and thirumal put an end to them and in those form lord Siva do not have any begging and then end to him and in that obstruct appearing in this form to bharma and thirumal
அந்தத்தைச் செய்பவரும் யாவர்க்கும் ஆதியாய் இருப்பவனும் ஆவார். அயன் மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர்
சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
SINTHAI YULLUM NAAVIN MEELUM SENNIYU MANNI NAAN
In that way lord Siva mingled in to my mind and brain place and tongue place ever permanent form stayed and then appeared before me
என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலை பெற்று இருப்பவர் யான் காண வெளிப்பட்டு வந்து
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
VAN THEN NULAM PUGUN THU MAALAI KAALAI YAADU VAAN
Lord Siva who has entered in to my mind and then in the morning and then evening time dancing and then blessed me
என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளுகின்றார்
கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே.
KANTHA MALGU KANOOR MEYA ENTHAI PEM MAANEA
In that way lord Siva descended in the fragrance filled place is thiru kaanoor who is also my father
மணம் நிறைந்த திருக்கநூரில் எழுந்தருளிய எந்தையராகிய பெருமான்
796 ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
AAMAI YARA VODEA EEANA VEN KOM P AKKU MAALAI POON
Lord Siva who has adorned the tortoise skull and then snake and then pig white teeth and bone garland and the flower garland and all are adorned form
ஆமை அரவு பன்றியின் வெண்மையான கொம்பு என்பு மாலை ஆகியவற்றைப் பூண்டு
டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
MOR KALVAR VELLAR POLA YUL VENTH NOI SEI THAAR
Of culprit who has appeared before me in white hearted form and then good person form and then gave me mind pain and sorrow to me
ஓர் கள்வரை வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லார் போல வந்து எனது மான வேதனையைத் தந்தார்
ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
OMA VEDHA NAAN MUGA NUM KOONA KANAI YAANUM
The yaagaa fire developing ways and means in that veethaass are chanting by bharma and then the curved form of snake bed sleeping that form of thirumal
வேள்விகள் இயற்றும் முறைகளிக் கூறும் வேதங்களை ஓதும் நான்முகனும் வளைந்த பாம்பு அணையில் பள்ளி கொள்ளும் திருமாலும்
சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே.
SEMA MAAYA SELVAR KAA NOOR MAYA SEDAREEA
To give protection that form of lord Siva descended in this place
தங்கள் பாதுகாப்பிற்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமான்
797 கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப்
KALUTH UNJ SUNG KANGKUL AADUM KAANOORR MEEYAA ANAI
The ghosts are sleeping in that mid night time lord Siva in the kaanor place dancing
பேய்கள் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர் மேவிய இறைவனைக்
பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
PALI THUIL GNANA SAMPAN THAN SOL PA TH THUM PAADI YEA
The flawless form of ganasambather who has praised form sang the above ten poems
குற்றமற்ற ஞானசமந்தன் போற்றிச் சொன்ன சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
THOLU THU POLU THU THOTHTHI RANGKAL SOLLITH THUTHI THU NIN
At first prayed and then three times a day chanting manthraas and then conducted poojaass and then stayed there
தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று
றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.
ALUTHU NAKKUM ANBU SEIVAAR ALLAL ARUP PAAREA
And then weeping and laughing form and then showered love towards us and then terminated my problems
அழுதும் சிரித்தும் அன்பு செய்வார்கள் அல்லலை அறுப்பார்கள்.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செம்மேனிநாயகர், தேவியார் – சிவயோகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
July 17, 2019