OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU THOONI PURAM

ganesheit July 11, 2019

1.60 திருத்தோணிபுரம்
THIRU THOONI PURAM


பண் – பழந்தக்கராகம்
விளக்கம்: பதிக எண் ஒன்று காண்க

645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
VANDU ARNGKAP PUNAR KAMALA MATHU MAANTHI PEDAI YI NODUM

The fertile waves are emanating water bodies where bloomed the lotus flower and then from it emanated the honey is fully sucked by the honey bees and the mingled with the female bees and enjoyed it
வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில் மலர்ந்த தாமரை மலர்களில் விளைந்த தேனை
வயிறார உண்டு தன் பொன்வண்டோடு களித்து


ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
OND ARDANGA ISAI PAADUM ALI ARASE OLI MATHI YATH

The best waves form of moving up and down and raising the humming sounds in that form of king bee you may excuse me please help me
சிறந்த அலைபோலும் மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரசவண்டே என் மேல் பரிவு கொண்டு


துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
THUN DARANG KAP POON MAAR PAR THIRUTH THONI PURATH TH URAIYUM

The light filled the young moon adorned on the hair place by lard Siva and then bone garland adorned on the bosom place
ஒளி பொருந்திய இளம் பிறையை முடியிற் சூடியவரும் எலும்பு மாலைகளை அணிகலன்களாகப் பூண்ட மார்பினருமாகிய


பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.
PANDU ARANGKA RK KEN NILAMAI PARIN THORUK KAAL PAKARAA YEA

Lard Siva who is dancing the pandarangam dance and that lard you may see and then inform him my loneliness and separation and please at least one time you may inform it to him
திருத் தோணி புரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு அவருடன் எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக

646 எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
ERI SURA VANG KALIK KAANAL ILANGU GURUVEA EN
PAYALAI

Those who are go before him that shark fishes are living in the salt fields and its nearby place living the young bird
எதிர்பட்டவற்றைக் கொல்லும் இயல்பினவாகிய சுராமின்கள் நிறைந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் வாழும் இளம் குருகே


அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
ARIVU VURAA THOZHU VATHUM ARUVINAI YEN PAYANA NDREA

Lard Siva you do not know my lust disease ( pasalai) so it is only bad deeds on my part nothing else
என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் நீங்குதற்கு அறிய என் வினைபயன் அன்றோ


செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
SERI SITRAAR PATHA METHUM THIRUTH THONI PURATH THURAI YUM

The bharmin so many children are clubbed form so many manthraas are chanting form and practicing it and in that thonipuram temple place descended
அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி பதமந்திரங்களை ஓதிப் பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரும்


வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.
VERI NIRAAR MALARK KANNI VETHI YARKKUM VLAM PAAYEA

On the hair place fragrance filled and then different colors are possessed the flower garland adorned Lard Siva to whom you may in form my state of loneliness
முடிமீது மணமும் நிறமும் பொருந்திய மலர்க் கண்ணி சூடியவருமான சிவபிரனாருக்கு என் நிலைமையைக் கூறுவாயாக


647 பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
PAN PALANAK KOTTA KATHTHU VAATTA MILAANJ SENJ SOOTTUK

Well ploughed fields and on it boundary place grown the long grass named sambag korai
பண் படுத்தப்பட்ட வயல்களில் கரைகளில் முளைத்த சம்பங் கோரைகளில்


கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
KANN PA KATHTHIN VAARA NAMEA KADU VINAIYEN YURU PAYALAI

In that place living without any sorrow and happily living red color crown possessed the cock
இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழியே


செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
SEN PAKAJ SER POLIL PUDAI SOOL THIRUTH THONI PURATH THURAIYUM

The sambaga tees are filled the plantations are covered place is thiru thooni puram where descended lard Siva
சண்பக மரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட திருத்தோணி புரத்தில் எழுந்தருளிய


பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.
PAN PANUK KEN PARISU URATH THAAL PALI YAAMO MOZHI
YAAYEE

The good mannerism filled lord Siva to whom you may inform the mater that because my bad deeds I have separated from him and then got lust disease and then living in sorrow state that state you may inform him and if you help me is there any curse go to you please inform me
இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகள் பயனாய் அவரைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால் உனக்கும் பழி விளையுமோ? மொழிவாயாக

648 காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
KAADA KAYA SENGAAL VONN KALI NAARAAI KAATHALAAR

In the salt fields place living the red color leg possessed lark bird because of abundant lust love filled form of
உப்பங்கழியில் வாழும் அழகு மிக்க சிவந்த கால்களை உடைய நாரையே காதல் மிக கூந்தலால்


பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தாளென்றுவளர்
POONDA KAIYA MULAI MELIN THU PON PAYANTHAAL ENDRU VALAR

The breast ornaments are adorned the breasts are leaned the pasalai disease affect form of your disciple got sorrow
அணிகலன்களைப் பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து பசலை நோய் பூக்கச் பெற்று உன் அடியவள் வருந்துகின்றாள்


சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
SENDA KAIYA MANI MAADATH THIRUTH THONI PURATH THURAI YUM

Lard Siva you are dwelling up to the sky level place constructed temple towers where you are descended
என்று வான் நோக்கி வளர்ந்துள்ள அழகிய மாட வீடுகளைக் கொண்டுள்ள திருத்தோணிபுரத்தில் எழுந்தருளி உள்ள


ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே.
AANDA KAIYAAR KINDREA SENRA ADI YARIYA YUNARTH THAYEE

The best male person in this world is lard Siva you may today itself approach lard Siva and then inform reason to my lean body as he known form inform him
ஆண் மக்களின் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக

649 பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
PAA RAAREA ENAI ORU KAAL THOLU KINDREN PAANGU AMAINTHA

The lovely form of block color feather possessed and then coral like red color legs are possessed the doves I am praying under your feet
அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழுமையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே உம்மைத் தொழுகின்றேன்


காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
KAAR AARUM SELU NIRATH THU PAVALAK KAAL KAPOTHA KANGAAL

My dear dove I have already informed the honey bees and other birds but they disregarded my wards
வண்டு முதலியவற்றிடம் என் நிலைமையைக் சாரியும் அவை ஒரு முறையேனும் பாராவாயின.


தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
THER OODUM NEDU VEETHTHI THIRU THONI PURATH THURAI YUM

Lard Siva you have descended with upper world devaass in this broad street possessed seergali place
நீவீர் தேவரொடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய


நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
NEERAA DUM SADAI YARUK KEN NILAIMAI NIKAL THTHEEREA

Lard Siva who has carried Ganges river on his hair and you may go near to him and then inform my pain of separation
கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவாயாக

650 சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
SER ELUTHTHA MALAR KAMALACH SEN JAALI KATHIR VEESA

The slush filled the water bodies place sprouted the lotus flower and then up on it hand fan form of paddy field grown ripped corns are swayed form of
வளமான சேற்றில் முளைத்து மலர்ந்த தாமரை மலர் மேல் நெற்பயிர்கள் தம் கதிர்களையே சாமரமாக வீச


வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
VEETRI EUNTHA ANNANGKAAL VINOODU MAN MARAIKAL

Lark birds you are royal meditation form standing where in this world and upper world four veethaass are
அரச யோகத்தில் வீற்றிருக்கும் அன்னங்களே விண்ணுலகம் மண் உலகம் ஆகியவற்றை நான்கு வேதங்களையும்


தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
THOTRU VITH THA THIRU THONI PURATH THEESAN THULANG KAATHA

Which are evolved by lard Siva who is dwelling in the thiru thoni puram temple place where no one is shaken in that form of death god ema
தோற்றுவித்த திருத்தோணிபுரத்தில் உறையும் சிவபிரானுடைய யாவராலும் அசைத்தலுக்கு இயலாத


கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.
KOOTRU UTHAITHA THIRU VADIYE KOODU MAA KOORIREA

Who is kicked and then killed him by lard Siva whose sacred feet when I will get it please tell me the ways and means to approach him
எமனை உதைத்தழித்த திருவடிகளை யான் அடையும் வழிகளைக் கூறுவாயாக (கூறுவீர்களாக)

651 முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
MUNDRIL VAAI MADAL PENNAIK KURAM BAI VAAL MUYANGU SIRAI

In the house entrance place the palm tree leaves place constructed the houses by small birds where living and then embracing its female birds and in that form of feather filled
வீடுகளில் வாயிற் பகுதியில் மடல்களை உடைய பனை மரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய


அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
ANDRIL KAAL PIRI VURUM NOOI ARIYAA THEER MIGA VALLEER

Anril birds you do not know the separation sorrow but showing love towards counterpart you are excelled birds in this world
அன்றில் பறவைகளே! நீவீர் பிரிவுத் துன்பத்தை அறிய மாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்


தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
THENRA LAAR PUGUNTHUL AV UNTH THIRUTH THONI PURATH THURAIYUM

The breeze wind crawling on the broad streets are possessed place is thiru thooni puram where lard Siva you have descended
தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய


கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே
KONDRAI VAAR SADAIYAAR KEN KOOR PAYALAI KOOREREA

Lard Siva who has adorned the konrai flower garland to whom you may inform the pasalai decease nature
கொன்றை மாலை அணிந்த சடைமுடியினை உடைய சிவபிரானுக்கு என் பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைபீர்களாக .

652 பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
PAA NAARU MALARCH SOOTHAP PALLA VANGA KAL AVAI KOTHI

The milk fragrance smell emanating the mango tree sprouted leaves are consumed form of
பால் மனம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு


ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
EE NORKKUM INITHAAKA MOLIYU MELIL ILAM KUYILEA

To all you are good manner hearable way raising the coco sound by coco bird
எல்லோருக்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலே


தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
THEN AARUM POLIL PUDAI SOOL THIRUTH THONI PURATH THMARAR

The honey filled the plantations are covered place is seergalli where lard Siva you have descended
தேன் நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய


கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே.
KOO NAARAI EN NIDATH THEA VARAVORU KAAR KOO VAAYEA

Lard Siva who is leader to all the devas and my dear coco bird at least once you may raise sound so that lard Siva who may come towards me
தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒரு முறையேனும் கூவுவாயாக

653 நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
NAR PATHANG KAL MIGA ARIVAAI NAAN UNNAI VEENDU KINDREN

The lovely mouth possessed the naganavaai birds I am prayed under feet and then praise you
அழகமைந்த வாயாகிய அழகினை உடைய நாகணவாய் பறவையே நான் உன்னை துதித்துப் போற்றுகின்றேன்


பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
PORP AMAINTHA VAAYA LAKIN POOVAI NALLAAI POTRU KINDREEAN

To inform the leader that good wards you are knowing so my request is put before you
தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால் இம்முறையீட்டை உன் பால் தெரிவிக்கின்றேன்


சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
SOR PATHANJ SER MARAI YAALAR THIRU THONI PURATH THURAIYUM

With good musical notes are filled form of veethaass are chanting bharmins who are living in the thiru thooni puram temple place
சொற்களால் அமைந்த பதம் என்னும் இசை அமைப்பு உடைய வேதங்களில் வல்ல மறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய


விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.
VIR POLI THOL VIKIRTHA NUK KEN MEIP PYALAI VILAM PAAYEA

The bow and arrow carrying solders are possessed and that unique form of lard Siva please in firm my lust filled mind to him
வில்லாற் பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக

654 சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
SIRAI YAARUM MADAK KILIYEA INGEA VAA THENODU PAAL

The lovely feathers are possessed the young parrot you may come near to me and then I will give you milk and honey to consume you
அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே எம்பால் வருவாயாக நான் உனக்குத் தேனையும் பாலையும்


முறையாலே உண்ணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
MURAI YAALEA YUNATH THARUVEN MOI PAVALATH THODU THARALATHG

I will feed the food one after another so you may the coral and pearls
மாறி மாறி உன்னைத் தருவேன் நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும்


துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
THURAI YAARUNG KADAL THOONI PURATH THEESAN THULANGU MILAM

Which are placed on the sea shore place situated the sseergali place dwelling lard Siva
கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இடம்


பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
PIRAI YAALAN THIRU NAAMAM ENAK KORU KAAR PESAAYEA

That moon adorned lard Siva whose sacred names you may chant near my ears in coolform
பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை ஒரு முறை என் செவி குளிரப் பேசுவாயாக

655 போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
POOR MIGUTH THA VAYAL THOONI PURATH THURAIYUM PURI SADAI YENG

The deep water bodies are filled that fields are filled in the thiru thonipuram temple place descended lard Siva whose well twisted hair
தூற்றாப் பொழில்கள் மிகுதியாகக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய உள்ள முறுக்கேறிய சடையும்


கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
KAAR MIGUTH THA KARAIK KANDATH THIRAI YAVANAI VAN KAMALATH

The darkness filled poison tainted throat possessed lard Siva where the well grown lotus flower garland adorned
கருமை நிறைந்த விடக்கரை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை வளமான தாமரை மலர் மாலையைச் சூடிய


தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
THAAR MIGUTH THA VARAI MAARPAN SAM PANTHAN URAI SEITHA

The rock like bosom possessed ganasambanther who has blessed form sang
மலை போன்ற மார்பினனாகிய ஞானசமந்தன் போற்றி உரைத்த புகழ்


சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
SEER MIGUTH THA TAMIL VALLAAR SIVALO GANJ SER VAAREA

In this glory filled the Tamil decade and those disciples who are chanting and then thinking over it that persons will ultimately enter in to sivalogam
புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினைய வல்லவர் சிவலோகப் சேர்வர்

திருச்சிற்றம்பலம்

July 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: