OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRY EENGOOI THIRU MALAI

ganesheit July 16, 2019

1.70 திரு ஈங்கோய்மலை
THIRY EENGOOI THIRU MALAI


பண் – தக்கேசி
This is Cauvery northern side temple. Now it is called in the name of thiru veenga naather hills. In this temple place lords yumaadevi prayed so it is also called in the name of Siva sakthi hills. In this temple place saint agasthiyar prayed in bee form.
In this temple nearby place of southern side the temple named kadambar koil in kulithalai place prayed in the morning time and nearby place situated ayar malai (thiruvaatpokki) in the mid-day time and then in the thiru eengoi lord Siva in the evening time prayed is specialty filled one
காவிரி வடக்கரைத் தலம் திருவீங்க நாதமலை என வழங்க பெறுகிறது அம்பிகை வழிப்பட்டதால் இதற்குச் சிவசக்தி மலை எனவும் பெறும் அகத்தியர் ஈ வடிவத்தில் இறைவனைத் தரிசித்த தலம்.
இத்தலத்திற்கு அருகில் காவிரித் தென்கரையில் உள்ள கடம்பந்துறை (குளித்தலை) நாதரைக் காலையிலும் அதற்கு அண்மையில் உள்ள திருவாட் போக்கியில் எழுந்தருளி உள்ள நாதரை நண்பகலிலும் திருவீங்கோய் மலை நாதரை மாலையிலும் வழிபடுதல் சிறப்புடையது என்பர்.
திருப் பஞ்ஞீலியை வணங்கி மண் பரவத் தமிழ் மாலைகளைப் பாடிப் பிறதலங்களையும் வழிபட எண்ணிய சண்பை நாடர் திருவீங்கோய் மலையை அடைந்தார். அங்கு கங்கைச் சடையில் கழல் பணிந்து வானத்துயர் தண் என்னும் இசைப் பதிகம் பாடினார்.
Gannasambather at first prayed in the thiru paingeeli temple place and then on the way so many temples are prayed form and ultimately enter in to thiru eengoo temple place and then sang the following songs

754 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
VAA NATH THUYAR THANN MATHI THOI SADAI MEEAL MATHTHA MALAR SOODI

In the space place wandering the cool moon crawling on the hair place of lord Siva where yoomathai flowers are also adorned form of
வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல் ஊமத்தம் மலர்களைச் சூடித்


தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
THEEN NOTHTHANA MEN MOLI MAAN VILI YAAL DEVI PAAKA MAAKA

The honey like tastier wards are talking and stage like eyes are possessed lardess yumadevi is taken left part of his body
தேன் போன்ற இனிய மொழிகளையும் மான் விழிபோலும் கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு


கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
KAANATH THIRAVIL ERI KON DAADUM KADAYUL YULAGEEATHA

In the burial ground place lord Siva carried fire pot on his hands and then dancing and that act is the world people are realized and then praised him
சுடுகாட்டில் இரவில் எரியேந்தி ஆடும் இறைவர் உலக மக்கள் உணர்ந்து போற்றுமாறு


ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
EENATH THIRAL VAN THALI YUNJ SAARAL EENGOI MALAI YAAREEA

And in that thiru eengoi temple place where the pigs are coming down that valley place and there lord Siva descended
பன்றிகள் பல கூடி இறங்கி வரும் சாரலை உடைய திருஈங்கோய் மலையில் எழுந்தருளி உள்ளவர்

755 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
SOOLAP PADAI YON REEANTH THI YIRAVIL SUDU KAA DIDAMAA KAK

Lord Siva who has carried the three leaves form of soolam force carried on his hands and then at the night time burial ground is accepted as his dwelling place
முத்தலைச் சூலம் ஒன்றைத் தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு


கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
KOOLACH SADAIKAL THAALAK KULAL YAAL MONTHAI KOTTA VEEA

The lovey hair is low form hanging and then the musical instruments are fluet yaal monthai and other musical instruments are raising sound
அழகிய சடையில் தாழ்ந்து தொங்கவும் குழல் யாழ் மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்கவும்


பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
PAAL VOTHT THANAIYA MOLIYAAL KAANA AADUM PARAMA NAAR

The milk like good words are talking lords yumaadevi is seen form dancing lord Siva
பால் போன்ற இனிய மொழியினை உடைய பார்வதி தேவி ஆடும் பரமர்


ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.
ELATH THODU NAL ILAVANG KAMUM EENGOI MALAI YAAREA

In that form lord Siva descended in the thiru eengoi thiru malai where the fragrance emanating form of ealam and elavangam are growing
ஏலம் நல்ல இலவங்கம் முதலிய கமழும் திருலீங்கோய் மலையின் கண் எழுந்தருளி உள்ளவர்

756 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
KAN KOL NUTHA LAAR KARAI KOL MITAT RAAR KARIYIN URI THOO LAAR

On the fore head place one more eye possessed form of lord Siva and then who has poison tainted throat possessed form and then elephant skin is pealed and then adorned it
கண் ஒன்றைக் கொண்ட நுதலினரும் விடக்கரை பொருந்திய கண்டத்தினரும் யானையின் தோலை உரித்தும் போர்த்தவரும்


விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
VIN KOL MATHI SER SADAI YAAR VIDAI YAAR KODI YAAR VEN NEERU

In the space place wandering the moon adorned on the hair place and then bull flag carried on his hands
வானில் விளங்கும் மதியைச் சூடிய சடையினரும் விடைக் கொடியினரும்


பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
PENN KOL THIRU MAAR PATHA NIL POOSUM PEM MAAN EMAI YAAL VAAR

On one part of body lords yumaadevi is possessed form and then sacred ashes are adorned on the bosom place
ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ள வரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும்


எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
EN KUM ARIYUM THIRIUNJ SAARAAL EENGOI MALAI YAAREEA

And then appearing before the disciples and that form of lord Siva dwelling in the thiru eengooi temple place who is ruling me
அறியும் திரியும் சாரலை உடைய திருஈங்கோய் மலை ஆகிய எமை ஆள்பவராகிய

757 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
MARAI YIN ISAI YAAR NERI MEN KOON THAL MALAI YAAN MAKA LODU

The curling form of hairstyle possessed lords yumaathevi who is rock king daughter and with her appeared form
வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலை உடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு


குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்
KURAI VEN PIRAI YUM PUNA LUM NILAV YUM KULIR PUN SADAI THAALAP

The third day moon adorned on the hair place Ganges are also adorned form of soft hair possessed lord Siva
கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ


பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்
PARAI YUM KULA LUM KALAU MAARPAP PADU KAAT TERI YAADUM

The skin instrument named parai fluit and with it and in the nee place tied the bells are raising the sound form and then dead bodies are burning place where lord Siva carried fire on his hands and then all the time dancing form
பறை குழல் இவற்றோடு காலில் கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்கள் எரியும் சுடுகாட்டுள் எரி ஏந்தி ஆடுபவராய்.


இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
IRAI VAR SIRAI VAN DARAI POON SAARAL EENGOI MALAI YAAREA

The wings are possessed the honey bees are raising the humming sound that valley place is thiru eengooi hills where dwelling lord Siva will be musical notes are filled form of all the time sing the veethaass
சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கு அழகிய சாரலை உடைய திருலீங்கோய் மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர்.

758 நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
NON THA SUDALAIP PODI NEER ANIVAAR NUTHAL SER KANNI NAAR

The dead men bodies are burning fire and then from it emanated the ashes are adorned all over the body and then fore head place one eye possessed form
இறந்தவர் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பல் பொடியைத் திருநீறாக அணிந்தவர் நெற்றியைச் சார்ந்துள்ள விழியை உடையவர்


கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்
KANTHA MALAR KAL PALAV YUM NILAYU KAMAL PUN SADAI THAALA

The fragrance filled form of so many varieties of flowers are adorned on the red color hair is lowly hanging form
மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணம் கமழும் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கும்


பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
PAN THAN VIRA LAAL PAAKA MAAKAP PADU KAATERI YAADUM

The ball form of finger tips are possessed lordess yumaadevi is given left part Of his body and then dancing in the burial ground
பந்து சேரும் கை விரல்களை உடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர்


எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.
EN THAM MADI KAL KADI KOL SAARAL EENGOI MALAI YAAREEA

The fragrance filled hill place possessed lord Siva who is dwelling in the thiru eengoi hill place
நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலை உடைய திருலீங்கோய் மலை இறைவர்

759 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
NEERAA AGALAM UDAI YAAR NIRAI YAAR KONDRAI YARA VODUM

Lord Siva who has adorned the sacred ashes on the bosom place the bunch form of growing the konrai flower garland and then snakes
திரு நீறு அணிந்த மார்பினை உடையவர் சரம் சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலை பாம்பு


ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
AARAAR SADAI YAAR AYIL VENG KANAIYAAL AVUNAR PURAM MOON DRUM

And Ganges all are adorned on the hair place and then the sharpened arrow with it three castles are destroyed by angry fire and who is deevaas leader
கங்கை ஆகியவற்றை அணிந்த சடை முடியை உடையவர் கூரிய கொடிய கணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர் தலைவர்


சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
SEERAA VERI SEI THEVAR PERU MAAN SENGAN ADAL VELLAI

The red color eyes and mighty powerful bull flag white in color carried on the hand place
சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர்


ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
EERAAR KODI YAAR UMAI YAA LOODUM EENGOI MALAI YAAREA

That bull flag carrier and then with lords yumaadevi who has descended in the thiru eengoi temple place
விடையேற்றும் கொடியினை உடையவர் உமையம்மையோடு திருலீங்கோய் மலையில் எழுந்தருளி உள்ள இறைவர்

760 வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
VINAI YAAYINA THEERTH THARULE PURIYUM VKIRN THAN VIRI KONDRAI

The bad deeds are removed and then put his grace and that unique form of lord Siva and the bloomed form of konrai flower buds
வினைகளான வற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர் விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள்


நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
NANAI YAAR MUDI MEEAL MATHI YANJ SOODUM NAMBAA NALA MALGU

And in the hair place moon is adorned form of prime god he is and then the lovely form of lotus flower
முடிமீது பிறை மதியையும் சூடும் நம்பர் அழகு நிறைந்ததும்


தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
THANAI YAAR KAMALA MALAR MEL URAI VAAN THALAI YO DANAL EEAN THUM

Where dwelling bharma skull carried on the hands and fire pot also carried on the hand place
தலைமை உடையதுமான தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலையோட்டோடு அனலையும் ஏந்தி என்னை


எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
ENAI YAAL YUDAIYAAN UMAI YAALODUM ENGOI MALAI YAAREA

Who has accepted me as slave and the put his grace on me and that form of lord Siva who is dwelling together with lords yumaadevi in the thiru eengooi temple place
என்னை அடிமையாகக் கொண்டு அருள்பவன் உமையம்மையோடு திருவீங்கோய் மலையில் எழுந்தருளி விளங்கும் இறைவர்

761 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
PARAK KUM PERU MAI ILANGAI YEN NUM PATHI YIR POLI VAAYA

The glory filled place is sri langa where glory filled form of
எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கும்


அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
ARAK KARKAR IRAI VAN MUDIYUN THOOLUM ANIYAAR VIRAL THAN NAAL

Ravana who is leader to assuraass whose ten heads and twenty shoulders are smashed form of lord Siva who has with his lovely leg finger
அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால்விரலால்


நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
NERUKKI YADARN THU NIMA LAA POTRI YENDRU NIND REETH THA

Stamped and then afterwards who has prayed under lord Siva’s feet and then forgiven him and then blessed with boons
நெருக்கி அடர்த்து பின் அவன் நிமலா போற்றி என்று எத்தி இரக்கம் காட்டி அருள் புரிபவர் ஆவார்


இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
IRAKKAM PURIN THAAR UMAI YAA LODUM EENGOI MALAI YAAREA

And then blessed him. Lord Siva with lords parvathi who has descended in the thiru eengoi hills
இரக்கம் காட்டி அருள் புரிபவர் ஆவார் உமையம்மையோடு எழுந்தருளி உள்ள திருவீங்கோய் மலை இறைவர்

762 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
VARI YAAR PULIYIN URITH THOL UDAI YAAN MALAI YAAN MAKA LODU

The stripped form of tiger skin adorned in the waist place and hill king daughter lords parvath and with her
வரிகளோடு கூடிய புலித் தோலை உடையாகக் கடியவர் மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு


பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
PIRI YAA THUDA NAAI AADAL PEENUM THIRU MEENI

Not in separate form dancing that leader he is
பிரியாது அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமைச் சான்றவர் தம் திருமேனியின்


அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
ARI YO DAYA NUM ARIYAA VANNAM ALA VIL PERU MAIYOO

Bharma and thirumal are not in a possison to see head and feet of lord Siva and that glory filled lord Siva
அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய்


டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.
TERI YAAI NIMIRN THA ENGAL PERU MAAN ENGOOI MALAI YAAREEA

And then fire glow form appeared before them who is my lord Siva
எரி உருவத்தோடு ஒடுங்கி நின்ற எங்கள் பெருமான் ஆவார்

763 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
PINDI YEEANDRUM PEYARAA NIRKUM PINANGU SAMA NARUM

Samanaas whose god is aruga deaven and then seated under the ashogaa tree but they are not following the rules of that religion
அருக தேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம்மரத்தின் பெருமை கூறிப் பெயர்த்து செல்லும் மாறுபட்ட சமய நெறியில் நிற்கும் சமணர்களும்


மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்
MANDAI KALA NAAKAK KONDU THIRI YUM MATHI YIL THERA RUM

The begging bowel named mandai carried on the hands of buthaass who are ignorance filled persons
பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தித் திரியும் அறிவற்ற புத்தரும்


உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
UNDI VAYI RAAR URAI KAL KOLLAA THUMAI YOODUDA NAAKI

Who are abundantly eating and then got bulky belli whose wards need not be heard of, and lord Siva appearing together with parvathi
உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் ஏற்றுக் கொள்ளாது உமையம்மையாரோடு உடனாய்


இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.
INDAICH SADAI YAAN IMAIYOR PERU MAAN EENGOI MALAI YAAREA

Lord Siva who has adorned the indai garland and deevaass leader who is descended in the thiru eengoi temple place you may go there and the pray lord Siva
இண்டை சூடிய சடைமுடியினனாய் இமையோர் தலைவனாய் ஈங்கோய் மலையில் எழுந்தருளி உள்ள எம் பெருமானைச் சென்று வழிபடுவீராக

764 விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
VILAAVAA ROLI YUM MULAYUM OOVAA VENU PURAN THANNUL

The festival sounds and drum beat sounds not left from that place and that seergaali temple place
திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் ஈனும் சீகாழிப் பதியில்


அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
ALA LAAR VANNATH THADIKAL ARUL SEEAR ANI KOL SAMBANTHAN

The fire glow form of lord Siva whose grace is fully got by gaanasambanther
அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள் சேரப் பெற்ற அழகிய ஞானசமந்தன்


எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
ELIL AAR SUNAIYUM POLILUM PUDAI SOOL EENGOI MALAI YEESAN

The lovely natural pond possessed place and then flower plantations are covered place is thiru eengo temple place where lord Siva dwelling
எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடை சூழ்ந்து விளங்கும் திருஈங்கோய் மலை ஈசனின்


கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.
KALAL SEEAR PAADAL PATH THUM VALLAAR KAVALA KALAI VAAREEA

That lord Siva’s sacred feet are glorified form of sang the above ten poems who are chanting it they will be relived from their sorrows
திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

July 16, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: